ரமழான் நோன்பு - விடுவதற்கான சலுகைகளும் அதன் சட்டங்களும் 

ரமழான் நோன்பு -
விடுவதற்கான சலுகைகளும் அதன் சட்டங்களும் 

அல்-உஸ்தாத் M.O.  பௌதுர் ரஹ்மான் (பஹ்ஜி)

'அல்லாஹ் உங்களுக்கு இலகை விரும்புகின்றான், அவன் உங்களுக்கு கச்டத்தை விரும்ப மாட்டான்'.(2: 185)  'உங்களுக்கு அவன் மார்க்கத்தில் எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை' (22:78) அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவுக்கும் அதற்கு முடியுமானதைத் தவிர ஏவமாட்டான் (2:286) என்பன போன்ற இறை வசனங்கள் மார்க்கத்தில் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட எந்த ஒன்றையும் அல்லாஹ் ஏவமாட்டான் என்ற கருத்தைத் தெளிவுபடுத்துகின்றன.;

அல்லாஹ் அடியார்களுக்கு பல வணக்க வழிபாடுகளைக் கடமையாக்கி விட்டு அவனுக்கு ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளில் அவற்றில் பல சலுகைகளை வழங்கியுள்ளான். அந்த வகையில் ரமளான் மாதம் நோன்பைக் கடமையாக்கிய அல்லாஹ் அந்நோன்பை நோற்பதில் சிரமங்களை எதிர்நோக்கும் சிலருக்கு அதை விடுவதற்கு சலுகை வழங்கியுள்ளான். 

நோயாளிகள், பிரயாணிகள், வயோதிபர்கள், மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தப் போக்கு ஏற்பட்டிருக்கும் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் ஆகியோர் இவ்வாறு நோன்பு விட அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். 

இவர்கள் ஒவ்வொருவரும் நோன்பு விடுவதற்கு நிபந்தனைகளும் அவ்வாறு நோன்பை விட்ட சந்தர்ப்பங்களில் அதற்குப் பதிலாக செய்ய வேண்டிய கடமைகளும் காணப்படுகின்றன. அவை பற்றிய விபரங்கள் கீNpழ தரப்படுகின்றன. 

நோயாளிகள்

நோயாளிகள் நோன்பை விட அனுமதியுண்டு என்பதை அல்லாஹ் 'உங்களில் யாரும் நோய்வாய்ப்பட்டவராகவோ அல்லது பிரயாணியாகவோ இருப்பாராயின் (அச்சந்தர்ப்பத்தில் அவர் நோன்பை விடுவாராயின்) வேறு நாட்களில் (அவர் விட்ட) எண்ணிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும் (2:184) என்ற வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளான். நோயாளிகள் மூன்று வகையினராகக் காணப்படுகின்றனர். 

1. மிகவும் இலகுவான நோய் நிலைகளக் கொண்டவர்கள்: சாதாரண காயங்கள், இலகுவான தலைவலி, சாதாரண தடிமல் போன்ற நோய்களைக் கொண்டவர்கள். இவர்கள் நோன்பு நோற்பதில் எந்த சிரமும் இவர்களுக்கில்லை. இத்தரத்தில் காணப்படும் நோயாளிகள் நோன்புவிட அனுமதிக்கப்படமாட்டார்கள். 

2. சாதாரண நோய்நிலையில் காணப்படுபவர். இவர் நோன்பு நோற்பதில் அவருக்கு சிரமம் உண்டு. இச்சிரமம் என்பது உரிய இடைவெளியில் மருந்துகளை உட்கொள்ளாமையினால், அல்லது பட்டினியில் இருப்பதினால் அவரின் நோய் அதிகரித்தல், ஆரோக்கியம் தாமதித்தல், வலி கடுமையாகுதல் போன்றவற்றைக் குறிக்கும். இந்நிலையில் காணப்படுபவர்கள் நோன்பு விட அனுமதியுண்டு. அவர்கள் சிரமத்தை சகித்து நோன்பு நோற்க முடியுமாயின் அவர்கள் நோன்பை நோற்க அனுமதிக்கப்படுவர். ஆனாலும்இவர்கள் நோன்பை விடுவதே சிறந்ததாகும். 'அல்லாஹ் அவனால் கடமையாக்கப்பட்ட விடயங்களைச் செய்யப்படுவதை விரும்புவதைப் போன்று அவனால் வழங்கப்படும் சலுகைகளையும் செய்யப்படுவதையே விரும்புகின்றான்.' என்பது நபி மொழியாகும். (இப்னு ஹிப்பான்: 354)

