பத்ர் யுத்தம் பகர்வதென்ன ?

பத்ர் யுத்தம் பகர்வதென்ன ?

ஹிஜ்ரி 02 ம் ஆண்டு ரமழான் மாதம் 17 ம் பிறை வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற யுத்தமே பத்ர் யுத்தமாகும் , இஸ்லாமிய வரலாற்றில் சத்தியமும் அசத்தியமும் களத்தில் மோதிக்கொண்ட முதல் யுத்தமாகிய அதில் பல படிப்பினைகளும் அல்லாஹ்வின் வல்லமைக்கான அத்தாட்சிகளும் இருப்பதாக புனித அல் குர்ஆன் கூறுகின்றது, அவற்றில் சிலதை இங்கு நோக்குவோம் : 

சிரமப்படாமல் சிகரத்தை அடையமுடியாது 
:
உயரிய இலக்குகளை அடைய உண்ணத தியாகங்களை செய்ய வேண்டியது அவசியம், வேகமாகவும் இலகுவாகமும் அடைய முடியுமான ஒன்றையே மனிதர் அதிகம் விரும்புவது இயல்பு, அசத்தியத்தை அழித்து சத்தியத்தை நிலை-நிறுத்தும் இலக்கை அடைய பொறுமைகாத்து பலதையும் இழந்து தியாகம் செய்யவேண்டும், ஒரு வணிகக் கூட்டத்தை வழிமறிக்கவென ஆரம்பித்து இறுதியில் மாபெரும் யுத்தமொன்றில் முடிந்த பயணமே பத்ர் யுத்தமாகும்,

இதன்போது யுத்தப் படையுடன் மோதும் நிலை  ஏற்படாமல் வணிகக் கூட்டத்தை வழிமறித்து இலகுவாக காரியம் முடிய வேண்டும் என பொதுவாக முஸ்லிம்கள் விரும்பினர், ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு விரும்பியது யுத்தப் படையை அவர்கள் எதிர்கொண்டு சத்தியத்துக்காக தியாகம் செய்யவேண்டும் என்பதையே, இதனைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான் :

மேலும், (விரோதிகளின்) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒன்றை நிச்சயமாக அது உங்களுக்குத்தான் என அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை (நினைவு கூறுங்கள்: அவ்-விரண்டில்) நிச்சயமாக ஆயுதமில்லாத (வர்த்தகக்-கூட்டமான) து உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென நீங்கள் விரும்பிபனீர்கள் : இன்னும் அல்லாஹ்வோ தன் வாக்குகளின் மூலம் உண்மையை நிலைநாட்டவும், நிராகரிப்போரை வேரறுத்துவிடவும் நாடுகிறான் (8 : 7-8) 

அல்லாஹ்; கொடுக்க நினைத்தை யாராலும் தடுக்கமுடியாது : வல்ல அல்லாஹ்வின் வல்லமை யாவற்றையும் மிகைக்கக் கூடியது என்பதற்கு பத்ர் யுத்தம் ஒரு உதாரணமாகும் , பௌதீகரீதியில் நோக்கினால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே-யில்லாததாகக் கருதப்படும் ஒரு படைக்கு அல்லாஹ் அவனது வல்லமையினால் வெற்றியை அளித்தான், அவன் எல்லாவற்றிற்கும் சக்தி பெற்றவன், அவனால் முடியாதது என்று ஒன்றுமேயில்லை. 

ஆலோசைனையின் ஆரோக்கியம் :

ஆலோசனை என்பது ஒரு விடயம் பற்றி; கருத்துகள் பறிமாரப்பட்டு மிகச்  சரியான ஒரு முடிவை அடைவதற்கான கூட்டுமுயற்சியாகும், ஒரு தலைவர் தனது கூட்டத்தாரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களிடம் ஆலோசனை கேட்கும்போது அவருக்கும் அவரின்கீழ் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவதுடன் பரஸ்பரம் புரிந்துணர்வும் நல்லணெ;ணமும் ஏற்படுகின்றன,

மதீனாவிலிருந் அவசரமாகத் தயார்படுத்தப்பட்ட ஒரு சிறிய படையை அழைத்துக் கொண்டு புறப்பட்ட நபியவர்களுக்கு' தப்ரான்' பள்ளத்தாக்குப் பகுதியை கடந்து செல்லும் போது வியாபாரக் கூட்டம் தப்பிவிட்டதாகவும் மக்காவிலிருந்து ஒரு படை தம்மைத் தாக்கவருவதாகவும் செய்தி கிடைக்கின்றது, உடனே, யுத்தம் செய்வதா அல்லது திரும்பிச் செல்வதா என  தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கவேண்டிய  கட்டாய நிலையை உணர்ந்த நபிகளார் தன்னிச்சையாக அதனை எடுக்காமல் தனது தோழர்களுடன் ஆலோசனை நடாத்தியே முடிவெடுத்தார்கள்.
 

பிரார்த்தனையும் ஓர் ஆயுதமே :

எந்த ஒரு காரியத்தiயும் சரியாக செய்து முடிக்க எமது முயற்சிகளும் ஏனைய முன்னேற்பாடுகளும் மட்டும் போதாது, அவற்றுடன் வல்ல அல்லாஹ்விடம் அதனை ஒப்படைத்து அவனிடம் அவனது அணுகூலமும் அருளும் கிடைப்பதற்காக பிரார்த்தனைப் புரிவதும் அவசியமாகும், தனது படையுடன் பத்ர் களத்தை வந்தடைந்த நபிகளார்  யுத்தத்திற்கான வியூகங்களை அமைத்து தனது படையினருக்குத் தேவையான வழிகாட்டல்-களையும் கட்டளைகளையும் வழங்கியபின் தனக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட குடிலில் போயிருந்து  நீண்டநேரம் அழுது மன்றாடி அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள்,

ஒருவர் என்னதான் ஆளுமையும் திட்டமிடும் ஆற்றலும் உள்ளவராக இருப்பினும் வெற்றி என்பது அல்லாஹ்விடமிருந்தே வரவேண்டும், அதனை அவனே தரவேண்டும். பத்ரின் போது முஸ்லிம்-களுக்கு உதவிக்காக தூய வானவர்வர்களை அனுப்பியதைப் பற்றிக்கூறும் அல்லாஹ் அவ்விடத்தில்' வெற்றியானது அல்லாஹ்வி டமிருந்தே ஒழிய இல்லை ' எனக் கூறுவதை அல் குர்ஆனில் காணலாம்.
    

இறை ஞாபகம் எப்போதும் தேவை :

அல்லாஹ்வை திக்ர் செய்வதென்பது தொழுகை, குர்ஆன் ஓதுவது போன்றவற்றுடன் மாத்திரம் குறுகிவிடும் ஓர் அமலல்ல, மாறாக ஒரு மனிதனின் மனதில் இறை ஞாபகம் எந்நேரமும் மங்காமல் மறையாமல் இருக்க வேண்டும், மனிதன் அல்லாஹ்வை மறக்கும் கட்டத்தில் அவன் தடம்புரளவும் வாழ்க்கையில் தோற்றுப் போகவும் நிறையவே வாய்ப்புண்டு.

யுத்த களம் எனும்போது வேறு எதனையும் மனதில் கொள்ளாது அதில் போரைப் பற்றி மட்டுமே சிந்தனை சுழலவேண்டுமென நினைப்பது தவறு, மாறாக, அக்கட்டத்திலும் வல்ல அல்லாஹ்வை மறக்காமல் அவனை ஞாபகிக்கவேண்டும் என அல் குர்ஆன் கற்றுத் தருகின்றது.

பத்ர் யுத்தம் பற்றி மிக விரிவாகப் பேசும்  அல் குர்ஆனின் 08 வது அத்தியாயமான அல் அன்பால் சூராவின் 45 வது வசனம் பின் வருமாறு இயம்புகின்றது : விசுவாசங் கொண்டோரே நீங்கள் (யுத்தத்தின்போது எதிரியின்) கூட்டத்தை சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக இருங்கள் ஷஷஅல்லாஹ்வை நீங்கள் அதிகமாக நினைவு கூருங்கள், (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.

செய்நன்றி மறவாது செயல்பட வேண்டும்  :

யுத்ததிற்கு தயாரான நபிகளார் தனது படையின-ருக்கு கட்டளைகளைப் பிறப்பிக்கும்போது எதிரிப் படையைச் சேர்ந்த சிலரின் பெயர்களைக் குறித்து நாளை நடக்கும் யுத்தத்தில் அவர்கள் எதிர்கொண்டால் அவர்களை கொல்லவேண்டாம் எனக் கட்டளையிட்டார்கள், இஸ்லாத்தை அழித்தொழிக்கவென வந்திருக்கும் முஷ;ரிகுகளின் படையில் சிலரை கொல்லவேண்டாமென நபிகளார் கூறியதைப் படிக்கும் சிலர் ஆச்சரியமடையலாம்,

ஆனால் குறிப்பிட்ட அந்நபர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஹிஜ்ரத்துக்கு முன்னால் மக்காவில் முஸ்லிமகளுக்கு பலவிதத்திலும் உதவி ஒத்தாசைப் புரிந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம், பொதுவாக தன்னுடன் கொள்கையில் அவர்கள் ஒன்றுபடாவிட்டாலும் அக்கொள்கைக்காக தனக்கு உதவியதை மறக்காமல் நன்றியுடன் நபிகளார் கைம்மாறு செய்தார்கள்,

யுத்தம் முடிந்தபின் கைதிகள் விடயத்தைக் கையாளும்போதும் மக்காவில் வைத்து இக்கட்டான ஒரு கட்டத்தில் தனக்கு உதவிய முத்இம் பின் அதீ என்ற முஷ;ரிக் உயிருடனிருந்து அவர்கள் விடயத்தில் சிபார்சு செய்தால் அவர்களை தான் மன்னித்து விடுதலை செய்திருப்பேன் எனவும் நபிகளார் கூறினார்கள் ,

நட்புக்கும் பகைக்கும்;  இறைகொள்கையே  அடிப்டை : 

ஒருவருடன் நட்பு பாராட்டவும் அல்லது அவரைப் பகைத்துக் கொள்ளவும் பொதுவாக பல அடிப்படைகளும் காரணங்ளும் உள்ளன. அவற்றில் முதன்மையானதும் மிக முக்கிய-மானதும் சத்தியக்கொள்கையே, இனம், மொழி, தேசம் போன்றவற்றிக்கெல்லாம் அப்பால் ஈமானியக் கொள்கையையே முஸ்லிம்கள் நட்பிட்கான பிரதான காரணமாக வைத்துக் கொள்ளவேண்டும் ,

பத்ர் யுத்தத்தின் இறுதியில் எதிரிபப்டையில் எழுபதுபேர் யுத்தக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அவர்களில் மக்காவாசியாகிய நபித்தோழர் முஸ்அப் பின் உமைர் அவர்களின் சகோதரனும் ஒருவன், மதீனாவாசியாகிய ஒரு நபித்தோழர் அவனைப் பிடித்து விலங்கிட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற முஸ்அப் அவர்கள் அந்த மதீனாவாசியைப் பார்த்து' அவனை நன்றாக இறுக்கிக்கட்டு, அவனது தாயிடம் நிறைய பணமுள்ளது, அவள் தண்டப்பணம் கொடுத்து அவனை விடுவிப்பால்' எனக்கூறியபோது அவரைப்பார்த்து அவன்' எனது சகோதரனாகிய நீ இக்கட்டத்தில் இப்படியா கூறுவது? எனக்கேட்ட போது முஸ்அப் அவர்கள்' நீயல்ல எனது சகோதரன் இம்மதீனாவாசியே எனது சகோதரன்' என பதிலளித்தார்கள்.

இந்த யுத்தத்தின்போது நபித்தோழர்கள் சிலர் எதிரிப் படையிலிருந்த தமது இரத்த உறவிணர்களையே உறவு என்று பாராமல் இறைகொள்கையில் அல்லாஹ்வின் விரோதி என்ற ஒரே காரணத்துக்காக வெட்டி வீழ்த்தினார்கள்.

அளவு அல்ல தரமே முக்கியம் : 

உலகில் எந்த ஒன்றையும் மதிப்பீடுசெய்வதற்கு அதன் அளவு, தரம் ஆகிய இரண்டும் கவனத்தில் கொள்ளப்படும், சிலதில் அளவிற்கு முக்கி-யத்துவம் இருப்பினும் பல விடயங்களில் குறிப்பாக போராட்டம் சார்ந்த பணிகளில் தரத்திற்கே முக்கியத்துவம் இருப்பதை நாம் காணலாம் , இன்றைய உலகில் முஸ்லிம் உம்மா எண்ணிக்கையில் பெரும் கூட்டமா இருந்தும் கூட தரமும் தகுதியும் இல்லாதனால் பலவீனமான இழிநிலையில் இருப்பது கண்கூடு.

பத்ர் யுத்தத்தில் எதிரிகளை விட ஆட்பலத்தாலும் ஆயுதபலத்தாலும் மிகவும் குறைந்த நிலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் உறுதியான ஈமானிய பலமும் கொண்டவர்களாக இருந்தார்கள். சிறிய படையாயிருப்பினும் சீரிய படையாக இருந்ததனால் அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தான்.
 

யுத்த தர்மத்திற்கு உம்மி நபியின் முன்மாதிரி :

இன்றைய உலகில் அநீதிக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு தம்மை பெரும் கனவான்களாகக் காட்டிக்கொள்ளும் பலர் யுத்த நெறிமுறைககைளையும் அதன் தர்மங்களையும் காற்றில் பறக்கவிட்டு தான்தோன்றித்தனமாக நடப்பதைப் பார்கக்லாம்,

ஆனால், 1400 வருடங்களுக்கு முன்பே அருமை நபியவர்கள் எந்தளவு பண்பாக நெறிமுறைகளை மீறாதவிதத்தில் யுத்தம் புரிந்திருக்கிறார்கள் என்பதற்கு பத்ருப் போர் ஓர் சாட்சியாகும் , பத்ர் யுத்தம் முடிந்தபின் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்களை கண்டபடி அழுகி நாறிப்போக விடாமல் அவற்றை அங்கிருந்த பாழ் கிணற்றில்போட்டு மறைத்து விட்டே சென்றார்கள், மேலும், யுத்தக் கைதிகளை மனித நேயத்துடன் நியாயமாக நடாத்தியதையும் நாம் பத்ர் யுத்தம் பற்றி படிக்கும்போது விளங்கிக்கொள்ளலாம். 

இக்கட்டு நிலையிலும் இறை நம்பிக்கைக்கே முதலிடம் 

ஒருவரிடம் என்ன பெரிய வீரமும் திறமையும் இருந்தாலும் அவரிடம் சரியான இறைகொள்கை இல்லாவிட்டால் அவற்றிக்கு இஸ்லாத்தின் பார்வையில் எவ்வித மதிப்பும் கிடையாது. பத்ர் யுத்தத்திற்காக நபிகளார் செல்லும் வழியில் ஒரு நபர் அவர்களுக்கு இடைப்பட்டான், துணிச்சலாகப் போர்புரியும் சிறந்த வீரன் எனப் பிரபலமடைந்-திருந்ந அவனைக் கண்டதும் நபித்தோழர்களுக்கு மகிழ்ச்சி, அவன் நபியவர்களை அணுகி தானும் இப்போரில் முஸ்லிம்களுடன் கலந்துகொள்ள விரும்புவதாகக் கூறினான்,

ஆனால், பல முறை அவன் கோரியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு முஷ;ரிக் என்ற ஒரே காரணத்துக்காக நபிகளார் அவனை திருப்பியனுப்பினார்கள், இறுதியாக அவன் இஸ்லாத்தை ஏற்கவே அவனை தனது படையுடன் இணைத்துக் கொண்டார்கள்.
 

பெரிய மனிதர்களிடம் பெருமை இருக்காது பெருந்தன்மை இருக்கும் : 

நல்ல தலைவர்கள் தனக்குக் கீழ் இருப்பவர்களின் நல்ல கருத்துகளுக்கு மதிப்பளித்தே செயல் படுவர், தனது கருத்து என்பதற்காக ஒன்றில் பிடிவாதமாக இருக்காமல் பொருத்தமான யோசனையை யார் கூறினாலும் தனது சொந்த யோசனையை விட்டுவிட்டு அதனை செயல் படுத்துபவர்கள் கனவான்கள்,

அருமை நபிகளார் தனது படையுடன் பத்ர் மைதானத்தை வந்தடைந்ததும் முகாமிடுவதற்காக ஓரிடத்தை தெரிவுசெய்தார்கள், அப்போது ஒரு நபித்தோழர் நாம் முகாமிடுவதற்கு இதைவிட பொருத்தமான இடம் என வேறு ஓரிடத்தை சுட்டிக்காட்டியதும் நபிகளார் தனது யோசனையைக் கைவிட்டு அவரது யோசனைப்படியே செயற்பட்டதைக் காணலாம்.