தளர்ந்து போகும் தனித்துவங்கள்
about 5 months ago
தளர்ந்து போகும் தனித்துவங்கள்
மாணவன் M.R.M. ரிஸ்கான்
மதம்
உலகம் தோன்றியது முதல் இன்றுவரை பலவிதமான மதங்களும் கொள்கைகளும் சித்தார்த்தங்களும் தோன்றியிருக்கின்றன என்பது நமக்கு வரலாற்றைக் கற்பதனூடாக விளங்க முடியுமான விடயம். ஆனால் அவை அனைத்திற்கும் நீண்ட வாழ்வு இருக்கவில்லை. ஏனெனில் அவற்றுக்கென்று குறிப்பான போதனைகளும், வழிகாட்டல்களும் இருக்கவில்லை என்பதனால்தான். எனவே மக்கள் அதைவிட்டும் பின்வாங்க கால வெள்ளோட்டத்தில் அவை செத்துமடிந்து விட்டன.
ஆனால் நமது மார்க்கமாகிய இஸ்லாம் அன்றுதொடக்கம் இன்றுவரை எந்த சோர்வையும் காணாமல் தனது எட்டுக்களை முன்வைத்து நகர்ந்து கொண்டே இருக்கின்றது. நபிகளாரின் முன்னறிவிப்பாகிய கிறிஸ்தவர்கள் தான் உலகத்தின் இறுதிக் காலப்பகுதியில் அதிகமாக இருப்பார்கள் என்ற செய்தி இல்லையென்றால் இஸ்லாம் முதல்தரத்தை அடைந்துவிடும் என்ற அச்சம் அனைவரிடமும் குடிகொண்டுவிடும். அந்தளவு காற்றின் வேகத்தில் இஸ்லாம் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் போய் வீடுகளின் கதவுகளைத்தட்டி தனது போதனைகளைக்காட்டி அவர்களின் மனங்களை கவர்ந்து உள் நுழைகிறது என்றால் நபிகளாரது முன்னறிவிப்பை அது உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதே அர்த்தம்.
இஸ்லாத்தின் தனித்துவம்
இஸ்லாமிய மார்க்கம் அந்நிய மக்களால் கவரப்பட்டு அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதற்கான காரணம் அது ஒரு மனிதனுக்கு அவனது வாழ்க்கையின் பல்வேறு கோணங்களிலும் தேவைப்படும் விடயங்களைக் கூறியிருக்கிறது. மட்டுமன்றி அது அல்லாஹ்வும் அவனது தூதரும் எடுத்துரைத்த பிரகாரம் ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஏவுவதுடன் அந்த வட்டாரத்தை விட்டு சாண் அளவும் நகர அனுமதிக்க மாட்டாது என்பதாகும். ஆனால் ஏனைய மதங்களை உற்று நோக்குமிடத்து அவை தமது போதனைகளில் கட்டுப்பாடுகளையிடுவது ஒரு புறமிருக்க, இருக்கும் வழிமுறைகளில் கூட பல விட்டுக்கொடுப்புகளையும் தளர்வுகளையும் வழங்குவதைக் காணலாம்.
ஆனால் நமது மார்க்கமாகிய இஸ்லாம் அவ்விடயத்தில் ஏனையவற்றுக்கு புறம்பாக ஓர் உறுதியான இடத்தில் இருப்பதை காண முடிகிறது. அத்தளர்வுகளைக் காட்டுவது எவ்வாறிருந்தாலும் இஸ்லாம் ஒவ்வோர் இடத்துக்கும் காலத்துக்கும் தேவையான அனைத்து நடைமுறைகளையும் தெளிவாகச் சொல்லிக்கொடுத்திருப்பதால் சிறந்த ஓர் ஸ்தானத்தை அடைந்திருக்கிறது.
சிறுபான்மையாக இஸ்லாம்
இன்று நமக்குமுன், நமது வாழ்வை சீரிய பாதையில் ஓட்டிச்செல்லும் ஒளி விளக்காகிய இஸ்லாமிய மார்க்கம் அதனுடைய ஆரம்ப வித்தை முளைக்கவிட்டு இன்று கிளைகளைப் பரப்பிய விருட்சகமாக திகழ்கிறதென்றால் அது இலேசாக நம்மை வந்தடைந்தது என்ற அர்த்தம் கிடையாது. மாற்றமாக அது தன்னுடைய பாதையில் நட்டிவைக்கப்பட்ட முற்களையும் மேடு பள்ளங்களையும் தாண்டித்தான் இந்த நிலையை வந்தடைந்திருக்கிறது. என்றாலும் காலத்தின் பலத்த காற்றுகள் அதை ஒரு போதும் அசைத்துவிடவில்லை.
காலம் கடந்து இன்றைய சூழ்நிலையில் இஸ்லாம் அதன் பலவீனமான அடியார்களால் கொழுகொம்பில்லா முல்லைக்கு ஒப்பாக்கப்பட்டுவிட்டது. தேவைக்N;கற்றாற்போல் மேற்கத்திய சக்திகளின் கேடுகெட்ட கலாச்சாரச் சீரிழிவுகளின் பக்கமும் காபிர்களின் அடிப்படையில்லா ஒழுக்க சீர்கேடுகளின் பக்கமும் சாயும் அச்சாணியில்லாத் தேராக இன்றைய இஸ்லாத்தை இலங்கையில் மாற்றிவைத்துள்ளனர்.
அந்நியர்களுடன் இரண்டரக் கலந்து இஸ்லாத்தின் சீரிய வரையறைகளை முதுகுக்குப்பின் தூக்கியெறிந்துவிட்டு இஸ்லாத்தின் ஒழுக்க விழுமியங்களை புறக்கணித்து உலகோபாயங்களை தேடும், உலகின் மீதான நப்பாசை கொண்ட ஒரு ஸ்தீரமில்லா சமூகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வெறுமனே உலகின் அற்ப பட்டம்பதவிகளை அடைந்து கொள்ளும் நோக்கில் மேலதிக வகுப்பறைகளை நோக்கியும் பாடநெறிகளை நோக்கியும் படையெடுக்கும் எமது இஸ்லாமியப் பெண்கள் பர்தாவுக்குள் ஷைத்தானை மறைத்து ஒழுக்கமின்றித் திரிகிறார்கள். அந்நிய ஆண்களுடன் சுமுகமாகப் பழகுவதை நாகரிகமாகக் கருதுவதுடன் அதை எதிர்க்கும் நல்லுள்ளம் கொண்டவர்களை நவீனமறியா பழைமைவாதிகளாகவும் குறைகூறுகின்றனர். ஏன் ஒருசில 'இஸ்லாமிய அமைப்புக்கள்' என தம்மை மார்புதட்டிக் கொள்ளும் ஜமாஅத்துகளே கல்வி என்று வந்துவிட்டால் ஆண், பெண் கலவன் உட்பட எல்லா மார்க்க வரம்புகளையும் மீறுவதற்கு அணுசரனை வழங்கிக் கொண்டிருப்பதோடு பித்னாவைக்கிளப்பும் போலி முப்திகளாக வலம் வருகின்றனர்.
முஸ்லிம் மகளிர் பாடசாலைகளில் ஒழுக்கமான கல்விநடவடிக்கைகளை மேற்கொண்டு கரைசேர வேண்டிய எமது இஸ்லாமிய உறவுகள் முழங்கால் தெரிய குட்டைப் பாவாடையுடன் தலையில் முக்காடின்றி உடலின் அங்க அவயங்களை மற்றையவர்களுக்கு காட்டிக்கொண்டு அவ்ரத்தையும், வெட்கத்தையும் கல்வியெனும் போர்வையிலே விலைபேசி விற்றுக் கொண்டிருக்கின்றனர். அது மாத்திரமன்றி அவர்களின் சிலைகளுக்கு வகுப்பறையில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுதல், மல்லிகை படைத்தல் என்று சிர்கிய்யத்தான அனைத்து அக்கிரமங்களையும் பாலர்வகுப்பு முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைவரும் அரங்கேற்ற முற்படுகின்றனர். இவற்றுக்கெல்லாம் கல்வி என்று பெயராம்.
இவற்றை எல்லாம் விட கொடுமை என்ன தெரியுமா? முழு ஊரும் பார்த்திருக்க ஏன் ஒரு சிலவேளைகளில் முழுநாடும் பார்த்திருக்க முஸ்லிம் பெயர்களை சுமந்து கொண்ட மாணவ மாணவிகள் பரிசளிப்பு வைபவங்களிலே மனிதர்களின் காலில் விழுந்து அவர்களை கைக்கூப்பி வணங்கி இஸ்லாத்தின் தூயதௌஹீதை தகர்த்தெரிகிறார்கள்.
இவற்றை எல்லாம் விஞ்சி சமகால இலங்கைச் சூழலிலே இஸ்லாமிய வாலிபர்களும் யுவதிகளும் அந்நியவர்களுடன் காதல்வயப்பட்டு இஸ்லாம் எனும் சத்திய ஓரிறையை காலுக்குக்கீழே மிதித்துவிட்டு தமது குருட்டுக்காதலின் சொற்ப இன்பங்களை அனுபவிப்பதற்காக அந்நிய சித்தாந்தங்களை தழுவுகிறார்கள். உலகின் சொற்ப இன்பம் அவர்களது மறு உலகின் நிரந்தர சுவனபதியை விட பெரிதாக அவர்களின் கண்களில் புலனாகின்றது போலும். கலாச்சாரத்தை, வெட்கத்தை, மானத்தை இழந்து பக்குவத்தை விலைபேசிவிற்று விட்டு ஏன் மார்க்கத்தையே தூக்கி எறிந்து விட்டுச்செல்லும் அளவுக்கு எமது பெண்களின் உலகக் கல்வியின் மீதான மோகம் மாறிவிட்டது. அனைத்து ஒழுக்க விழுமியங்களையும் துடைத்தெறியும் இப்படிப்பட்ட ஒரு கல்வி தேவைதானா??
இன்றைய இலங்கைச் சூழ்நிலையிலே சகவாழ்வு எனும் புரிந்துகொள்ளப்படாத வாசகம் முஸ்லிம்களின் உள்ளங்களில் விதைக்கப்படுகின்றது. யதார்த்தத்திலே சகவாழ்வு என்பது மார்கமல்லாத இதர கருமங்களிலே முஸ்லிம்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியில் புரிந்துணர்வு எனும் பெயரில் உள்நுழைவதில் குற்றம் கிடையாதுதான். எனினும் மார்க்க அணுச்டானங்கள் என்று வருமிடத்து அவற்றில் சகவாழ்வு எனும் விடயம் உள்நுழைந்து மார்க்கத்தை அச்சாராக்கும் விதிமுறையில்லா தொழிநுட்பமாக செயற்படுவது துளியளவும் அனுமதிக்க முடியாததாகும்.
காரியாலயங்களில் வேலைபார்க்கிறோம் என்ற பெயரில் அங்குள்ள சட்டங்களுக்கு புறம்பாக தாமாகவே சட்டங்களை ஏற்படுத்திக்கொண்டு வாஜிபான தாடியை மழித்துக்கொண்டும் காற்சட்டைகளை கரண்டைக் கால்களுக்குக்கீழால் இழுத்துக்கொண்டும் ஒரு முஸ்லிமின் தனித்துவ அடையாளங்களை இழந்து இஸ்லாத்தை புறக்கணித்து விடுகின்றார்கள் ومن يتق الله يجعل له مخرجا 'எவர் அல்லாஹ்வை பயப்படுகின்றாரோ அவருக்கு அவன் வெளியேறும் தளத்தை ஏற்படுத்துவான். எனும் குர்ஆனிய வசனம் அவர்களது கண் முன்னால் இருக்க இறைவன் பொருந்திக் கொள்ளாத மாற்று மதத்திற்கு புறம்பான அம்சங்களை வெறும் ஒரு சில ரூபாய்களுக்காக அரங்கேற்றுகிறார்கள். இறைவன் ரிஸ்கை அளந்து வைத்து வைத்திருக்க அவன் அவனது சிறப்புக்களை மார்க்கத்துக்கு முரணான முறையில் பெற முயற்சிப்பது எங்கணம் முறையாகும்????
அத்தோடு வேலைத்தளத்தில் தாடிவைப்பதற்கு தடை என்றால் இறைவனின் கட்டளையை அமுல்படுத்த முடியாத இவ்வுலகம் தனக்குத் தேவையில்லை என்று தூக்கியெறியும் உத்தமர்கள் எம்மில் எத்தனை பேர் இருக்கின்றனர்??? இறைவனுக்காக ஒன்றை இழக்கும் போது அதை விட சிறந்த ஒன்றை நமக்கு வழங்க இறைவனே போதுமானவன் என்பதை அறிந்தும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதேபோன்று இஸ்லாமியப் பெண்களில் மார்க்கப்பற்றுள்ள பெண்கள், ஹபாயாவையும், பர்தாவையும் விட்டுக்கொடுக்காதவர்கள், திடமான பற்றுடையவர்கள் இருக்கிறார்கள். உயிரிழந்தாலேயன்றி ஹபாயாவைக் கழற்றமாட்டேன் என்று வீரவசனம் பேசும் மங்கையர்க்கரசிகளும் எமது சமூதாயத்தில் இருக்கின்றார்கள். ஆனால் கைசேதம் என்ன தெரியுமா??? அவர்களுக்குப்புறம்பாக அங்க அவயவங்களைக் காட்டிக்கொண்டு ஹிஜாபுமி;ன்றி முஸ்லிமா? காபிரா? என்றுகூட வித்தியாசம் காணமுடியாதளவுக்கு பெயரளவில் முஸ்லிமாகத்திரியும் எமது பெண்கள் எத்தனைபேர் உள்ளனர்? சாதாரண மலிகைக்கடை முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி வரை பல இடங்களிலும் பணிபுரியும் எமது சமூதாயத்தின் இந்நிலைமை வெறும் வாய்வார்த்தைகளால் வர்ணிக்கவும் முடியாது. எழுத்துக்களுக்குள் சுருக்கிடவும் முடியாது.