3. கடுமையான நோய் நிலையில் காணப்படுபவர்கள். இவர்கள் நோன்பு நோற்பதன் மூலம் தமக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதையோ அல்லது தனது சராசரி வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஓர் உறுப்பு செயலிழப்பதையோ பயப்படுபவர்கள். இவர்கள் நோன்பை விடுவது கடமையாகும். இவர்கள் சிரமத்தை சகித்துக் கொண்டு நோன்பு நோற்பது ஹராமாகும் என்ற கருத்தை பல அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். 'நீங்களே உங்களைக் கொலை செய்ய வேண்டாம்,'(4:29),  'உங்கள் கரங்களை அழிவின் பால் செலுத்த வேண்டாம்' (2: 195), ஆகியன போன்ற இறை வசனங்கள், மற்றும் இக்கருத்தைச் சார்ந்திருக்கும் நபிமொழிகளைச் சான்றாக வைத்து இக்கருத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இவ்வாறே சுகதேகியாக உள்ள ஒருவர் தான் நோன்பு நோற்றால் மேற் சொல்லப்பட்ட முறையிலான நோய்கள் ஏதும் ஏற்படலாம் என நம்பகமான வைத்தியர் ஒருவரால் அறிவுறுத்தப்படுவாராயின் அவருக்கும் நோன்பு விட அனுமதியிருக்கின்றது. 

-- நோய்க்காக நோன்பை விட்டவர் என்ன செய்யவேண்டும்? 

நோய்க்காக நோன்பை விடும் நோயாளிகள் இரண்டு வகையினர் உள்ளனர்.

1. தனது நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியம் பெறுவார் என எதிர்பார்ப்புள்ளவர். இவர் அவ்வாறு ஆரோக்கியம் பெறும் பட்சத்தில் ரமளான் முடிந்ததன் பின் தான் விட்ட நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும்.

2. நோய் முற்றிய நிலையை அடைந்து மீண்டும் ஆரோக்கியம் பெறும் எதிர்பார்ப்பு இல்லாதவர். இது நம்பிக்கையான ஒரு வைத்தியரின் கூற்றை வைத்தே தீர்மானிக்கப்படவேண்டும். இந்நிலையில் நோன்பை விட்டவர்கள் தான் விட்ட ஒவ்வொரு நோன்புக்காகவும் ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். ஒரு நம்பிக்கையான வைத்தியரின் கூற்றின் அடிப்படையில் தனக்கு மீண்டும் ஆரோக்கியம் கிடைக்கமாட்டாது எனக் கருதி தான் விட்ட ஒவ்வொரு நோன்புக்காகவும் உணவளித்த ஒருவர் எதிர்பாராத அமைப்பில் நோன்பு நோற்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுவிடுவாராயின் அவர் அந்நோன்புகளைத் திருப்பி கழாச் செய்யவேண்டிய தேவை இல்லை. 

பிரயாணிகள்:  

பிரயாணம் நோன்பை விட அனுமதிக்கும் காரணிகளில் ஒன்று என்பதில் அறிஞர்களுக்கிi;யில் மாற்றுக் கருத்து இல்லை. ஸூரா அல்பகராவின் 184ம் இலக்க வசனத்தில் அல்லாஹ் நோயாளியுடன் பிரயாணியையும் சேர்த்தே குறிப்பிட்டுள்ளான். 

