மண்ணறையை நோக்கி உன் வாழ்வு நெருங்குகிறதா?.

அல் உஸ்தாத்: எம். எஸ்.எம்.  யுஸ்ரி (அல் அப்பாஸி)

இப்பாரிலே அல்லாஹ் மனிதர்களைப் படைத்து அவர்களை உலகிலே சில காலம்  வாழ வைத்து, உலக இன்பங்களை அனுபவிக்கச் செய்து அவர்களை மரணிக்கச் செய்கிறான். இந்த மரணம் அல்லாஹ்வின் படைப்புக்களில் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்படக்கூடியது. எதற்கும் விதிவிலக்குக் கிடையாது. அனைவரும் இந்த மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும். மரணத்தை விட்டு விரண்டோடினாலும்  அது அவர்களை வந்து சந்திக்கும். இந்த வாழ்வு, மரணம் என்பவற்றை அல்லாஹ் படைத்த காரணம் உலகிலே அழகான செயல்கள் செய்பவர்கள் யார் என சோதித்துப்பார்ப்பதற்காகும். எனவே இந்த மரணம், அதற்கு நெருங்கிய நிலைமை, அதன் பின்னரான நிலைமைகள், மேற்படி நிலைமைகளின் போது முஸ்லிம்கள்  எவ்வாறு காணப்படவேண்டுமென இஸ்லாம் கூறியுள்ள, எம்மிடம் எதிர்பார்த்துள்ள சில விடயங்களை சற்று அலசிப் பார்ப்போம்.

நோயாளி கவனிக்க வேன்டியவை:

◄  கழா கத்ரை பொருந்திக் கொள்ளல்.

நோயாளி தனக்கு ஏற்பட்டுள்ள நோய் அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படிதான் ஏற்பட்டுள்ளது என்று உறுதி கொள்ளவேண்டும். நோயின் கடுமை காரணமாக பொருத்தமற்ற பேச்சுக்களை பேசக்கூடாது. நோயை பொறுத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள்: ஒரு முஃமினுடைய விடயம்  மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவனது அனைத்து விடயங்களும் அவனுக்கு நலவாகவே அமைகின்றது. அது முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இருக்காது. ஏனென்றால் அவனுக்கு ஏதாவது நண்மைகள்;, சந்தோசமான விடயங்கள் ஏற்பட்டால்  அவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாக இருக்கிறது. அதே நேரம் எதாவது கெடுதிகள், தீங்குகள் ஏற்பட்டால்  அவன் அவற்றை பொறுத்துக் கொள்கிறான். அது அவனுக்கு நலவாக அமைந்துவிடுகின்றது. (முஸ்லிம்-7425).

எனவே நாம் துக்கமான, சந்தோசமான நிலைமைகளின் போது அல்லாஹ் விரும்பும் விதத்தில் செயற்படவேண்டும். நோயின் வேதனையில் ஈமான் பறிபோகும் வார்த்தைகளை பேசக்கூடாது.

◄அல்லாஹ்வின் அருளை எதிர் பார்த்தல் :

மரணம் நெருங்குகின்ற ஒருவர் தனக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்று ஆசை வைக்கும் அதே நேரம் , அல்லாஹ் தன்னை தண்டித்துவிடுவானோ என்று அவனது வேதனையைப்  பற்றி அச்சம் கொள்ளவும் வேண்டும். ஏனென்றால்  ஒரு மனிதன் மரனம் அண்மிக்கும்  நேரத்தில்  அல்லாஹ்வின் அருளில் மாத்திரம் நம்பிக்கை வைத்திருந்தால்  அவன் தான் செய்த பாவங்களைப் பற்றிய அச்சம் இல்லாதவனாய்  இறுதித் தறுவாயில் பாவமன்னிப்புக்கேட்க மறந்துவிடும். அதே போல் அல்லாஹ்வின் அச்சம் மாத்திரம்  இருந்தால் சுவனத்தை ஆசை வைக்கும் எண்ணம் வராது. அனஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் மரணத் தறுவாயில் இருக்கும் ஒரு வாலிபரிடத்தில்  சென்றார்கள். அந்த வாலிபரிடம் நிலைமை எப்படி எனக்கேட்டார்கள். அதற்கு அவ் வாலிபர்  அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அல்லாஹ்வின் அருளை எதிர் பார்த்துள்ளேன், அதே போல் எனது பாவங்கள் காரணமாக அவனை நான் பயப்படுகிறேன் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இப்படியான நேரத்தில்  எந்த அடியானின் உள்ளத்தில் இவ்விரண்டும் ஒன்றாய் இருக்கிறதோ அப்படியானவர்களுக்கு அல்லாஹ் அவர் எதனை ஆசை வைக்கிறாறோ அதை கொடுக்கிறான். எதனை பயப்படுகின்றாரோ அதிலிருந்து பாதுகாப்பும் அளிக்கிறான் என்றார்கள் (திர்மிதி). இன்னொரு தடவை ‘உங்களில் எவரும்  அல்லாஹ்வைப்பற்றிய நல்லெண்ணம் கொள்ளாதவராக மரணிக்க வேண்டாம்’ என்றார்கள். (முஸ்லிம்-7160). அதாவது மரணத்தை எதிர் நோக்கியுள்ள ஒருவர்  அல்லாஹ் தன்னை மன்னிப்பான், தனக்கு சுவனத்தை தருவான்  என்று நல்லெண்ணம் வைத்திருக்கவும்  வேண்டும்.

