எமது பிள்ளை வாசிப்பில் பிரியமுடையவனாக மாற சில வழிமுறைகள்

வாசிப்பு, பிள்ளையின் மொழியாற்றலை வளர்க்கும். சொல்வளத்தை அதிகரிக்கும். கற்பனைத் திறனை விரிவுபடுத்தும். அனைத்தையும் பூரணமாக விளங்கும் (சிந்தனா) சக்தியை திறன்படச் செய்யும்.

வாசிப்பில் முன்மாதிரியாகத் திகழ்வது, பிள்ளையின் ஆளுமை உருவாக்கத்தில் உந்து சக்தியாக விளங்குகின்றது.

உலகில் வாசிக்காதோர் உட்பட பெரும்பான்மையோர் வாசிப்பின் முக்கியத்துவம், அது தரும் விஷேடத்துவம் மற்றும் உயரிய அந்தஸ்து பற்றி அறிந்து வைத்திருக்கின்றனர். எனினும் அதிகமானோர் வாசிப்பினூடாக ஏற்படும் சாதகமான பங்களிப்புகள், பிள்ளையின் புத்துணர்ச்சி மற்றும் ஆளுமை உருவாக்கத்தில் வாசிப்பின் தாக்கம் பற்றி மறந்திருக்கின்றனர். வாசிப்பு பிள்ளையின் மொழி, சொல் வளம், கற்பனைத் திறன் ஆகியவற்றை வளர்ப்பதுடன் சீரான அறிவார்ந்த சிந்தனா சக்தி மற்றும் பிரச்சினைகளுக்கு நேர்த்தியான முறையில் முகங்கொடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் பாரிய பங்காற்றும் சாதனமாகத் திகழ்கிறது. இப்பிரயோஜனங்கள் வாசிப்பின் பங்களிப்பினூடாக பிள்ளையின் கல்வித் தராதரத்திலே சாதகமான முறையில் பிரதிபலிக்கின்றன. வாசிப்பு பிள்ளைகள் ஓய்வு நேரங்களை குறிப்பாக விடுமுறைகளை பிரயோசனமான முறையில் கழிப்பதிலும் பங்காற்றுகின்றது. சிறுபராயத்திலே பிள்ளையிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கவதானது, பெரிய பருவத்தில் வாசிப்பில் தொடர்ந்திருப்பதற்கு துணைபுரிகின்றது.

பிள்ளையின் வாழ்வில் வாசிப்புக்கிருக்கும் முக்கியத்துவத்தை நோக்குமிடத்து, பெற்றோர்கள் தமது பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவது அவர்கள் மீதான கடமையாகும் என்பது புரிகின்றது. வாசிப்பில் பிரியமுடையவராக உமது பிள்ளைகள் மாற பின்வரும் செயற்திட்ட வழிமுறைகளை உங்களிடம் பகிர்கிறோம்.

1- மாதிரி செயற்திட்டம் : (செயலில் முன்மாதிரி)

செயல் ரீதியாக நீர் முன்மாதிரியாகத் திகழ்வது, பிள்ளையின் ஆளுமை உருவாக்கத்திலே தாக்கம் செலுத்தும் ஆழமான பங்களிப்பாகும். எனவே வாசிப்பு மற்றும் பாடமீட்டல் போன்றவற்றில் ஆர்வத்துடன் இருப்பதில் முன்மாதிரியான செயற்திட்டமொன்றை பிள்ளையிடம் முன்வைப்பது உமது கடமையாகும். வாசிப்புக்கென நாளாந்தம் நேரம் குறித்துக் கொள்வதில் ஆர்வமாக இருங்கள். இச்செயலானது நீர் புத்தகத்துடன் பிணைந்திருக்கும் நிலையில் பிள்ளை உங்களைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கேயாகும். இச்செயற்திட்டம் பிள்ளை இயல்பாகவே உங்களைப் பின்பற்றி புத்தகங்களை கையிலேந்தி பக்கங்கள் பிரட்டுவதற்கு முயற்சி செய்வதின் பால் பிள்ளையைத் தூண்டுகின்றது. நீர் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை.

2- வாசித்துக்காட்டுதல் : 

பிள்ளையின் சிறுபராயம் முதல் பிள்ளையுடன் அமர்ந்து புகைப்படத்துடன் விபரிக்கும் கதைப் புத்தகங்களை வாசித்துக்காட்டுவது அவசியமாகும். ஆரம்ப பருவத்தில் வாசிக்கப்படுவதை பிள்ளை கிரகிக்கா விடினும், பிள்ளைக்கும் புத்தகங்களுக்கும் மத்தியில் பலமான தொடர்பை எற்படுத்த அது வழிவகுக்கும். இவ்வாறு வாசித்துக் காட்டுமிடத்து பின்வரும் விடயங்களை நீர் கவனிப்பது அவசியமாகும் :

 பிள்ளை விரும்புகின்ற புத்தகங்களை, கதைகளை வாசித்துக்காட்டுங்கள். அப்புத்தகங்களும், கதைகளும் அற்பமானதாகவோ அல்லது பல தடவைகள் வாசிக்கப்பட்டதாகவோ இருப்பினும் வாசித்துக்காட்டுங்கள்.

 தெளிவான முறையில் கருத்திற்கமைய அங்க அசைவுகளுடன் வாசிப்பதோடு நிலமைகளுக்கும், நிகழ்வுகளுக்கும் ஏற்ப தொனியை மாற்றுங்கள். வாசித்துக்காட்டும் நேரத்தை சந்தோசத்திற்கும், இன்பத்திற்குமுரிய நேரமாக அமைத்துக் கொள்ளுங்கள்.

 வாசித்துக் காட்டியவைகளில் பிள்ளைக்கு கேள்விகளை வழங்கி கலந்துரையாடுங்கள். பிள்ளையின் வயது மற்றும் சக்திற்கேற்ப கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.

 பிள்ளைக்கும் அவனது சக தோழர்களுக்கும் ஏதாவது ஒன்றை வாசித்துக்காட்டி அதன் பின் அக்கதையை நடிக்குமாறு வேண்ட முடியும்.

03- வாசிப்புச் சூழல் : 

உமது பிள்ளையின் சூழலில் புத்தகங்களை பிரதான மூலதனமாக ஆக்கிவிடுங்கள். பிள்ளை சிறு வயது முதல் புத்தகங்களை தொட்டுப் பிரட்டி அதனுடன் விளையாடும் முகமாக வயதிற்குப் பொருத்தமான சஞ்சிகைகள், கதைப்புத்தகங்கள், ஏனைய புத்தக வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள். பிள்ளையின் கையெட்டுமிடங்களிலும், விளையாடுமிடங்களிலும் அப்புத்தகங்களை வையுங்கள். ஏனெனில் அதன் போது பிள்ளையின் நாளாந்த செயற்பாட்டின் அங்கமாக அவை மாறிவிடும். தன்னைச் சூழ புத்தகங்கள் எப்போதுமிருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளும்.

04- நூலகத்துடன் பிணைப்பை ஏற்படுத்தல் : 

சமீபத்திலுள்ள பொது நூல் நிலையத்திற்கு உமது பிள்ளையுடன் போய் வருவதில் ஆசை கொள்ளுங்கள். பிள்ளை தான் விரும்பும் புத்தகங்களை வாசிப்பதற்கும், இரவல் எடுப்பதற்கும் தூண்டுங்கள். தான் விரும்பும் இனிப்புப் பண்டங்களை வாங்கிக் கொடுத்து நூல் நிலையத்திற்கு சந்தோசத்துடன் செல்ல வழி ஏற்படுத்துங்கள்.

05- விஷேட இடம் : 

உமது வீட்டில் பிள்ளையின் மனதுக்கு இதமான பொருத்தமான வெளிச்சம் நிறைந்த வாசிப்பின் பால் தூண்டக்கூடிய ஓர் இடத்தை ஒழுங்கு பண்ணுங்கள். ஏனெனில் அப்பொது பிள்ளை விரும்பி வாசிப்பான். வாசிக்கும் அவ்விடத்தை விரும்புவான்.

06- சிறுவர் சஞ்சிகைகள் : 

சிறுவர் சஞ்சிகைகளை பிள்ளையின் சுற்றுவட்டத்தில் ஒழுங்கு முறையில் வைப்பதானது பிள்ளையிடம் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

07- புத்தகங்கள் வாங்கச் செல்லும் போது கூட அழைத்தச் செல்லல் : 

உமக்குத் தேவையான புத்தகங்களை வாங்கச் செல்லுமிடத்து உங்களுடன் உமது பிள்ளையையும் அழைத்துச் செல்வதில் ஆர்வம் காட்டுங்கள். பிள்ளைக்குப் பொருத்தமான புத்தகங்களை வாங்கிக் கொள்ளுமாறு பிள்ளையிடம் வேண்டுங்கள். புத்தகங்களைத் தேர்வு செய்வதற்கான சந்தர்ப்பத்தை பிள்ளைக்கே வழங்கிவிடுங்கள்.

08- நீர் வாசித்தது பற்றிக் கதைத்தல் : 

நீர் வாசித்த விடயங்கள் பற்றி குடும்பத்தோடு கதையுங்கள். அவ்விடயங்களில் சிலதை கரந்துரையாடுவதற்கும், தர்க்கிப்பதற்கும், அவர்களது கருத்துக்களை முன்வைக்கவும் அனுமதி வழங்குங்கள்.

09- வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் :  

10- வாசிப்பில் படித்தரங்கள் : 

வாசிக்கப் பழக்கும் சந்தர்ப்பத்தில் பிள்ளையின் வயதிற்குப் பொருத்தமாக படிப்படியாக நகர்ந்து செல்லுங்கள். ஆரம்பமாக படங்கள் மாத்திரம் இருக்கும் புத்தகங்களையும், பின்பு ஒரு பக்கத்தில் ஒரு படமும் ஒரு சொல்லும் கொண்ட புத்தகங்களையும், பின்பு ஒரு பக்கத்தில் ஒரு படமும் இரண்டு சொற்களும் உள்ள புத்தகங்களையும் பின்பு ஒரு படமும் ஒரு அடி சொற்களும் கொண்ட புத்தகங்களையும் கொடுங்கள். இவ்வாறு படிப்படியாகக் கடைபிடியுங்கள்.

11- பிள்ளையின் வாசிக்கும் ஆர்வத்தைக் கண்காணித்தல் : 

பிள்ளையின் வாசிக்கும் ஆர்வத்தையும் தேவையையும் கண்காணிப்பது பிள்ளையை வாசிப்பில் அர்வமூட்ட துணை புரியும்.

12- வாசிப்பை பொழுது போக்காக்கல் : 

தான் விரும்பும் பொழுது போக்குகளுடன் வாசிப்பைப் பின்னிப் பிணைப்பது வாசிப்பின் மீதான அன்பையும் ஆர்வத்தையும் பிள்ளையின் உள்ளத்தில் விதைக்கும். பிள்ளையினது பொழுது போக்குத் துறையில் புத்தக மற்றும் சஞ்சிகை வசதிகளை பூரணமாக செய்து கொடுப்பதானது பிள்ளையை வாசிக்கத் தூண்டும்.

13- வாசித்தவற்றைக் கூறல் : 

பிள்ளை வாசித்த கதைகளையும் அறிதான அபூர்வ்வமான விடயங்களையும் கதையாக சொல்ல பிள்ளையை தூண்டுங்கள்.

14- சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தல் : 

பிள்ளையை வாசிப்புடன் பிணைப்பதற்கு சந்தர்ப்பங்களையும், நிகழ்வுகளையும் பயன் படுத்த முடியும். உதாரணமாக ஹஜ், நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள், ஆஷ{ரா தினம் போன்ற மார்க்க விடயங்களை முன்னிட்டு அவை சம்பந்தமான கவரும் சிறு புத்தகங்களையும், கதைப் புத்தகங்களையும் வழங்கலாம். பிரயாணத்தின் போது நாம் பிரயாணம் செய்யும் ஊர் பற்றி உள்ளடக்கிய மனதை ஈர்த்தெடுக்கும் சிறு  கையேடுகளை வழங்கலாம்.

15- வாசிப்பின் முக்கியத்துவம் : 

முன் கட்டிளமைப் பருவத்திலே வாசிப்பின் முக்கியத்துவம் தனது ஆளுமையை உருவாக்கவதிலும், வாழ்க்கையில் நேரிடும் பல்வேறுபட்ட விடயங்களுடன் இசைந்து செல்வதற்கான சக்தியை வளர்ப்பதில் வாசிப்பின் தாக்கம், பங்களிப்பு பற்றி பிள்ளையுடன் கதையுங்கள்.

16- வாசிப்புப் போட்டிகள் : 

பிள்ளையை வாசிப்புடன் இணைக்க விளையாட்டுக்களைக் கையாண்டு அவற்றை இன்பத்திற்கும், மகிழ்ச்சிக்குமுரிய தளங்களாக மாற்றிவிடுங்கள். வாசிப்புப் போட்டிகளை நடாத்துங்கள்.  தமது வயதிற்கும் சக்திற்கும் ஏற்ப குறித்த நேரத்தில் அழகிய முறையில் வாசிக்குமாறு போட்டியாளர்களிடம் வேண்டுங்கள். அவற்றை வாசித்து முடித்ததன் பின் போட்டியாளர்களிடம் புத்தகத்தின் பெயர் யாது? ஆசிரியர் யார்? அவற்றில் உள்ள முக்கிய காட்சிகள் யாவை? அப்புத்தகம் எவ்விடயம் பற்றிப் பேசுகிறது போன்ற அவர்களின் வயதிற்கேற்ற வினாக்களைத் தொடுங்கள்.

17- புகழ்ந்து பாராட்டுதல் : 

பிள்ளையின் வாசிப்பத் திறன்களை புகழ்ந்து பாராட்டுங்கள்.

18- பொறுமையை கடைபிடியுங்கள் : 

இவ்விடயங்களை நடைமுறைப் படுத்தும் போது உடன் பெறுபேறுகளை எதிர்பார்க்காது அதிக பொறுமையுடன் இருக்க வேண்டும். பிள்ளையை வாசிப்பில் அக்கறை செலுத்த நிர்பந்திப்பதானது பிள்ளையின் இன்பத்தையும் ஆர்வத்தையும் பறித்துவிடும்.

 

தமிழாக்கம் : அர்சத் இஸ்மாஈல் தரம் : 06

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *