147

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

80

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

27

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

உள்ளம்  அமைதி பெற

about 9 months ago


மருத்துவத் தொடர்-09

உள்ளம்  அமைதி பெற

Dr PM Arshath Ahamed

MBBS (RUH),  MD PEAD (COL), Senior Registrar in pediatrics’ - lady Ridgeway hospital.

     மனித வாழ்வு  இயந்திரமாக மாறி விட்ட இந்த காலத்தில் மன அமைதி வேண்டி எல்லோரும் அலைந்து திரிகிறார்கள்.   மன அழுத்தம் என்பது  இன்று மிகப் பரவலான ஒரு பிரச்சினையாக மாறி இருக்கிறது.  மன அழுத்தம் இல்லாத மனிதர்கள் இல்லையோ  எனும் அளவுக்கு இது சமூக மட்டத்தில் எல்லா தரப்பினரயும்  ஆட்கொண்டுள்ளது. பள்ளி கூடம்  செல்லும் குழந்தைகளிடம்கூட மன அழுத்தம் புகுந்துவிட்டது என்பதுதான் வேதனை.

கவலை, சஞ்சலம்,  மன அழுத்தம் என்பன வௌ;வேறு விதமான நிலைகள். கவலை  என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருகின்றகின்ற உணர்வு.  அது சாதாரணமான  ஒன்று.  நபிமார்கள் கூட கவலைப்பட்டதாக   அல்குர்ஆன் பல இடங்களில் எடுத்துக்காட்டுகிறது. பரிசுத்த நபிமார்கள்   கூட ஆழ்ந்த வருத்தத்தை , கவலையை அடைந்தார்கள்,  பல்வேறு மனிதர்கள் மிகச் சிறந்த மனிதர்கள் - அவர்கள் அனைவரும் வேதனை, துன்பம் மற்றும் துயரத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையில் கவலை  அடைந்தனர். அந்த கண்ணோட்டத்திலிருந்து, சோகம் , கவலை என்பது 'சாதாரணமானது' என்று முடிவு செய்யலாம். இஸ்லாமிய போதனைகளைப் பொறுத்தவரையில், இறைவன்  தானே மகிழ்ச்சி மற்றும் துயரத்தை வழங்குவதாக கூறுகிறான்

     அல்லாஹ்வே உங்களை அழவும்  செய்கின்றான் , சிரிக்கவும் செய்கின்றான் ' (குர்ஆன் 53:43) இதனால் தான்   தீர்க்கதரிசிகள் மற்றும் தூதுவர்களுக்கு  கொடுக்கப்பட்ட மிகுந்த துயரம் அவர்களின்  பணியை தொடர அவர்களை தடுக்கவில்லை.  அது இன்னும் தீவிரமாக அவர்களின் பணியை தொடர ஊக்கம் அளித்தது. அவர்களது துயரம் நம்பிக்கையற்ற தன்மையில் அல்லது செயலற்ற நிலையில் இருக்கவில்லை,  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர்கள் துயரம் வெறும் துயரமாகவே இருந்தது. அது அவர்களுக்கு மனச்சோர்வினை அல்லது மன அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை .

மறுபுறம் மனச்சோர்வு, நம்பிக்கையற்ற தன்மை, மன அழுத்தம்  வாழ்க்கையின் அர்த்தம் இழப்பு, சுய மதிப்பற்ற தன்மை மற்றும் துயரத்தின் உணர்வு ஆகியவற்றின் காரணமாக வாழ்க்கையில் உள்ள சந்தோசமான நிலைகளை  அடையாளம் காண முடியாது போகும். அழுவதும், சிரிப்பதும் மனிதனுக்கு தனித்துவமாக இருக்கின்ற இரு வேறு நிலைகள், அதன் நோக்கம் நம்மை வாழ்க்கையின் உண்மைகளை பிரதிபலிக்கச் செய்வதாகும். ஒவ்வொருவரும் கவலை அறிகுறிகளை அனுபவிப்பார்கள், ஆனால் அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு அல்லது அதற்கு அதிகமாக இருக்கும்போது மருத்துவத்தில்  அதை மன அழுத்தம்,  மனச்சோர்வு  என அழைக்கப்படும். எனினும், குர்ஆன் நமக்கு மன அழுத்தத்தை நீக்கும் வழிமுறைகளை கற்றுக்கொடுக்கிறது,  ஆகயால் மனச்சோர்வின் பல அறிகுறிகளை நாம் கவனமாகக் கவனிக்க வேண்டும். மன அழுத்தம் என்பது நாம் விரும்புவதைச் செய்ய முடியாமல் போன்ற உணர்வு . இது சுதந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இழப்பு உணர்வு.  எப்படிச் சமாளிக்கப்போறேன்னு தெரியலையே?' என்கிற நினைப்புதான் மன அழுத்தத்தின் ஆரம்பம். ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்தடுத்த பிரச்னைகள் வந்து சுமையாக இறங்கும்போது, 'ஸ்ட்ரெஸ்'  Stress என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படி, தொடர்ந்து மன அழுத்தம் நேரும்போது, உடல் சார்ந்த பல்வேறு நோய்கள் நம்மை வாட்டி எடுக்கத் தொடங்கிவிடும்.

கவலை  என்பதும் மன அழுத்தம் என்பதும் இரு நிலைகள் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வேலைக்காக... குடும்பத்தையோ, குடும்பத்துக்காக... வேலையையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதைக் குழப்பிக்கொள்பவர்களே இன்று அதிகம். இந்த ரீதியில் பார்த்தால், மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்கத் தெரிந்துகொண்டால், ஆரோக்கியமாக வாழ முடியும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நுட்பம் இயற்கையாகவே வந்துவிடாது. அவற்றை நாம் கற்று நம் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப அமைத்துக்கொண்டால் மன அழுத்தத்தை வெல்லலாம். இது பற்றி  நாம் தெரிந்து கொள்ள  இருக்கின்றோம்.

'வாய் விட்டுச் சிரித்தால், நோய் விட்டுப் போகும்' என்ற பழமொழி, மன அழுத்தத்துக்கு மிகச் சரியாகப் பொருந்தும். மன அழுத்தம் என்றால் என்ன? அது ஏற்படுத்தும் பாதிப்புகள்,  அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றி இந்த  இதழில் பார்போம்

ஏதாவது ஒரு காரணம், உங்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையோ உங்களின் திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும்போது, உணரப்படும் விரும்பத்தகாத உணர்வை, 'மன அழுத்தம்' (ஸ்ட்ரெஸ்) Stress என்று கூறலாம். இது கோபம், பயம், இயலாமை, கவலை, வெறுப்பு, அமைதியின்மை, கவனமின்மை என எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.

ஆபத்து ஏற்படும்போது நம் உடம்பு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியாகவும் மன அழுத்தம் இருக்கிறது. உதாரணமாக கால் தடக்கி விழும் போது நாம் உணர்கிற கவலை. நமக்கு ஆபத்து நேரப்போகிறது என்று நாம் உணரும்போது (அது உண்மையாகவோ அல்லது நம்முடைய கற்பனையாகவோ இருக்கலாம்) அதை எதிர்கொள்ள, நம் உடலே சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மன அழுத்தம் ஏற்படும்போது நம் நரம்பு மண்டலம், அட்ரினல் Adrenal மற்றும் கோர்டிசோல் Cortisol ஹார்மோன்களை அதிக  சுரக்கச் செய்கிறது. ரத்தத்தில் கலக்கும் இந்த ஹார்மோன்கள், உடலில் பாய்ந்து அவசரநிலையை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்துகிறது. இதனால், இதயம் வேகமாகத் துடிக்கும். தசைகள் கடினம் அடையும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சுவாசம் வேகமாகும். நம் அனைத்துப் புலன்களும் பிரச்னையைக் கூர்ந்து கவனிக்கும். இந்த உடல்ரீதியான மாற்றம், நம்முடைய பலத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும். எதிர்வினை புரியும் நேரத்தை விரைவுபடுத்தும். பிரச்னையை நாம் எதிர்க்கவும்  தப்பிக்கவும்  இவை உதவுகின்றன. ஆனால் இந்த அவசர நிலைமை ஒரு சில நிமிடங்களில்,  மணித்தியாலங்களில் சீராகி விடும். இவை தொடர்ந்து இருக்கும் போது, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை உடலின் சமநிலையைப் பாதிக்கும்போது, அதுவே அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது. மன அழுத்தத்தின்போது இதயம் வேகமாகச் செயல்படத் தூண்டப்படுகிறது. இந்தக் கூடுதல் சுமை, இதயத்தில் பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது.

மன அழுத்தத்தின் காரணங்கள்:

சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள், ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.
மன அழுத்தம்- மன விரக்தி, மாற்றம், முரண்பாடுகள், நிர்பந்தம் ஆகியவற்றால் ஏற்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மன விரக்தி:

ஓர் இலக்கை அடைய, பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடியும்போது, 'மனவிரக்தி' ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் யதார்த்தம் இல்லாத இலக்குகளையும், எதிர்பார்ப்புகளையும், ஒப்பீடுகளையும் மனதில் வைத்து விரக்தியடைகிறோம். உதாரணத்துக்கு, சுமாராகப் படிக்கக்கூடிய ஒரு மாணவனை, அவனது பெற்றோர், அதிகப் பணம் செலவழித்து பிரபலமான ஒரு பாடசாலையில்   சேர்க்கின்றனர்  தேசிய அளவில் அல்லது மாவட்ட அளவில் அவன் முதலாவதாக வருவான் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தால், விரக்திதான் மிஞ்சும். அதேபோல சிலர், ஒரே நாளில் பல வேலைகளைச் சேர்த்து வைத்துக்கொள்வார்கள். வரிசையாக, பல பணிகளைச் செய்ய கால நிர்ணயம் செய்வார்கள். ஆனால், பணிகளைக் குறித்த நேரத்தில் செயல்படுத்தமுடியாமல் விரக்தி அடைவார்கள்.

மாற்றம்:

அமைதியான நதியில் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் படகைப்போன்றது நம் வாழ்க்கை. இதில், திடீரென ஏற்படும் மாற்றங்கள் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றன. சில சமயங்களில் இந்த மாற்றங்கள், நம் பொறுமைக்கும், சிக்கலைச் சமாளிக்கும் திறமைக்கும் சவாலாக இருக்கும். இந்தத் திடீர் மாற்றம்- திருமணம், பதவி உயர்வு, மகப்பேறு, பண வரவு போன்ற சந்தோசமான நிகழ்வாகவோ... குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம், விபத்து, தொழில் நஷ்டம், வேலை இழப்பு போன்ற துயரமான நிகழ்வாகவோ இருக்கலாம்.

முரண்பாடுகள்:

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் முரண்பாடுகள் கணக்கில் அடங்காதவை. காலையில் எழுந்தது முதல், இரவு உறங்கச் செல்வது வரை முரண்பாடுகளுடனேயே போராட வேண்டியுள்ளது. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட ஆசைகள், விருப்பங்கள் ஒரே நேரத்தில் வெளிப்படும்போது, அங்கு முரண்பாடு ஏற்படும். உதாரணத்துக்கு, காலையில் சுபகுக்கு எழுந்திருக்க வேண்டிய கட்டாயமும் கண்ணைக் கட்டும் ஆனந்தத் தூக்கமும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும்போது எதைச் செய்வது என முடிவெடுக்க முடியாமல் முரண்பாட்டுக்கு ஆளாகிறோம்.

நிர்பந்தம்:

மன அழுத்தத்துக்கான அடுத்த காரணம், நிர்பந்தம். உலகில் எல்லோரும் ஏதாவது ஒரு நிர்பந்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.  நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சில காரியங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் நேரும். நமக்குத் தேவையே இல்லாமல் சமூக அந்தஸ்துக்காக ஆடம்பர வீடு கட்டுகிறோம், கார் வைத்துக்கொள்கிறோம். இதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையால், மன உளைச்சலுக்கு ஆளாவோம். இதேபோல சமூக அந்தஸ்து, பதவி இவற்றால் நம்மால் சுதந்திரமாகவும், மனதுக்குப் பிடித்தவாறு வாழவும் பலரால் முடிவது இல்லை.

மன அழுத்தம் ஏற்படுத்தும் உடல்ரீதியான பாதிப்புகள்:

''மன அழுத்தம் ஏற்படும்போது அது உங்கள் நரம்பு மண்டலம், மூளை, இதயம், ரத்த ஓட்டம், சிறுநீரகம், இனப்பெருக்க மண்டலம் என பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கிறது.''

  • சுவாசத்தொகுதி Respiratory System

மன அழுத்தம் அதிகரிக்கும்போது மூச்சை அதிக அளவில் உள் இழுத்து வெளியேவிடச் செய்யும். இது சிலருக்கு படபடப்பு, மாரடைப்பை ர்நயசவ யுவவயஉம ஏற்படுத்தலாம்.

  • இதயச் செயல்பாடு Cardiovascular System

திடீரென ஏற்படும் மன அழுத்தமானது இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதிக அளவில் இரத்தம் பம்ப் செய்யப்படும்போது இரத்தக் குழாய்கள், இதய தசைகள் அதிக அளவில் வேலை செய்கின்றன. தொடர்ந்து இப்படி நடக்கும்போது, இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும், மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

  • சமிபாட்டுத்தொகுதி.  Gastrointestinal System

மன அழுத்தம் அதிகரிக்கும்போது, அதிக அளவிலோ குறைவாகவோ சாப்பிடத் தோன்றும். மேலும், மது, புகைப்பழக்கம் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். இரைப்பையின் செரிமானம்  பாதிக்கப்படும். இதனால் ஊட்டச்சத்து தரும் பலனும் பாதிக்கப்படும்.

  • இனப்பெருக்கத்தொகுதி Genital System

மன அழுத்தத்தின்போது அதிக அளவில் சுரக்கப்படும் கோர்டிசோல் மற்றும் அட்ரினல் ஹார்மோன்கள் இனப்பெருக்க மண்டலத்தின் வழக்கமான பணிகளைப் பாதிக்கின்றன. நீண்ட நாள் மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கு டெஸ்டோடிரான்  வுநளவநளவநசழநெ  ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம். பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி, சரியான கால இடைவெளியில் மாதவிலக்கு வராமை போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.  உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் மன அழுத்தம் குறைக்கும். இதனால் கணவன் - மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் தோன்றும்.

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Visitor Count
Total Visits 54347
View Status of Application