147

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

80

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

27

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

வரட்சி -ஓர் ஈமானியப் பார்வை-

about 7 months ago


வரட்சி
-ஓர் ஈமானியப் பார்வை-

எச். எம். எம். ஹஸீம்
ஆண்டு 6

இவ்வுலகைப் படைத்த அல்லாஹ் முக்கிய படைப்பாக மனிதனைப் படைத்தான். ஏனைய படைப்புக்கள் அனைத்தையும் மனிதனுக்காகவே படைத்தான். அவை அனைத்தையும் மனிதனுக்கு வசப்படுத்தி, மனிதனுக்குக் கட்டுப்பட வைத்து படைப்புக்களில் சிறந்த படைப்பாக மனிதனை ஆக்கினான். அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும்போது وسخرنا لكم مافي الأرض جميعا 'இன்னும் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்' என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வாறு அருட்களை மனிதனுக்கு வழங்கியதெல்லாம் அவனை வணங்க வேண்டும், அவனிடம் மாத்திரமே உதவி தேட வேண்டும் என்பதற்காக வேண்டியே. அல்லாஹ் அல்குர்ஆனிலே وما خلقت الجن والإنس إلا ليعبدون 'ஜின் இனத்தையும், மனித இனத்தையும் என்னை வணங்குவதாகவே அன்றி நான் படைக்கவில்லை' எனக் கூறுகின்றான். எனவே தான் நபிமார்களையும், இறைத்தூதர்களையும் அனுப்பி வேதங்களையும் இறக்கி வைத்தது மிக முக்கியமாக அல்லலாஹ்வை வணங்கும் முறையைக் கற்றுக் கொடுப்பதற்காக வேண்டியே. இவ்வாறு அவன் வழங்கியுள்ள அருட்கொடைகளை அனுபவிக்கும் மனிதன் அல்லாஹ்வின் நோக்கத்தை மறந்து வாழும்போது அல்லாஹ் அவற்றை சோதனையாகவும், வேதனையாகவும் மாற்றுகின்ற பல சம்பவங்களை நாம் அறிவோம்.

அல்லாஹ் ஸூரா ஸபஃ இல் ஸபஃ வாசிகளுக்கு ஏற்பட்ட கைசேதத்தைப் பற்றி அழகாகக் குறிப்பிடுகின்றான். அல்லாஹ் அவர்களுக்கு வலது, இடது என்று இரு புறமும் அழகிய கனி வகைகளைக் கொண்ட நல்ல சுவையுள்ள தோட்டத்தைக் கொடுத்து அதன் இன்பங்களை அனுபவித்து அவனுக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிட்டிருந்தான். ஆனாலும் அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு அவனுக்கு மாற்றமான முறையிலே நன்றி கெட்டவர்களாக வாழ்ந்தார்கள். எனவே அல்லாஹ் அவர்களின் ஊருக்கு பெரும் வெள்ளத்தை அனுப்பி சுவைமிக்க அப்பழங்களின் சுவைகளை கசப்பும், புளிப்புமுள்ளதாக மாற்றினான். இப்படி இன்னும் பல சம்பவங்கள் காணப்படுகின்றன.

இவை அனைத்தும் எமக்கு உணர்த்துவது என்னவென்றால் ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس  'மனிதர்களின் கரங்கள் சம்பாதித்ததின் காரணமாக தரையிலும், கடலிலும் கெடுதி பரவிவிட்டது' (30:41) எனும் அல்லாஹ்வின் கூற்றையே. அதாவது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் புறக்கனிப்பதன் காரணமாகத்தான் அவை சோதனைகளாக மாறுகின்றன எனும் பெரும் உண்மையைத் தான் எமக்கு அவை உணர்த்துகின்றன. அதே வகையில் தான் இந்த நவீன உலகத்தில் மனிதர்களை அச்சுறுத்துகின்ற இந்த வரட்சி காணப்படுகின்றது. இத்தலைப்புக்கும், மேலே கூறிய விடயங்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று பலர்; யோசிக்கலாம். அப்படியாயின் தொடர்ந்து வாசியுங்கள்.

வரட்சி எவ்வாறு ஏற்படுகின்றது? 

வரட்சி என்றால் தொடராக தேவையான நேரத்தில் மழை பெய்யாத காரணத்தினால், அல்லது வெப்பம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் தேவையான அளவு நீரைப் பெற்றுக் கொள்ள முடியாது நீருக்கு பற்றாக்குறை ஏற்படுவதைக் குறிக்கும். அதாவது மழை வீழ்ச்சி தடை செய்யப்பட்டு வெயிலின் கொடூரம் அதிகமாகும்போது ஏற்படும் ஒரு மாற்றமே வரட்சியாகும்.

வரட்சி ஏற்படுவதற்கான காரணம்:

அல்லாஹ் அனைத்துப் படைப்புக்களிலும் மனிதர்களுக்கு பிரயோசனத்தை வைத்துள்ளான். ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான ஒன்றாக உணவும், நீரும் காணப்படுகின்றன. உணவைப் பெற்றுக் கொள்வதற்கு முக்கிய வழியாக விவசாயம் காணப்படுகின்றது. அவ் விவசாயத்துக்கு இன்றியமையாததாக நீர் காணப்படுகின்றது. நீர் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஓர் பொருள் கிடையாது. மாற்றமாக அனைத்துக்கும் நீரை அத்தியாவசியமான ஒன்றாக வைத்துள்ள அல்லாஹ்வே அதை மனிதனுக்கு பல வழிகளில் அளிக்கின்றான்.

மழை, கடல், ஆறு, குளம், ஊற்று இப்படி பல முறைகளில் நாம் நீரைப் பெற்றுக் கொள்கின்றோம். எனவே, நீர் என்பது அல்லாஹ் அவனது அடியார்களுக்கு வழங்கிய ஓர் அருட்கொடையாகக் காணப்படுகின்றது. அவனது அருட்கொடைகளை மனிதன் மறந்து வாழும்போது மனிதனை விழிக்கச் செய்வதற்காக அல்லாஹ் சில சோதனைகளை வழங்குகின்றான். அப்படிப்பட்ட ஓர் சோதனையாகத் தான் இவ்வரட்சியும் காணப்படுகின்றது.

எவ்வாறெனில், நீரைப் பயன்படுத்தி மனிதன் விவசாயம் செய்கின்றான். அதில் அவனுக்குக் கிடைத்த வருமானங்களை தான் கஷ;டப்பட்டு சம்பாதித்தவை என பெருமை அடித்து, அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றத் தவறுகின்றான். இந்நேரத்தில் அல்லாஹ் இது உனது கெட்டித்தனமல்ல, நீ என் பக்கம் தேவைகாண வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு மழையை நிறுத்தி, வெயிலின் தாக்கத்தை அதிகரித்து அத்தாக்கத்தின் காரணமாக ஆறுகளிலும், குளங்களிலும் உள்ள நீரை வற்ற வைத்து மனிதனை அவனளவில் தேவை காண வைக்கின்றான். அதற்காகவே கருணையாளன் அல்லாஹ் மழை வேண்டித் தொழும் தொழுகையை வணக்கமாக்கியுள்ளான்.

எனவே நீர் என்பது அல்லாஹ்வின் மாபெரும் அருளாகக் காணப்படுகின்றது. இதனாலேயே அல்குர்ஆனில் பல இடங்களில் நிராகரிப்பாளர்களுக்கு அவனுடைய அத்தாட்சிகளைக் கூறும்போது நீரைப் பற்றிக் கூறியுள்ளான்.

வரட்சியின் வகைகள்:

இன்று உலகில் பல கோர நிகழ்வுகளை ஏற்படுத்தும் இவ்வரட்சி நான்கு வகைகளாகப் பிரித்து நோக்கப்படுகின்றது. அப்பிரிவுகள் யாவும் பிரதானமாக நீருடனேயே சம்பந்தப்படுகின்றன. அவை:
1.    வானிலைசார் வரட்சி:
அதாவது வழமையாக மழைபெய்ய வேண்டிய காலங்களில் வீழ்ச்சி ஏற்பட்டு குறைவடையும்போது ஏற்படும் பாதிப்பே வானிலை சார் வரட்சியாகும்.
2.    விவசாய வரட்சி:
விவசாய வரட்சி என்பது பூமியிலுள்ள நீரின் அளவு குறைந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது ஏற்படும் வரட்சியாகும். இவ் வரட்சியாலே இன்று அதிகமான மக்களின் வாழ்க்கை கஷ;டமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
3.    நீரியல் சார் வரட்சி:
மழையின் அளவானது குறைந்துவிடுவதனால் வரட்சியான காலநிலை தொடர்ந்து ஆறுகள், குளங்கள், ஏரிகள் முதலிய நீர் நிலைகள் வற்றிப்போவது நீர்pயல் சார் வரட்சியாகும்.
4.    சமூகப் பொருளாதார வரட்சி:
மேற்குறிப்பிட்ட வகையான வரட்சிகள் தொடர்கின்றமையால் உற்பத்திகள் பாதிக்கப்பட்டு பொருளாதாரப் பின்னடைவு ஏற்படுதலே சமூகப் பொருளாதார வரட்சியாகும்.

வரட்சியினால் ஏற்படும் சில பாதிப்புக்கள்:

மழை வீழ்ச்சி குறைவடைந்து ஏற்படும் இவ் வரட்சியினால் மக்கள் தமது வாழ்வின் முக்கிய அம்சமாகக் கருதுகின்ற தங்களுடைய வாழ் நாட்களை நடாத்திச் செல்வதற்கான முக்ககிய காரணியாக விளங்கும் விவசாயம் பெரிதும் பாதிப்படைகின்றது. இப் பாதிப்பினால் ஏற்படும் பஞ்சத்திலிருந்து தப்புவதற்கான வழியை உணராத மக்கள் தங்களுடைய சொந்த இடங்களை விட்டும் வெளியேறுகின்ற காட்சியைக் காணலாம்.

இவ்வரட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது வெப்ப நிலை தான் என்றால் அது மிகையாகாது. வெப்ப நிலை அதிகரிக்கும்போது பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதைப் பார்க்கலாம். குறிப்பாக உயிரினங்கள் மற்றும் விவசாயங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இன்று சில புதிய வகை நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக வெப்ப நிலை காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக தோல் சம்பந்தப்பட்ட பல விசித்திரமான நோய்கள் ஏற்படுவதைப் பார்க்கலாம். அண்மையில் கூட இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இவ்வெப்ப நிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை நாம் மறந்தவர்களல்ல. எத்தனையோ கால்நடைகள் தினந்தோறும் இறப்பைச் சந்திக்க நேரிட்டன. 

குறைந்த வெப்ப நிலை காரணமாக நாட்டின் மின் உற்பத்தியில் பெரிதும் பாதிப்பு ஏற்படுகின்றது. அண்மையில் இலங்கை மக்கள் கூட அதன் விளையை சந்திதத்தனர், இன்றும் சந்தித்ததுக் கொண்டிருக்கின்றனர். அதே போன்று உற்பத்தி பாதிப்படைவதால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவு ஏற்பட்டு, மக்கள் மத்தியில் உணவுக்கும், தண்ணீருக்கும் சண்டை, சச்சரவு ஏற்படும் நிலை உருவாகும்.

2050 ஆம் ஆண்டினை நெருங்கும்போது தெற்காசியாவில் வரட்சியினால் மாத்திரமே விளைச்சலில் கிட்டத்தட்ட 30மூ வரை பாதிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கையில் மொத்த விவசாயப் பரப்பில் ⅓ பங்கு வரட்சியால் பாதிப்படைகிறது. 

வரட்சியை வெல்வது எப்படி? 

வரட்சி என்பது அல்லாஹ் மக்களைச் சோதிப்பதற்காக இறக்கி வைத்துள்ள ஓர் சோதனையாகும். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாற்றமான முறையில் மக்கள் தம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்போது அல்லாஹ் அவர்களை சோதிப்பதற்காக இவ்வாறான சோதனைகளை ஏற்படுத்துகின்றான். எனவே, அச்சோதனையிலிருந்து தப்ப வேண்டுமானால் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அவனுடைய விருப்பத்தையும், அன்பையும் பெற்றுக்கொள்ளும் படி நமது வாழ்க்கையை மாற்றிக்கொள்வோமேயானால் இவ்வாறான சோதனைகளிலிருந்து வெற்றிபெற்று நிம்மதியாக வாழ முடியும். 

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Visitor Count
Total Visits 50080
View Status of Application