அல்குர்ஆனிய மென்பொருட்கள் - ஓர் அறிமுகம் Quranic softwares
Quranic softwares
அல்குர்ஆனிய மென்பொருட்கள் - ஓர் அறிமுகம் Quranic software
வைத்தியக் கலாநிதி அஷ்ஷைக் DR. S. M. ரஈஸுத்தீன் (ஷரஈ)
(சிரேஷ்ட விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக் கழகம்)
எந்த ஒரு விடயத்தையும் எளிமையாகக் கையாள்வதை இஸ்லாமிய மார்க்கம் தனது சிறப்பம்சமாகக் கொண்டுள்ளது. எளிமை, எளிமையாக்கம் தொடர்பாக அல் குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதரின் வலிகாட்டலிலும் பல்வேறு தகவல்கள் வந்துள்ளன.
இந்த வகையில் பார்க்கும் போது இஸ்லாமிய அறிவுத்துறைகளில் எளிமையாக்கம் கொண்டுவரப்படும் போது நாம் அதை வரவேற்று துறைசார் உச்ச பயனைப் பெறுவதே இஸ்லாமிய வழிகாட்டல் எனலாம்.
இஸ்லாமிய அறிவியல் தகவல்கள், ஓலைச்சுவடிகளில் பொறிக்கப்பட்ட காலம் கடந்து, காகிதங்களையும் தாண்டி கணணி மென்பொருட்களுக்குள் நுழைந்திருக்கின்றன. இதில் அல் குர்ஆன், அல் குர்ஆனியக் கலைகள், அல் குர்ஆன் விரிவுரைகள் அடங்கிய மென்பொருட்கள் தொடர்பாக நாம் இங்கு பார்க்க இருக்கின்றோம்
அல் குர்ஆனிற்கென்றே வடிவமைக்கப்பட்ட மென்பொருட்களையும் வெப் தளங்களையும் இதில் உள்ளடக்கலாம். வடிவமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மென்பொருளும் தனக்கேயுரிய சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன. அல் குர்ஆனியத் துறைகளில் ஈடுபாடு காட்டும் வௌ;வேறு துறைசார்ந்தவர்களுக்கு வௌ;வேறு சிறப்பியல்புகள் செய்யப்பட்டிருப்பது மிகப் பிரயோசனம் வாய்ந்த அம்சமாகும்.
மிகப் பிரபல்யமான அல் குர்ஆனிய மென்பொருட்கள்:
- الجامع التاريخي لتفسير القرآن الكريم
- برنامج آيات
- موسوعة التفاسير وعلوم القرآن
- موسوعة تفاسير القرآن
الجامع التاريخي لتفسير القرآن الكريم
இம் மென்பொருள் ஹிஜ்ரி 2 ஆம் நூற்றாண்டு முதல் இற்றை நாள் வரையுள்ள பிரபல்யமான 101 தப்ஸீர் நூற்களைக் கொண்டது. இதன் சிறப்பம்சங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்
1. அல் குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கும் போது, குறித்த வசனத்தைக் க்ளிக் செய்வதன் மூலம் அந்த வசனத்திற்கு விரிவுரை செய்யப்பட்டுள்ள அத்தனை விரிவுரை நூற்களும் ஒரே பக்கத்தில் திறக்கும் வசதி செய்யப்பட்டுள்ளமை.
2. விரிவுரை தேவைப்படும் வசனத்தைத் தேடி எடுத்து விரிவுரைகள் அத்தனையும் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளமை.
3. 101 விரிவுரைகளும், அதிமுக்கிய, சட்டம்சார், சுருக்க, மொழிசார் போன்ற வௌ;வேறு தலைப்புகளுக்குக் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளமை.
4. முழுமையான அத்தியாம் ஒன்றின் மொத்த விரிவுரையும் ஒரே பக்கத்தில் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளமை. இது மொரோக்கோவில் அமைந்துள்ள مؤسسة البحوث والدراسات العلمية
என்ற நிறுவனத்தின் வெளியீடாகும்.
www.mobdii.com என்ற தளத்தில் இருந்தது الجامع التاريخي لتفسير القرآن الكريم ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
برنامج آيات
இம் மென்பொருள் அதி முக்கியமான எழு விரிவுரைகளையும், உலகிலுள்ள பெரும்பாலான மொழிபெயர்ப்புகளையும் கொண்டது. இதே மென்பொருள், ஸ்மார்ட் போன்களில் பாவிக்கும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரியாத் நகரில் அமைந்துள்ள மன்னர் ஸஊத் பல்கலைக் கழக வெளியீடாகும்.
http://quran.ksu.edu.sa/ayat/ என்ற தளத்தில் இருந்து برنامج آيات ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதே மென்பொருளை பின்வரும் முகவரியில் வெப் தளமாகவும் பார்வையிடலாம்:
http://quran.ksu.edu.sa/index.php#aya=1_1&m=hafs&qaree=husary&trans=ar_mu
موسوعة التفاسير وعلوم القرآن
இம் மென்பொருள் அதி முக்கியமான பன்னிரண்டு விரிவுரைகளையும், குர்ஆனியக் கலை தொடர்பான சில முக்கிய நூற்களையும் கொண்டுள்ளதோடு, விரிவுரைகளில் இடை நடுவே வரும் ஸஹீ{ஹல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய கிரந்த ஹதீஸகள் மூல நூற்களுக்கே இணைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்
www.islamweb.net/mw.php என்ற தளத்தில் இருந்து موسوعة التفاسير وعلوم القرآن ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
موسوعة تفاسير القرآن
இம் மென்பொருள் இன்று அச்சில் உள்ள பெரும்பாலான விரிவுரைகளையும், குர்ஆனியக் கலை தொடர்பான சில முக்கிய நூற்களையும் கொண்டுள்ளது.
www.islamspirit.com என்ற தளத்தில் இருந்து موسوعة تفاسير القرآن ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மென்பொருட்கள் மாத்திரமல்லாமல் அல் குர்ஆனியத் துறைகளுக்கென்றே சில சிறப்பான வெப் தளங்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றின் விபரங்கள் வருமாறு.
இந்தத் தளம், இது வரைகாலமும் எழுதப்ப்பட்ட குர்ஆனிய கலைகள் தொடர்பான பெரும்பாலான நூற்களை ஆராய்ந்து, ஒரு பெரும் ஆய்வுக் குழுவினால் தொகுக்கப்பட்டு, அத்தியாயம் அத்தியாயமாக சேர்க்கப்பட்டு வருகின்றது.
இந்தத் தளத்தில் பின்வரும் சிறப்பம்சங்கள் உள்ளன.
அ. பெரும்பாலான விரிவுரைகளின் சுருக்கத் தொகுப்பு.
ஆ. சுருக்கமான புரியும்விதமான எளிய வசன நடை
இ. ஆதார நூற்களை பாகம், பக்கத்தோடு மேற்கோள் காட்டுவது
ஈ. மூலநூற்களையே பெரும்பாலும் மேற்கோள் காட்டுவது
உ. தகவல்களின் நம்பகத்தன்மை
ஊ. விரிவுரையில் மேற்கோள் காட்டப்படும் ஹதீஸ்களின் மூலநூற்கள் பற்றிய தகவல்களும், அந்த ஹதீஸ்களின் தரம் பற்றிய விவரணமும் சேர்க்கப்பட்டிருப்பது.
எ. வழிகெட்ட சிந்தனைப் பிரிவுளின் கொள்கைகளைத் தவிர்த்து அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கைப் போக்கு கடைப்பிடிக்கப் பட்டுள்ளமை
இந்தத் தளம் இஸ்லாமியத் தொலைக்கல்விக்கான தளமாகும். இத்தளத்தில் مكتبة التفسير وعلوم القرآن الكريم அமைந்துள்ளது. இப்பகுதியில் அல்குர்ஆனிய கலைகள் தொடர்பான அநேக நூற்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம்மாகும்.
அல் குர்ஆனிய கணணி மென்பொருட்களை விட குறைந்த சிறப்பியல்புகளுடன் ஸ்மார்ட் போன்களுக்கான நம்பகமான மென்பொருட்களும் உள்ளன. அவற்றில் சில வருமாறு.
இவற்றை மொபைல் Playstore> Appstore களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- 1. ayat
- 2. ayah
- 3. Quran for Android
- 4. Great Quran
அல்குர்ஆனிய கலைகள் தொடர்பான PDF Document (பீடீஎப் ஆவணம்)
இவ்வகை ஆவணங்கள், தொன்று தொட்டு பேணப்பட்டு வந்த கையெழுத்துப் பிரதிகளையும், அச்சுத்துறை வளர்ச்சி மூலம் அச்சடிக்கப்பட்ட நூற்களையும், மூலப்பிரதிகளையும் பார்க்கும் வண்ணம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமிய அறிவியலின் சகல துறை நூற்களும் இவ்வகை ஆவணமாகக் கணணிகளுகுள்ளும் ஸ்மார்ட் போன்களுக்குள்ளும் பதிவிறக்கம் செய்யப்பட முடியும். இவ்வகை ஆவணங்களை, Adobe Reader> Foxit Reader போன்ற ஏதேனும் PDF Document Reader ஒன்றைக்கொண்டு பார்வையிட முடியும்.
PDF ஆவண நூற்களை பதிவிறக்கம் செய்யவென்றே பிரத்தியேகமான வெப்தளங்ககள் தாராளமாக இருக்கின்றன. அவற்றில் மிகப் பிரபல்யமானவைகளில் சில கீழே தரப்படுகின்றன.
- http://waqfeya.com/
- http://www.almeshkat.net/books/
- http://www.bib-alex.com/
- http://kt-b.com/
- http://www.muslim-library.com/
அகீதா, ஹதீஸ் கலை தொடர்பான மென்பொருட்கள் அறிமுகம் அடுத்த இதழில் தொடரும்.
( from ZIKRA )