சென்ற 13.08.2017ம் அன்று நடைபெற்ற இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் அபிவிருத்திச் சங்க கூட்டறிக்கை

بسم الله الرحمن الرحيم

வல்ல அல்லாஹ்வின்  பேருதவியால் அப்பாஸிய்யீன்கள் நலன் விரும்பிகள் அடங்கிய  கல்லூரியின் அபிவிருத்தி சங்கக் கூட்டம் சென்ற 2017.08.13 ஞாயிற்றுக் கிழமை கல்லூரி மண்டபத்தில்;  கல்லூரியின் தலைவர் அல்உஸ்தாத் M.O. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் உஸ்தாத்மார்கள் உட்பட சுமார் 70 பேர் கலந்து கொண்டனர். அழைக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் முன்னறிவிப்புடன் சமுகந்தரவில்லை, எனினும் பலர் எவ்வித அறிவிப்புமின்றி சமுகமளிக்காமை கவலைக்குரிய விடயமாகும் . காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய  கூட்டத்தின்; முதல் அம்சமாக கல்லூரியின் அதிபர் அல்உஸ்தாத் W.  தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களினால் வரவேற்புரையுடன் கூடிய முன்னுரை நிகழ்த்தப்பட்டது, அதில் இவ்வொன்று கூடலின் முக்கியத்துவம், கல்லூரின் இன்றைய கல்வி, பொருளாதார நிலைமைகள் போன்ற விடயங்கள் அதிபரால் தெளிவுபடுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்ற கூட்ட அறிக்கை செயளாலர் அல்உஸ்தாத்  M.T.M. ரிபாக் (அப்பாஸி) அவர்களால்; சமர்ப்பிக்கப்பட்டது, அதனை மௌலவி எம். எஸ். முஹம்மத் (அப்பாஸி) பிரேரிக்க மௌலவி A.M. அன்ஸாம் (அப்பாஸி) ஆமோதித்தார். அதையடுத்து கலந்துகொண்டோர் மத்தியில் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அதன்பின் அல்உஸ்தாத் M.O. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்கள் பட்டதாரி மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை இரத்தினச் சுருக்கமாக வழங்கினார், அடுத்ததாக அதையொட்டிய சில கருத்துகளை கல்லூரின் சிரேஷ;ட விரிவுரையாளர் அல் உஸ்தாத் M.A.A.M. ளபர் (பஹ்ஜி, B.A. மதீனா) அவர்களும்  முன்வைத்தார்

அதையடுத்து கல்லூரியின் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகள், தஃவா, மேற்படிப்பு போன்ற துறைகளில்; அப்பாஸிப் பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், முயற்சிகள் என்பன பற்றிய கருத்துகள் சமூகமளித்தவர்களால் முன்மொழியப்பட்டன. மௌலவி M.S. முஹம்மத் (அப்பாஸி) பொருளாளர் பதவியில் இருந்து சுயவிருப்பின் பேரில் இராஜினாமாச் செய்ததையடுத்து அப்பதவிக்கு மௌலவி M.M.M. நஸ்ருதீன் (அப்பாஸி) ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட சில கருத்துக்களும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் பின்வருமாறு:

1)   பட்டம் பெறும் மாணவர்களுக்கு; தொழில் வாய்ப்புக்கான வழிகளை செய்யும் முகமாக 3 மாத காலத் தொழில் பயிற்சிக் கற்கை நெறிகளை ஏற்பாடு செய்தல்.

2)   சிரேஷ;ட அப்பாஸிகள் இங்கு கற்கும் மாணவர்களுடன் கல்வி, தஃவா என்பன சம்பந்தப்பட்ட அனுபவங்களைப்  பகிரந்து கொள்வதற்கான சிறு கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தல்.

3)   இங்கு பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் அரபு நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதை வலியுறுத்தல், ஊக்குவித்தல்.

4)   இலங்கையின் சமகால தஃவாக் களத்தில் செயல்படும்  பிழையான  சிந்தனைப் போக்குடைய அமைப்புகள்  பற்றிய பரந்த அளவிலான விளக்கமும் விழிப்பூட்டலும்  மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

5)   2008, 2009, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் ஷரீஆக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து வெளியேறிய குழுமங்களும்; இன்னும் சில தனிப்பட்ட நபர்களும் வருடத்தில் ஒரு நாள் செலவைப் பொறுப்பேற்றனர்.

6)   மத்ரஸாவின் சுமார் 08 இலட்சம் ரூபாய் அளவிலான தற்போதைய கடன் சுமையைக் குறைக்குமுகமாக சமுகமளித்தவர்களினால் கூமார் 04 இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதற்கு வாக்களிக்கப்பட்டது .

7)   கல்லூரியின் நிரந்தர வருமானத்திற்காக வக்பு திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என முன் மொழியப்பட்டது.

8)   கல்லூரியின் பொருளாதரா நிலை சம்பந்தமாக மாணவர்களின் பெற்றார் கூட்டங்களில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

7)   வருடத்திற்கு ஒரு முறை இக்கூட்டம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும், கூட்டத்தில் கலந்துகொண்ட அப்பாஸிய்யீன்களின் சுய விபரங்கள் திரட்டப்பட்டன.  பிற்பகல்; 1.45 மணியளவில்; கஃப்பாரதுல் மஜ்லிஸுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது .

W .  தீனுல் ஹஸன்                               M .T.M. ரிபாக்

(தலைவர்)                                          (செயலாளர்)

குறிப்பு :

சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவின் விபரம் :

தலைவர்         :   அல்உஸ்தாத் W .  தீனுல் ஹஸன் (பஹ்ஜி)

உப தலைவர்     :         அஷ;nஷய்க் M.S.M. மப்ஹும் (பஹ்ஜி)

                     அஷ;nஷய்க்; M.Z.M. மதீர் (அப்பாஸி)

செயலாளர்       :    அல்உஸ்தாத் M.T.M. ரிபாக் (அப்பாஸி)

உப செயலாளர்  :    அஷ;nஷய்க் M.M.M. நஜ்முல் ஹுஸைன் (அப்பாஸி)

பொருளாளர்      :    அஷ;nஷய்க் M.M.M. நஸ்ருதீன் (அப்பாஸி)

உப பொருளாளர் :    அல்ஹாபிள்; M. இர்ஷhத்

செயற் குழு உறுப்பினர்கள்     :

அல்உஸ்தாத் M.O. பௌஸுர் ரஹ்மான் (பஹ்ஜி)

அல்உஸ்தாத் M.A.A.M. ளபர் (பஹ்ஜி)

அல்உஸ்தாத் M.J.M. அதாஉல்லாஹ் (பஹ்ஜி)

அஷ;nஷய்க் M.T.M. ரிஸ்வி (பஹ்ஜி)

அஷ;nஷய்க் M.S. முஹம்மத் (அப்பாஸி)

அஷ;nஷய்க் M.J.M. ரிஸ்மி   (அப்பாஸி)

அஷ;nஷய்க் M.Z.M. ரிப்கான் (அப்பாஸி)

 அஷ;nஷய்க் M.S.M. முர்ஷpத் (அப்பாஸி)

அல்ஹாபிள் M.R.M. இஷ;ரத்

Share This:

Leave a Reply