அந்நிய நாட்டில் வாழ்கிறோம் என்று கூறிக்கொண்டு சிறுபான்மையாக வாழ்ந்தால் சில விட்டுக் கொடுப்புகள் செய்துதான் ஆக வேண்டும் என்று சாக்குப்போக்காகக் கூறிக்கொண்டு இஸ்லாமிய வரையறைகளை சுயநலங்களுக்காக கணக்கின்றி மீறும் அபாயகரமான சூழலிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்தளவுக்கு இந்த விட்டுக்கொடுப்பு தூர சென்று விட்டதென்றால் மார்க்க தனித்துவங்களைக்கூட மறந்து அவற்றிலேயும் தாராளத் தன்மையை பாராட்டும் நிலை உருவாகிவிட்டது.
சிறுபான்மையாக இவ்வுலகிலே நாம் தான் முதல் முதலில் வாழ்வது போல புதிய விடயங்களிலே மார்க்கத்தை அணுகமுயற்சிக்கும் பாதகரமான நிலை உருவாகி ஈமானுக்கே வேட்டுவைக்கும் கட்டம் வரை சென்றுவிட்டது. நபியவர்கள் மக்காவிலே வாழ்ந்தது சிறுபான்மையாக அல்லவா? அவர்கள் எம்மைப்போல் சுதந்திரமாக வாழவில்லை. மாறாக அடி, உதைகளுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் அடிமைகளைப்போல் முஸ்லிம்கள் நடத்தப்பட்டார்கள். ஆனாலும் لكم دينكم ولي دين 'உமது மார்க்கம் உங்களுக்கு. எமது மார்க்கம் எங்களுக்கு'. என்ற அடிப்படைக் கோட்பாட்டின்படியே நபிகளாரின் வாழ்வு அமைந்தது. நாம் அப்படி என்னதான் சோதனைகளைக் கண்டுவிட்டோம் என சிந்திக்க கடப்பாடு உடையவர்கள்.
நாம் இவ்வாறு விட்டுக்கொடுப்பு செய்தால் ஒருநாளும் பெரும்பான்மை சமூகம் எம்மை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர்களை ஏமாற்றத்தான் இவ்வாறு செய்கிறோம் என்று புரிவதுடன் நாம் கோழைகள் என்பதையும் அவர்கள் நன்றாக அறிந்துவிடுவார்கள். நாம் எமது மார்க்கத்தை விட்டு அவர்களது மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளும் வரை அவர்கள் எம்மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டார்கள் என்பது யதார்த்தம். அல்லாஹ் கூறுகிறான் وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ 'யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்களுடைய மார்க்கத்தை நீங்கள் பின்பற்றும் வரை உங்களை பொருந்திக் கொள்ளமாட்டார்கள். யூத, கிறிஸ்தவர்களின் நிலமையே இவ்வாறிருக்க அடிப்படையில்லா இந்த சிலை வணங்கிகளின் நிலை எவ்வாறிருக்கும் என்பதை நாம் ஒரு கணம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
மார்க்க விடயங்களை புறக்கணித்து விட்டுக்கொடுப்பு எனும் நாமத்தை பயன்படுத்தி ஒருபோதும் நம்மால் செயற்பட முடியாது. பூரணமானஇ சிறந்த மார்க்கமாகிய இஸ்லாத்தை பின்பற்றும் நாங்கள் அடிப்படையே இல்லாத ஒரு சமூகத்துக்காக எதற்கு நமது உயரிய மார்க்கத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். மார்க்கமல்லாத விடயங்களில் ஒரு சிலதை மனிதநேயம் என்றபெயரில் அல்லது பணிந்து போவதற்காக விட்டுக்கொடுத்ததில் தவறு கிடையாது. அவை வரவேற்கப்படவேண்டியது மட்டுமன்றி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களைப் பற்றிய நல்லெண்ணங்கள் அந்நியவர்களின்; உள்ளங்களில் துளிர்விடவும் காரணியாக அமையலாம். ஆகக்குறைந்தது எம்மை எதிர்த்து பேசுவதை விட்டும் அவர்களை பின்வாங்கவாவது செய்யும். எது எவ்வாறிருப்பினும் பூரணவாழ்க்கை முறையை எமக்களித்துள்ள இத்தூய மார்க்கத்தின் போதனைகளை சிறந்த முறையில் படித்து அவற்றை அமுல்படுத்துவதனூடே எமக்கு ஒரு வெற்றியை அடையலாம். அதைவிடுத்து இஸ்லாமியப் போதனைகளைப் புறக்கணிப்பதால் உலகத்திலும் நசுக்கப்பட்டு மறுமையிலும் தண்டனைகளுக்கு உள்ளாகலாம்.