இக்கல்வியாண்டின் மாணவர்களுக்கான முதலாவது வழிகாட்டல் கருத்தரங்கு

அல்லாஹ்வின் உதவியாலும் கிருபையினாலும் ‘நரகப் படுகுழியிலிருந்து சுவனச் சோலைக்கு’ எனும் தொனிப் பொருளில் பிறமதத்தவர்களை தூய இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (27 – 01- 2018) சனிக்கிழமை காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை FRCS அமைப்பின் ஏற்பாட்டில் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இக் கருத்தரங்கில் குசுஊளு பணிப்பாளர் சகோதரர் அஜ்மல், அஷ்ஷெய்க் நஸீர் (காஸிமி) மற்றும் அஷ்ஷெய்க் பஹத் (நளீமி) ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரி அதிபர் அல்உஸ்தாத் று. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்கள் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து அஷ்ஷெய்க் நஸீர் (காஸிமி) அவர்கள் ‘பிறமதத்தவர்களுக்கு தஃவா செய்வதின் அவசியமும் அதற்கான ஆலோசனைகளும்’ எனும் தலைப்பில் ஓர் அறிமுக நிகழ்ச்சியை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து FRCS அமைப்பின் பணிப்பாளர் சகோதரர் அஜ்மல் அவர்கள் ‘இஸ்லாத்தை நாம் எத்திவைக்காவிடின் பிறமதத்தவர்கள் எம்மை எதிர்த்துவிடுவர்’ எனும் தொனியில் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு முன் முஸ்லிம்கள், பொளத்தர்களுக்கிடையிலான சகவாழ்வு, தேசிய மேம்பாட்டிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு, அரசர்களுடனான முஸ்லிம்களின் நட்புறவு, ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரங்களும் அதற்கான சூழ்ச்சிகளும், தற்போது எமக்கான சவால்களும் அவற்றிக்கு முகங் கொடுக்க வேண்டிய அவசியம் போன்ற உப தலைப்புக்கள் உள்ளடங்களாக அனுபவ தகவல்களுடன் சிறப்புற தனது நிகழ்ச்சியினூடாக மாணவர்கள் மனம் கவர்ந்தார். சுமார் 2 மணித்தியாலங்கள் நீடித்த அவரது நிகழ்ச்சி மாணவர்களைக் கவர்ந்ததோடு அவர்களது சிந்தனைகளை தட்டி எழுப்பியது. அதன் பின் இறுதி நிகழ்ச்சியாக அஷ்ஷெய்க் பஹத் (நளீமி) அவர்கள் ‘இஸ்லாத்திற்கெதிராக தொழிற்படும் பல்லூடகங்கள்’ எனும் தலைப்பில் விளக்கமளித்தார். கலந்து கொண்ட மாணவர்களுக்கு அவர்களது அமைப்பினால் சில சிறு கையேடுகளும் அன்பளிப்பாக பகிரப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *