


.jpg)
எமது கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா (படங்கள்)
எமது கல்லூரியின் இவ்வருடத்திற்கான (2016) பரிசளிப்பு வைபவம் சென்ற புதன்கிழமை இரவு (2016/12/07) கல்லூரியின் பள்ளிவாசலில் கல்லூரி அதிபர் அஷ்ஷைக் அல் உஸ்தாத் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரித் தலைவர் அல் உஸ்தாத் எம். ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி), கல்லூரியின் உஸ்தாத்மார்கள், பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதில் சுமார் தொடர்ந்து 10 வருடங்களாக நடைபெற்று வரும் அறிவுக்களஞ்சியப் போட்டிகளில் இவ்வருடப்போட்டியில் வெற்றிபெற்ற அணி, அவர்களுடன் எதிர்த்துப் போராடிய அணி, ஆண்டிறுதிப் பரீட்சையில் அதி விஷேட புள்ளிகளை பெற்ற மாணவர்கள், இவ்வருடம் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் சிறந்த ஆய்வாக தெரிவு செய்யப்பட்டவர், ألفية ابن مالك ஆயிரம் بيت களையும் பாடமிட்டவர் போன்றோர் இதில் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அறிவுக்களஞ்சிய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியின் தலைவர்
இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட இரு அணிகளுடன் அறிவுக்களஞ்சிய பொறுப்பாசிரியர்கள்