141

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

73

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

19

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

தோற்றமும் பின்னணியும்

about 5 months ago


ஹி. 1419 ரஜப் மாதம் 11 ம் பிறையன்று அதாவது 1998 நவம்பர் 01 ம் திகதி காலி ஹிரிம்புறையில் அமைந்துள்ள கன்ஸுல் ஹைராத் பள்ளியில் அல்-பஹ்ஜதுள் இஸ்லாமிய்யாஹ் என்ற பெயரில் இக்கல்லூரி உதயமானது. குர்ஆன் , சுன்னாவின் அடிப்படையில் சுதந்திரமாக இயங்கும் அரபுக் கல்லூரிகளின் வரிசையில் எமது கலா நிலையத்தின் தோற்றம் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

தென்னிலங்கையின் பிரபல அரபுக் கல்லூரியொன்றிலிருந்து சில மார்க்கப் பிரச்சினைகள் காரணமாக நிர்ப்பந்த நிலையில் வெளியேறிய எம்மை ஹிரிம்புரை கிராமத்து மக்கள் அன்புடன் வரவேற்று, இங்கு மனமுவந்து இடமளித்ததை நாம் என்றும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வூர் சகோதரர்கள் அன்று போல் இன்றும் இம்மத்ரஸாவின் வளர்ச்சிக்காக அக்கறையுடன் ஒத்துழைத்துவருகின்றனர்.

உண்மையில் பொருளாதார ரீதியில் பூச்சியத்தில் இருந்த நாம் எவ்வித பௌதீக வளங்களும் அற்ற நிலையிலேயே இக்கல்லூரியை ஆரம்பித்தோம். அந்நேரம் இதனைக் கொண்டு நடாத்துவதற்கு எந்தவொரு நபருடைய அல்லது இயக்கத்துடைய உத்தரவாதமும் எமக்கு இருக்கவில்லை. எனினும் சத்தியத்தின் பாதையில் இன்னல்களுக்கு முகம் கொடுத்து தியாகத்துடன் செயல்படுபவர்களுக்கு அல்லாஹ் உதவுவான் என்ற ஆழமான நம்பிக்கை எமக்கு இருந்தது. இன்று வரை இக்கல்லூரிக்குக் கிடைத்து வரும் ஆதரவும் உதவிகளும் இதனையே பறைசாற்றுகின்றன. இதனை ஸ்தாபிப்பதில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் சகலரும் பெரும்பங்காற்றியதுடன் இவ்வூர் மக்களும் இன்னும் சில சகோதரர்களும் அர்ப்பணத்துடன் செயல் பட்டனர். மேலும் ஆரம்பம் முதல் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும் ஜம்இய்யத்துஷ்ஷபாப், உலக இஸ்லாமிய நிவாரண அமைப்பு (IIRO), அல் -இஃமார் நிறுவனம், இவற்றை தொடர்ந்து வந்த அல்-இஹ்ஸான், நிதாஉல்  கைர், அல் ஹிக்மா, பயிற்சிக்கும் மேம்பாட்டிற்குமான கலாசார நிலையம் ஆகிய நலன்புரிச் சங்கங்களையும் நிறுவனங்களையும் இவ்வேளையில் நாம் நன்றியுடன் நினைவுகூருகின்றோம். இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவனாக..

கல்லூரியின் பதிவுச் சான்றிதல்கள்

  

பள்ளியில் சுமார் இரண்டு வருடங்கள் நடந்து வந்த இக்கல்லூரி இடப் பற்றாக்குறையையும் வேறு சில அசௌகரியங்களையும் கருத்திற் கொண்டு 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதப் பிற்பகுதியில் இவ்விடத்திற்கு மாற்றப்பட்டது. ஓரளவு வசதியான ஒரு வீட்டுடன் 2150 சதுர மீற்றர் (86 பேர்ச்சஸ்) பரப்பளவைக் கொண்ட இவ்விடம் ஆரம்பத்தில் கூலிக்கே பெறப்பட்டது. எனினும் ஒரு வருடம் கழிவதற்குள் குவைத் நாட்டைச் சேர்ந்த அஷ்ஷைக் அப்துல் கரீம் அல் அப்துல் கரீம் அவர்களது முயற்சியினால் சுமார் நாலரை மில்லியன் ரூபாவிற்கு இக்கல்லூரியின் பெயரில் சொந்தமாக வாங்கப்பட்டது.

முதலில் இக்கலாபீடத்திற்குச் சூட்டப்பட அல்-பஹ்ஜதுல் இஸ்லமிய்யாஹ் என்ற பெயரில் சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்டதால் உம்மத்தின் பேரறிஞராகப் போற்றப்படுபவரும் நபிகளாரின் சிறிய தந்தையின் மகனும் சரீஆக் கல்விக்கு பெரும் சேவையாற்றியவருமான அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களது பெயரை பொருத்தமாகக் கருதி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி என்றவாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இக்கல்லூரி முஸ்லிம் சமய விவகார அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 1982 ஆம் ஆண்டின் இலங்கை கம்பனிகள் சட்டத்தின் கீழும் இணைக்கப்பட்டுள்ளது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். அரபுக் கல்லூரகளின் பதிவுகளின் வழமையான நியதிக்கேற்ப முதலில் ‘ஆரம்பநிலை அரபுப் பாடசாலை’ என்ற தரத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த இக்கல்லூரி 2012 ம் ஆண்டு முதல் ‘அரபுக் கல்லூரி’ எனத் தரமுயர்த்தப்பட்டது.

சுமார் 60 மாணவர்களை மாத்திரம் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில், தற்போது ஷரீஆ, அல் குர்ஆன் மனனம் ஆகிய இரு பிரிவுகளிலும் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் கற்றுக்கொண்டிருக்கின்றனர். இவ்விரு பிரிவுகளிலும் 14 உஸ்தாத்மார்களும், மேலும் பகுதி நேர ஆசிரியர்களாக 08 பேரும் கடமை புரிகின்றனர்.இதுவரை இங்கு மௌலவிகளாக 133 பேரும், ஹாபிழ்களாக 73 ஆகவும் பட்டம் பெற்றுள்ளனர் .

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Visitor Count
Total Visits 13547
View Status of Application