15 வருட ஆப்கான் போரில் அமெரிக்க வெற்றி கண்டதா?

2001 செப்டம்பர் 11 தாக்குதல் நடந்து ஒரு மாதத்தின் பின் அமெரிக்க இராணுவப் படை ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளிலும் பாரிய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. ஆக்கிரமிப்பு ஆரம்பமாகி 1 மாதம் கழிவதற்கிடையில் நவம்பர் 14ம் திகதி தலைநகர் காபூலை வீழ்த்தி தன் கைவசம் கொண்டுவந்தது. இதையடுத்து அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். புஷ் ‘நாம் தாலிபான்களின் அரசை கவிழ்த்துவிட்டதாக’ மார்தட்டி தனது இலக்குகளை அறிவித்தார். இன்று ஆப்கானிஸ்தான் வீழ்ந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகள் எந்நோக்கங்களைக் கூறி போர் தொடுத்ததோ அந்நோக்கங்களை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளதை எடுத்தியம்பும் துணுக்குகளை உலக ஆய்வு மற்றும் மதிப்பீட்டு நிலையங்கள் கண்காணித்து பெற்றுக்கொண்டுள்ளது. இராணுவத் தோல்வி, பொருளாதார வீழ்ச்சி, ஓபியம் (Opium) உற்பத்தி அதிகரித்துள்ளமை என்பன அத்தோல்விகளுள் முக்கியமானவையாகும்.

இராணுவத் தோல்வி :
‘அல் – கைதா’ மற்றும் ‘தாலிபான்’ போன்ற இயக்கங்களை அழித்தொழிக்க முடியாமலும், காபூல் நகரில் புதிய ஆட்சியை ஸ்தீரணப்படுத்தத் தவறிய நிலையிலும் ஜோர்ஜ் புஷ்ஷின் 2 பதவிக்காலமும் முடிவடைந்தது. அதையடுத்து தமது நோக்கங்களை பூரணமாக நிறைவேற்றியதன் பின் அமெரிக்கப் படையை ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் வாங்குவதாக வாக்களித்த வண்ணம் வெள்ளை மாளிகையில் பராக் ஒபாமா ஆட்சி பீடம் ஏறினார். தற்போது அவரது 8 வருடப் பதவிக்காலமும் முடியும் தருவாயிலுள்ளது. எனினும் அவரது வாக்குகளில் குறைந்தளவைக் கூட நிறைவேற்றாத வண்ணமுள்ளார். தற்போது 9800 எண்ணிக்கையைக் கொண்ட அமெரிக்க இராணுவத்தை தனது பதவிக்காலம் முடிவடைவதற்கிடையில் 5500 ஆக குறைப்பதாக வாக்களித்த அதே நேரம் ஈராக் தேசத்திலிருந்து தமது படையை வாபஸ் பெறுவதாகவும் கொக்கரித்த வண்ணம் ஆட்சி பீடம் வந்தார்.

2015 ஒக்டோபர் 15ம் திகதி The Washington Post எனும் அமெரிக்கப் பத்திரிகை வெளியிட்ட தகவல் நடந்தவற்றை தெளிவுபடுத்துகின்றது. ஆப்கானில் குவிக்கப்படும் அமெரிக்க இராணுவத்தின் தொகை கூடிய வண்ணமே உள்ளது. 2008ம் ஆண்டு 30000 தொகையைக் கொண்டிருந்த இராணுவத்தினர் 2010 – 2011 நடுப்பகுதிகளில் ஒரு லட்சமாக அதிகரித்தது. 2011ம் ஆண்டிற்குப் பின் தனது படைவீரர்களை புதுப்பிக்கவும் செய்தது. எனினும் ஆப்கான் பூமியில் இராணுவச் செயற்பாட்டில் தோல்வி கண்டது என அப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்காவுக்கு மற்றுமொரு இடியாக தாலிபான் இயக்கம் தனது இராணுவப் பிரிவை அதே தரத்தில் பேணிச் செயற்படுகின்றது. இது குறித்து ISW எனும் சுருக்கக் குறியில் அறியப்பட்ட அமெரிக்க யுத்த ஆய்வுகள் மையம் தகவல் வெளியிடுகையில் சென்று கொண்டிருக்கும் ஒக்டோபர் உட்பட கடந்த காலங்களில் தாலிபான் இயக்கம் நாட்டின் மூன்றிலொரு பகுதிக்கும் அதிகமான இடங்களில் (அவ்விடங்கள் பிரிந்து காணப்படினும்) தமது பாரிய இராணுவச் செயற்பாட்டை பேணிவருவதாகக் கூறியது.

பொருளாதார வீழ்ச்சி :
2011 ஆரம்பம் முதல் 2015 இறுதிவரை அமெரிக்கா 850 கோடிகளுக்கும் அதிகமான டொலர்களை ஆப்கான் போருக்கு செலவு செய்துள்ளது. அத்தொகையில் அரைப் பகுதிக்கும் மேலாக கடந்த மூன்று வருடங்களில் செலவிட்டுள்ளது. மற்றொரு புறத்தில் 2014 ஆரம்பம் முதல் ஆப்கானிய அகதிகளின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம்புகும் ஆப்கானியர்களின் எண்ணிக்கை ஈராக் அகதிகளையும் மிகைத்து நிற்பதோடு சிரிய அகதிகளின் எண்ணிக்கையை அண்மித்துக் காணப்படுகிறது. ஈராக் மற்றும் சிரியாவோடு ஒப்பிடுகையில் ஆப்கானிஸ்தானுக்கும் ஐரோப்பிற்கும் பன்மடங்கு தொலை தூரமிருந்தும் ஆப்கான் மக்கள் அகதிகளாக ஐரோப்பாவிற்கு வெளியேறுகின்றனர். இத்தகவலை பிரித்தானிய ‘ஒக்ஸ்போட்’ பல்கலைக்கழக மதிப்பீட்டு நிலையம் கடந்த ஒக்டோபர் 18 வெளியிட்ட அறிக்கையில் கூட்டிக்காட்டியுள்ளது.

ஓபியம் (Opium) உற்பத்தி அதிகரிப்பு :
1994ம் ஆண்டு முதல் (UNODC) வருடாந்தம் வெளியிடும் அறிக்கையின் படி ஹெரோயின் போதைவஸ்துவின் மூலப் பொருளாக உபயோகிக்கப்படும் ‘ஓபியம்’ (Opium) எனுத் தாவர உற்பத்தியானது வருடாந்தம் அதிகரிப்பதாக (UNODC) ஒக்டோபர் 5ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்விடயம் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் ஆப்கானில் சந்தித்த மற்றுமொரு தோல்வியாகக் கணிக்கப்படுகின்றது. அழிக்கப்பட்ட ஓபியன்களின் தொகை பூச்சியத்தை அண்மித்ததாகவே காணப்படுகின்றது என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தலைநகர் காபூலுக்கு அண்மித்த பகுதியில் பாரியளவில் ஓபியம் பயிரிடப்படும் பெரிய வயல்கள் இருக்கின்றன.

2001ம் ஆண்டு ஆரம்பத்தில் தாலிபான் இயக்கம் ஆட்சியில் இருக்கும் போது ‘ஓபியன் உற்பத்தி முழுமையாக அழிக்தொழிக்கப்பட்டதாகவும்’ அந்நேரத்தில் ‘ஓபியம் உற்பத்தி’ 82 ஹெக்டேர் அளவிலே காணப்பட்டதாகவும் (UNODC) இன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2014ம் ஆண்டு 224 ஹெக்டேர் எனவும் இவ்வருடம் இதைவிட அதிகமாக காணப்படலாம் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது. தாலிபான் அரசு நாட்டில் போதைவஸ்துப் பொருட்களை முழுமையாக அழிப்பதில் வெற்றிகண்டமையானது உலக ஊடக தரப்பினரிடம் பேசுபொருளாக அந்நேரத்தில் மாறியிருந்தது. ‘The Guardian’ எனும் பிரித்தானிய பத்திரிகையில் ‘உலக ஓபிய பயிர்ச்சேகை அடியோடு ஒழிப்பு’ எனும் தலைப்பில் 2001 ஏப்ரல் 1ம் அன்று வெளிவந்திருந்தது. அதேபோன்று New York Times எனும் அமெரிக்க பத்திரிகையில் ‘ஓபியத்தை ஒழிப்பதில் தாலிபான்களின் வெற்றி’ எனும் தலைப்பில் 2001 மே 20 தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

தமிழாக்கம் : மாணவன் அர்ஷத் இஸ்மாஈல் தரம் : 05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *