மாணவனுக்கும் ஆசிரியர்க்குமிடையே உள்ள பிரியா தொடர்பு

அரபில்: அஷஷயக் தாஹா ஸுலைமான் ஆமிர்

(ஜேர்மனிய உலமாக்கள் ஒன்றியத் தலைவர்)

தமிழில் : அர்ஷத் இஸ்மாஈல்

மாணவனைக்கான ஆசிரியருக்குள்ள சிறப்பு, மாணவனின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்களிப்பு, மாணவனின் வாழ்வு மற்றும் மாணவனின் ஆன்மீக, அறிவியல், குண ரீதியிலான உருவாக்கத்தில் ஆசிரியரின் தாக்கம் என்பவை பற்றியே நாம் அதிகம் கதைக்கிறோம். எனினும் மிகப் பெரும் ஆலிம்களையும், பிக்ஹ் அறிஞர்களையும் உருவாக்கிய (ஆசிரிய, மாணவன் எனும்) இத்தொடர்பின் இயல்பினை அறிவது அவசியமானதாகும். அன்று தமது உஸ்தாத்மார்களின் பாசறைகளில் மாணவர்களாகத் திகழ்ந்த அவர்கள் சில வருடங்களின் பின்பு உலக ஆசிரியர்களாகவும், உம்மத்தின் தலைவர்களாகவும் மாறிவிட்டனர்.
தனது எதிர்காலம், தனது ஸதகா ஜாரியா (பிரயோஜனமான அறிவு), தனது கண் குளிர்ச்சி, தனது உளப்பயன்கள், உளமகிழ்ச்சி என்பவற்றை தனது மாணவர்களிடத்தில் காண்பவரே உண்மையிலே ஆசிரியராவார். அவரது நோக்கம், தன் மாணவர்களை நலவைப் பரப்பி உயரிய அந்தஸ்துக்களை பெறும் பிரபல்யமாக காண்பதேயாகும்.

நிச்சயமாக ஆசிரியர் ஆய்வு செய்தவராக கஷ;டப்படுவது மாணவர்களுக்காகவும் அவர்களுக்கு பயனளிப்பதற்காகவுமேயாகும். கேள்வி, ஆய்வு, சம்பாசணை என அதிகம் மேற்கொள்ளும் (அறிவார்ந்த) கலந்துரையாடல் திறனாகச் செய்யும் முயற்சியுள்ள விவேகமுள்ள மாணவனின் மூலம் ஆசிரியரின் உள்ளம் சந்தோஷமடையும். சிறந்த கருத்தியல் கொண்ட பிக்ஹ் துறை சார்ந்த நுட்பமான ஆன்மீக போஷகராக விளங்கும் ஓர் ஆசிரியர் கண்மூடித்தனமாய் பின்பற்றாத சிந்தனை ரீதியிலான தலைவர்களையும் சத்தியத்தின் பால் அழைக்கும் அழைப்பாளர்களையுமே உருவாக்குவார். அவர் தனது மாணவர்கள் தன்னை மிகைத்தவர்களாக் காண்பதையே விரும்புவார். அறிவுடனும், நுட்பத்திடனும் கருத்தில் ஆசிரியருக்கு அவர்கள் முரண்படும் நாளானது, அவர்கள் (தனித்து இஜ்திஹாத் செய்ய) நேர்வழி பெற்றிருப்பதற்கும் அவர்கள் கல்வியில் முழுமை பெற்றிருப்பதற்குமுரிய அடையாளமாகும்.
சிறந்த கருத்தியல் கொண்ட பிக்ஹ் அறிஞரான நுட்பமாக்க ஓர் போஷகர் (தன்னிடமிருந்து) அதிகம் பிரதிபன்னுவதை மறுப்பார். ஏனெனில் இவர் மாணவர்களிடம் சுதந்திரமாக ஆதாரங்கள் தொடர்பில் சிந்தித்து தனித்து இஜ்திஹாத் மேற்கொள்ள விழிப்பூட்டுபவர் ஆவார். கண்மூடித்தனமாகப் பின்னற்றிக் கொண்டு பிக்ஹ் மற்றும் சிந்தனை ரீதியில் புதுப்பொழிவுடன் பயணிக்க முடியாது.

பெரிய இமாம்கள் தமது மாணவர்களுள் தன்னிகரற்ற (பண்டிதர்களை) எவ்வாறு உருவாக்கினர்?
பிக்ஹ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றின் பால் ஓர் உலா (மேற்கொண்டு) அவ்வறிஞர்கள் (பேணிய) மாணவர்களுடனான தொடர்பை (நோட்டமிட்டால்) அவ்வறிஞர்களின் செயற்றிட்டத்தை எமக்கு அறியலாம். இக்காலத்தில் இருக்கும் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளுக்கும் தமது திட்டத்தை வகுத்து தமது போக்கை மீள்பரீசிச்க்கலாம்.

1- இமாம் அபூ ஹனீபா
அவர் வியாபாரத்தை விட்டு விட்டு கல்வி தேடச் சென்ற சம்பவம் ஆச்சரியமானது. சுவாரஸ்யமானது. அவரது உஸ்தாத் ஷஃபி (ரஹ்) அவர்கள், நீர் உலமாக்களுடன் சகவாசம் கொண்டு அறிவின் பால் கவனம் செலுத்து! ஏனெனில் நிச்சயமாக உன்னிடம் விழிப்புணர்வும், சுறுசுறுப்பும் இருப்பதை நான் காண்கிறேன். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அவரது கூற்று எனது உள்ளத்திலே தாக்கம் செலுத்தியது. ஆகவே நான் சந்தைக்கு செல்வதை விட்டு விட்டு அறிவைப் பெற்றுக் கொண்டேன். அவரது கூற்றினூடாக அல்லாஹ் எனக்கு பிரயோஜனமளித்தான்.

இமாம் அவர்களின் தனது மாணவர்களுடனான தொடர்பு
ஷேக் அபூ ஸுஹ்ரா அவர்கள் கூறுகிறார்கள். இமாம் அபூ ஹனீபாவின் உள்ளத்தில் தனது மாணவர்கள் தொடர்பில் உற்ற தோழர்களின் அந்தஸ்தே காணப்பட்டது. எந்தளவுக்கென்றால் நீங்களே எனது உள்ளத்தை சந்தேசப்படுத்தக்கூடியவரகள்;. எனது கவவைலயை நீக்கக் கூடியவர்கள். எனக் கூறுபவராக இருந்தார்.

இமாம் அவர்களது மாணவர்களுடனான தொடர்பு தந்தை, மகன் தொடர்பாகக் காணப்பட்டது. அவர்களுள் தேவையுடையோருக்கு தனது பணத்தால் உதவினார்கள். அவர்கள் பருவ வயதை அடைந்து அவர்களிடம் போதிய வசதி காணப்படாத போது (தன் செலவில்) திருமணம் முடித்துக் கொடுக்கக் கூடியவராகக் காணப்பட்டார்.

அதே போன்று தனது மாணவர்களுக்கு உபதேசம் செய்தல் மற்றும் வழிகாட்டுதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தக்கூடியவராக இருந்தார். இது தொடர்பில் அவரைத் தொட்டும் அதிக விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவரது கற்பித்தல் முறையைப் பொருத்தவறையில் அது சுதந்திரமான கலந்துரையாடலையே பிரதானமாகக் கொண்டிருந்தது. இமாம் அவர்கள் குறித்த பிரச்சினையை அவர்களிடம் ஒப்படைத்து அவர்களது சப்தங்கள் உயரும் வரை சம்பாஷனை செய்ய அவர்களை விட்டு விடுவார். சிலவேளை அவர்களுக்கு முரணாகவும் கருத்து சொல்வார்கள். பின்பு இறுதிக் கலந்துரையாடலில் தனது கருத்தை வெளியிடுவார்.

அவரது பிரபல்யமான மாணவர்கள்.
அபூ யூஸுப், முஹம்மத் இப்னு ஹஸன் அஷ;nஷய்பானி ஆகிய இவ்விருவரும் இமாம் அவர்களின் மாணவர்களுள் பிரபல்யமான விவேக மிக்க மாணவர்கள் ஆவர்;. இவ்விருவரும் பல தீர்வுகளிலே இமாம் அவர்களுக்கு முரண்பட்டுள்ளனர். அக்கருத்து வேற்றுமை மூல ஆதாரங்களில் வந்த கருத்து வேற்றுமையன்று. மாறாக, கால, இட வேற்றுமை ரீதியாக வந்த கருத்து வேற்றுமையாகும். அவ்விருவருக்கும் தங்களது உள்ளங்களில் அறிவை ஊற்றிய தனித்து இஜ்திஹாத் செய்யும் ஆற்றலை வளர்த்த இமாம் (அபூ ஹனீபா) அவர்களே மிகவும் விருப்பமானவர் என்பதில் சந்கேகம் கிடையாது.

இமாம் மாலிக் மற்றும் இமாம் ஷhபிஈ (ரஹ்) அவர்கள்.

இமாம் ஷhபிஈ அவர்கள் இமாம் மாலிக்கிடம் 9 வருடங்கள் மாணவராக இருந்தார். இமாம் மாலிக் அவர்கள் இமாம் ஷhபியின் விடயத்தில் எதிர்வு கூறிய விடயத்தை பின்வருமாறு ஷhபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் மதீனா சென்று இமாம் மாலிக்கை சந்தித்து அவர் எனது பேச்சை செவியுற்ற போது நேரத்தைப் பார்த்தார். அவருக்கு எதிர்வு கூறும் ஆற்றல் இருந்தது. பின்பு அவர் உனது பெயர் என்ன? என வினவ நான் முஹம்மத் என்றேன். முஹம்மதே! அல்லாஹ்வைப் பயந்து கொள்! பாவங்களைத் தவிர்த்திடு! ஏனெனில் உனக்கு எதிர்காலத்தில் (உன்னில் பேசத் தக்க) விடயம் இருக்கின்றது என்றார்.

இவர்தான் (உண்மையான) ஆசிரியர், போஷகர். தனது மாணவனின் (திறமையை மட்டிடுவதில்) ஆழத்திற்கு சென்று அழகிய முறையில் உபதேசித்து வழிகாட்டினார்.
இமாம் ஷhபிஈ அவர்கள் இமாம் மாலிக்கின் மறைவின் பின் ‘கிலாபு மாலிக்’ எனும் பெயரில் புத்தகமொன்றைத் தொகுத்தார். இப்புத்தகத்தில் பல விடயங்களில் தனது உஸ்தாத் மாலிக்கின் கருத்திற்கு மாற்றமாகவே கருத்துக் கொண்டுள்ளார். இவ்விடயம் இமாம் மாலிக்கின் கீர்த்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

நான் ஏன் இவ்வாறு சொன்னேன் தெரியுமா?
ஒரு மாணவர் கல்வியின் ஆரம்ப கட்டத்தைக் கடந்து முதிர்ச்சியடைந்து இஜ்திஹாத் மேற்கொள்ள சக்தி பெறுவாராயின், அவரது ஆசிரியரின் ஆழ்ந்த அறிவையும் பலத்தையுமே அது எடுத்தியம்புகின்றது.

ஓர் உஸ்தாத் தனது மாணவன் ஆதாரத்தின் அடிப்படையில் ஆய்வுடன் இஜ்திஹாத் செய்து தனக்கு மாற்றமாகக் கருத்துக் கொள்ளுமிடத்து உண்மையிலே சந்தோஷமடைகிறார்.

இமாம் ஷhபஈ மற்றும் அஹ்மத் ஆகியோரின் தொடர்பு

இவ்விருவருக்குமிடையே காணப்பட்ட தொடர்பு ஆச்சரியமானது. ஏனெனில் யார் உஸ்தாத், யார் மாணவன் என நீர் அறிய மாட்டீர். இமாம் அஹ்மத் இமாம் ஷhபிஈ பக்தாதில் தங்கியிருக்கும் காலத்தில் ஆசிரியராக அமர்வதற்கு மறுத்து விட்டார். இமாம் அஹ்மத் அனைத்து தொழுகையின் போதும் ஸுஜுதிலே எனது ரப்பே! என்னையும் எனது பெற்றோரையும் முஹம்மத் இப்னு இத்ரீஸ் ஷhபிஈயையும் மன்னிப்பாயாக!. எனப் பிரார்த்திப்பவராகக் காணப்பட்டார்.

இமாம் ஷhபிஈயிடம் காணப்பட்ட உயர்ந்த குணத்தின் காரணமாக இமாம் அஹ்மதை அதிகம் சந்திக்கக் கூடியவராகக் காணப்பட்டார். இமாம் ஷhபிஈயிடம் அஹ்மத் இமாம் உங்களை சந்திக்க நீங்களும் அவரை சந்திக்கின்றீரே? என வினவப்பட கண்ணியம் இமாம் அஹ்மதை விட்டும் பிரியமாட்டாது. நான் அவரைச் சந்திப்பேனாயின் அவரது சிறப்பிற்காகவேயாகும். அவர் என்னை சந்திப்பீராயின் அவரது சிறப்பைக் கொண்டேயாகும். இரு நிலைகளிலும் சிறப்பு அவருக்குரியதே எனப்பதிலளித்தார்.

யா அல்லாஹ்! எவ்வளவு பெரிய உயர்ந்த விசாலாமான உள்ளங்கள்!
இவ்வாறே, வரலாற்றில் பல உலமாக்களின் மாணவர்களுடனான தொடர்பு இருந்தது. இவற்றிற்கான உதாரணங்கள் பல. இதற்கான தற்கால உதாரணங்களை அறிந்தால் நல்லமல்லவா? இவ்விடயத்தில் எமது உஸ்தாத் கஸ்ஸாலி அவர்களை நினைவு கூர்கிறேன். அவரிடம் பல விடயங்கள் தொடர்பில் கேள்வி கேட்கப்படும் போது, இது தொடர்பில் ஷேக் கர்ளாவியிடம் கேளுங்கள்! அவர் எனது மாணவர் எனக் கூறுவார். – இப்போது ஷேக் கர்ளாவி எனது உஸ்தாத் –

ஷேக் கர்ளாவி தனது உஸ்தாத் கஸ்ஸாலி வாழும் காலத்தில் ஒரு புத்தகம் எழுதிய போது, (அப்புத்தகத்திலே) தனது உஸ்தாதுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார். (எனவே அவர் பற்றி) ‘நான் அறிந்த மட்டில் அஷ;nஷய்க் கஸ்ஸாலி (இந்த) அரை நூற்றாண்டில் (கல்வி கற்க) அவரை நாடி பயணம் செய்யப்பட வேண்டியவர்.’ எனக் கூறியுள்ளார். அஷ;nஷய்க் கர்ளாவி தனது உஸ்தாத்மார்களை நினைவு கூர்கின்ற போது, அவர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுமாறு எமக்குக் கற்றுத்தருவார். (அஷ;nஷய்க் கர்ளாவி) ஒரு பெரிய ஆலிம். அல்லாஹ் அவரது வாழ்நாளை நலவில் நீடிக்கட்டும்!

நான் (இங்கு) வலியுறுத்த விருப்புவது யாதெனில், ஓர் ஆசிரியர் அவரிடம் காணப்படும் விவேகம், ஆசை, முன்மாதிரி, மன உறுதி, திடகாத்திரம், தான் சுமந்திருக்கும் ஆழமான கல்வி என்பற்றுடன், (மாணவக்) கனியங்களை கண்டெடுத்து வழிப்படுத்தி, வளர்த்து முன்னேற்றிட முடியும். மனித வளத்திற்கு (பயனளிக்கும் வகையில்) மறைந்திருக்கும் மாணவப் பொக்கிஷங்களை வெளிக் கொண்டு வர முடியும். (இதன் போது, தான் செலவிடும்) நேரம், பணம், முயற்சி என்பவற்றை மறுமைக்காக சேமித்து அல்லாஹ்விடம் நன்மை எதிர்பார்த்தவராகச் (செயற்பட முடியும்)

நன்றி: அல் – முஜ்தமஃ சஞ்சிகை
2018 – ஜுலை (ஹி1439- ஷவ்வால்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close