அல்லாஹ்வின் அருளால் எமது கல்லூரியின் பெற்றார் கூட்டம் இன்று 23-09-2017 சனிக்கிழமை காலை 10.15 மணியளவில் கல்லூரியின் தலைவர் அல்-உஸ்தாத் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக அல்-உஸ்தாத் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களால் பெற்றோர் தம் பிள்ளைகள் விடயத்தில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றிய தெளிவு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்லூரி அதிபர் அல்உஸ்தாத் w. தீனுல் ஹஸன் (பஹ்ஜி)Continue Reading

 ஒவ்வொரு கல்வியாண்டும் இரு தவணைகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு தவணையின் இறுதியிலும் பரீட்சை நடைபெறும்.  முதலாம் தவணைப் பரீட்சையின் ஒவ்வொரு பாடத்திலும் பெறப்பட்ட புள்ளிகளில் 40% புள்ளிகளும், இரண்டாம் தவணைப் பரீட்சையின் 60% புள்ளிகளும் ஒன்றாகக் கூட்டப்பட்டு பெறுபேறு தீர்மானிக்கப்படும்.  சித்தியடைவதற்கான ஆகக் குறைந்த புள்ளி வீதம் முழுக் கூட்டுத் தொகையில் 50% ஆகும்.  ஒவ்வொரு தவணையின் பாடங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட புள்ளி வீதத்தினுள் 10% வீதப்Continue Reading

بسم الله الرحمن الرحيم வல்ல அல்லாஹ்வின்  பேருதவியால் அப்பாஸிய்யீன்கள் நலன் விரும்பிகள் அடங்கிய  கல்லூரியின் அபிவிருத்தி சங்கக் கூட்டம் சென்ற 2017.08.13 ஞாயிற்றுக் கிழமை கல்லூரி மண்டபத்தில்;  கல்லூரியின் தலைவர் அல்உஸ்தாத் M.O. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் உஸ்தாத்மார்கள் உட்பட சுமார் 70 பேர் கலந்து கொண்டனர். அழைக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் முன்னறிவிப்புடன் சமுகந்தரவில்லை, எனினும் பலர் எவ்வித அறிவிப்புமின்றி சமுகமளிக்காமைContinue Reading

 1- புன்முறுவல் பூத்தல். அதன் மூலம் அன்பும் இரக்கமும் ஏற்பட காரணமாக அமைகிறது. 2- சிறு பிள்ளைகளுக்கு அருகில் அமர்வதும் அவர்களை கொஞ்சி விளையாடவதும் அவர்களை முத்தமிடுதலும். இதனால் அவர்களுடைய உள்ளங்களில் சிறுபராயத்திலிருந்தே குரோதங்கள் அகன்று பாசத்தையும், நேசத்தையும் அவர்கள் பரப்ப முடியும். 3- நல்ல விடயங்களில் மும்முரமாக ஈடுபடுவதுடன் ஒருவொருக்கொருவர் அந்த விடயங்களில் உதவியாக இருத்தல். 4- மன்னிக்கும் மனப்பாங்கை ஏற்படுத்தல். 5- இறைவனுக்காக பூமியின் மீது சுஜுதுContinue Reading

கேள்வி : அலி (ரழி) அவர்கள் தனது பிள்ளைகளான ஹஸன், ஹுஸைன் (ரழி) ஆகியோருக்கு அவர்கள் அரபு இலக்கணத்தில் தவறுகள் விடும் போது அடிக்கும் வழமையுடையவர்களாக காணப்பட்டார்கள் எனவும் பிள்ளைகள் 12 வயதை அடைந்தும் தொழுகையை நிறைவேற்றாவிடின் அவர்களுக்கு அடிக்கலாம் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். சில வேளை பிள்ளைகள் தமது பொறுப்பாளர்களினால் முறைகேடாக நடத்தப்படுகின்றனர். பிள்ளைகள் அரபு இலக்கணத்தில் விடும் தவறுகளுக்காகவோ அல்லது 12 வயதையடைந்தும் அல்லது பருவமெய்தியும் தொழாவிடினோ அடிக்கலாம்Continue Reading

அல் – அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடரும் நூற்றுக்கணக்கான துர்க்கிஸ்தானிய மாணவர்களை பாரியளவில் கைது செய்யும் திட்டத்தை எகிப்திய இராணுவம் நிறைவேற்றுகின்றது. இம்மாணவர்களை அவர்களது தாய் நாட்டுக்கு விரட்டுவதற்கான முன்னேற்பாடகவே இது அமைந்துள்ளது. ‘ராபிதது உலமாஇ அஹ்லிஸ்ஸுன்னா’ எனும் இணையத்தளத்தின் தகவலிற்கமைய சுமார் 500 துர்க்கிஸ்தானிய மாணவர்களை அவர்களின் தங்குமிடங்கள், உணவகங்கள் மற்றும் அடிக்கடி சென்று வரக்கூடிய பொது இடங்களில் வைத்து எகிப்திய இராணுவம் கைது செய்துள்ளது. எகிப்திலிருந்து வெளியேறContinue Reading

no17

எமது கல்லூரியினால் தொடர்ச்சியாக காலாண்டுச் சஞ்சிகையாக வெளி வரும் திக்ரா சஞ்சிகையின் 17வது இதழ் வெளிவந்துள்ளது. பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதன் முக்கியத்துவம், நபிகளாரின் சிறப்புப் பெற்ற மஸ்ஜிதுந்நபவியை விட்டு விட்டு திடலில் தொழுததன் இரகசியம் என்ன? பள்ளியில் இடம் போதாமையினாலா திடலில் தொழுதார்கள் போன்ற பல சந்தேகங்களுக்கான தெளிவுகளுடன் திடலில் ஏன் பெருநாள் தொழுகை என்ற தலைப்பில் அல்உஸ்தாத் எம். ஓ. பௌஸுர்ஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் சிறப்பக்கட்டுரையுடன் உல்Continue Reading