புகைப்படங்களுடன் ஒரு சம்பவம்

அவள் ஒரு பலஸ்தீன சிறுமி. அவள் பெயர் ரபா. ஆக்கிரமிப்பு தனது உடம்பை சிதைத்ததால் அவசர சத்திரசிகிச்சைக்கான தேவையில் இருக்கிறாள்.
வளர்ந்தோர் தமது எதிர்காலத்தை தேர்வு செய்வதற்குரிய அறிவு பெற்றவர்கள். சிறுவர்களைப் பொருத்தவரையில் தமது எதிர்காலத்தை திட்டமிடுமளவிற்கு பலமுள்ளவர்களல்லர். இவ்வாறே நியதி காணப்படுகிறது. இயற்கை எழிலைக் கூட சிறவர்கள், பெண்கள், வயோதிபர்கள் மீது ஈவிரக்கம் காட்டாது யுத்தங்களினூடாக நாசப்படுத்துகின்றனர் மனிதர்கள். இரத்தப் பிரியர்களின் தாக்குதல்களுக்கு சிக்குண்டு காயமுற்றவர்களாக, படுகொலை செய்யப்பட்டவர்களாக அழித்துக் கொண்டிருக்கின்றனர். அம்மக்களிடம் தாம் இழந்த சொந்தங்களையும், இடிபாடுகளுக்குள்ளான வீடுகளையும் எண்ணி அழுவதைத் தவிர வேறெந்த தந்திரங்களும் இல்லை. அவர்கள் தமக்கேற்பட்ட காயங்களுக்கு மருந்திட முயல்கின்றனர். எனினும் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுள் அதிகமானவை காலத்தால் அழியாத ஆழமான காயங்களாக காணப்படுகின்றன.
பலஸ்தீன விவகாரமானது அரேபியவர்களின் உள்ளங்களில் வேரூண்டுள்ள விடயமாகும். பலஸ்தீன சந்ததியினரோ தேசத்தையும், மானங்களையும் நாசப்படுத்தும் சியோனிஸ எதிர்ப்புக்கு கடுமையாக முகம் கொடுத்த வண்ணமுள்ளனர். வரலாற்றில் அவர்களுக்கிழைக்கப்படும் இக்குற்றங்கள் ஸியோனிஸ்களின் கொடூர ஆக்கிரமிப்பிற்கு சான்று பகர்கின்றன.
ரபா தனது வாழ்வில் பெற்றோர், உற்றார் உறவினர்களது அன்பைத் தவிர வேறெதையும் சொந்தமாக்காத பலஸ்தீன சிறுமி. ஸியோனிஸ்கள் பேராசை கொள்ளும் தளமாகிய பைத்துல் மக்திஸில் வாழ்கிறாள் என்பதையன்றி வேறெந்த தப்பும் செய்யாத அச்சிறுமியைக் கூட இஸ்ரேலிய வான்தாக்குதல்கள் விதிவிலக்களிக்கவில்லை. அத்தாக்குதல் அவளை சின்னாபின்னப்படுத்தி தாய், தந்தையற்ற அநாதையாய் விட்டுச் சென்றது. அச்சிறுமி அபாயகரமான எறிகாயங்களால் அவதியுறுகிறாள்.
பலஸ்தீன உறவுகளில் ஒருவர் 8 வயதுடைய ரபா எனும் குறித்த சிறுமியின் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். இச்சிறுமி 2014ம் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் எறிகாயங்களுக்குள்ளானாள். அன்று தொட்டு அவளுக்கு முதலுதவிகளும், அவசர சத்திரசிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இன்று வரை காயங்களால் அவதியுற்றவண்ணமிருக்கிறாள். எறிவேற்பட்ட சில பகுதிகள் தோள் அரிப்புக்குள்ளாகின. தற்போது அவள் சிகிச்சைக்காக எகிப்தில் இருக்கிறாள். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொலர்கள் செலவாகும் சத்திரசிகிச்சைக்கான தேவையில் இருக்கிறாள். அவளது குடும்பமோ சொத்தேதுமற்ற வரிய குடும்பமாகும்.
ரபா மற்றும் அவள் போன்ற காயமுற்றோரின் வலிகளும் கஷ்டங்களும் சமூகத்தில் மறக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close