இஸ்லாமிய உலகை சீரழிக்கும் சிந்தனைப் போர்
about 5 months ago
இஸ்லாமிய உலகை சீரழிக்கும் சிந்தனைப் போர்
மாணவன் A.J.M.ஸரூஜ்
உலகில் என்றைக்கும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டம் முடிவுராமல் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பது தான் உலக நியதி. இறையருள் பெற்ற ரஸுல்மார்களின் ஓரிறைப் பேரொளியை அபூலஹப்கள் தொடர்ந்து அணைக்க முயற்சித்து வந்துள்ளனர். இறைத் தூதர்களின் தியாக வரலாறுகளும் இதையே சுட்டிக்காட்டுகின்றன.
நும்ரூதை எதிர்த்த இப்ராஹீம் (அலை) அவர்களின் போராட்டமும், நானே உயர்ந்த கடவுள் என்ற பிர்அவ்னின் முன்னால் மூஸா (அலை) அவர்களின் சத்திய முழக்கமும் இதனுடைய சில பதிப்புக்களே. அத்தோடு இறுதி வெற்றி என்றென்றும் சத்தியத்திற்கே என்ற இறைவாக்கு மறுக்க முடியாத ஒன்றாகும். அசத்தியம் ஒவ்வொரு முறையும் தோல்வியையும் அவமானத்தையும் சந்தித்து வந்துள்ளது. 'சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்துவிட்டது. அசத்தியம் என்றும் அழியக்கூடியது' என்ற இறை உறுதி மொழி இதற்கு மேலும் சான்று பகிர்கின்றது.
இஸ்லாம் தனது அனைத்து கொள்கைகள், கோட்பாடுகளுக்கு அச்சாணியாக ஓரிரைக் கொள்கையைக் கொண்டு அரேபியப் பாலைவனத்தில் துளிர்ந்தது. ஒரே இறைவன், ஒரே மார்க்கம், ஒரே குலம் மட்டுமே அதனுடைய அடிப்படையாக அமைந்தது என்பதை எந்த நாத்திக, குலவாத சிந்தனையாலும் சிதைக்க முடியாது. குலாபாஉர் ராசிதீன்களின் ஆட்சியின் ஆரம்பக் காலங்களிலே இஸ்லாத்தின் அடிப்படையை அழிக்க வேண்டும,; அதன் தூய்மையில் கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பிரிவினைகளையும், பிளவுகளையும், வேறுபாடுகளையும் இஸ்லாத்தின் விரோதிகள் விதைத்தனர். அவையே இன்று பெறும் ஆலமரங்களாக தலை தூக்கியுள்ளன.
அந்த அடிப்படையிலேயே ஹதீஸ்களை இட்டுக்கட்டும் பணியும் முழுவீச்சோடு நடைபெற்றது. பல்வேறு புதிய நாமங்களோடு பித்அத்கள் மக்கள் மத்தியில் வலம்வர ஆரம்பித்தன. இதற்காகக் காத்திருந்த நரித்தனமுள்ள யூத, கிறிஸ்தவர்கள் இஸ்லாத்திற்கெதிராகச் செயற்படத் தொடங்கினர். இஸ்லாமிய கல்விக் கலைகளில் இஸ்ரவேலர்களின் ஆக்கங்கள் இடம்பெற்று அதன் உண்மை வடிவத்தை உருக்குலைக்க ஆரம்பித்தனர். இதற்கு மிக நுட்பமான முறையில் பண்பாட்டையும் வரலாற்றையும் சிதைக்கத் தொடங்கினர்.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க மறுபுறம் பொருளாதார, இராணுவ பலத்தினாலும் இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் போராட்டத்தை நடத்தினர். சிலுவைப் போர்களும் தாத்தாரியப் படையெடுப்பும் ஸ்பெய்னின் வீழ்ச்சியும் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இஸ்லாமியப் பேரரசு ஸ்பெய்னில் வீழ்ந்த போது இஸ்லாமிய அறிவியல் நூற்களை எரித்து வெறியாட்டம் போட்டனர்.
இன்று ஐரோப்பா பெற்றுள்ள அறிவியல், விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சியெல்லாம் அன்றைய இஸ்லாமிய அறிஞர்களும் உலமாக்களும் உலக ஆசா பாசங்களைத் துறந்து வியர்வை சிந்தி இட்ட அடிப்படையில் தோற்றம் பெற்றவையே. அவ்வறிஞர்கள் வீரியமிக்க சிந்தனைகளால் அறிவுலகில் வெற்றிக் கொடிகளை நட்டிக் கொண்டிருந்தனர்;. எனவே தான் மற்றெல்லா மார்க்கங்களையும் வீழ்த்தி இஸ்லாம் அறிவுப் பாதையில் வீருநடை போட்டுக் கொண்டிருந்தது.
பிந்திய காலங்களில் நிலைமை அப்படியே தலைகீழாய் மாறியது. சிலுவைப் போர்களில் தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகள் கிறிஸ்தவர்களின் மனதில் இஸ்லாத்திற்கெதிரான பொறாமைத் தீயைப் பலமாகப் பற்றவைத்தன. மறுபுறம் நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் இஸ்லாமியர்கள் பெற்றிருந்த வளர்ச்சி எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போன்றிருந்தது.
புகைந்து கொண்டிருந்த பொறாமையும் கோபமும் பெருந்தீயாக உருவெடுத்தன. இதன் விளைவாக அவர்களுடைய மூளைகள் இஸ்லாத்தை அழித்தொழிக்க பயங்கரமாக சதித் திட்டம் தீட்டின. மிகப் பெரியளவில் அதற்கான முயற்சிகள் அரங்கேறின. இதை செயற்படுத்த மூன்று முக்கிய வழிகளில் தங்கள் சிந்தனைகளைச் செலுத்தினர்.
- இஸ்லாமிய அடிப்படைகளை இல்லாமல் செய்தல்.
- இஸ்லாமிய கலை மற்றும் பண்பாட்டின் வேர்களை அடியோடு அகற்றி விடுதல்.
- ஏகத்துவ சிந்தனைகளை மனங்களிலிருந்து அகற்றி நாத்திக வாத சிந்தனை வடிவங்களுக்கு உயர்ந்த இடங்களை பெற்றுத் தருதல்.
எனவே இதற்காக முஸ்லிம்களின் கல்வி, கலைகளில் தங்கள் கவனத்தைத் செலுத்த ஆரம்பித்தனர். அவர்களில் பெரும் கூட்டதினர் இம்முயற்சியில் தங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவளித்தனர்.
குர்ஆன், ஹதீஸ், நபி வரலாறு, இஸ்லாமிய வரலாறு, குர்ஆன் விரிவுரை, இஸ்லாமிய இலக்கியம் மற்றும் அரபு மொழி; ஆகியவற்றை கரைத்துக் குடித்தனர். மேலைத்N;தய ஏகாதிபத்தியம் அவர்களுக்கான வாய்புக்களை உருவாக்கி பொருளுதவி செய்தது.
ஐரோப்பிய சகோதரத்துவம் இஸ்லாத்திற்கு எதிராக போராடும் வளத்தையும் உத்வேகத்தையும் அளித்தது. தமது பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்களை அவர்களின் பயன்பாட்டிற்காகக் கொடுத்தது. இஸ்லாமிய அறிவுக் கருவூலங்களை குறிப்பாக இஸ்லாமிய வரலாறு, இலக்கியம், மொழி, குர்ஆன், ஹதீஸ் போன்றவற்றை இலக்காக்கி உழைக்க ஆரம்பித்தனர். தங்கள் உழைப்பின் விளைவாக அவற்றில் பல்வேறு சந்தேகங்களையும், ஐயப்பாடுகளையும் பரவலாக்கினர். அத்தோடு கீழைத்தேய நாடுகளில் தங்களுக்கு விசுவாசமான மாணவர்கiளையும் உருவாக்கினர்.
இஸ்லாம் இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- திருமறைக் குர்ஆன்
- குர்;ஆனின் செயல் வடிவமாகத் திகழும்; முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை.
இவ்விரண்டையும் புரிந்து கொள்வதில், செயற்படுத்துவதில், பாதுகாப்பதில்தான் இஸ்லாத்தின் உயிரோட்டமே உள்ளது. நேரடியாக குர்ஆன் தாக்கப்படுவதை முஸ்லிம்கள் ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள், பொறுத்துக் கொள்ளவும் முடியாது. எனவே எதிரிகள் சாதுரியமாகவும், தொலை நோக்குடனும் செயற்பட்டார்கள்.
