அல் – அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கற்கும் நூற்றுக்கணக்கான துர்க்கிஸ்தானிய மாணவர்களை கைது செய்யும் எகிப்திய இராணுவம்

அல் – அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடரும் நூற்றுக்கணக்கான துர்க்கிஸ்தானிய மாணவர்களை பாரியளவில் கைது செய்யும் திட்டத்தை எகிப்திய இராணுவம் நிறைவேற்றுகின்றது. இம்மாணவர்களை அவர்களது தாய் நாட்டுக்கு விரட்டுவதற்கான முன்னேற்பாடகவே இது அமைந்துள்ளது. ‘ராபிதது உலமாஇ அஹ்லிஸ்ஸுன்னா’ எனும் இணையத்தளத்தின் தகவலிற்கமைய சுமார் 500 துர்க்கிஸ்தானிய மாணவர்களை அவர்களின் தங்குமிடங்கள், உணவகங்கள் மற்றும் அடிக்கடி சென்று வரக்கூடிய பொது இடங்களில் வைத்து எகிப்திய இராணுவம் கைது செய்துள்ளது. எகிப்திலிருந்து வெளியேற முற்பட்டோர் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் மாணவர்களில் ஒருவர் தகவல் வெளியிடுகையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தாமும் கைது செய்யப்படுவோமோ எனும் அச்சத்தின் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு விட்டு சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பற்றியோ அவர்கள் இருக்குமிடம் பற்றியோ தமக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார்.

கைது செய்யும் இந்நடவடிக்கையை சீன ஜனாதிபதி எகிப்திற்கு விஜயம் மேற்கொண்டதன் பிற்பாடே நிகழ்கின்றது என குறித்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இவர்களின் இந்நடவடிக்கைக்குப் பயந்து நாடு திரும்புவோர் சீன இராணுவத்தின் விசாரனைக்குட்படுத்தப்பட்டு 15 வருடங்கள் அல்லது ஆயுட்கால கடூழிய சிறைத்தண்டனைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றனர். சில சந்தர்பங்களில் மரண தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன. ஹபீபுல்லாஹ் என்பவர் கைது செய்யப்பட்டவர்களில் பிரபல்யமானவர். இவர் இஸ்லாமிய கற்கையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இவர் தமது தமது குடும்பத்தினரை கைது செய்து வேதனை செய்துவிடுவார்களோ எனும் அச்சத்தின் காரணமாக சீன இராணுவத்தின் கட்டளைக்கு அடிபணிந்து நாடு திரும்பிய வேளையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு 15 வருட சிறைத்தண்டனைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply