ஆரோக்கிய மார்க்கமும் நோயாளி சமூகமும்

on editing

ஆரோக்கியம் (HEALTH) என்பது உலகில் வாழுகின்ற ஜீவராசிகள் அனைத்திற்கும் மிகவும் இன்றியமையாத தேவையாகும். மனித சமூகம் அதன் வரலாறு நெடுகிலும் இந்த ஆரோக்கிய வாழ்விற்காக மிகப்பெரும் தியாகங்களை, முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியராகிய நமது பங்களிப்பு அளப்பெரியவை. இன்றைய நவீன விஞ்ஞான மருத்துவ கண்டுபிடிப்புக்கள் எல்லாவற்றினதும் ஆணிவேர், ஊற்றுக்கண் மத்தியகாலப் பகுதியில் வாழ்ந்த நமது முன்னவர்கள் என்றால் அது மிகையல்ல.

ஆரோக்கிய வாழ்வு என்பது ஒரு முஸ்லிமுக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. இது அவனது நாளாந்த ஆன்மீக மற்றும் வாழ்வியல் அம்சங்களை நெறிப்படுத்தவும் செம்மையாக்கவும் தேவையான ஒரு அகக்காரணியாக விளங்குகின்றது. இஸ்லாம் ஆரோக்கிய வாழ்வு பற்றி மிகத் தெளிவாகவே எடுத்தியம்பியுள்ளது. சுத்தம் , சுகாதாரம், ஆரோக்கியம் பற்றிய இஸ்லாமிய அடிப்படைகள் தனிமனித வாழ்வில் தொடங்கி அரசாட்சி நிலை வரை விரிந்த பார்வை கொண்டதாக இருக்கின்றது.

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்காக எழுந்தால் உங்கள் முகங்களையும் கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிக் கொள்ளுங்கள். தலையை தடவிக் கொள்ளுங்கள். கால்களையும் கழுவிக்கொள்ளுங்கள்' அல் குர்ஆன் (5:6)

இவ்வசனம் மிகத் தெளிவாக ஒரு தனி மனிதனின் சுகாதார மேம்பாட்டை விளக்கி நிற்கின்றது. சுத்தம் என்பது ஈமானின் பாதியாகும் என்ற ஹதீஸ் இதற்கு மேலும் வலுசேர்க்கின்றது.

நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை அதிகம் வேண்டுங்கள். அதுபோல் தேகாரோக்கியத்தையும் கேளுங்கள். ஏனெனில் தேகாரோக்கியம் என்பது ஈமானிற்கு பின் கிடைக்கக்கூடிய மிகப்பெரும் அருட்கொடையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள இந்த செய்தி திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நம் சமூகம் மறந்துவிட்ட மிகப் பெரும் உண்மை ஒன்றை இயம்புவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஈமான் கொள்வதென்பதுதான் ஒரு முஃமினின் வாழ்கையில் கிடைத்த மிகப்பெரும் வெற்றி, பொக்கிஷம், அருட்கொடை. இதன் அடுத்த நிலை தேகாரோக்கியம் (ர்நயடவாடல டகைந) என்றால் நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையின் நோக்கை மிள் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கின்றது.

ஓர் ஆரோக்கியமான சமூகமே முன்னோக்கி நகரவும், வெற்றி பெறவும் முடியும். ஆரோக்கியமான சிறுவர்கள் நாளைய ஆரோக்கியமான இளைஞர்கள். ஆரோக்கியமான இளைஞர்கள் நாளைய ஆரோக்கியமான உழைக்கும் வர்க்கம். இப்படி ஒரு தொடர்சங்கிலி நிலையைப் பேணுவதை இஸ்லாம் மிகவும் கண்டிப்பாக வலியுறுத்திக்கொண்டிருக்கின்றது. இதன் மையப்புள்ளி சுத்தம் பற்றி அதிகம் பேசுகின்றது. இஸ்லாமிய சட்டக்கலை, ஹதீஸ்கலை நூல்களின் முதல் அத்தியாயம் பெரும்பாலும் சுத்தம் பற்றிய பாடமாக இருப்பதை நம்மில் அதிகம் பேர் வசதியாக மறந்து விடுகின்றனர். இதனால் அந்நிய மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே ஒரு வித வேற்று மனப்பான்மை வளர்க்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். சுத்தம் பற்றி அதிகம் வலியுறுத்திய ஒரு மார்க்கத்தின் அங்கத்தவர்கள் அது பற்றி தெளிவில்லாமல் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். இப்போது உங்கள் மனக்கண்களிலே பின்வரும் காட்சிகளை ஓட விடுங்கள்.  ஒரு கடற்கரையோர அல்லது ஒரு பூங்காவனத்தையோ கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள். அதிலே ஒரு முஸ்லிம் குடும்பம் அல்லது குழுவினர் உட்கார்ந்துவிட்டு சென்ற இடத்தை உங்கள் மனதிலே நினைத்துப் பாருங்கள். இப்போது உங்களுக்கு நான் சொல்ல வரும் விடயம் மிகத்தெளிவாக விளங்கியிருக்கும். அந்த இடம் குப்பைகள் நிறைந்ததாக வெற்று டப்பாக்கள், சாப்பாட்டு மீதிகள், ளூழிpiபெ டியப  என்று பல்வேறுபட்ட கழிவுப் பொருட்கள் பரவியதாக இருப்பதற்கு யார் காரணம் நாமா? அல்லது நமது மார்க்கமா?

பாதையில் உள்ள தொந்தரவு செய்யும் பொருட்களை அகற்றுவது தர்மமாகும் என்ற மார்க்கத்தின் சொந்தங்கள் நாம். ஆனால் நடைமுறையில் பாதையில் குப்பைகளை கொட்டுபவர்களும் நாமாக இருக்கிறோம். ஏன் இந்த முரண்?

தேகாரோக்கியம் தான் ஈமானிற்கு அடுத்து கிடைக்கக்கூடிய மிகப்பெரும் பாக்கியம் என்று வரையறுத்த மார்க்கத்தின் சொந்தங்கள் நாம். ஆனால் இன்று அதிகம் சீனி வியாதி (னுயைடிவைந) உயர்குருதி அமுக்கம் (ர்iபா Pசநளளரசந) இதய அடைப்பு (ர்நுயுசுவு யுவுவுநுஊவு) இப்படி பல்வேறுபட்ட நோய்களின் இருப்பிடமாக மாறியது எப்படி? முதுமையான வயதிலும் போர்க்களத்தில் தலைவர்களாகவும் முன்அரண் வீரர்களாக களம் போராடிய தளபதிகளை, சேனாதிபதிகளை நமது வழிகாட்டியாகவும், சகோதரர்களாகவும் கொண்ட நாம் இளம் வயதிலே வீட்டுக்குள் கட்டிலோடு முடங்கியது எதனால்? இதைச் சாப்பிடு இது ஹலால், இதைச் சாப்பிடாதே இது ஹராம் என்று உணவைக் கூட வரையறுத்து தந்த மார்க்கத்தின் அங்கத்தவர்களாகிய நமது நிலைமை ஏன் இவ்வாறு மாறிப்போனது? இது குறித்து இன்ஷh அல்லாஹ் எழுதுவதற்காகத்தான் இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை நமது சமூகத்தில் அதிகம் தாக்கம் செலுத்துகின்ற நோய்கள், அவற்றிற்கான தடுப்புமுறைகள் தேகாரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி பற்றி தொடராக உங்களோடு கருத்துக்கள் பறிமாறப்பட இருக்கின்றன.

ஒரு சமூகம் தனது ஆரோக்கியம் குறித்து அதிக கரிசனம் கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இது தனிமனித வாழ்விலும், சமூக வாழ்விலும் மிகப்பெரும் தாக்கத்தை உண்டுபன்னக்கூடியது. இதனால் தான் சுன்னத்தான ஒவ்வொரு தொழுகைக்கும் முன் உடற்சுத்தம் செய்வதற்காக வேண்டியே வுழூ என்றொரு கடமை உள்ளதை எண்ணிப்பார்க்கும் போது நாம் இங்கு தனித்து விளங்குகிறோம். வேறு எந்த மதத்திலும் இவ்வாறனதொரு இறுக்கமான நடைமுறை உள்ளதாக அறிய முடியவில்லை. பற்களை சுத்தப்படுத்துவது அல்லது மிஸ்வாக் செய்வது அதிகம் வலியுறுத்தப்பட்ட ஒரு நபிவழியாக இருக்கின்றது. நபி அவர்கள் தமது மரணத ;தருவாயிலும் பற்றிப்பிடித்த ஒரு சுன்னாவாக இருக்கின்றது. வாய்ச்சுத்தம் பற்றி இன்று நவீன விஞ்ஞான ஆய்வுகள் சொல்லிய எத்தனையோ விடயங்களை நமக்கு எப்போதோ சொல்லப்பட்டிருப்பது குறித்து நம்மில் பலர் அறியாமல் உள்ளனர். இன்றைக்கு சில நிமிடங்கள் வரை வைத்தியர்களும் விஞ்ஞானமும் பற்சுத்தம் (னுநவெயட  hலபநைநெ) பற்றியே பேசினார்கள். ஆனால் இப்பொழுதுதான் அவர்கள் எல்லோரும் வாய்ச்சுகாதாரம் (ழுசயட hலபநைநெ) பற்றி பேசுகிறார்கள். ஆனால் இவை பற்றிய கருத்துக்கள் நபியவர்கள் பற்களை சுத்தம் செய்யும் போது தனது நாக்கையும் சுத்தம் செய்வார்கள் என்ற அறிவிப்புக்களை ஹதீஸ்களில் பாhக்கின்ற போது ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.

தேகாரோக்கியத்தின் அடுத்தபடி சுகாதாரமான உணவு முறை, நல்ல உணவுகள் ஒருவனை ஆரோக்கியமானவனாக மாற்றுகின்றன. அது போல் கெட்ட உணவுப்பழக்கவழக்கங்கள் மனிதனை நோயாளியாக்கி விடுகின்றன.

உங்களுக்கு நாங்கள் அளித்தவற்றிலிருந்து நல்லதை புசியுங்கள். (அல்குர்ஆன் 2:173) இப்படி நல்ல உணவுகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஒரு பெரிய கட்டுரையே வரையும் அளவுக்கு செய்திகள் நமக்கு சொல்லப்பட்டிருக்கின்றன.

நல்ல உணவுகள் என்பதற்காய் கண்டபடி வயிற்றை நிரப்புவதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கவே செய்கின்றது. நமது மார்க்கத்தின் மிகப்பெரிய அத்திவாரம் அல்லது தூண் நடுநிலை பேணல். அது மார்க்க விவகாரமாக ஆனாலும் சரி ஏனைய எந்த விடயமாக ஆனாலும் நடுநிலை பேணல் என்பதை அல்குர்ஆனும் சுன்னாவும் மிகவும் வலியுறுத்துகின்றது.

அவன் உங்கள் மீது நடுநிலையாய் இருப்பதை ஏவியுள்ளான். அதனால் நீங்கள் எல்லை மீறா இருக்கவும். எப்பொழுதும் நடுநிலைமையை கடைபிடியுங்கள். வழிதவறி விட மாட்டீர்கள். (55:7-9)

நமது சமுதாயத்தில் உள்ள மிகப்பெரும் குறை இந்த விடயத்தில் அசிரத்தையாக இருப்பதுதான். நம்மில் பெரும்பாலானோர் நடுநிலைமை என்ற இந்த எல்லையை அதிகம் தாண்டியவர்களாகவே இருக்கின்றனர். மார்க்க விடயத்தில் உள்ள கருத்து முரண்பாடுகளிலும் சரி உலக விடயத்தில் உள்ள நடைமுறைகளிலும் சரி வணக்கவழிபாடுகளிலும் சரி நம்மில் பலர் எல்லை மீறியவர்களாகவே இருக்கின்றனர். ஒரு சாரார் தீவிரப்போக்குடையவராகவும் (நுஒவசநஅளைவ) மறு சாரார் பொடுபோக்குடையவராகவும் (ஊயசநடநளள) உள்ளமைதான் நமது சமூகத்தின் இத்தனைப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேர். அதுபோல் நமது தேகாரோக்கிய வாழ்வுக்கும் ஆணிவேர் இந்த நடுநிலைமை (டீயடயnஉந) பேணல்தான்.
உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள்.(20:81)

இந்த ஒரு வசனமே நமக்கு படிப்பினை பெறுவதற்கு மிகவும் போதுமானது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதன் முதன்பக்க செய்தியாக கொட்டை எழுத்தில் இந்த வசனம் போடப்பட்டிருந்தது. நம்மில் அதிகம் பேர் இந்த வசனத்தை பலமுறை படித்திருப்போம். பயனில்லாமல் விட்டுவிட்டோம். ஆனால் உலகம் இதில் அதிகம் பயன் இருப்பதை கண்டுகொண்டுள்ளது.

