அன்மையில் வபாத்தான தாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துர் ரஹீம் உமர் ஆலிம்

ரஷ;யக் கூட்டமைப்பின் ஒரு உட்கட்ட குடியரசாகக் கருதப்படும் தாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துர் ரஹீம் உமர் அவர்கள் அவரது கிராமத்தில் பள்ளிவாயிலை கட்டியமைக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தார். வழமை போன்று திங்களன்று அவ்வேலைகளை கண்காணிக்கச் சென்றார். அந்நிமித்தம் கஷ;டத்தை உணர்ந்த அவர்கள் வீடு திரும்பி சில நிமிடங்களிலே அவரது உயிர் இறையடி சேர்ந்தது.

தனது 76 வயதில் மரணமடைந்த இவர் பிரபல ஆலிம்களில் ஒருவராக திகழ்ந்தது மாத்திரமல்லால் தாகிஸ்தான் நாட்டின் அவாரிய்யா மொழியிற்கு குர்ஆனை மொழி பெயர்ப்புச் செய்தார். சோவியத் ஒன்றியத்தில் இஸ்லாமிய அய்வாளராகவும், குர்ஆன் மொழி பெயர்ப்பாளராகவும் பிரபல்யமடைந்திருந்த இவர்கள் கல்வியைத் தேடுவதிலும் புது யுகத்திற்கு அக்கல்வியை கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் தனது வாழ்வை அர்ப்பணித்தார்கள்.

சில சேவைகள் :
1) தாகிஸ்தானில் பிரதி முப்தியாக ஆக தெரிவு செய்யப்படல்.

2) 1990ம் ஆண்டு காலப் பகுதிகளில் பண்பாட்டு அலுவலகத்திற்கு செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

3) தாகிஸ்தான் நாட்டின் சூரா சபைக்கு தலைமை வகித்தார்.4) தனது சொந்த கிராமத்தில் பெண்களுக்கான மார்க்க கல்வி கூடமொன்றை அமைத்து அதனுடைய நிர்வாகத்தில் ஈடுபட்டார்.

5) இமாம் நவவியால் எழுதப்பட்ட ரியாலுஸ் ஸாலிஹீன், இமாம் ஷவ்க்கானியால் தொகுக்கப்பட்ட நைய்லுல் அவ்தார், இமாம் திர்மிதியால் தொகுக்கப்பட்ட ஷமாஇலுல் முஹம்மதிய்யா உட்பட இன்னும் பல முக்கிய நூற்களை அவாரிய்ய மொழிக்கு மொழி பெயர்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *