133

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

71

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

19

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

இஸ்லாமிய பொருளாதார துறையில் முதுமாணி ஆய்வில் அதி சிறந்த புள்ளிகள் பெற்று சாதனை!

about 1 day ago


அவிஸ்ஸாவலை தெஹியோவிடயைச் சேர்ந்த அஷ்ஷைக் அப்துல்லாஹ் அகீல் அப்பாஸீ, மதனீ அவர்கள் முதுமாணி கற்கைக்கு எமது நாட்டுடன் தொடர்பான ஓர் அருமையான தலைப்பில் தனது ஆய்வை மேற்கொண்டார்.

தலைப்பு:  بنك الأمانة في جمهورية سريلانكا دراسة تأصيلية اقتصادية 1997-2015 “இலங்கை குடியரசு நாட்டிலுள்ள அமானா வங்கி, பொருளாதார அடிப்படை ஆய்வு 1997-2015”

நேற்று (23/01/2019) மாலை மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய சட்ட பீடத்திலுள்ள கலந்துரையாடல் மண்டபத்தில், இஸ்லாமிய பொருளியல் துறையில் தலைசிறந்த மூன்று பேராசிரியர்களுக்கு முன்னிலையில் இவ்வாய்வு நூல் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.

நீண்ட நேரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவில் ஷைக் அப்துல்லாஹ் அகீல் அவர்களால் எழுதப்பட்ட இவ்வாய்வு நூல் கலந்துரையாடல் குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதி சிறந்த முதல் தர புள்ளிகளும் வழங்கப்பட்டன. الحمد لله الذي بنعمته تتم الصالحات

வல்ல அல்லாஹ் ஷைக் அப்துல்லாஹ் அகீல் அவர்களது அறிவில் பரகத் செய்வதோடு கல்விப் பாதையில் மென்மேலும் உயர் அடைவுகளை அடைய வழிவகுப்பானாக!

நட்புடன் அ(z)ஸ்ஹான் ஹனீபா 24/01/2019

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Calender
Visitor Count
Total Visits 516
View Status of Application