எதை அடிப்படையாகக் கொண்டு குர்ஆன் புரிந்து கொள்ளப் படுகிறதோ அந்த அடிப்படை விடயங்களை நோக்கி கல்லெறிய ஆரம்பித்தார்கள். அவற்றில் சந்தேகத்தை கிளப்பத் தொடங்கினர். இஸ்லாத்தின் முந்திய அறபு இலக்கியம் அனைத்தும் இட்;டுக்கட்டப்பட்டவை என்று வாதிட்டனர். அப்பாஸியர்களின் காலத்தில்தான் அவை புனையப்பட்டவை என்று சத்தமாகச் சொல்லத் துவங்கினார்கள்.
அறபுலகிலிருந்து அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த எதிரொலிகள் கேட்கத்துவங்கின. எகிப்தின் தாஹா ஹுசைன் -ஃபில் அதபில் ஜாஹிலி- எனும் நூலைக் கொண்டு தனது மேற்கத்திய ஆசிரியர்களுக்கு பல்லக்குத் தூக்கினார். அடுத்ததாக இது போன்று ஒரு பெருங்கூட்டத்தினரைத் தயார் செய்து அவர்களின் வாய்களால் தங்கள் உள்ளத்துப் பொறாமைகளைக் கொட்ட ஆரம்பித்தனர். அவற்றில்;:-
- குர்ஆன் இறைவனின் வேதமல்ல. முஹம்மத் (ஸல்) அவர்கள் யூத, கிறிஸ்தவர்களிடமிருந்து கற்று அவராக உருவாக்கியதுதான்.
- வஹியை அவர்கள் மறுத்து முஹம்மதின் மீது வஹியெல்லாம் இறங்கவில்லை, அது ஒரு மன நோயாகும். அப்போதுதான் அவர் தன் மனதில் தோன்றியவற்றையெல்லாம் தொகுத்து குர்;ஆனை உருவாக்கினார்.
இவ்வாறான அடிப்படையற்ற மேதாவித்தனமான கருத்துக்களைக் கூறும் இம் முட்டாள்கள், பைத்தியம் பிடித்து அலையும் ஒரு நபர், இன்றைய நவீன யுகத்தில் அறிவியலில் துறைபோன விஞ்ஞானிகள் கூட பலவருட ஆய்வுகளுக்குப் பின் தட்டுத் தடுமாறிச் சொல்லும் அறிவியல் உண்மைகளைத் திடீர் திடீரென்று அதுவும் தொழிநுட்பம் எனும் பதத்திற்கே அர்த்தம் தெரியாத அந்த யுகத்திலே எப்படி சொல்ல முடியும் என்பதைச் சிந்தித்துணரமாட்டார்களா?
- பெருவெடிப்புக் கொள்கையின் படி உலகம் உருவாகியது (21;:30)
- கருவில் வளரும் குழந்தை மனித உருவம் பெற மூன்று மாதங்கள் பிடிக்கும். (23:14)
- வானங்கள், பூமிகளுக்கிடையேயான ஈர்ப்பு சக்தி (35:41)
- சந்திரன் பிளக்கப்பட்டது (54:02)
போன்ற குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகளை எப்படி ஒரு பைத்தியகாரரால் சொல்ல முடியும். இன்றைய நவீனம் தாம் கண்டுபிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்து தமது அறிவியலின் உச்சத்தை பறைசாற்ற நினைக்கும் போது குர்ஆன் எனும் அற்புத வேதம் அமைதியாக நின்று தான் 1400 வருடங்களுக்கு முன்பே இதைக் கூறிவிட்டதாக சலனமின்றி பேசிக் கொண்டிருக்கிறது.
இத்தகைய அற்புதத்தை உயர்ந்த இறைவனினூடாக பெற்றுத் தந்த நபிகளாரை பைத்தியம் என்று கூறும் இவர்களை முழுப் பைத்தியம் என்றால் மிகையாகாது. இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு திரியும் இந்தப் பித்தர்களுக்கு சேறு பூச சாணமின்றி கண்டதையெல்லாம் உளறிக் கொட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
அதே போன்று முஹம்மத் இறைவனின் தூதரெல்லாம் கிடையாது மாறாக அவர் ஒரு மிகச்சிறந்த அறபுலகத் தேசியத்தலைவர் என்று கருத்தாக்கத்தையும் உருவாக்கினார்கள். ஒரு நபி எனும் நிலையிலிருந்து ஒரு சமுதாயத் தலைவர் என்ற நிலைக்கு மாற்றுவதற்கு பெரும் முயற்சி செய்தனர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்ட மாபெரும் மேதை எனும் நிலையில் எழுதினர்.
இதன் காரணமாகத்தான் மைக்கல் அப்லக் போன்ற யூதர்கள் அரபு தேசிய வாதத்தை உருவாக்குவதில் பெரும் வெற்றி பெற்றனர். நபியின் வருகையை, நோக்கத்தை இவ்வாறு அவர்கள் கொச்சைப்படுத்தினர். இதன் மூலம் அறேபிய இளைஞர்களில் பெரும்பாலானோரை வழிகெடுத்தனர்.அவர்களை அறபு தேசிய வாதத்தில் மூழ்க வைத்து இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
சிந்தனைத் தாக்கம் என்பது ஏதேனும் ஒரு சமூகம் குறிப்பாக முஸ்லிம் சமூகம் மற்றொரு பெரிய சமூகத்தின் சிந்தனைகள், கொள்கைகள், செயற்பாடுகளை சிந்திக்காமல், விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அப்படியே ஏற்று பின்பற்றுவதைக் குறிக்கும். இத்தகைய சிந்தனைத் தாக்கத்தை நாம் மூன்று வகைகளாகப் பிரித்து நோக்க முடியும்.
1. சிந்தனைத் தாக்கத்தைப் பரவலாக்கும் காரணிகள். இவற்றை பின்வரும் அடிப்படைகளில் நோக்கலாம்.
பொருளாதாரம்
கல்வி
உடல் நலம்
அரசியல்
செய்தித் தொடர்பு
2. சந்தேகங்களையும், ஐயப்பாடுகளையும் கிழப்பி சிந்தனையைக் குழப்புதல்.
• குர்ஆனிய வசனங்களில் சந்தேகங்; கொள்ளச்செய்தல்.
• நபி வழிமுறையில் ஐயத்தை கிழப்புவது, அவதூறுகளைப் பரப்பல்.
• வரலாற்று, சீரா நூற்களின் மீதான நம்பிக்கையைத் தகர்த்தல்.
• சில வழிகெட்ட இஸ்லாமிய பிரிவினரின் அரிதான, புறக்கணிக்கப்பட்ட கருத்துக்களை பரவலாக்குதல்.
• இஸ்லாமிய சிந்தனை, அதனடிப்படைகளை வேறோடு கலைவதற்கான முயற்சிகள்.
3. பொதுவுடமை, நவீனத்துவம் போன்றவற்றில் இஸ்லாமிய விரோதப் போக்கும் இஸ்லாமிய உலகின் அவற்றின் செல்வாக்கும்.
இஸ்லாமிய உலகின் மீது சிந்தனைத் தாக்குதல், சிந்தனை அடிமைத்தனம்;; என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய எதிரிகளுக்கும் இடையிலான அறப்போர் முடிந்துவிட்டது போலும் இனி தம் தேசத்தை பழைமை வாதத்திலிருந்து மிதவாதத்திற்கும் சாதாரண மட்டதிலிருந்து வல்லரசுக்கும் மாற்றினால் மாத்திரம் போதுமானது என்று கூறுபவர்கள் மாபெரும் அறியாமையில் உள்ளனர்.
கீழைத்தேய மற்றும் மேலைத்தேய நாடுகளின் அரசு சார்ந்த, சாராத மதச் சார்பற்ற இராணுவ மற்றும் பொதுவான மக்களின் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இப்பணியில் நேரடியாகவும், மறைமகமாகவும் ஈடுபட்டுள்ளன. நமது ஒற்றுமையைக் குலைக்கவும், ஒழுங்கான அணியைக் கலைக்கவும் அவை பாடுபடுகின்றன. இஸ்லாமிய விரோதிகள் வெளிப்படையாக எம்மை தாக்குவதை விட நமது உட்கட்டமைப்பை சிதைப்பதில் மும்முரமாகவுள்ளனர். எனவே இவற்றை எதிர்த்துப் போராடுவதென்பது ஏதோ மூளை,சிந்தனைப் பயிற்சி அன்று. மாறாக நம்முடைய இருப்பிற்கான போராட்டமாகும்.
