செலவினங்களும் வருமானமும் :

பொருளாதார நிலை 

தற்சமயம் கல்லூரியின் மாதாந்தச் செலவினங்கள்  850,000 ரூபாவைத் தாண்டி நிற்கின்றது . இதில் சம்பளம், மாணவர்கள் உட்பட சகலருக்குமான உணவு தங்குமிட வசதிகள், நிர்வாக, பராமரிப்புச் செலவுகள் ஆகியன அடங்கும். மாதாந்த செலவினங்களை ஈடுசெய்வதற்காக நிரந்தர வருமானத்திற்கான பல வழிகளை ஒழுங்கு செய்வது என்ற திட்டத்தின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் கல்லூரிக்குச் சொந்தமான பேக்கரியிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் கல்லூரியின் மாதாந்தச் செலவில் ஏறக்குறைய கால்வாசியளவு  ஈடுசெய்யப்படுகின்றது. தரமும் ருசியும் மிக்க இதன் உணவுப்பண்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை காணலாம்dsc01757. ‘அல் ஜவ்தா’ என்ற பெயரில் இயங்கும் இதனை முதல் தர பேக்கரியாக வளர்ச்சியடையச் செய்வதில் இதன் ஸ்தாபக முகாமையாளர் காலஞ்சென்ற அல்-ஹாஜ்  ஷிஹாப்தீன் அவர்கள் ஆற்றிய பங்கு என்றும் மறக்க முடியாததாகும். அல்லாஹ் அவருக்கு நற்கூலியை வழங்குவானாக .தற்போது இதன் முகாமையாளராக அல்-உஸ்தாத் எம்.ஜே.எம். அதாஉல்லாஹ் பணியாற்றுகின்றார். இந்த பேக்கரியை அமைப்பதிலும் கல்லூரியின் ஏனைய விடயங்களில் ஒத்துழைப்பதிலும் சவூதி அரேபிய ரியாத் நகரை சேர்ந்த அஷ்ஷைக் காலித் தாவூத் அவர்களின் பங்களிப்பு மகத்தானது.

மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் விடுதிக் கட்டணங்களும், தனிப்பட்டவர்கள், நலன்புரிச் சங்கங்கள் என்பன மூலம் கிடைக்கும் உதவிகளும் செலவில் மற்றும் ஒரு பகுதியை ஈடுசெய்தாலும் மாதா மாதம் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிர்ப்பந்த நிலையிலேயே நாம் கல்லூரியை நடாத்திச் செல்கின்றோம் என்பதே உண்மை நிலையாகும். தற்போதைய வருமானங்களின் கணிப்பின் படி முன் வரும் மாதங்களில் மாதாந்தம் 150,000 ம் மேற்பட்ட அளவு நிதி பற்றாக்குறையை நாம் எதிர் நோக்கவுள்ளோம்.

செலவுகளை ஈடுசெய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட  ‘ஒரு நாள் செலவை பொறுப்பேற்றல்’ என்ற திட்டத்தின் கீழ் ஒரு சிலர் உதவ முன் வந்துள்ளனர். இவ்ழியில் உதவிவழங்க மேலும் பலருக்கு வாய்ப்பு உள்ளது .

1. தற்பொழுது ஒரு நாளைக்கான முழுச் செலவு 28000 ரூபாவை எட்டி நிற்கின்றது.

2. ஒரு நாள் உணவிற்கான செலவிற்கு மாத்திரம் 17000 ரூபாய் தேவைப்படுகின்றது.

பணமாகவோ பொருளாகவோ உதவிகளை வழங்கலாம். ஷரீஆவிற்கு முரணில்லாத கல்லூரியின் தனித்துவத்தைப் பாதிக்காத நிபந்தனைகள் அற்ற உதவிகளை ஏற்றுக் கொள்வது என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாக நிற்கும் கல்லூரியின் வாசல், நல்மனம் படைத்தவர்களின் உதவி ஒத்தாசைகளை வரவேற்க எப்பொழுதும் திறந்தே இருக்கின்றது.

மாதாந்த பட்ஜட்டில் அடிக்கொருமுறை ஏற்படும் துண்டு விழும் நிலை நிரந்தர வருமானத்திற்கான மேலும் பல வழிகளை பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை நிர்வாகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. பொருத்தமான இடங்களில் காணிகளை வாங்கி, கடைத் தொகுதிகள், வீடுகள் போன்றவற்றை அமைத்து அவற்றை வாடகைக்கு விடுவது கல்லூரியின் நிரந்தர வருமானத்திற்கான நிர்வாகத்தின் உத்தேச திட்டங்களில் பிரதானமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *