147

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

80

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

18

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

சிறுவன் இப்னு அப்பாஸுக்கு (رضي الله عنه) சிறப்பு நபியின் போதனைகள்

about 6 months ago


சிறுவன் இப்னு அப்பாஸுக்கு (رضي الله عنه)

சிறப்பு நபியின் போதனைகள்

எம். ஆர்.எம். ரிக்ஸான்
ஆண்டு- 5

இவ்வுலகுக்கே ஒளி விளக்காய் வந்த எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்துக்காகவே தனது முழு வாழ்நாளையும் அர்ப்பணித்து உம்மத்தின் வெற்றியே தனது வெற்றி என வாழ்ந்த உத்தமர். இறைவனிடமிருந்து ஒவ்வொரு நபிமாருக்கும் கிடைத்த சிறப்பான துஆவை அவரவர்கள் உலகில் கேட்டுவிட்டார்கள். ஆனால் எமது இரக்க குணம் படைத்த ஏந்தல் நபிகள் நாயகம் அவர்கள் அந்த ஒரே ஒரு பெறுமதியான துஆவை தனது உயிர் போகும் தருணம் என்று இக்கட்டான மற்றும் பல துக்ககரமான நிகழ்வுகள் ஏற்பட்டும் கூட கேட்டுவிடாமல் அவர்களின் உம்மத்துக்காக நாளை மறுமை நாள் ஏற்படும் வரை அதை ஒத்திவைத்துள்ளமையானது அவரின் பரந்துபட்ட உம்மத்தின் மீதான பாசத்தை பறைசாற்றுகின்றது.

இதையே இறைவன் தனது திருமறையிலே அத்தியாயம் தவ்பா வசனம் 128 இல் ( நிச்சயமாக உங்களிலிருந்து உங்களிடத்தில் ஒரு தூதுவர் வந்திருக்கிறார். நீங்கள் சிரமப்படுவது அவர் மீது கஷ;டமானதாகவும் உங்கள் மீது ஆசையுள்ளவராகவும் முஃமின்களோடு மிகவும் இரக்கமுள்ளவராகவும் மிக கிருபையுடையவராகவும் இருக்கிறார் ) என்று குறிப்பிடுகிறான். 

தனது உம்மத்தின் மீது வைத்திருந்த எல்லையற்ற இரக்கத்தினால் தனது உம்மத்து முழுவதும் சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் அதற்கான வழிகளை உள்ளடக்கிய சில விடயங்களை தனது சிறிய தந்தையின் மகனாகிய தர்ஜுமானுல் குர்ஆன் என்று வர்ணிக்கப்படும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த வரலாற்று சம்பவத்தை விரிவாகப் பார்ப்போம். இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தனது கிரந்தத்திலே 2516ம் இலக்க ஹதீஸாக இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

இச்சம்பவத்தைப் பார்க்குமிடத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் மார்க்க அடிப்படை சீராக வேண்டும் என்பதில் எந்தளவு கரிசனை கொண்டுளார்கள் என்பதை உணர முடியும். தன் பேச்சை ஆரம்பிக்க முன்னால் சிறுவனே! என நபியவர்கள் அச்சிறுவனது உள்ளத்தையும் சிந்தனைகளையும் தன் பக்கம் ஒன்று கூட்டுவதற்காக இவ்வாறு விழித்திருக்கிறார்கள். தனது பேச்சு பிறரிடம் எடுபடுவதற்கு அவர்களது கவனம் முழுக்க தன் பக்கம் திருப்பப்படுவது முக்கிய அம்சமாகும். அப்போதே நாம் அவர்களுக்குச் செய்யும் உபதேசம் அவர்களிடம் தாக்கத்தை உண்டு பண்ணுவதைக் காணலாம்.

நபியவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குச் செய்த முதல் உபதேசம்  ' நீ அல்லாஹ்வைப் பாதுகாத்துக் கொள்!. அவ்வாறென்றால் அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வைப் பாதுகாத்துக்கொள்! அவனை நீ உனக்கு முன்னால் கண்டு கொள்வாய்.' என்பதாகும். நபியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட جوامع الكلم  எனும் மிகப் பெரிய அற்புதம் இவ்வார்த்தைகளில் புலப்படுகிறது. குறுகிய ஓர் இரு வார்த்தைகளில் பாரிய கருத்தைக் கொண்டுள்ள விடயங்களைக் கூறுவது உண்மையில் அற்புதமே. வெறுமனே இரண்டு ஏவல் வினைகளின் மூலம் ஒரு மனிதனது இவ்வுலக வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றி நாளை மறுமை வாழ்விலும் வெற்றி பெற வழியமைக்கப்படுகிறது.

அல்லாஹ்வைப் பாதுகாப்பது எனும் போது அவனது நல்லடியார்களாக வாழ்வதாகும். அவன் எமக்கு ஏற்படுத்தியிருக்கும் வரையரைகளை மீறாது அவனது கட்டளைகளில் பொடுபோக்குக் காட்டாமல் வெறுப்புணர்வின்றி செயற்படுத்துவதோடு அவன் தடுத்தவற்றை முற்று முழுதாக தவிர்ந்து நடப்பதும் அவனது மார்க்கத்தில் பேணுதலான அடியார்களாக இருப்பதுமே அவனைப் பாதுகாப்பதாகும்.  அதாவது அவனது தீனுல் இஸ்லாத்தைப் பேணிப் பாதுகாப்பதாக அமையும். அப்போது தான் இறைவன் எம்மை இவ்வுலகில் ஆபத்துக்கள், கஷ;டங்களிலிருந்தும் மறுமையில் நரகின் கொடிய நெருப்பிலிருந்தும் பாதுகாத்து எம்மை அவனது நல்லடியார்களுடன் ஆக்குவான்.

மாறாக நாம் அவனது கடமைப்பாடுகளில் பொடுபோக்குத்தன்மையையும் எமது நடவடிக்கைகளில் பேணுதலையும் இழந்துவிடுவோமானால் இறைவனின் உதவிகளை இழந்து அவனது கோபப்பார்வைக்குட்பட்டு கைசேதப்படுவதுடன் நஷ;டவாளிகளாக மாற நேரிடும். இறைவனால் பாதுகாக்கப்பட்ட நல்லடியார்கள் கூட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு இறைவனிடம் வேண்டி எம் பெறுமானார் (ஸல்) அவர்கள் எமக்கு இரவில் தூங்க முன் கூறும் ஒரு துஆவைக் கற்றுத்தந்துள்ளார்கள். ஓவ்வொரு நாளும் உறக்கத்துக்குச் செல்லும் போது நாம் ஓதும் துஆவிலே  إن أرسلتها فاحفظها...... நீ எனது ஆத்மாவை (மீட்டி)அனுப்பிவிட்டால் அதை எதன் மூலம் உன்னுடைய நல்லடியார்களைப் பாதுகாக்கின்றாயோ அதன் மூலம் பாதுகாப்பாயாக! எனும் பகுதியும் இடம் பெற்;றுள்ளது.

இரண்டாவது விடயமாக நபியவர்கள் அச்சிறுவனி;ன் உள்ளத்தில் நம்பிக்கைக் கோட்பாட்டை உறுதிப்படுத்தும் பாணியில் உரையாடுகிறார ;ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் அடிப்படையாக அமைத்துக்கொள்ள வேண்டிய இறைவனின் மீது தவக்குல் வைப்பதை அந்த சிறுவனுக்கு நபியவர்கள் அறிவமுதாக ஊட்டுகின்றார்கள்.

நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டு உதவி தேடு! மனிதர்களிடம் கை நீட்டி அவர்களின் உதவியை எதிர்;பார்ப்பதை விட்டு விட்டு எம்மைப் படைத்த இறைவனிடம் கையேந்தும் படியான கட்டளை இது. தனது செருப்பின் வார் பிய்ந்து போனால் கூட இறைவனிடமே அதனை நபியவர்கள் முதலில் முறையிட்டு உதவி தேடினார்கள். நாம் ஒரு மனிதரிடம் அடிக்கடி சென்று உதவி தேடுவதால் அவருக்கு சலிப்பு ஏற்படும். இதனையே முன்னோர் நித்தம் போனால் முற்றமும் சலிக்கும் என்று இயம்பிச் சென்றனர். ஆனால் நாம் இறைவனிடம் கையேந்தக் கையேந்த இறைவனின் பால் நெருக்கம் எம்மிடம் அதிகரிக்கின்றது. நடு நிசியில் அடி வானத்திலிறங்கி எனது அடியார்களில் யார் என்னிடம் கேட்கப்போகிறார்கள். நான் அவருக்குக் கொடுக்கக் காத்திருக்கிறேன் என்றும் எனது அடியான் கையேந்திக் கேட்ட பின் அவனை வெறும் கையுடன் அனுப்புவதிலிந்து நான் வெட்கப்படுகிறேன் என்று தனது அடியானுக்கு எப்போதும் தன் அருட்கொடைகளைப் புரிய காத்திருக்கும் எம்மைப்படைத்த அளவற்ற அருளாளனாகிய இறையோனிடம் நாம் கையேந்தாமல் வேறு யாரிடம் போய் கையேந்துவது? நான் கேட்காமலேயே எமக்கு இவ்வளவு அருட்கொடைகளை சொரிந்துள்ள அல்லாஹ் நாம் கேட்கும் போது எவ்வளவு சந்தோஷப்படுகிறான்!.

ஆனாலும் கைசேதம் என்ன தெரியுமா? இவ்வளவு பல வழிகளிலும் தனது அடியார்களுக்கு கருணை காட்ட விளையும் இறைவன் தான் கழுத்து நரம்பை விட சமீபமாக இருக்கிறோம் என்று கூறியும் கூட இன்றைய முஷ;ரிகீன்களும் காபிர்களும் ஒருபுறமிக்க முஸ்லிம் சகோதரர்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடம் கையேந்திப் பிரார்த்திப்பதை நாம் பார்க்கிறோம். கப்ருகளிடம் போய் அங்கே அடக்கப்பட்டிருப்பவர்களிடம் தனது தேவைகளைக் கேட்பதும் தர்காக்களிடமும் ஷேக்மார்களிடமும் பரக்கத்தை வேண்டுவதுமாக இப்படி பல ஷpர்க்கிய்யத்தான அம்சங்கள் எமது சூழலிலே பரவலாகக் காணப்படுவது எமது சமூகத்துக்கேற்பட்ட பெரும் இழி நிலையாகும். மரணித்து மண்ணோடு மண்ணாய் உக்கிப்போனவருக்கு தானும் தனது பாடும் என தன்னையே காப்பாற்றிக் கொள்ள கப்ரிலே விசாரனைக்குட்டுத்தப்படும் நிலையில் அவர் யாரென்றே அறியாத பலரும் கப்ரிடம் போய் துஆ கேட்பதை எங்கனம் ஏற்பது? மரணித்தவரால் எதையும் செவிமடுக்க முடியாது என்பது இஸ்லாமிய அகீதாவின் அடிப்படை. அதையும் மீறி அப்படியே செவிமடுக்க முடியுமானால் எமக்கு உதவி செய்யும் வல்லமையை அந்த இறந்த உடலுக்குக் கொடுத்தது யார்? இதிலும் பகடிக்கூத்து என்ன தெரியுமா? பல இடங்களில் இருக்கக்கூடிய ஸியாரங்களுக்குக் கீழ் யாராவது அடக்கப்பட்டுள்ளனரா? இல்லையா? என்பது கூட சந்தேகத்துக்கிடமான செய்தியாகக் காணப்படுகின்றது. இது ஒருபுறமிக்க ஒரு சில போலி கராமத்துக்களுக்கு(!!) ஏமாந்து போய் ஷேக்மார்களின் ஏமாற்றுக்கரங்களைப் பற்றி அவற்றையே தமது எதிர்காலத்தின் ஈடேற்றமாக என்னும் அப்பாவிகளின் மடமை தான் எத்தகையது? உலகத்துக்கே அருட்கொடையாக வந்துதித்த ரஸூலுல்லாஹ்வுக்கே தற்போது கப்ரிலிருந்து கொண்டு ஏதேனும் பயன்களளிக்க முடியாதிருக்கும் போது அவருக்கே நாம் சொல்லும் ஸலவாத்துக்கள் மாத்திரமே எத்திவைக்கப்படுகின்றன என்றிருக்கும் போது கப்ரிலிருக்கும் எப்பேர்ப்பட்ட பெரிய வணக்கசாலியாக இருந்தாலும் இவரின் நிலைமை நபியவர்களையும் விஞ்சிவிடுமோ என்ன? முன் பின் பாவம் மன்னிக்கப்பட்ட சுவர்க்கத்துக்கு முதலில் காலடிவைக்கக்கூடிய முழு மனித சமுதாயமும் தத்தளிக்கும் அந்த இறுதி நாளிலே விசாரணையை ஆரம்பிக்க இறைவனிடம் மன்றாடும் ஒரேயொரு மாமனிதரான அந்த நபிக்கேயில்லாத சக்தி அவரை விட சாதாரண ஒரு மனிதருக்கு கிடைப்பதாகக் கருதினால் அது அவரையும் இழிவாக்கும் நம்பிக்கையல்லவா? இறைவனிடம் கேட்டுவிட்டு அவனின் உதவியை எதிர்பார்த்து எமது சகல விடயங்களையும் அவன் மீதே பொறுப்புச்சாட்டி நாம் எமது முயற்சிகளில் இறங்க வேண்டும். மாறாக இறையுதவியை நாடாமல் அல்லது இறைவனிடம் பொறுப்புச்சாட்டி தாம் எந்தவொரு முயற்சியுமின்றி வாழ்வோமேயானால் இறையுதவியை முழுமையாகப் பெற முடியாது. அது ஒரு புறமிக்க இறைவன் எம்மைப் படைத்து பல அருட்கொடைகளை சொரிந்திருக்க இனமறியா ஒரு சாதாரண அடியான் ஒருவனிடம் கையேந்தி அவனை கடவுள் அந்தஸ்தில் வைத்து நம்பும் கொள்கையை ஷpர்க் என்று கூறாமல் வேறு என்ன கூற முடியும்? (அல் பகரா : 182) (ஹாபிர் : 10)

அல்லாஹ்வுக்குப் பயந்த இறையச்சம் கொண்ட அடியார்களாக தூய்மையான உள்ளத்துடன் அவனை வழிப்படுபவர்களாக நாம் இருந்தால் இறையுதவியை எமக்கு முன்னால் எல்லாக்கட்டங்களிலும்  பெற்றுக் கொள்ள முடியும். அதையே நபியவர்கள் 'நீ அல்லாஹவைப் பயந்து கொள் அவனை உனக்கு முன்னால் பெற்றுக் கொள்வாய். நீ செழிப்பாக இருக்கும் போது அல்லாஹ்வுக்கு முன் நீ அறிமுகமாகு. உனக்கு நெருக்கடி ஏற்படும் போது அவன் உன்னை அறிந்து கொள்வான்;;;' என்று சிறுவன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.  எமது எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் இறையச்சம், உளத்தூய்மை போன்ற பண்புகளைக் கடைப்பிடித்து இறைவன் எமக்குக் கடமையாக்கியுள்ள விடயங்களில் பேணுதலாக இருக்கும் போது எமது எல்லா விடயங்களிலும் இறையுதவியைப் பெற்றுக் கொள்ளலாம். ஆயுதங்கள், படைப்பலம் அனைத்திலும் தம்மை விட பலமடங்கு சக்தி வாய்த மக்கத்துக்காபிர்களின் படையை தைரியமாக எதிர் கொண்ட அந்த நபித் தோழர்கள் இறைவன் விடயத்தில் பேணுதலாக இருந்து அவன் ஒருவனின் உதவியை மாத்திரமே நாடி களத்தில் குதித்தார்கள். இறைவன் மலக்குமார்களை வானிலிருந்து இறக்கி அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டினான். முழு நகரையும் காபிர்கள் ஆக்கிரமித்து  முன்னாலும் பின்னாலும் ஏன் ஊருக்குள்ளேயும் எதிரிகளின் கைகளில் வசமாக மாட்டிக் கொண்ட சந்தர்பத்திலும் கூட அந்த அகழிப் போர்லே எதிரிகளுக்குக் கடும் குளிரைக் கொடுத்த அக் காபிர்களை விரண்டோடச் செய்த இறைவனின் உதவி அந்த சமூகத்திற்குக் கிட்டியது. இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் மதீனா நகரில் ஆரம்பித்த இஸ்லாமிய ஆட்சி முழு உலகுக்கும் பரந்து இந்திய உப கண்டம் முதல் ஆபிரிக்காவின் கடைத் தொங்கல் வரை அதன் மணத்தைப் பரப்பி முஸ்லிம்;களுக்கு இறைவன் வெற்றியைக் கொடுத்தான். இறைவன் விடயத்தில் பேணிப்பாக இருந்தால் இறைவன்; நினையா புறத்தில் எமக்கு முன் எமது விடயங்களில் உதவுவான் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. 'செழிப்பான காலத்திலே நீ அல்லாஹ்வுக்கு முன் அறிமுகமாகு! உனக்கு கஷ;டம் ஏற்படும் போது அல்லாஹ் உன்னை அறிந்து கொள்வான்' என்று சிறுவன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்து நபியவர்கள் அதற்கடுத்ததாகக் கூறுகிறார்கள். உண்மையிலேயே இத்தகைய கருத்தாழமிக்க விடயங்களை இப்படி ஒரு சிறுவனுக்கு கூறத்தான்  வேண்டுமா? எனும் கேள்வி நம்மில் யாருக்கும் எழக்கூடும். எமது சிறுவர்களுக்கு பல மார்க்க விடயங்களை கற்றுக் கொடுக்காது இந்த வயதிலே இவர்களுக்கு இதெல்லாம் எதற்கு என்று நம்மில் பலரும் பொடுபோக்காக இருந்து விடுகின்றோம். ஆனால் நபியவர்களோ அச் சிறுவனின் உள்ளத்தில் ஆழமாய் பதிவதற்காக அந்த விடயங்களை கற்றுக் கொடுத்தார்கள்.