◄ மரணத்தை ஆசை வைக்காமலிருத்தல்.

ஒருவருக்கு நோய் எவ்வளவு கடுமையாக வந்த போதிலும்  அவர் மரணத்தை ஆசை வைக்கக்கூடாது. தான் இந்த வேதனை படுவதை விட மரணித்தால் நன்றாயிருக்குமே, தனக்கு மரணம் ஏற்படாதா என்று ஏங்கக் கூடாது. எந்தளவிற்க்கென்றால் நன்மை அதிகம் கிடைக்கும்  புனிதப் போரை கூட நபிகளார் அதிகம் ஆசை வைக்கவேண்டாம் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ‘உங்களில் எவரும் எதிரிகளை சந்திப்பதை (யுத்தத்தை) அதிகம் ஆசை வைக்க வேண்டாம். அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள். ஏதிரிகளை சந்தித்தால் பொறுமையோடு யுத்தம் செய்யுங்கள் ‘ என்றார்கள்.(புஹாரி 2966) எனவே புனித ஜிஹாதைக்கூட  அதிகம் ஆசை வைக்க வேண்டாமென்று கூறியுள்ளார்களென்றால்  மரணத்தை சர்வ சாதாரணமாக  ஆசை வைப்பதை எந்தளவிற்கு வெறுத்துள்ளார்கள்  என்பதை அறியமுடிகின்றது. உம்முல் பழ்ல் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள் ‘ நபிகளாரின் சிறிய தந்தை அப்பாஸ் (றழி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் வந்தார்கள். அப்பாஸ் (றழி) அவர்களோ மரணத்தை ஆசை வைத்திருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘சிறிய தந்தையே! மரணத்தை ஆசை வைக்கவேண்டாம். நீங்கள் நன்மை செய்பராக இருந்தால் உங்களது ஆயுள் நீடிப்பதால் உங்களுக்கு நன்மைகளை அதிகரித்துக்கொள்ள முடியும். நீங்கள் தீயவராக இருந்தால்  ஆயுள் நீடிப்பதால்  உமக்கு பாவமன்னிப்பு கேட்டுக்கொள்ளமுடியும் ,அது உமக்கு நலவாக அமையும். மரணத்தை ஆசை வைக்க வேண்டாமென்றார்கள்’ .(அஹ்மத் 6 ⁄ 339).இந்த ஹதீஸின் மூலம் மரணத்தை ஆசை வைக்காமலிருத்தலின்  நலவை நாம் அறியமுடிகின்றது. நல்லவராக இருந்தால் இன்னும் நன்மைகளைச் சேகரித்துக் கொள்ளமுடியும். பாவியாக இருந்தால்  பாவியான நிலையில் மரணிக்காமல்  தவ்பா செய்து பாவங்கள் அழிந்த நிலையில்  தூய்மையானவனாக மரணிக்க முடியும் .

◄ பிறரின் உரிமைகளை நிறை வேற்றல்:

பிறருக்குச் சேர வேண்டிய உரிமைகள் இருந்தால் அவற்றை உரியவர்களுக்கு ஒப்படைத்தல் வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள:; ‘யாருக்காவது தனது சகோதரனுக்குக் கொடுக்கவேண்டிய உரிமைகள் இருந்தால், தீனாரும் திர்ஹமும் பகரமாக ஒப்புக்கொள்ளப்படாத மறுமை நாள் வருவதற்கு முன்  அதை அவருக்கு நிறைவேற்றி விடட்டும். (மறுமையில் ) ஸாலிஹான அமல்கள்  இருந்தால் அவற்றை எடுத்து மற்றவருக்கு (அநீதி இழைக்கப்பட்டவருக்கு) கொடுக்கப்படும். நல்லமல்கள் இல்லையென்றால் மற்றவரின் பாவங்களைஅநீதி இழைத்தவனுக்குச் சாட்டப்படும். (புஹாரி 6534). எனவே கொடுக்கல், வாங்கல்கள் இருந்தால்  அவற்றை முடித்து விட வேண்டும். அதே போன்று வாழும் காலத்தில் மனிதர்களுக்கு ஏதாவது அநீதிகள்  இழைத்திருந்தால்  அவற்றை உலகத்திலேயே முடித்து விடவேன்டும். அதாவது சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்;டு இது விடயமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். பொருளாதார அநீதிகளாக இருந்தாலும் அவற்றையும் கூடிய சீக்கிரம் சரி செய்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் சுவர்க்கம் செல்லும் ஆசையோடு செய்த நன்மைகள் அனைத்தும் நம்மை விட்டு போய்விடும். உலகில் பாடுபட்டுத் தியாகங்கள் பல செய்து நன்மைகள் சம்பாதித்தது எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும். பல ஹதீஸ்களில் நபிகளார் உலகத்திலே கடன், பிறருடைய  உரிமைகளை நிறைவேற்றி விட வேண்டுமென வலியுறித்தியுள்ளார்கள்.

அடுத்து மிக முக்கிய விடயம் தனது ஜனாஸாவை  ஸுன்னா முறைப்படி, பித்அத்கள் கலக்காமல்  அடக்கம் செய்யுமாறு வஸிய்யத் செய்வதாகும். இன்று சமூகத்தில்  பித்அத்கள்  அதிகம் இடம் பெறும் ஒன்றாக ஜனாஸா மாறிவிட்டது. எனவே நமது இறுதி அம்சமான ஜனாஸாவில் பித்அத்கள் செய்யாமல் இருக்குமாறு, பித்அத்கள் நடக்காமல் பார்க்குமாறு  வஸிய்யத் செய்ய வேண்டும். அé மூஸா அல் அஷ்அரி (றழி) அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது: ‘எனது ஜனாஸாவை வேகமாக எடுத்துச் செல்லுங்கள். சாம்பிராணி  பிடித்துக்கொண்டு ஜனாஸாவை பின் தொடர வேண்டாம். எனது கப்ரின் மீது எந்த வித கட்டிடமும் அமைக்கவேண்டாம்’ என்று கூறினார்கள். (அஹ்மத் 4-397)

◄ கலிமாவை சொல்லிக் கொடுத்தல்

மரணம் மிகவும் நெருங்கி விட்டதை அவருக்கருகிலிருப்பவர்hகள் உணர்ந்தால் அவருக்கு கலிமாவை சொல்லிக்கொடுக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களில் மரணத்தறுவாயில் இருப்பவர்களுக்கு  لاإله إلاالله   வை சொல்லிக் கொடுங்கள் (முஸ்லிம்- 916). மேலும் சொன்னார்கள்: யாருடைய இறுதி வார்த்தை  لاإله إلاالله ஆக அமைகிறதோ அவர் எப்போதாவது ஒரு நாள் சுவனம் செல்வார் (இப்னு ஹிப்பான்). கலிமாவைச் சொல்லிக்கொடுப்பது என்பது மரணத்தறுவாயில் இருப்பவருக்கு கேட்கும் விதத்தில் சூழ உள்ளவர்கள் கலிமாவை சொல்வதல்ல. மாறாக அவருக்கு கலிமாவை சொல்லுமாறு ஏவுவதாகும். அனஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: அன்ஸாரிகளில் ஒருவரை நபியவர்கள் நோய் விசாரிக்கச் சென்றார்கள். அங்கு மாமாவே  لاإله إلاالله      என்று கூறுங்கள் என்றார்கள். அதற்கவர் மாமாவா அல்லது சாச்சாவா என்று கேட்டார். அதற்கு நபியவர்கள்: இல்லை மாமாதான் என்றார்கள். அதற்கவர்لاإله إلاالله  என்று சொல்வது எனக்கு நலவாக அமையுமா? என்று கேட்டா10684289_344473142344056_1966443740_nர். அதற்கு நபியவர்கள் ஆம் என்றார்கள் (அஹ்மத் 3ஃ152). எனவே அவ்விடத்தில் இருப்பவர்கள் அவரிடம் கலிமா சொல்லுமாறு கூற வேண்டும். எனவே நாம் மேற்கூறப்பட்ட விதத்தில் நமது செயல்களை அமைத்துக்கொள்ள முயல்வோமாக ! அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *