இல்லத்துக்குள் இஸ்லாம்
இல்லத்துக்குள் இஸ்லாம்
H.M.M. Hasheem (Grade-6)
இவ்வுலகில் பின்பற்றப்படும் மார்க்கங்களில் என்றைக்கும் எச்சந்தர்ப்பத்திலும் கொள்கையில் வேறுபடாமல் அனைவருக்கும் ஒரே விதமான சட்டத்தைக் கூறும் ஓரே மார்க்கம் இஸ்லாம் தான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. பாமரன் முதல் பணக்காரன் வரை ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் ஒரே சட்டம். ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு வாழ வேண்டும் என்ற அனைத்து விடயங்களையும் எமக்கு அழகிய முறையில் காட்டித்தந்துள்ளது.
அதே போன்று ஒரு மனிதன் தனது இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும் அவனுக்கு எப்படி கட்டுப்பட வேண்டும் தனது றஸுலை எவ்வாறு பின்பற்ற வேண்டும் போன்ற விடயங்களைக் கூறியுள்ள இஸ்லாம் ஒருவன் தான் வசிக்கும் வீட்டிலும் தான் வேலை செய்யும் வேலைத் தளங்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் எவ்வாறு இருக்க வேண்டும், அவ்விடத்தில் தனது இறைவனுக்கு எவ்வாறு கட்டுப்பட வேண்டும் போன்றவற்றையும் எமக்கு அழகிய முறையில் தெளிவாகக் கற்றுக் தந்துள்ளது.
இவ்வாறு மனிதன் அதிகமாக சேர்ந்திருக்கும் இடங்களில் ஒன்றான வீட்டிலே எவ்வாறு இஸ்லாம் மார்க்கத்தை நாம் வளர்க்க வேண்டும் என்பது பற்றியே இக்கட்டுரையின் ஊடாக நாம் பார்க்க இருக்கிறோம்.
ஒருவன் இவ்வுலகத்தை கண்டது முதல் அதை விட்டும் பிரியும் வரைக்கும் உள்ள காலங்களில் மிக அதிகமான காலங்களை தனது வீட்டிலே தான் கழிக்கின்றான். அவனுடைய உணவு, உடை, தங்குமிடம் போன்ற அனைத்து விடயங்களும் அவனது வீட்டையே சார்ந்துள்ளது. ஒவ்வொருவரும் தாம் வேலைக்குச் சென்று கஷ;டப்பட்டுவிட்டு தமது ஓய்விற்கு வீடுகளை நோக்கியே செல்கிறார்கள். ஒவ்வொருவரும் பல மாடிகளைக் கொண்ட ஆடம்பரமான வீடுகளைக் கட்டுவதற்காக தமது முழு சொத்துக்களையும் செலவு செய்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நீண்ட ஒரு ஹதீஸிலே கூறும் போது 'காலில் அணிவதற்கு செருப்பு இல்லாத உடுப்பதற்கு ஒழுங்கான ஆடையில்லாத ஆடு மேய்க்கும் ஏழைகள் கூட ஆடம்பரமான வீடுகளை கட்டுவதற்கு போட்டி போடுவார்கள்.' என்று கூறியதை நாம் நிதர்சனமாகக் காணும் அளவிற்கு வீடுகள் காணப்படுகின்றன. அந்த அளவிற்கு மனிதனுக்கு மிக முக்கியமாக வீடு காணப்படுகின்றது.
இப்படிபட்ட வீட்டிற்குள் இப்புனித மார்க்கத்தை எவ்வாறு கடைபிக்க வேண்டும்? எந்தளவு கடைபிடிக்கின்றோம்? என்று பார்த்தால் இறுதி முடிவு மிகவும் கவலையாகத் தான் உள்ளது. அல்லாஹுத் தஆலாவும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் ஒருவன் தனது வீட்டிற்குள் நுழைந்தது முதல் வெளியேறும் வரை செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கூறியுள்ளார்கள். அவ்விடயங்களை ஒவ்வொன்றாக நோக்குவோம்.
வீட்டிற்குள் நுழையும் போது
ஒரு மனிதன் தனத வீட்டிற்கோ அல்லது வேறொருவரின் வீட்டிற்கோ நுழையும் போது செய்ய வேண்டிய முதல் வேலை ஸலாம் கூறுவதாகும். அல்லாஹ் தனது குர்ஆனில் கூறும் போது 'அன்றியும் வீடுகளில் நீங்கள் நுழைவீராயின், அல்லாஹ்விடமுள்ள பரிசுத்தமான பரக்கத்துச் செய்யப்பட்ட காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்' (24:61) என்று கூறுகின்றான். மற்றொரு இடத்தில் அல்லாஹ் 'விசுவாசங் கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் நீங்கள் நுழைய அவசியம் ஏற்பட்டால் அவ்வீடுகளில் உள்ளவர்களிடம் நீங்கள் அனுமதி கோறி, அவ்வீடுகளில் உள்ளோருக்கு ஸலாம் கூறாதவரை அவற்றில் நுழையாதீர்கள்' (24:27)
இவ்வாறு இஸ்லாம் கூறவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் ஒரு ஆணோ பெண்ணோ தனது வீட்டிற்குள் எவ்வாறு இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. எனவே ஒரு நபர் அவ்வீட்டிற்குள் திடீரென நுழைந்தால் தனக்கு ஹறாமானா வெறுக்கத்தக்க விடயங்களை கண்டுவிட சாத்தியமுள்ளது. ஒரு வேளை மகன் தனது தாயின் வீட்டிற்குள் திடீரென நுழைந்து, தாயைக் காணக்கூடாத முறையில் கண்டு விட்டான் என்றால் மகனுக்கு தனது தாயின் முகத்தைப் பார்ப்பதற்கோ தாயிற்கு மகனின் முகத்தைப் பார்ப்பதற்கோ சங்கடமான ஒரு சூழ்நிலை ஏற்படலாம்.
மற்றுமொரு காரணம் தான் 'பரகத்' (அபிவிருத்தி). ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'ஆதமுடைய மகனே! நீ உன் குடும்பத்தாரிடம் நுழைந்தால் நீ ஸலாம் கூறு. அது உனக்கும் உனது குடும்பத்தாருக்கும் பரக்கத்தாக ஆகிவிடும்' எனக் கூறினார்கள். (ஆதாரம் : திர்மிதி)
மேலும் எங்களில் சிலர் யாராவது தனக்கு நெருங்கிய குடும்பத்தாரின் வீட்டிற்கோ அல்லது நண்பரின் வீட்டிற்கோ சென்றால் வீட்டின் பின் பக்கமுள்ள வாசலினால் செல்கின்றார்கள். இது தவறானதொரு தவிர்க்கப்பட வேண்டிய பழக்கமாகும். சில வேளை அது அக்குடும்பத்தாருக்கு மிகப் பெரும் திடுக்கமாக ஆகிவிடும். எனவே தான் அல்லாஹ் குர்ஆனிலே 'முஃமின்களே! உங்களுடைய வீடுகளுக்கு அவற்றின் பின் புறங்களின் வழியாக நீங்கள் வருவதில் ஏதும் நன்மை இல்லை. எனினும் அல்லாஹ்வை அஞ்சுபவர்தாம் நன்மைக்குரியவர். எனவே வீடுகளுக்கு அவற்றின் வாசல்கள் வழியாகவே நீங்கள் வாருங்கள். (2:189) என்று கூறுகின்றான்.
அடுத்ததாக வீட்டிற்குள் நுழையும் போது செய்ய வேண்டியது 'துஆ' ஓதுவது. இது மிக முக்கியமான ஒரு பகுதியாகும். ஏனெனில் ஒருவன் துஆ இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்தால் எமது மாபெரும் எதிரியான iஷத்தானும் அவனுடைய பட்டாளங்களும் அவனுடன் சேர்ந்து நுழைந்து விடுகின்றனர்;. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸிலே கூறினார்கள் 'ஒரு மனிதன் வீட்டிற்குள் நுழைந்தால் அவன் நுழையும் போதும் அவனுடைய சாப்பாட்டின் போதும் அல்லாஹ்வை நினைவு கூறட்டும். அப்படிக் கூறினால் iஷத்தான் அவனுடைய தோழர்களைப் பார்த்து 'உங்களுக்கு தங்குமிடமோ உணவோ கிடையாது' என்று கூறுவான்.
ஒருவன் வீட்டிற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூறவில்லை என்றால் iஷத்தான் 'உங்களுக்கு தங்குமிடம் கிடைத்துவிட்டது' என்று கூறுவான். இன்னும் ஒருவன் சாப்பாட்டின் போது நினைவு கூறவில்லை என்றால் iஷத்தான் 'உங்களுக்கு உணவு கிடைத்துவிட்டது எனக் கூறுவான்'. (ஆதாரம் : முஸ்லிம்)
எனவே இப்படி ஒருவன் துஆ இல்லாமல் வீட்டிற்குள் iஷத்தானை அழைப்பானாக இருந்தால் அவனுடைய வீட்டிலும், உணவிலும் எப்படி அல்லாஹ்வின் அருள் கிடைக்கப் போகிறது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் தான் இன்று எங்கு பார்த்தாலும் வீட்டில் நிம்மதி இல்லை, உணவுத் தட்டுப்பாடு, குடும்ப பிரச்சினை, கணவன் மனைவி பிரச்சினை என எங்கு பார்த்தாலும் iஷத்தானின் தாக்கமே காணப்படுகிறது.
வீட்டிற்குள் :
இப்போது ஸலாம் கூறி அனுமதி பெற்று துஆவுடன் நுழைந்து விட்டோம். அடுத்ததாக நாம் செய்ய வேண்டிய கடமை என்னவென்று பார்த்தால் இங்கே தான் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடிய எமது மார்க்கத்தை பாhதுகாக்க வேண்டிய ஒரு விடயம் காணப்படுகிறது. அது வீட்டிற்குள் மஹ்றமிய்யத்தைப் பேணுதல். ஆரம்பத்தில் மஹ்றமிய்யத் அஜ்னபீய்யத் என்றால் என்னவென்று பார்ப்போம். சுருக்கமாக பார்த்தால் யார் யாரெல்லாம் திருமணம் முடிக்க தடுக்கப்பட்டுள்ளார்களோ அவர்கள் மஹ்றமிய்யத்தானவர்கள் என்றும் மஹ்றமிய்யத்திற்கு மாற்றமானவர்கள் அனைவரும் அஜ்னபிய்யத் என்றும் கூறப்படும். அவர்கள் யார் யார் என்பதை அல்லாஹ் குர்ஆனில் 4:23 வசனத்திலே கூறிப்பிடுகிறான். விரிவஞ்சி அதை தவிர்க்கின்றேன்.
இவர்களுடன் தான் அதாவது மஹ்றமிய்யத்தனவர்களுடன் தான் எங்களுக்கு பேசவோ பழகவோ பிரயாணம் செய்யவோ முடியும். காரணம் எங்களால் அவர்களுக்கு எவ்வித தீங்கும் கிடையாது. அதற்கு மாற்றமாக அஜ்னபிய்யத்தானவர்களுடன் பழகும் போது தான் அதிகமான பாவங்கள், பிரச்சினைகள், ஏன் விபச்சாரங்கள் கூட நடக்கின்றன. ஆனால் இக்காலத்தில் யாரும் பெரிதாக இச்சட்டங்களை கடைபிடிப்பதில்லை.
எந்தளவுக்கென்றால் ஒருவன் தன்னுடைய நண்பனை தன் வீட்டு அடுப்பங்கரை வரை கொண்டு செல்கிறான். அதே போல் தனது கணவரின் சகோதரனுடன் மனைவி எவ்வித கூச்சமும் இல்லாமல் பேசுகிறாள். அவனுடன் வைத்திசாலைக்கு செல்கிறான். மேலும் அவளுடைய வேறு சில தேவைகளையும் அவனே நிறைவு செய்து கொடுக்கிறான். ஆனால் இவை மிகவும் தவறானது.
ஏனெனில் இப்படிப் பட்ட காரணங்களினால் தான் இன்று அதிகமான விபச்சாரங்கள் நடைபெறுகின்றன. நாம் கற்பனை பண்ணி கூறவில்லை என்பது உலகம் அறிந்த உண்மையே. எனவே இப்படி தனது மனைவியுடன் தனது சகோதரன் பழகுவதை ஒரு உண்மையான கணவன் தடுக்க வேண்டும். இதை வாசிக்கும் சிலருக்கு நான் எனது சகோதரனின் மனைவியை எனது சகோதரியாகத்தானே நினைத்து பழகுகின்றேன். எனக்கு எப்படி தவறான எண்ணம் ஏற்படலாம் என்று நினைக்கிறார்கள்.
உண்மை தான். அனைவரும் அப்படி தான் நினைத்து பழகுகின்றார்கள். ஆனால் எமது விரோதி ஒருவன் இருக்கின்றான். அவன் சில வேளை தனது உண்மையான சகோதரியைக் கூட அழங்காரமாக காட்டிவிடுவான். அவன் தான் iஷத்தான். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கன். ஒருவன் அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக iஷத்தான் இருக்கின்றான் என்று கூறியுள்ளார்கள்.
மேலும் ஒரு ஹதீஸிலே நபி (ஸல்) அவர்களுடன் இந்த உறவைப் பற்றி கேட்கப்பட்ட போது 'ஹமு' என்பவர் மரணத்தைப் போல எனக் கூறினார்கள். 'ஹமு' என்ற சொல் ஒரு பெண்ணுக்கு தனது கணவரின் சகோதரனையும், ஒரு ஆணுக்கு தனது மனைவியின் சகோதரியையும் குறிக்கும். நாம் இன்று இவ்வுறவால் ஏற்படும் விபரீதத்தை அதிகமாக கேட்கின்றோம். எனவே ஒரு முஸ்லிமும் தனது வீட்டிற்குள் இந்த மஹ்றமிய்யத் அஜ்னபிய்யத்தை கட்டாயம் பேண வேண்டும் என்பது உங்களுக்கே விளங்கியிருக்கும்.
வீட்டிற்குள் மறைவை எடுத்துக் கொள்ளல் :
இத்தலைப்பு மிக முக்கியமானதாகும். அதாவது ஒரு தாய் தனது பிள்ளைக்கு முன்னால் தந்தை தனது பிள்ளைக்கு முன்னால், சகோதரன் சகோதரிக்கு முன்னால் சகோதரி சகோதரனுக்கு முன்னால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியே இத் தலைப்பு. ஏனெனில் இன்று நாம் பார்க்கின்றோம். குடும்பத்திற்கு மத்தியில் அவ்ரத்தை (மறைவிடத்தை) பேணுதல் என்ற விடயம் மிகவும் பொடு போக்காகவே காணப்படுகின்றது.
ஒரு தாய் தனது பிள்ளைக்கு முன்னால் மறைவின்றிக் குளிப்பது அல்லது பிள்ளைக்குப் பாலூட்டுவது, சகோதரி தன் சகோதரனுக்கு முன்னால் இப்படிப்பட்ட வேலைகள் செய்வது சகோதரன் தன் சகோதரிக்கு முன்னால் உடை மாற்றுதல் போன்ற இன்னும் பல விடயங்கள் எங்களுக்கு மத்தியில் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றது. எம்மில் சிலர் இவைகள் தவறா? என்று கூடக் கேட்கலாம். ஆனாலும் இவைகள் தவறுதான்.
ஒரு தாய் தனது பருவம் அடைந்த பிள்ளைக்கு முன்னால் எப்படி மறைவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஏனையவர்களுக்கு முன்னால் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதே போன்றுதான். ஏனெனில் அல்லாஹ் குர்ஆனிலே 'மேலும் உங்களிடமுள்ள சிறுவர்கள் பருவத்தை அடைந்து விட்டால் அவர்களுக்கு முந்தியுள்ள (மூத்தவர்கள்) எல்லா நேரங்களிலும் அனுமதி கேட்பது போன்று அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களை விவரிக்கின்றான். அல்லாஹ் முற்றும் அறிந்தவன். ஞானமிக்ககவன். (24:59) என்று கூறுகின்றான்.
அன்புத் தாய்மார்களே அல்லாஹ் இவ்வசனத்திலே என்ன கூறுகிறான் என்று சிந்தித்தீர்களா? உங்களுடைய மூத்த பிள்ளைகள் உங்களிடம் வரும் போது அனுமதி கேட்க வேண்டும் என்பது போல் உங்களுடைய ஏனைய பிள்ளைகளும் பருவமடைந்தால் அனுமதி கேட்டுவிட்டே வரவேண்டும் என்று அல்லாஹ் கூறிவிட்டு 'அல்லாஹ் முற்றும் அறிந்தவன்' என்றும் கூறுகிறான்.
காரணம் iஷத்தான் சில வேளை தாயைக் கூட அலங்காரமாகக் காட்டிவிடுவான். அந்த நேரத்தில் நீங்கள் 10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளையே உங்கள் விரோதியாக மாறிவிடும். மேலும் ஒரு பிள்ளை தன்னுடைய தாயிடம் எந்த நேரமும் செல்ல முடியாது. சில தடை செய்யப்பட்ட நேரங்களும் காணப்படுகின்றன. அந்த நேரங்களில் கட்டாயம் அனுமதி பெற்றே அவர்களிடம் செல்ல வேண்டும்.
அந்த நேரங்களை அல்லாஹ் குர்ஆனிலே கூறும் போது 'முஃமின்களே! உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களும் (அடிமைகள்) உங்களில் பருவத்தை அடையாத சிறுவர்களும் மூன்று தடவைகள் உங்களிடம் வருவதாயின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். பஜ்ருத் தொழுகைக்கு முன்பும், உங்களுடைய (அதிகமான) ஆடைகளை நீங்கள் களைந்து வைத்திருக்கும் நேரத்திலும், தொழுகைக்குப் பின்பும் இவை உங்களுடைய மறைவான மூன்று நேரங்களாகும். (18:58) என்று கூறுகின்றான்.
எனவே இந்த நேரங்களில் ஏன் பிள்ளைகளை அனுமதியின்றி அனுமதிக்கக் கூடாது என்ற காரணம் இவ்வசனத்தின் மூலம் உங்களுக்கே விளங்கும். என் சொந்தப் பிள்ளைக்கே இச்சட்டம் என்றால் அந்நியர்களுக்கு முன்னால் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அதே போன்று தான் ஒரு சகோதரி தன் சகோதரனுக்கு முன்னால் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று நாம் பார்க்கின்றோம் ஒரு சகோதரி தன் சகோதரனுக்கு முன்னால் எந்த மறைவுமில்லாமல் கூச்சமுமில்லாமல் குளிக்கின்றாள். அதே போன்று தன் பிள்ளைக்கு பால் ஊட்டுகிறாள். இவைகள் அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய தவறுகள்.
நீங்கள் உங்கள் சகோதரன் என்று நினைத்தாலும் அவனும் ஒரு பருவமடைந்த ஆண் என்பதை மறந்துவிடாதீர்கள். இது பிழையான கருத்தல்ல. ஏனெனில் சகோதரன் சகோதரியை பாலியல் துஷ;பிரயோகம் புரிந்த சம்பவங்களும் ஓடிச் சென்ற சம்பவங்களும் எமது காதுகளை அடிக்கடி வந்தடைகின்றன.
வீட்டிற்குள் ஒழுக்க வீழ்ச்சி :
அண்மைக் காலங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் தவறான தொடர்புகள் பற்றிய செய்திகலெல்லாம் பத்திரிகை ஊடாகவும், தொலைக் காட்சி மூலமும் நாம் பார்த்திருப்போம் கேட்டிருப்போம். இப்படிப்பட்ட தவறான விடயங்கள் இஸ்லாமிய சமுகத்தில் நடக்கவில்லை என்றாலும் ஒரு படிப்பினைக்கு நாம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கான காரணத்தைப் பார்த்தால் வீட்டிற்குள் ஏற்படும் சில சூழல்களே ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'உங்களுடைய பிள்ளைகள் 7 வயதையடைந்தால் தொழுகைக்கு அவர்களை அழையுங்கள். 10 வயதாகியும் தொழவில்லையென்றால் அவர்களை அடித்துத் தொழவையுங்கள். இன்னும் அவர்கள் 10 வயதையடைந்தால் அவர்களைப் படுக்கையில் பிரித்து வையுங்கள் என்று கூறினார்கள்.
காரணம் ஒரு ஆண் அல்லது பெண் பத்து வயதையடைந்துவிட்டால் அவர்களுடைய ஆசையின் வளர்ச்சி ஆரம்பமாகின்றது. எனவே இதன் போது அவர்களை ஒன்றாகப் படுக்க வைத்தால் iஷத்தான் அவர்களுக்கு மத்தயில் தப்பான எண்ணத்தை எற்படுத்தி கெட்ட விடயத்தின் பால் இட்டுச் செல்வான்.
எனவே வயது வந்த பிள்ளைகளை கட்டாயம் படுக்கையை விட்டு பிரித்து வைத்து உங்களுடைய குடும்ப மானங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். இன்னும் இது போன்ற பல காரணங்கள் இப்படியான தவறுகளுக்குக் காரணமாக அமைகின்றன. இவை எமது வீடுகள் இஸ்லாமிய மயப்படுத்தப்பட வேண்டும் என்பதையே உணர்த்துகின்றன.
பணிவிடை செய்தல் :
ஒரு பிள்ளை தனது பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும். அதே போல் மனைவி கணவனுக்குப் பணிவிடை செய்து கொடுக்க வேண்டும். மேலும் முடியுமானவர்கள் முடியாதவர்களுக்கு பணிவிடை செய்து கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியிருந்தும் எங்களில் அதிகமானவர்கள் இவற்றை கடைபிடிப்பதில்லை.
எந்தளவுக்கென்றால் நண்பன் சொல்லும் விடயங்களை வேலைக்காரன் போல் செய்யும் ஒருவன் தனது தாய் கடைக்குப் போய்விட்டு வருமாரு கூறினால் மறுத்துவிடுகிறான். அதே போல் வீட்டு வேளைகளை தாய் செய்ய பிள்ளை கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அதைவிட ஒரு படி மேலே சென்றால் தாய் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவதை வீட்டுக்குள் படுத்துக் கொண்டு மகன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இப்படியிருந்தால் எப்படி இஸ்லாம் வளரப் போகின்றது. இந்த நிலை மாற வேண்டும். அப்போது தான் தாயிற்கு மகன் மீது அன்பு ஏற்பட்டு மகனுக்காக சுவனத்தை அல்லாஹ்விடம் வேண்டுவாள். அவ்வாறு உதவி செய்யாவிட்டால் தாய்க்கு மாறு செய்தால் தாயின் சாபத்திற்கு தான் உள்ளாக வேண்டும்.
பெற்றோரின் கவனத்திற்கு :
இன்று அதிகமான வீடுகள் அல்லாஹ்வின் அருளைப் பெருவதற்கு பதிலாக iஷத்தானின் அருளை பெறும் வீடுகளாக மாறுகின்றதைத் தான் பார்க்கலாம். அதாவது அல்குர்ஆன் ஓதுவதற்குப் பதிலாக பாடல்கள், படங்கள், நாடகங்கள், நடனங்கள் போன்ற iஷத்தானிய செயல்களே அரங்கேற்றப்படுகின்றன. இப்படிப்பட்ட வீடுகளில் சந்தோசம் இருக்கவே இருக்காது.
ஏனெனில் அல்லாஹ் குர்ஆனிலே 'அவர்கள் ஈமான் கொண்டவர்கள் அவர்களுடைய இதயங்கள் அல்லாஹ்வை திக்ர் செய்வதினால் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை திக்ர் செய்வதினால் இதயங்கள் அமைதி பெறுகின்றன.' (13:128) என்று கூறிகின்றான். எனவே அல்லாஹ்வை திக்ர் செய்யாத வீட்டிலே எவ்வாறு சந்தோசம் இருக்கும். அதற்கு மாற்றமக கவலைகளும், தொடர்ந்து பிரச்சினைகளும் காணப்படும்.
எனவே அன்பிற்குரிய வாசகர்களே! உங்களது ஆதரவின் கீழ் உள்ள அனைவரையும் வழிநடத்தும் பொறுப்பு உங்களுக்கே. அதே போன்று உங்களது பிள்ளைகளை பக்கத்து வீட்டுக்காரனாக இரந்தாலும் மரியாதையுடனே பழக வையுங்கள். பக்கத்து வீட்டுக்காரர் தானே என்று தனியே உங்களுடைய பிள்ளைகளை எங்கும் அனுப்பாதீர்கள். கடைசியில் கைசேதப்பட வேண்டியது நீங்கள் தான்.
அதே போன்று உங்களுடைய வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்களை வரவேற்பதற்காக உங்களுடைய பிள்ளைகளை அனுப்பாதீர்கள். (மேலே குறிப்பிடுவது பெண் பிள்ளைகளைத் தான் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்) அதே போல் யாராவது அழைத்தாலும் தமது சொந்தக் குரலிலே பதிலளிக்க வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் குர்அனிலே 'எனவே அந்நியருடன் பேசும் போது நீங்கள் குழைந்து பேச வேண்டாம். அவ்வாறாயின் எவருடைய உள்ளத்தில் நோய் இருக்கின்றதோ அவர் ஆசை கொள்வார்.' (33:32) என்று கூறுகின்றான்.
அல்லாஹ் இங்கு 'நோய்' என்று குறிப்பிடுவது 'காமம்' எனும் இச்சையைத் தான். ஏன் அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான் என்றால் அடிப்படையிலேயே பெண்களின் குரல் கவர்ச்சியானது. எனவே அவர்கள் குரலைத் தாழ்த்திப் பேசும் போது வந்திருப்பவர்களின் உள்ளங்களில் தவறான எண்ணங்கள் ஏற்படுகின்றது என்பதற்காகத்தான்.
இறுதியாக அன்புக்குரிய பெற்Nhர்களே! மேற்கூறிய அனைத்து விடயங்களையும் கடைபிடிப்பது உங்கள் பொறுப்பு. நீங்கள் அப்பொறுப்புக்களை வீணடித்தால் நாளை மறுமையில் மாட்டிக்கொள்வீர்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களுடைய பொறுப்புக்கள் பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்' என்றார்கள்.
எனவே உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களே பொறுப்புதாரிகள் என்பதை அறிந்து இஸ்லாமிய மார்க்கத்தை வீட்டிற்குள் கொண்டுவர வேண்டிய அனைத்து சட்டங்களையும் கடைபிடித்து எமது வீட்டை சுவனத்தின் பூஞ்சோலையாக மாற்றி வெற்றி பெற்ற கூட்டத்தில் சேருவதற்கு முயற்சிப்போமாக.