ஆரோக்கியம்,இளமை, ஓய்வு போன்ற அனைத்து விடயங்களையும் பயன்படுத்தி நோய், முதுமை, வேலைப்பாடு போன்றவற்றில் இறையுதவியைப் பெற விரையுமாறு ஆர்வமூட்டும் அழைப்பே அது! நாம் எமது இளமைப் பருவத்தை இறைவன் பொருந்திக் கொள்ளக் கூடியதாக ஆக்கிக் கொண்டு அவனை வணங்துவதிலும் அவனுக்குப் பொருத்தமான முறையில் வாழ்வதிலும் கழிக்குமிடத்து அவனது மேலான வெகுமதிகளை எமக்கு அடைய முடியும். நிழலே இல்லாத தலைக்கு மேலால் சூரியன் தாண்டவமாடும் அந்த தருணத்திலே வியர்வைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்த கொடூரமான மஹ்ஷர் மைதானத்திலே இறைவனின் விசாலம் பொருந்திய அர்ஷpன் நிழலின் கீழால் நிழல் பெரும் ஏழு கூட்டத்தாரில் ஒரு கூட்டமாக அல்லாஹ்வை வணங்குவதில் வளர்ந்த வாலிபர்களை நபியவர்கள் குறிப்பிட்டார்கள். அதே போன்று ஐந்து விடயங்களுக்கு முன்னால் ஐந்து விடயங்களைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள். 'உனது வயோதிபத்திற்கு முன் வாலிபத்தைப் பயன் படுத்து! உனது மரணத்திற்கு முன் உனது வாழ் நாளை பயன் படுத்திக் கொள்! உனக்கு வேலைப்பழு ஏற்பட முன்னால் உனது ஓய்வு நேரத்தைப் பயன் படுத்திக்கொள்!  உனக்கு ஏழ்மை வருவதற்கு முன் உனது வசதியை பயன் படுத்திக் கொள்!  உனக்கு நோய் ஏற்பட முன்னால் ஆரோக்கியத்தைப் பயன் படுத்திக் கொள்;!' மேலும் நபியவர்கள் கூறினார்கள்: ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டால் அல்லது பயணம் செய்தால் அவன் சுகதேகியாக ஊரில் இருக்கும் போது செய்தவைகள் அவருக்கு எழுதப்படும். எமது வயோதிபத்தின் போது இறைவன் எம்மை அருட்பார்வை கொண்டு பார்க்க வேண்டுமெனில் எமது இளமைப் பருவத்தில் எமது பொன்னான நேரங்களை கேலிக் கூத்துக்களிலும், கும்மாளங்களிலும், ஆடல் பாடல்களிலும், இறைவனுக்கு முற்றிலும் மாற்றமான முறையில் கழித்து இறைவனின் மார்க்கத்திற்கு முற்றிலும் மாறு செய்து வாழ்ந்து விடாமல் அவனது ஏவல்களை எடுத்து நடந்து இபாதத்;களில் பேணுதலாக இருந்து பள்ளியுடனான எமது தொடர்பை அதிகரித்துக் கொண்டு அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக வாழ்ந்து அவனுக்கு அறிமுகமாக வேண்டியது அனைவர் மீதும் கடமையாகும். மாறாக நாம் எம் இளமைப் பருவத்தை மனம் போன போக்கிலே மார்க்கத்திற்கு முரணாகக் கழித்து விடுவோமேயானால் எமது முதுமையிலே கைசேதத்துக்கு உள்ளாக நேரிடும்.

இவ்வளவு நுணுக்கமான பல விடயங்களையும் பொதிந்து கொண்ட ஒரு விடயத்தை நபியவர்கள் சிறுவர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு கற்றுக் கொடுத்தமை ஒரு மனிதனின் முழு வாழ்வையும் சீராக்குவதற்கான பிரதான வழிகாட்டியாகவும், மறுமை வெற்றிக்கான பாதையாகவும் அமைகின்றது. இந்த ஹதீஸ் கற்றுத் தரும் விடயங்களை எம் வாழ்வில் இயன்றளவு பின்பற்ற முயற்சிப்போமாக!  

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Visitor Count
Total Visits 45528
View Status of Application