சேவைகளும் சாதனைகளும்
about 2 years ago
வல்ல அல்லாஹ்வின் உதவியால் எமது கல்லூரி இதுவரை வியக்கத்தகு முன்னேற்றங்களையும் அடைவுகளையும் கண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை பின்வரும் வரிகளில் சுருக்கமாகக் காணலாம் :
- கற்பித்தல் துறையில் அப்பாஸிகள் இலங்கையின் பல பாகங்களிலும் சிறப்பாகப் பணிசெய்கின்றனர், அரபுக் கல்லூரிகளின் அதிபர்களாகவும் விரிவுரையாளர்களாவும் பலர் பணியாற்றுகின்றனர்.
- தூய வடிவில் இஸ்லாத்தை எத்திவைக்கும் அழைப்புப் பணியில் எமது பட்டதாரிகளில் பலர் பரவலாக ஈடுபடுவதுடன் அவர்களில் சிலர் முத்திரை பதித்த பிரபல தாஇகளாக இருப்பதையும் காணலாம்.
- இக்கல்லூரியில் இருந்து வெளியேறிய அப்பாஸிகளில் பலர் அரபு நாடுகளின் பல்கலைக் கழகங்களில் தற்போது உயர்க்கல்வியைத் தொடரும் அதேவேளை அவர்களுள் ஒருவர் முதுமானி (M.A) பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதோடு மேலும் மூவர் கலாநிதி (Phd) பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் அப்பாஸிகள் பலர் பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளதுடன் மேலும் பலர் தற்போது கல்வி கற்று வருகின்றனர்.
- அப்பாஸிப் பட்டதாரிகளில் ஒருவர் IDM Law School தொகுதியில் சட்டத்துறையில் அதிஉயர் ஸ்தானத்தில் சிறப்புப் பட்டதாரியாகப் பட்டம் பெற்றுள்ளார் .
- இக்கல்லூரியிலிருந்து கல்விப் பொதுத்தராதர உ.த. பரீட்சைக்கு இதுவரை தோற்றிய 78 பேர்களில் 64 போர் (சுமார் 90%) பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகும் தகுதி பெற்றுள்ளனர்.
- இதுவரை இக்கலாசாலையிலிருந்து கல்விப் பொதுத்தராதர சா. த. பரீட்சைக்குத் தோற்றிய 131 பேரில் 58 பேர் சகல பாடங்களிலும் சித்தியடைந்திருப்பதுடன், பொதுவாக இப்பரீட்சையில் 90% மானோர் சித்தியடைந்துள்ளனர்.
- இக்கல்லூரிக்கென தனியான ஓர் இணையத்தளம் பல வருடங்களுக்கு முன்னர்ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவருகின்றது.
- கடந்த 2010ம் ஆண்டு முதல் கல்லூரியினால் ‘திக்ரா’ என்ற பெயரில் இஸ்லாமிய காலாண்டுச் சஞ்சிகை வெளியிடப்டுகின்றது.
- கல்லூரியின் அமைவிடமான இந்நிலம் கல்லூரின் பெயரில் சொந்தமாக வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் எமது பேக்கரி அமைந்துள்ள காணியும் சில வருடங்களுக்கு முன் சுமார் 60 லட்சம் ரூபாவுக்கும் வருமானத்திற்காக முதலீடு நோக்கில் வேறு ஒரு காணி 21 லட்சம் ரூபாவுக்கும் வாங்கப்பட்டுள்ளது.
- இரண்டரை மில்லியன் ரூபா செலவில் மாணவர் விடுதிக்கான கட்டில்களும் கபட்களும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
- வல்ல அல்லாஹ்வின் உதவியால் இப்பிரதேச முஸ்லிம்களுக்கு மத்தியில் வாராந்த மாதாந்த வகுப்புக்கள், பிரசாரங்கள் மூலம் நூதனங்களை இனம் காட்டி இஸ்லாத்தை அதன் தூய வடிவில் போதிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றி காணப்பட்டுள்ளது.
- சில நலன்புரி நிறுவனங்களின் அனுசரணையுடன் இவ்வூரிலும் தென் மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் சமூக சேவைகளை கல்லூரி பொறுப்பேற்று நடத்தியுள்ளது.
- இலங்கைத் தாய் நாட்டின் தேசிய நலனையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் கட்டிக் காப்பதில் கல்லூரியும் அதன் மாணவர்களும் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
- ஒரு சில வருடங்களுக்கு முன் எமது பழைய மாணவர்களையும் நலன் விரும்பிகளையும் உள்ளடக்கி ‘கல்லூரி அபிவிருத்தி சங்கம்’ ஒன்று உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
Write Your Comments
Comments

أبوبكر بن أبي صالح
بارك الله في جهودكم ونفع بكم الإسلام والمسلمينஆய்வுகள்
Visitor Count
Total Visits
66848
View Status of Application