2017 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் பரீட்சை  விதிகளும், ஒழுங்குகளும்

 ஒவ்வொரு கல்வியாண்டும் இரு தவணைகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு தவணையின் இறுதியிலும் பரீட்சை நடைபெறும்.

 முதலாம் தவணைப் பரீட்சையின் ஒவ்வொரு பாடத்திலும் பெறப்பட்ட புள்ளிகளில் 40% புள்ளிகளும், இரண்டாம் தவணைப் பரீட்சையின் 60% புள்ளிகளும் ஒன்றாகக் கூட்டப்பட்டு பெறுபேறு தீர்மானிக்கப்படும்.

 சித்தியடைவதற்கான ஆகக் குறைந்த புள்ளி வீதம் முழுக் கூட்டுத் தொகையில் 50% ஆகும்.

 ஒவ்வொரு தவணையின் பாடங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட புள்ளி வீதத்தினுள் 10% வீதப் புள்ளிகள் மாணவனின் வரவு, மாதாந்தப் பரீட்சைகள் என்பவற்றிலிருந்து கணிக்கப்படும்.

 ஆரம்ப நிலை, இடை நிலை, உயர் நிலை ஆகிய ஓவ்வொரு நிலையிலும் கட்டாயப் பாடமாக சில குறிப்பிட்ட பாடங்கள் உள்ளன. (பாட அட்டவணையில் அவற்றிக்கான குறியீடு * ஆகும்.) அவற்றில் ஒரு மாணவன் இரு பரீட்சைகளின் முழுத் தொகையில் 50% புள்ளிகளைப் பெற வேண்டும்.

 உயர் நிலை வருடங்களில் மொத்த சராசரி 50% பெற்று, கட்டாயப் பாடங்களில் 50% பெறத் தவறிய ஒரு மாணவன்; அவற்றில் குறைந்தது 30% புள்ளிகளைப் பெற்றிருப்பின் சித்தியடைவதற்கான மேலதிக அவகாசமாக 03 மாதங்களில் அப்பாடங்களில் பிரத்தியேகமாக அவருக்குப் பரீட்சை நடாத்தப்படும். அப்பரீட்சையில் 50% புள்ளிகள் பெறப்பட வேண்டும், இச்சந்தர்ப்பம் ஒருமுறை மாத்திரமே வழங்கப்படும்.

 இரண்டாம் தவணையின் பரீட்சைக்கான வினாக்களில் 10% ப் புள்ளிகளுக்கான வினாக்கள் முதலாம் தவணையின் பாடங்களிலிருந்து தொகுக்கப்படும்.

 ஒவ்வொரு தவணையிலும் பரீட்சைக்குத்  தோற்றுவதற்கு, ஒரு மாணவனின் வரவு அத்தவணையின் பாட நாட்களில் குறைந்தது 70% வீதமாக இருக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close