ஜாபிர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மக்கா வெற்றிக்காக நபியவர்கள் ரமளானில் வெளியாகிச் சென்றார்கள். குராஉல் கமீம் என்ற இடத்தை அடையும் வரை அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். மக்களும் நோன்பு நோற்றிருந்தார்கள். அங்கு நபியவர்கள் ஒரு கோபை;பை தண்ணீர் தருவித்து மக்கள் பார்க்குமுகமாக அதை உயர்த்தி குடித்து நோன்பை விட்டார்கள். அதற்குப் பின்பும் சிலர் நோன்பு நோற்றுள்ளார்கள் என நபியவர்களிடத்தில் கூறப்பட்ட பொழுது அவர்கள் பாவிகள், அவர்கள் பாவிகள் என்றார்கள். (மு;ஸலிம்:1114) 

பிரயாணி ஒருவர் நோன்பை விடும் சலுகையைப் பெறுவதற்கு பிரயாணம் எவ்வளவு தூரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற விடயத்தில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை காணப்படுகின்றது. பெரும்பான்மையான அறிஞர்கள் சுமாராக 89 கிலோ மீற்றர்களைக் கொண்ட பயணமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். சைகுல் இஸ்லாம் இப்னுதைமிய்யஹ்(ரஹ்) அவர்கள் வழக்கில் எதுவெல்லாம் பயணமாக கருதப்படுகின்றதோ அப்பயணத்தில் சுருக்கித் தொழவும் நோன்பை விடவும் அனுமதியிருக்கின்றது எனக் குறிப்பிடுகின்றார். (பதாவா-24:106). பிரபல மார்க்க அறிஞர் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் அவர்களும் இக்கருத்தே மிகச்சரியானது எனக் குறிப்பிட்டுள்ளார்.(பதாவா அர்கானில் இஸ்லாம்:381) 

இவ்வாறே பிரயாணி இச்சலுகையைப் பெறுவதற்கு பஜ்ருடைய நேரம் ஆரம்பிக்க முன் பயணத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் என பலர் நிபந்தனையிட்டுள்ளனர். இமாம்களான அபூ ஹனீபா, மாலிக், சாபிஈ (ரஹ்) ஆகியோர் இவர்களுள் முக்கியமானவர்கள். ஒரே தினத்தில் ஊரில் இருத்தல், பிராயணம் செய்தல் ஆகிய இரு நிலைகளும் ஒன்று சேருமாயின் ஊரில் இருக்கும் சட்டத்தையே முதன்மைப்படுத்த வேண்டும் என அவர்கள் வாதிடுகின்றனர். 

இமாம் அஹ்மத், சைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ்(ரஹ்) போன்றோர் இவ்வாறான ஒரு நிபந்தனையை அல்லாஹ் அல்குர்ஆனில் இடவுமில்லை. நபியவர்கள் தமது வார்த்தைகளில் இடவுமில்லை. மாற்றமாக அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் நிபந்தனைகள் எதுவிமின்றி பிரயாணம் பொதுப்படையாகவே கூறப்பட்டுள்ளது. எனவே இது நிபந்தனையாகக் கொள்ளப்படமாட்டாது எனக் குறிப்பிடுகின்றனர். இக்கருத்தே ஆதாரபூர்வமானதாகும்.  

ஒரு பிரயாணியைப் பொறுத்தவரையில் அவருக்கு பிரயாணத்தில் நோன்பை நோற்பதில் எச்சிரமும் காணப்படாவிடின் அவர் நோன்பை நோற்பதே சிறந்ததாகும். பிரயாணம் செய்த நிலையில் அவர் நோன்பு நோற்பதில் சிரமம் இருக்குமாயின் அவர் நோன்பை விடுவது சிறந்ததாகும். பிரயாணம் செய்த நிலையில் நோன்பு நோற்பதன் மூலம் அவருக்கு உயிராபத்து ஏற்படும் வாய்ப்பிருக்குமாயின் அவர் நோன்பு நோற்பது ஹராமாகும்.

-- விட்ட நோன்பிற்காக இவர்கள் என் செய்ய வேண்டும்?

நோயாளியின் விடயத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று பிரயாணத்திற்காக நோன்பை விட்டவர் ரமளான் முடிந்ததன் பின் விடுபட்ட நாட்களின் நோன்பைக் கழாச் செய்து கொள்வது அவசியமாகும். (2:185)

வயோதிபர்கள்

நோன்பு விட அனுமதிக்கப்பட்டவர்களில் நோன்பு நோற்கும் உடல்பலம் இல்லாத வயோதிபரும் ஒருவராவார். வயோதிபத்தை அடைந்திருந்தாலும் எச்சிரமுமின்றி நோன்பு நோற்பதற்கான உடல்பலம் அவரிடம் காணப்படுமாயின் இச்சலுகைக்கு இவர் தகுதியானவராகக் கருதப்படமாட்டார். 'அதற்கு சக்திபெறுபவர் மீது பித்யாவாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்' என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் 'இது வயது முதிர்வை அடைந்த ஆணுக்கும் வயது முதிர்வடைந்த பெண்ணுக்கும் சலுகையாக வழங்கப்பட்டதாகும். அவர்கள் இருவரும் சிரமத்துடன் நோன்பு நோற்க சக்திபெற்ற போதும் அவர்கள் நோன்பை விட்டு அதற்குப் பதிலாக உணவளிக்கலாம்' எனக் குறிப்பிட்டுள்ளாகள். (அபூ தாவூத்: 2318)

-- விட்ட நோன்பிற்காக இவர்கள் என் செய்ய வேண்டும்?

வயோதிபத்தின் காரணமாக நோன்பை விட்டவர்கள் அந்த நோன்பைக் கழாச் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் நோன்பை விட்டதன் பின் அடுத்து வரும் காலப் பகுதிகளில் நோன்பைக் கழாச் செய்ய சக்திபெறமாட்டார்கள் என்பது வெளிப்படை. அவர்கள் விட்ட ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஓர் ஏழைக்கு உணவளிப்பதே கடமையாகும். இதற்கு முன் சொல்லப்;பட்ட இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் ஹதீஸே ஆதாரமாகும். 

மாதவிடாய்ப் பெண், பிரசவ உதிரம் ஏற்பட்டிருக்கும் பெண்:

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவராவாள். முஆஸா பின்து அப்தில்லாஹ் அல் அதவிய்யா என்ற பெண்மணி அறிவிக்கின்றார்கள்: நான் ஆயிசா(ரழி) அவர்களிடம் 'மாதவிடாய்ப் பெண்ணின் விடயம் என்ன? அவள் நோன்பைக் கழாச் செய்யும் படி ஏவப்படுகின்றாள். ஆனால் அவள் தொழுகையைக் கழாச் செய்யும் படி அவள் ஏவப்படுவதில்லை' எனக் கேட்டேன். அதற்கு ஆயிசா(ரழி) அவர்கள் 'நீ கவாரிஜ்களைச் சேர்ந்த பெண்ணா?' எனக்கேட்டார்கள். நான் 'இல்லை, (விளக்கம்) கேட்கின்றேன் எனச் சொன்னேன். 'அது (மாதவிடாய்) எங்களுக்கு ஏற்படும். நாங்கள் தொழுகையைக் கழாச் செய்யும்படி ஏவப்பட மாட்டோம். மாற்றமாக நோன்பைக் கழாச் செய்யும் படி ஏவப்படுவோம்', எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) 

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் மாதவிடாய்க் காலப் பகுதியில் நோன்பு நோற்றால் அது ஏற்றுக் கொள்ளப்படவுமாட்டாது. அவ்வாறு நோன்பு நோற்பது பாவமுமாகும். 

இவ்வாறே பிரசவ இரத்தத்தைக் காணும் பெண்ணும் நோன்பை விடுவது கடமையாகும். பிரசவத் தீட்டு வெளியாகும் நிலையில் உள்ள பெண் எல்லாச் சட்டங்களிலும் மாதவிடாய்ப் பெண்களைப் போன்றவளாகும் என்பது 'இஜ்மாஉ' எனும் அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். இக்காலப் பகுதியில் அவள் நோன்பு நோற்பது ஹராமாகும். 

-- விட்ட நோன்பிற்காக இவர்கள் என் செய்ய வேண்டும்?

இவர்கள் இருவரும் தாம் விட்ட நோன்புகளைக் கழாச் செய்வது கடமையாகும். முன் குறிப்பிடப்பட்;ட ஆயிசா(ரழி) அவர்களின் ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும். 

தொடர் உதிரப் போக்குள்ள பெண்கள் உடல் சுத்தமான பெண்களாகவே கருதப்படுகின்றனர். எனவே அப்பெண்கள் அக்காலப் பகுதியில் தொழுகை நோன்பு, உட்பட எல்லா வணக்கவழிபாடுகளையும் நிறைவேற்றுவார்கள். 

கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும்:

கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் ரமளான் மாதகால நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்களாவர். 'நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு தொழுகையில் அரைவாசியை மன்னித்துள்ளான். மேலும் பிரயாணி, கர்ப்பிணி, பாலூட்டும் தாய் ஆகியோருக்கு நோன்பையும் மன்னித்துள்ளான்'(ஸஹீஹு அபீ தாவூத்:2083) என நபியவர்கள் கூறிய நபிமொழியை அனஸ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். 'அதற்கு சக்திபெறுவர் மீது பித்யாவாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்' என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டுபவர்களின் விடயத்திலும் அச்சட்டம் மாற்றப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றார்கள். 

கர்ப்பிணியாக உள்ள நிலையில் அல்லது பாலூட்டும் காலப் பகுதியில் இவர்கள் நோன்பு நோற்பதன் மூலம் இவர்களுக்கோ அல்லது இவர்களின் பிள்ளைக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு இருக்கும் பட்சத்திலேயே நோன்பு விட அனுமதிக்கப்படுவர். முன் அனுபவத்தின் மூலம் அல்லது நம்பகமான ஒரு வைத்தியரின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் நோன்பு நோற்பதில் அவ்வாறான பாதிப்புக்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்கள் நோன்பை விட அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

-- விட்ட நோன்பிற்காக இவர்கள் என் செய்ய வேண்டும்?

இவர்கள் நோன்பை விடும் பட்சத்தில் அதற்குப் பதிலாக என்ன செய்யவேண்டும் என்ற விடயத்தில் கருத்து கடுமையான வேற்றுமை காணப்படுகின்றது. 

பெரும்பான்மையான அறிஞர்கள் அவ்விருவரும் நோன்பை விடும்பட்சத்தில் அந்நோன்புகளைக் கழாச் செய்வது கட்டாயமாகும் எனக் குறிப்பிடுகின்றனர். இவ்விருவரும் நோன்பு நோற்பதின் மூலம் தமக்கு பாதிப்பு ஏற்படும் எனப் பயப்படுகின்றார்கள். எனவே இவர்கள் நோயாளிகளைப.; போன்றவர்கள். நோய்வாய்ப்பட்டவர் எவ்வாறு நோன்பைக் கழாச் செய்வது கடமையோ அவ்வாறே இவர்களும் கழாச் எனக் குறிப்பிடுகின்றனர்.

நான்கு மத்கபைச் சேர்ந்த அறிஞர்களும் இக்கருத்திலேயே காணப்படுகின்றனர். இவர்களில் இமாம்களான மாலிக், சாபிஈ, அஹ்மத்(ரஹ்) ஆகியோர் பிள்ளைக்குப் பயந்து நோன்பு விடும் பட்சத்தில் கழாச் செய்வதுடன் உணவளிப்பதும் கடமையாகும் எனக் குறிப்பிடுகின்றனர்.

நோயாளிகளுக்கு ஒப்பாக்கி கழாச் செய்ய வேண்டும் என்ற சட்டத்தைக் குறிப்பிடும் இவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு உமர்(ரழி) ஆகியோரைத் தொட்டும் அறிவிக்கப்படும் கூற்றுக்களை அடிப்படையாக வைத்து உணவளிக்க வேண்டும் என்ற சட்டத்தையும் எடுக்கின்றனர்.  

இப்னு அப்பாஸ், இப்னு உமர்(ரழி) ஆகியோர் இவர்கள் கழாச் செய்ய வேண்டிய தேவையில்லை. தாம் விடும் ஒவ்வொரு நோன்பிற்கும் பதிலாக ஓர் ஏழைக்கு உணவளித்தால் போதுமாகும் எனக் கூறுகின்றனர். ஹதீஸ்கலைப் பேரறிஞர்களில் ஒருவராகிய நாஸிருத்தீன் அல்அல்பானி(ரஹ்) இக்கருத்தையே ஆதரிக்கின்றார். இக்கருத்துக்கு பின்வருன சான்றாக அமைகின்றன. 

1. விரும்பியவர்கள் நோன்பு நோற்கலாம், விரும்பியவர்கள் நோன்பை விடலாம், நோன்பை விட்டவர்கள் உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டது. வயோதிப ஆண், வயோதிப பெண், (நோன்பு நோற்பதன் மூலம் பாதிப்புக்ளைப்) பயப்படும் சந்தர்ப்பத்தில் கர்ப்பிணி, பாலூட்டும் தாய் ஆகியோரின் விடயத்தில் அது தொடர்ந்தும் இருக்கின்றது, (மாற்றப்படவில்லை) அவ்விருவரும் ஒவ்வொரு நாளைக்காகவும் ஓர் ஏழைக்கு உணவளிப்பார்கள். (அல் பைஹகி-4:230, அல் இர்வாஉ-4:18) 

2. இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கர்ப்பிணியான தனது அடிமைப் பெண் ஒருவரைப் பார்த்து 'நீ நோன்பு நோற்க சக்தி பெறாத வயோதிபரைப் போன்றவள். எனவே நீர் நோன்பை விட்டு, ஒவ்வொரு நாளைக்காகவும் கோதுமையில் அரை ஸாஉ உணவளிப்பீராக, (அப்துர் ரஸ்ஸாக்:7567, தாரகுத்னி-2:206)

3. நாபிஉ (ரஹ்) அறிவிக்கின்றார்கள்: இப்னு உமர்(ரழி) அவர்களின் மகள் ஒருவரை குறைசிகளைச் சேர்ந்த ஒருவர் திருமணம் செய்திருந்தார். அவர் கர்ப்பிணியாக இருந்தார். ரமளானில் அவருக்கு (கடுமையான) தாகம் ஏற்பட்டது. இப்னு உமர்(ரழி) அவர்கள் அவருக்கு நோன்பை விட்டு, ஒவ்வொரு நாளைக்காகவும் உணவளிக்கும் படி ஏவினார்கள். (தாரகுத்னி-2:207, அல் இர்வாஉ-4:20) 

இக்கூற்றுக்கள் அனைத்தும் ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்ட ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியுமானவை என அறிஞர் அல்அல்பானி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகினறார்கள்.  

நோன்பைக் கழாச் செய்தல்:

நோன்பைக் கழாச் செய்ய கட்டாயமானவர்கள் ஒரு ரமளானில் விடுபட்ட நோன்ரப அடுத்த ரமளானுக்கு முன் கழாச் செய்வது கடமையாகும். அடுத்து ரமழானுக்கு முன் அதைக் கழாச் செய்ய அவகாசம் கிடைக்காதவர்கள் அவர்கள் அடுத்த ரமளானை விடவும் பிற்படுத்துவதில் குற்றமில்லை. விடுபட்ட நோன்புகளை பிடித்துக் கொள்வதற்கு அவகாசம் இருந்தும் பிடிக்காமல் அடுத்த ரமளானுக்குப் பின்னால் உள்ள காலம் வரை பிற்படுத்துவது கூடாது. 

அவ்வாறு பிற்படுத்தும் பட்சத்தில் குற்றப் பரிகாரமாக எதையும் செய்ய வேண்டுமா என்கிற விடயத்தில் கருத்து வேற்றுமை காணப்படுகின்றது. குற்றப் பரிகாரமாக பிற்படுத்தும் ஒவ்வொரு நோன்புக்குமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற கருத்தை இமாம்களான மாலிக், சாபிஈ, அஹ்மத் ஆகியோர் கொண்டுள்ளனர். இவர்களின் கருத்தை இப்னு உமர், இப்னு அப்பாஸ், அபூஹுரைரா(ரழி) ஆகியோரின் தீர்ப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.

பிற்படுத்தியதற்குப் குற்றப்பரிகாரமாக எதையும் செய்ய வேண்டிய தேவையில்லை என்ற கருத்தை இமாம் அபூ ஹனீபா அவர்கள் கொண்டுள்ளார். இக்கருத்தை பிரபல மார்க்க அறிஞர் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் போன்றோர் ஆதரிக்கின்றனர். அல்லாஹ் நோன்பைக் கழாச் செய்வதைத் தவிர வேறு எதையும் கட்டாயப்படுத்தவில்லை என்பது இவர்கள் முன்வைக்கும் ஆதாரமாகும்.  

உணவளித்தல்: 

ரமளான் மாத நோன்புகளை விட்ட சிலருக்கு அந்நோன்புகளை நோற்பதற்குப் பதிலாக உணவளிக்கப் பணிக்கப்பட்டிருப்பது அறியப்பட்ட விடயமாகும். இதை நிறைவேற்றும்போது பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 

-- எப்போது கொடுக்க வேண்டும்?

எந்த நாளைக்காக அவர் உணவளிக்கின்றாரோ அத்தினத்தை அடைந்ததன் பின்பே அதை நிறைவேறற் வேண்டும். ரமளான் முழுவதிலும் நோன்பு நோற்க சக்தி பெற்மாட்டார் என அறிந்த ஒருவர் முழு மாதத்திற்குமாக ரமளான் ஆரம்பமாவதற்கு முன் நிறைவேற்ற முடியாது. நோன்பு விடும் தினத்தை அடைந்த பின்பே அதை வழங்க வேண்டும். அவ்வாறான ஒருவர் தான் விட்ட எலலா நோனபுகளுக்குமாக ரமளானின் இறுதியில் அதை நிறைவேற்றலாம். இவ்வுணவை வழங்குவதற்கான வசதியைப் பெற்றுக் கொண்ட ஒருவர் ரமளானின் இறுதிப் பகுதிக்கப்பால் பிற்படுத்துவது கூடாது.   

-- எதைக் கொடுக்க வேண்டும்?:

அவ்வூரில் பெரும்பான்மையான உணவாக உட்கொள்ளப்படும் தானியம் வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். 

-- எவ்வளவு கொடுக்க வேண்டும்?:

நோன்புக்காக கொடுக்கப்படும் உணவின் பிரமாணம் அல்குர்ஆனிலோ அல்லது நபிமொழிகளிலோ தெளிபடுத்தப்படவில்லை. மாற்றமாக ஓர் ஏழைக்கு உணவளித்தல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஒருவரின் பசியைத் தீர்க்கப் போதுமான உணவு வழங்கப்படால் அது நிறைவேறிவிடும். சில அறிஞர்கள் ஒரு நோன்புக்காக ஒரு முத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் வேறு சில அறிஞர்கள் ஒரு நோன்புக்கு இரண்டு  முத்துகள்  என்ற விகிதாசாரத்தில் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

-- சமைத்த உணவு வழங்கலாமா?

பல அறிஞர்கள் இது தானியமாகவே வழங்கப்பட வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தாலும். உணவை சமைத்து பங்கீடு செய்வதிலோ அல்லது வீட்டிற்கு வரவழைத்து விருந்தளிப்பதிலோ தவறில்லை. ஒருவரின் பசியைத் தீர்க்கப் போதுமான உண்வு என்பதே முக்கியமாகும். அனஸ்(ரழி) அவர்கள் வயது முதிர்வடைந்த பொழுது ஒரு வருடம் அல்லது இரு வருடங்கள் (தான் விட்ட நோன்புகளுக்காக) ஓர் ஏழைக்கு ரொட்டியும் இறைச்சியும் உணவளித்த செய்தியை இமாம் புகாரி அவர்கள் தமது ஸஹீஹில் பதிவு செய்துள்ளார்கள்.(6:26).  

-- பணம் வழங்கலாமா? 

உணவழிப்பதற்குப் பதிலாக பணத்தை வழங்க முடியாது என்பதே பெரும்பான்மையான இமாம்களின் கருத்தாகும், அல்குர்ஆனிலும ஸ}ன்னாவிலும் உணவளிப்பதைக் குறிக்கும் சொற்பிரயோகம் மாத்திரமே இடம் பெற்றிருப்பதால் உணவாக வழங்கப்பட வேண்டுமே தவிர அது பணமாக வழங்கப்பட முடியாது என இவர்கள் வாதிடுகின்றனர். 

பணத்தைக் கொடுப்பதில் தான் அந்த ஏழைக்கு பயன் அதிகமிருக்கின்றது எனத் தெரிய வந்தால் பணத்தைக் கொடுக்லாம் என ஹனபி மத்கபைச் சார்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவ்விரு கருத்துக்களிலும் முதலாவது கருத்தே மிகச் சரியானதாகும்.