வாசிக்கத் தவறாதீர்கள்

எமது கல்லூரியினால் தொடர்ச்சியாக காலாண்டுச் சஞ்சிகையாக வெளி வரும் திக்ரா சஞ்சிகையின் 17வது இதழ் வெளிவந்துள்ளது. பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதன் முக்கியத்துவம், நபிகளாரின் சிறப்புப் பெற்ற மஸ்ஜிதுந்நபவியை விட்டு விட்டு திடலில் தொழுததன் இரகசியம் என்ன? பள்ளியில் இடம் போதாமையினாலா திடலில் தொழுதார்கள் போன்ற பல சந்தேகங்களுக்கான தெளிவுகளுடன் திடலில் ஏன் பெருநாள் தொழுகை என்ற தலைப்பில் அல்உஸ்தாத் எம். ஓ. பௌஸுர்ஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் சிறப்பக்கட்டுரையுடன் உல் உஸ்தாத் ளபர் (பஹ்ஜி B.A. மதீனா) அவர்கள் எழுதிய ஸக்காத் விநியோகத்தில் ஏற்படும் குறைகள், தெளிவின்மை போன்ற உப தலைப்புக்களுடன் ஸக்காத் உணரப்படாத தவறுகள் என்ற ஆக்கமும், உல் உஸ்தாத் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் புதிதாத இஸ்லாத்தில் இணைவோர் செய்ய வேண்டியதென்ன? சமூகம் சொல்லிக் கொடுப்பது என்ன போன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் நவமுஸ்லிம்களும், நாம் அறிய வேண்டியவைகளும் என்ற தலைப்பிலான கட்டுரையையும் இதில் இடம் பெற்றுள்ளது குறித்துக்காட்ட வேண்டிய அம்சமாகும்.

சாதனங்களுடன் சகவாசம், ஷவ்வால் மாத ஆறு நோன்பு, அடக்கி ஒடுக்கப்படும் ஈரானிய  ஸுன்னி முஸ்லிம்கள் போன்ற இன்னும் பல முக்கிய தலைப்புக்களில் இச்சஞ்சிகை வெளிவந்துள்ளதை அறியத்தருகிறோம். எனவே இவ்விதழை வாங்கிப் படித்து பயன் பெற்று இச்சஞ்சிகையின் வளர்ச்சிக்கு உதவியாய் இருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் துனை புரிவானாக!

Share This:

Leave a Reply