சீஆக்களால் சீரழிக்கப்படும் கர்பலா
சீஆக்களால் சீரழிக்கப்படும் கர்பலா
Ashshaikh M.O. Fowzur Rahman (Bahji)
முஹர்ரம் மாதம் அல்லாஹ்வால் அல்குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்பட்ட மாதங்களில் ஒன்று. முஸ்லிம்களின் புது வருடம் இம்மாதத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. இஸ்லாமிய வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்ற ஒரு மாதமாகவும் இது காணப்படுகின்றது.
இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்பு ரமழான் மாத நோன்புக்கு பிறகு அல்லாஹ்விடத்தில் மிகச் சிறப்புக்குறியதாகும். குறிப்பாக இம்மாத்த்தில் 9, 10 ஆம் நாட்களில் நோற்கப்படும் நோன்பு மிகவுமே சிறப்புக்குரியதாகும்.
இம்மாதத்தை நபி(ஸல்) அவர்களின் காலத்தில் புனித மதீனா நகரில் வாழ்ந்த யூதர்களும் ஆசூரா தினத்தில் நோன்பு நோற்று கண்ணியப்படுத்தினர். நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தையும் பிர்அவ்னின் தீங்குகளை விட்டும் அல்லாஹ் பாதுகாத்ததை நினைவுகூர்வதே இதன் பின்னணியாகும்.
நபி(ஸல்) அவர்களின் காலந் தொட்டு இம்மாதத்தை முஸ்லிம்கள் சிறப்புடன் வரவேற்கின்றனர். நபி வழி நடக்கும் நல்லோர்கள் இஸ்லாம் கூறும் வரையறைகளுடன் இம்மாதத்தின் புனிதத்தை பேணும் அதே வேளை சில தவறிய பிரிவினர்கள் அல்குர்ஆன், சுன்னாவின் வரையறைகளுக்கு அப்பால் சென்று பல அனாச்சாரங்களையும், சடங்குகளையும் மேற்கொள்வதை நாம் காணலாம்.
இவற்றில் மிக முக்கிய வழிகேடுதான் 'கர்பலா' நிகழ்வை மையப்படுத்தி உலகின் நாலா பக்கங்களிலும் சீஆக்களினால் மேற்கொள்ளப்படும் அனுஷ;டானங்கள். இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்ற சோகமான நிகழ்வுகளில் கர்பலா நிகழ்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும்.
வருடா வருடம் முஹர்ரம் மாதம் ஆரம்பிக்கும் சந்தர்ப்பம் முதல் அம்மாதம் முடிவடையும் வரை உலகின் நாலா பாகங்களிலும் இந்நிகழ்வு நினைவுகூரப்படுவதை நாம் காணலாம். குறிப்பாக அகீதா ரீதியாக வழிதவறிய பிரிவுகளில் ஒன்றாகிய ஷPஆப் பிரிவினர்கள் இக்காலப் பகுதியில் துக்கம் அனுஷ;டித்தும் மார்க்கம் அனுமதிக்காத தடுக்கப்பட்ட பல காரியங்களைச் செய்தும் இந்நிகழ்வை ஞாபகிக்கின்றனர்.
கர்பலா வரலாற்றுச் சுருக்கம்:
மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்களிள் ஆட்சியின் இறுதிக் காலக் கட்டத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் இருந்து கர்பலாவின் பின்னணி ஆரம்பமாகின்றது. இக்குழப்பங்களின் விளைவாக உஸ்மான்(ரழி) அவர்களின் வீடு முற்றுகையிடப்பட்டு அவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.
அடுத்த கலீபாவாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அலி (ரழி) அவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் குழப்பங்கள் தொடர்கின்றன. உஸ்மான் (ரழி) அவர்களை படுகொலை செயதவர்களை கண்டு பிடித்து மிக அவசரமாகவே ஷரீஆத்தின் தீர்ப்பை அவர்களுக்கு அமுல்படுத்த வேண்டும் என்ற கோசம் வலுப்பெறுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட முஸ்லிம்கள் இரு குழுக்களாக பிரிகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக கலீபா அலி (ரழி) அவர்களுக்கும் ஆயிஷh(ரழி) அவர்களின் தiலைமiயிலான அணியினருக்குமிடையில் நடைபெற்ற ஜமல் யுத்தம் காணப்படுகிறது. இது ஹி. 37ம் வருடம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கலீபா அலி(ரழி) அவர்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற 'சிப்பீன்' யுத்தம் என்பன கர்பலா யுத்தத்த்திற்கு வழிகோலிய காரணிகளாக இருந்ததன.
இவ்யுத்தத்தின் பின்னணியில் உருவான மற்றுமொரு பிரிவான கவாரிஜ்கள் எனப்படுவோரால் அலி (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்பு ஆட்சி பொறுப்பை அவரின் புதல்வர் ஹஸன் (ரழி)அவர்கள் ஏற்றார்கள். பிரிந்திருக்கும் இஸ்லாமிய உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தனது பதவியை விட்டுக் கொடுத்து முஆவியா (ரழி) அவர்களிடம் நிபந்தனைகளின் அடிப்படையில் ஆட்சிப் பொறுப்பை கையளித்தார்கள்.
முஆவியா (ரழி) அவர்கள் தமது ஆட்சியின் பிற்பகுதியில் அவரது மகன் யஸீத் என்பவரை முடிக்குரிய கலீபாவாகப் பிரகடனம் செய்தார்கள். அதன் பிரகாரம் ஹி; 60ல் முஆவியா(ரழி) அவர்கள் மரணிக்க அவரது மகன் யஸீத் பின் முஆவியா ஆடசிப் பீடம் ஏறினார்.
யஸீத் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹுஸைன் (ரழி) அவர்களும் மற்றும் சிலரும் அவருக்கு 'பைஅத்' செய்ய மறுக்கிறார்கள். இந்நிலையில் அலி(ரழி) அவர்களின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த ஈராக் வாசிகள் தொடர்ந்தேர்ச்சியாக கடிதங்கள் அனுப்புகிறார்கள்.
ஹுஸைன்(ரழி) அவர்களை அங்கு வரும் படியும் யஸீதின் ஆட்சிக்கு விரோதமான தங்களது போராட்டத்துக்கு தலைமை தாங்குமாறும் அக்கடிதங்களில் வேண்டியிருந்தார்கள். இவர்களின் உண்மை நிலையை அறியுமுகமாக தனது நெருங்கிய உறவினரும் தனது விசுவாசத்துக்குரியவருமாகிய முஸ்லிம் பின் அகீல் என்பவரை ஈராக்கிற்கு அனுப்பிவைக்கின்றார்கள்.
அதை உறுதிப்படுத்திக் கொண்ட பின் ஈராக்கை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார்கள். இதன் போது இப்னு அப்பாஸ், இப்னு உமர், ஜாபிர்(ரழி) போன்ற நபித்தோழர்கள் ஹுஸைன் (ரழி) அவர்களை ஈராக் போவதை தடுக்க முயற்சித்தார்கள். இறுதியில் அனைத்தும் தோல்வியடையவே. பயணம் தொடர்கிறது.
இப்பயணத்தில் சுமார் 80 பேர்களைக் கொண்ட அவர்களுடைய குடும்ப உறவினர்கள் மாத்திரமே அவர்களுடன் இணைந்திருந்தனர். வழியில் கர்பலா எனும் இடத்தை ஹுஸைன் (ரழி) அவர்கள் அடைந்தார்கள். அங்கே உபைதுல்லாஹ் பின் ஸியாத் என்பவரின் படையினரால் சுற்றிவளைக்கப்படுகின்றார்கள்.
மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியில் முடிவடைய போர் ஆரம்பமாகியது. சில நிமிடங்களுக்குள்ளே ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.
இந்த யுத்தம் நிகழ்ந்ததற்கும் ஹுஸைன்(ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டதற்குமான பாரிய பொறுப்பு சிம்ரு பின் தில்ஜௌசன் என்பவரையும் பின்பு உபைதுல்லாஹ் பின் ஸியாதையுமே சாரும். இதில் யஸீத் பின் முஆவியாவின் பங்களிப்பு மிகக் குறைவானதாகும.; முழுப் பழியையும் யஸீதின் மேல் போடுவதும் அதற்காக அவரைச் சபிப்பதும் பிழையாகும்.
ஏனெனில் ஹுஸைன்(ரழி) அவர்கள் கர்பலாவை அடைந்ததும் நிலைமையைப் புரிந்து நேரடியாக யஸீதிடம் சென்று பைஅத் செய்யத் தாம் தயார் என்ற தமது எண்ணத்தை வெளிப்படுத்திய போது அதை உபைதில்லாஹ்விடமே செய்ய வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்து யுத்தத்துக்கு வழிகோலியவன் சிம்ரு பின் தில்ஜௌசன் ஆவான். அவனின் கோரிக்கைக்கு அடிபணிந்து யுத்தத்துக்குக் கட்டளையிட்டவர் உபைதுல்லாஹ் ஆவார்.
இச்சம்பவம் நடைபெற்ற தினம் ஹி. 61ம் வருடம் முஹர்ரம் பிறை 10 ஆகும். இச்சம்பவம் நடைபெற்ற இடம் கர்பலா என்ற இடமாகும். இவ்விடம் இராக்கில் கூபாவின் வடமேற்கு எல்லையில்; காணப்படுகின்றது. இராக்கின் பெரும் நதிகளில் ஒன்றான புராத் நதியும் இதற்கு சமீபத்தில் காணப்படுகின்றது.
இன்று இத்தினம் ஷPஆக்களால் ஒரு துக்க தினமாக அனுஷ;டிக்கப்படுகின்றது. இவ்யுத்தம் நடைபெற்ற கர்பலா பூமி ஒரு புண்ணிய பூமியாக அவர்களால் மதிக்கப்படுகின்றது. ஹுஸைன்(ரழி) அவர்களின் அடக்கஸ்தலத்தை தரிசிப்பதை மிகப் பெரிய ஒரு வணக்கமாக அவர்கள் கருதுகின்றனர்.
{ஹுஸைன் (ரழி) அவர்களது கப்ரை ஸியாரத் செய்பவர் அல்லாஹ்வை அவனது அர்ஷpல் சந்தித்தவர் போலாவார் என்று இன்றுவரையும் கூறிவருகின்றனர். கப்றுக்குச் செல்லும்போது தவழ்ந்தும் இழுகியும் செல்கின்றனர். கர்பலா பூமி, மக்கா, மதீனா, பலஸ்தீனத்தை விட இவர்களிடம் புனிதம் பெற்றதாகும்.
கர்பலா யுத்தம் நடந்த தினத்தை துக்க தினமாக இன்றும் அனுஷ;டிக்கின்றனர். தமது உடல்களில் காயத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். 'யா {ஹஸைன்! யா {ஹஸைன்!' என்று ஒப்பாரி வைக்கின்றனர். அதில் நடக்கும் அசிங்கமான சடங்குகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு காணப்படுகின்றன.
வரலாற்றைப் பின் நோக்கிப் பார்க்கும் போது இவ்வாறான பரந்தளவிளான நிகழ்ச்சிகள் ஆரம்ப காலங்களில் இடம் பெற்றிருக்கவில்லை. உமையா ஆட்சியாளர் அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சிக் காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட, மிக மோசமான ஷPஆ அகீதைவைக் கொhண்டிருந்த முஹ்தார் அஸ்ஸகபி என்பவனால் தான் இவ்வாறான ஒரு துக்க நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இவன் தனது வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து விட்டு கூபா நகரின் பாதையெல்லாம், ஒப்பாரி வைக்கும் சில பெண்களை அனுப்பி ஹுஸைன்(ரழி) அவர்களுக்காக ஒப்பாரிவைக்கச் செய்தான். இவனைப் போன்று வேறு பல ஷPஆத் தலைவர்களும் இவ்வாறான சில நிகழ்ச்சிகளை இடைக்கிடை செய்துள்ளாகள். அவை ஹுஸைன்(ரழி) அவர்களின் புகழ்பாடுவது, அவர்களுக்காக ஒப்பாரி வைப்பது போன்ற நிகழ்ச்சிகளாகவே காணப்பட்டன.
ஹி; 5ம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே கன்னத்திலும் மார்பிலும் அறைதல் போன்ற செயல்கள் ஆரம்பமாயின. இதைத் தொடர்ந்து வாள் போன்ற கூரிய ஆயுதங்களினால் உடம்பைக் கீறி ஹுஸைன்(ரழி) அவர்களுக்காக இரத்தம் சிந்த வைக்கும் சில செயல்களையும் செய்ய ஆரம்பித்தார்கள். மேலும் ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து வெளிச்சத்திலும் இருளிலும் பல கேவலமான நிகழ்ச்சிகளையும் அரங்கேற்ற ஆரம்பித்தனர்..
கர்பலா எனும் இடத்திலிருந்து ஹுஸைன் (ரழி) அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு நெற்றி பூமியை முத்தமிட்ட படி பவணி மேற்கொள்வார்கள். பல நகரங்களிலும் பேரணிகளையும் ஏற்பாடு செய்வார்கள். இவ்வாறு இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளை தகர்க்கக்கூடிய பல்வேறு அனாச்சாரங்களை கைகொள்வார்கள்
ஹி; 7ம் நூற்றாண்டுக் காலப்குதியிலிருந்தே ஒவ்வொரு வருடமும் செய்யப்படுகின்ற வழமையான நடைமுறைக்கு இவை வந்தன. பனூ புவைஹ் போன்ற ஷPஆ அரசாங்கங்கள் உருவான போது இந்நிகழ்ச்சிகள் உத்தியோகபூர்வ வடிவம் பெற்றன. குறிப்பாக ஈரான் பகுதியில் ஆட்சி செய்த ஸபவிய்யாக்கள் எனப்படுவோர் ஆட்சிக்கு வந்த போது திட்டமிடப்பட்ட முறையில் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளாக இவை மாற்றப்பட்டன.
இத்தினம் ஒரு விடுமுறை நாளாகவும், தேசிய துக்க தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு கடைகளெல்லாம் மூடப்ப்பட்டன. நாளடைவில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட வேறு பல நாடுகளுக்கும் இவை பரவ ஆரம்பித்தன. சென்ற வருடத்தில் இலங்கையின் சில பகுதிகளிலும் இவ்வாறான சில நிகழ்ச்சிகள் நடைபெற்றதை நாம் அறியலாம். இவை ஷPஆக்களின் வழிகேடு என்பதை அறியாத சில பாமரத்தனமான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஒரு நிகழ்வாக கொண்டாடுவதை அவதானிக்க முடிகிறது.
ஹுஸைன்(ரழி) அவர்களகுக்காக மாத்திரம் ஏன் இவ்வளவு துக்கம?;:
வழி தவறிய இந்த ஷPஆப் பிரிவினர் ஹுஸைன்(ரழி) அவர்களுக்கு மாத்திரம் ஏன் இவ்வளவு துக்கம் அனுஷ;டிக்கின்றனர்? இவர்கள் தமது முதல் இமாமாக மதிக்கும் அலி(ரழி) அவர்களும் கவாரிஜ்களால் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அதே போன்று இவர்களின் இரண்டாவது இமாமாகிய ஹஸன்(ரழி) அவர்களும் இவர்களின் கருத்துப்படி நச்சூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் இவர்கள் இருவருக்குமாக ஏன் துக்கம் அனுஷ;டிக்கப்படுவதில்லை? எனக் கேள்விகள் எழுகின்றன.
இவர்களின் உள்ளங்களில் மறைந்திருக்கும் பாரசீகவாதமே இதற்கான காரணமாகும். இந்த ஷPஆக் கொள்கை பாரசீக சாம்ராஜ்யத்திற்குட்படடிருந்த ஈரான், ஈராக் போன்ற பகுதிகளிலேயே அதிகம் பரவியிருந்ததை நாம் காணலாம். முஸ்லிம்கள் பாரசீகத்தை வெற்றி கொண்ட சந்தர்ப்பத்தில் அன்றைய பாரசீக மன்னராயிருந்த யஸ்தஜிர்த் என்பவரின் மகளை ஹுஸைன் (ரழி) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
எனவே பாரசீகத்தைச் சார்ந்தவராக ஹுஸைன்(ரழி) அவர்களைக் கருத ஆரம்பித்தனர். இந்தப் பெண்ணின் மூலமாகவே அலி பின் ஹுஸைன் பிறக்கின்றார். இவர் சீஆக்களின் நான்காவது இமாமாவார். இவரின் பின் வந்த இவர்களின் அனைத்து இமாம்களும் இவரின் வழித்தோன்றல்களே.
ஹுஸைன்(ரழி) அவர்களின் கொலையில் எந்த வகையிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புறாத யஸீத் பின் முஆவியை கடுமையாக சாடுகின்றனர். நாக் கூசும் வார்த்தைகள் மூலம் ஏசுகின்றனர். சபிக்கின்றனர். ஆனால் அலி(ரழி) அவர்களின் கொலைச் சம்பவத்தைக் குறிப்பிடும் போது 'அவரைக் கொலை செய்தவனை அல்லாஹ் சபிப்பானாக' என்ற வர்த்தையுடன் மாத்திரம் சுருக்கிக் கொள்வார்கள்.
ஏனெனில் அலி(ரழி) அவர்களைக் கொலை செய்த அப்துர்ரஹ்மான் பின் முல்ஜம் என்பவன் பாரசீகப் பரம்பரையைச் சேர்ந்தவன். ஹுஸைன்(ரழி) அவர்களை விட மிகச் சிறந்த அலி(ரழி) அவர்களைக் கொலை செய்தவனை மிக மென்மையான வார்ததைகளைக் கொண்டே சபிக்கின்றனர். அல்p, ஹஸன்(ரழி) ஆகியோர்களுக்காக பெரியளவிலான எந்த நிகழ்ச்சிகளையும் இவர்கள் செய்வதில்லை.
ஏனெனில் இவர்கள் இருவரும் பாரசீகத்தைச் சேர்ந்தவர்களுமல்லர். பாரசீகக் குடும்பங்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டவர்களுமல்லர். நபித்தோழர்களை அங்கீகரித்து மதிக்கும் விடயத்திலும் இவர்கள் இந்த அடிப்படையை பேணுகின்றனர். பாரசீகத்தைச் சேர்ந்த அல்லது பாரசீக மக்களுடன் உறவுகளை வைத்துக் கொள்பவர்களுடன் இவர்கள் உறவுகளை வைத்துக் கொள்வதில்லை.