மூன்றில் ஒரு பங்கு வயிற்றை உணவைக்கொண்டும் இன்னும் மூன்றில் ஒன்றை குடிபானத்தைக் கொண்டும் மீதி மூன்றில் ஒரு பங்கை சுவாசத்துக்காக இடைவெளிக்கு விட்டு விடவும். (இப்னு மாஜா)

இது குறித்து நாம் எப்பொழுதாவது சிந்தித்தது உண்டா? நம்முடைய இந்த உணவு இப்படி இருந்ததா? என்று நம்மை நாமே சுய விசாரணை செய்து கொண்டால் பாதிப்பிரச்சினை முடிந்து விடும். இன்று நவீன விஞ்ஞான ஆய்வுகள் கூட இப்படியானதொரு உணவுப்பகிர்ப்பு முறையை விட வேறொன்றையும் உயர்ந்ததாக கண்டு கொள்ளவில்லை. இதன் விஞ்ஞான பூர்வ விளக்கம் பற்றி எழுதப் போனால் ஒரு தனிக்கட்டுரையை எழுத வேண்டிய அளவுக்கு செய்திகள் இதில் உள்ளன.

நாம் மறந்து விட்ட இன்னுமொரு விஷயம் உடற்பயிற்சி (Phலளiஉயட யுஉவiஎவைநைள) இது மிகவும் அதிகமாக நமது பெண்கள் சமூகத்தால் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது, இன்றைய நவீன கால வாழ்க்கை முறை மனிதனை மிகப்பெரும் சோம்பேறியாக மாற்றிவிட்டிருக்கிறது. இதனால் நாம் எந்த வித வேலைகளும் செய்யாமல், உடற்பயிற்சி இல்லாமலும் வாழ்வது தேகாரோக்கியத்திற்கு விடுகின்ற மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடுகின்றது. நபியவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு  வழிகாட்;டி உள்ளதை பரவலாக ஹதீஸ்களில் காணமுடிகின்றது. குதிரைப்பயிற்சி செய்வதை நபியவர்கள் வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆயிஷh (ரழி) அவர்களுடன் ஓட்டப்பந்தயம் வைத்து விளையாடிய செய்திகள் ஹதீஸ் கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது.

நமது சமூகத்தின் வாழ்வியல் இடம் போக்கிவிடப்பட்டிருக்கிறது. ஏனெனில் இதுபற்றிய தெளிவூட்டல்கள் போதுமானவையாக இல்லாமல் இருக்கின்றன. தஃவாப் பணியில் உள்ள நிறுவனங்களின் தாஈக்கள் இது பற்றி அதிகம் அக்கரை கொள்ளவேண்டிய தேவைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இஸ்லாமிய இயக்கங்கள் சட்டப்பிரச்சினைகளிலும் ஷரீஆப் பிரச்சினைகளிலும் தமது வளங்களையும் நேரங்களையும் ஆய்வுகளையும் செலவழிக்கின்றது போன்று தேகாரோக்கியமான ஒரு பலமான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குகின்ற முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

நோய் என்பது ஒரு சாபமல்ல, அது நம்மை சீராக்க சோதிக்க வந்த ஒரு சோதனை. இறைவனின் ஏற்பாட்டின் படியே ஒருவன் நோயாளியாகவும் தேகாரோக்கியமானவனாகவும் வாழ முடியும். இவைகள் தான் நம் நம்பிக்கை. ஆகவே தேகாரோக்கியமாய் வாழ்வதற்கு வழிகாட்டிய இஸ்லாம் மிகத்தெளிவாகவே கட்டளையிடுகின்றது. 'உங்கள் கைகளால் நீங்களே அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள்' (அல்குர்ஆன்)

நாம் தேகாரோக்கியமாக வாழ்வதற்கான முழு முயற்சியையும் செய்ய வேண்டியது நமது தலையாய கடமையாக இருக்கின்றது. அதையும் மீறி நோய்கள் வருகின்றது. அதை தாங்கிக் கொள்ளவும் நிவாரணம் தேடவும் வழிகளை இஸ்லாம் அழகாக கற்றுத்தந்திருக்கின்றது.

அல் குர்ஆன் (6:17) இவ்வசனம் ஒரு உண்மையின் அடிப்படையை தெளிவாக சிலாகித்துப் பேசுகின்றது. ஆகவே இது குறித்து நமது நம்பிக்கையை வளுப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது. ஒவ்வொரு நோயும் அதன் மருந்தும் படைக்கப்பட்டே இருக்கின்றது. என்பதுதான் இஸ்லாமிய மருத்துவத்தின் அடிப்படை. இதனால் நோய்க்கு மருந்து செய்வதும் மருத்துவரிடம் செல்வதும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. இது குறித்தும் இன்ஷh அல்லாஹ் வருகின்ற தொடர்களில் தொடராக எழுதுவதற்கு எண்ணியுள்ளேன்.