கல்லூரியின் அவசர அவசியத் தேவைகள்

கல்லூரியின் அவசரமான முக்கிய தேவைகள் சில பின்வருமாறு :

1. காரியாலயக் கட்டடத் தொகுதியின் மூன்றாம் மாடி, சுமார் 4300 சதுரஅடி பரப்பளவு கொண்ட இத்தளம் மாணவர் விடுதியின் ஒரு பகுதியாக அமையவுள்ளது, இதனை கட்டிமுடிப்பதற்கான உத்தேச செலவு சுமார் எழுபத்தியிரண்டு லட்சம் (7200,000) ரூபாவாகும்.

2. மஸ்ஜித் கட்டடத் தொகுதியின் மூன்றாம் மாடி, 2300 சதுரஅடி பரப்பளவுகொண்ட இத்தளம் கல்லூரியின் கேட்போர் கூடமாக (Auditorium) அமையவுள்ளது, இதற்காக சுமார் முப்பத்தியிரண்டு லட்சம் (3200,000) ரூபா செலாவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது,

3. சமையலறை, அதையொட்டிய மண்டபம், பணியாளர்களின் தங்குமறை, களஞ்சிய அறைகள் ஆகியன உள்ளிட்ட சுமார் 1500 சதுர அடி பரப்பளவுகொண்ட ஒரு கட்டடமும் அமைக்க வேண்டியுள்ளது , அதற்கான உத்தேச செலவு ஐம்பது லட்சம் (5000,000) ரூபாவாகும். அதன் முதற்கட்ட வேலைகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய கட்டடங்களின் வேலைக்காக சுமார் 35 லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.

4. அவசர தருணங்களில் கல்லூரியின் முழுக்கட்டங்களுக்குமான மின்சாரத்தேவையைப் பூர்த்திசெய்வதற்காக 20 KV சக்திகொண்ட ஒரு மின்பிறப்பாக்கி (Generater) தேவைப்படுகின்றது, அதனைக் கொள்வனவு செய்து, மின்இணைப்புகளைச் சீர்செய்து இயக்குவதற்கு சுமார் பன்னிரண்டு லட்சம் (1200,000) ரூபாய்த் தேவைப்படுகின்றது .

5. மாதாந்தம் துண்டுவிழும் தொகையைக் குறைப்பதற்காக வசூலை அதிகரிப்பது, ஒருநாள் செலவைப் பொறுப்பேற்றல், பணமாக அல்லது பொருளாக மாதாந்தம் உதவிகளைப் பெறுவது போன்ற வழிகளில் வசூல் நடைபெறுகின்றது.

6. கல்லூரியின் நூல் நிலையத்தை மேம்படுத்துவதற்காக முக்கிய பல நூல்களும் தளபாட வசதிகளும் தேவைப்படுகின்றன.

7.  உஸ்தாதுமார்களுக்கான குடும்பவிடுதிகளை அமைப்பது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *