எம்மதமும் சம்மதமும்

படைப்பின் அதிசயங்கள் படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்த்தி வைக்கின்றன. எந்தத்தூண்களுமின்றி பரந்து விரிந்திருக்கும் வானமாக இருக்கலாம் பொழியும் மழையாக இருக்கலாம் நாம் வாழும் பசுமையான பூமியாக இருக்கலாம் சுழன்று வீசும் காற்றாக இருக்கலாம் நாள்தோறும் வாழ்ந்து மடியும் உயிரிணங்களாக இருக்கலாம் அனைத்துமே இவற்றை அழகுற படைத்து ஒழுங்குற இயங்க வைக்கும் ஏகவல்லவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறன. அந்த ஏகவல்லவன் தான் இநைவனாக இருக்க முடியும் என்பதை சுயாதீன புத்தியுள்ள யாரும் மறுக்கா. ஆக இத்தகையதோர் இறைவன் வகுத்த வாழ்க்கைத் திட்டம்தான் அதாவது தன் படைப்பைப் பற்றி அறிந்த படைப்பாளனின் வாழ்க்கைத் திட்டம்தான் சத்தியமானதும் சாத்தியமானதும் பொருத்தமானதுமாகும் என்பதுதான் யதார்த்தம். இந்தவகையில் அமைந்த சத்திய மார்க்கமே இஸ்லாம்.

உலகில் பல்வேறு மதங்கள்:

வரலாற்றின் ஆரம்ப காலகட்டத்தில் இறைமறுப்பாளர்கள் எனும் நாஸ்திகவாதிகள் இருக்கவில்லை. கடவுளை ஏற்ற மக்கள் ஒன்றில் தௌஹீத்வாதியாக அல்லது இணைவைப்பாளர்களான இருந்துவந்துள்ளனர். காலப்போக்கில் மதங்கள் என்ற பெயரில் பல்லாயிரம் கொள்கைகள் , சித்தான்தங்கள் தோன்றி நடைமுறைக்கும் அறிவியலுக்கும் முரணான தத்துவங்களையும் சிந்தனைகளையும் போதித்து ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொள்ளவே மதங்கள் மீது வெறுப்புக்கொண்டோர் நாஸ்த்திகள் என்ற கொள்கையை வைத்து கொண்டாட்டம் நடத்தத் தொடங்கினர். இப்படித்தான் வாழவேண்டும் என்ற கோட்பாடோ வரையறையோ அற்ற நாஸ்த்திக வாதக்கொள்கை எப்படியும் வாழலாம் என்ற மிருக வாழ்க்கையை உலகுக்கு அறிமுகம் செய்யும் ஒன்றாக மாறியது. மறுமுனையில் உருவான அடுத்த நச்சுக்கொள்கைதான் எம்மதமும் சம்மதம் என்ற தவறான சித்தாந்தம்.

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது : தொடக்கத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரே விதமான நெறியைத்தான் பின்பற்றி வாழ்ந்தனர். ஆனால் காலப்போக்கில் அந்த சத்திய நெறியின் பெரும்பாலான அறிவுறைகளை நழுவவிட்டனர். இதன் விளைவாகவே ஏதோ ஒரு திசையில் கண்ணை மூடிக்கொண்டு மிகத் தீவிரமாக செல்லும் நிலை ஏற்பட்டது. பாதை தவறும் போது பயணம் தவறுகிறது. பயணம் தவறும் போது குறிக்கோள் தவறுகிறது. குறிக்கோள் தவறினால் பிறகு குழப்பங்கள் மோதல்கள் என்று அடுக்கடுக்காய் கசப்பான அனுபவங்கள்…! பிறகு மனிதன் இந்தப் பாதை சரியில்லை என்ற முடிவுக்கு வந்து அதற்கு நேர் எதிரான திசையில் செல்கின்றான். அங்கும் இதேபோன்ற அனுபவங்கள்…! பிறகு மீண்டும் இன்னொரு திசை…!

கொள்கை சுருக்கம்

எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு ஆதரவாக குரல் எழுப்புபவர்கள் ‘எல்லா மதங்களும் – நெறிகளும் சமனானவையே சத்தியமானவையே É மனித வாழ்வில் வெற்றிக்கும் சுபீட்சமான ஈடேற்றத்திற்கும் எந்த மதத்தை – நெறியை வேண்டுமானாலும் பின்பற்றலாம். இதற்கு மாறாக ஒரு குறிப்பிட்ட நெறியை மட்டுமே பின்பற்ற வேண்டும் É அது மட்டுமே சத்தியமானது எனச் சொல்வது பிற்போக்குத்தனமானது’ மட்டுமல்ல சகிப்புத்தன்மைக்கு முரணானதுமாகும் என வாதிடுகின்றனர். இந்த வாதத்தை மேலோட்டமாகப் பார்த்தால் இது ஏதோ பரந்துவிரிந்த ஒரு கொள்கை போலவும் சகிப்புத்தன்மைக்கே இலக்கணம் வகுப்பதுபோலவும் தெண்படலாம். இந்த மாயத்தோற்றத்தைக் கண்டுமயங்கும் பாமரமக்களும் É இக்கருத்தோட்டத்திற்கு பலியாகி விடுகின்றனர்.

தோற்றத்திற்கான காரணம்

உண்மையில் மதம் பற்றிய தவறான சிந்தனைப் பாங்கின் விளைவே இதன் அடிப்படை எனலாம். மதத்திற்கு (வஹி) வேத வெளிப்பாடுதான் மூல ஆதாரம் என்று ஏற்றுக்கொள்பவர்கள் , அம்மூல அறிவுக்கு வெளியே மத உண்மைகள் இருப்பதாக நம்பமாட்டாhர்கள். அப்படி இருப்பது சாத்தியமும் அல்ல. ‘யதார்த்த உண்மையை தேடும் மனித முயற்சியின் விளைவே மதம்’ என்ற கருத்துடையோரின் கண்டுபிடிப்புத்தான் எம்மதமும் சம்மதம் என்ற நச்சுக்கொள்கை. இந்நோய் தோன்றியது வேத வெளிப்பாட்டை (வஹியை) ஏற்றுக்கொள்ளாத இதயங்களில் தான்.

இக்கொள்கையை விளம்பரப்படுத்தல்

இஸ்லாத்தின் எழுச்சி மிகு சங்கநாதத்தை கேட்டவுடன் பல மதங்கள் தம் முகங்களை மறைத்துக்கொள்ளத் தொடங்கினர். சில ஒழிந்தே போய்விட்டன. ஒரு சில மதங்கள் எஞ்சி நின்றாலும் அவற்றை பின்பற்றுவோர் இணை வைத்தலை வெறுக்கும் நிலை உருவாயிற்று. இணைவைப்பின் ஆழ அகலங்களை அலசி எடுத்து தெளிவாக சமர்ப்பிக்கும் வேலையில் ஆயிரமாயிரம் கடவுல்கள் உண்டு என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ள படித்தவர்கள் தயங்கினர். இதன் ஒரு விளைவாகவே இந்துமத அறிஞர்கள் சிலர் முன்வந்து தம்மதத்தை தைரியமாக விமர்சித்தனர். இப்படியான தோல்விகளின் பிரதிபளிப்பாகவே இச்சித்தாந்தத்தை பகிரங்கமாக விளம்பரப்படுத்த முன்வந்தனர்.

இவர்களின் சில மூல தத்துவங்கள்

இக்கருத்தோட்டத்தின் படி வணக்க முறைகள் எப்படி இருந்தாலும் வணங்கப்படும் சக்தி இறைவனாக இருப்பதால் அனைத்து விதமான வணக்கங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையே…! சமனானவையே…! அசல்மதிப்பு உயிருக்குத்தானே தவிர உடலுக்க அல்லஈ முக்கியத்துவம் வணக்கத்திற்குத்தானே தவிர வணங்குகிற முறைக்கு அல்ல! முஸ்லிம் ஹிந்து பௌதர் கிறிஸ்தவர் பாரசீகர் அனைவருமே தமக்கே உரிய முறையில் இறைவனை வணங்குகின்றனர். அவர்களுடைய வணக்க வழிபாடுகள் பலவிதமாக இருந்தபோதிலும் அனைவரும் இறைவனை வணங்குபவர்களே! அனைவரும் இறை உவப்பை நாடுபவரே! ஆகையால் அனைவரும் சத்தியத்தில் இருப்பவரே.

இச்சிந்தனை அனைத்து மதங்களின் அந்தஸ்தையும் நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கிறது. மற்ற எல்லா மதங்களும் எப்படி சத்தியமானவையோ அதே போல் இஸ்லாமும் சத்திய நெறிதான். ஆனால் அது மட்டுமே சத்தியமானது என்பது சரியல்ல என்று இக்கருத்துடையோர் வாதிடுகின்றனர்.

இதனை பெரும் தத்துவமாக புகழ்ந்து இதற்கு ஆதரவாக கூடை கூடையாக நூல்கள் எழுதி இலவசமாகவும் மலிவு விலையிலும் மக்களுக்கு வழங்குகின்றனர். இதனைத் தத்துவமாக சிறப்பிக்க இது ஒன்றும் தத்துவ வாதமல்ல, மாறாக வெறுமனே தடுமாற்ற வாதம்
இப்பொழுது நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் É ‘இறைவன் ஒருவனாக இருப்பதும் உண்மைதான் É
இறைவன் இரண்டாக இருப்பதும் உண்மைதான்!
இறைவனுக்கு இணைதுணையில்லை என்பதும் உண்மைதான்!
இறைவனுக்கு பிள்ளை குட்டிகள் உண்டு என்பதும் உண்மைதான்!
இறைவன் அவதரிப்பதில்லை என்பதும் உண்மை É அவதரிக்கறான் என்பதும் உண்மைதான்.
ஒன்றுக்கொன்று முரண்பட்ட இக்கருத்துக்களில் ஏதேனும் ஒன்றுதானே உண்மையாக இருக்க முடியும். இது மட்டுமல்லÉ ஏனைய விடயங்களிலும் இப்படியான விசித்திர விடயங்களை அவதானிக்கலாம்.
மரணத்திற்குப் பிறகு வேறு ஓர் உலகத்திற்கு செல்லவேண்டும் என்றாலும் சரி என்று கூற வேண்டும். இதற்கு நேர் எதிராக இதே உலகில் மனிதன் மறுபிறவி எடுக்கிறான் என்றால் அதையும் சரி என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஒரு மார்க்கம் இறைத்தூதர்களின் வழியில் வாழ்ந்தாள் தான் இறை அருளும் சுவனமும் கிட்டும் என்றும், மற்றொரு மதம் மக்கள் அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமாக சிலுவையில் அறையப்பட்ட தேவகுமாரன் மீது நம்பிக்கை கொண்டால் நேரடியாக சுவர்க்கம் செல்லலாம் என்றும் மற்றொரு மதம் ஒரு இலட்சத்து 84000 தடவை ஆன்மா மாறிமாறி பிறப்பெடுத்து தன் கரும வினைகளை முடித்துத் தூய்மையடைந்து பிறகு இறைவனுடன் கலந்து விடுகிறது என்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு மதத்தின் போதனைகளிலும் அறிவுறைகளிலும் ஒன்றுக்கொன்று முரணான பல நூறு வேறுபாடுகள் இருப்பதை சாதாரன மனிதன் கூட அறிந்திருக்கின்றானே…! நிலமை இப்படியிருக்க…
எப்படி பிறரை , தம்மை விளம்பரப்படுத்துகின்றனர்.

‘தம்முடைய மதம்தான் உண்மையானது’ என்று யாரேனும் கூறினால் அவர்கள் குறகிய நோக்குடையவர்கள், வகுப்புவாதிகள் , சகிப்புத்தன்மை அற்றவர்கள் , மதவெறியர்கள் , பிற்போக்குவாதிகள் , மதங்களை மட்டந்தட்டும் ஒழுக்கக்குற்றவாளிகள் , பிறமதங்களின் அந்தஸ்தை குறைக்க முயல்பவர்கள் என்றெல்லாம் விமர்சன வார்த்தைகளை பொழிகின்றனர்.

தம்மை சகிப்புத்தன்மை கொண்ட சீர்த்திருத்தவாதிகள் என்று விளம்பரப்படுத்திக்கொள்ளும் இவர்கள் தம்முடைய இந்த மத-இணைப்புத்தத்துவத்திற்கு ‘யுனிவர்ஸ்ல் ரிலிஜன்’ (உலக மதம்) , ‘சயின்டிஃபிக் ரிலிஜன்’ (விஞ்ஞான மதம்) என்றெல்லாம் மக்களை ஈர்த்தெடுக்கும் நாமங்களை சூட்டிக்கொள்கின்றனர். பாரத ரத்னா பட்டம்பெற்ற டாக்டர் பகவன்தாஸ் நுளளநவெயைட ருnவைல ழுக யுடட சுநடபைழைளெ எனும் நூலை எழுதி இத்தகைய நாமங்களை சூட்டி ஓர் அவியல் மதத்தை உருவாக்க முயன்றிருப்பதைக் காணலாம்.

அறிவுபூர்வமான ஒரு முயற்சியா?

மதத்தை மறுக்கும் நாஸ்திகர்கள் உட்பட விபரமறிந்த சிறுவர் சிறுமிகள் கூட பொதுவான நன்மை-தீமைகளை புரிந்துகொள்கின்றனர். அவைதான் வாழ்வின் அடிப்படை எனக் கூறுவது ஒரு மதத்தின் சிறப்பம்சமாக ஆகிவிடா. ஆக ஒரு மதத்தின் சிறப்பம்சம் அதன் அடிப்படை கோட்பாடுகளுடன் இணைத்து நோக்கப்படுமே தவிர வெறுமனே ஒழுக்கமான்புகளை வைத்து மாத்திரமல்ல.
ஒவ்வொரு மதத்திலும் ஒரு சில கருத்துகள் தான் பரஸ்பர இணக்கமாக இருக்கின்றனவே தவிர பெரும்பாலான கருத்துக்கள் நேர் எதிரானவையாகவும் முரண்பட்டுமே விளங்குகின்றன. மதங்களிடையே வெளிப்படையாகவே வேறுபாடுகள் இருக்கும்போது எப்படி இணக்கமான கருத்துக்களின் சாரத்தை மற்றும் பிழிந்தெடுக்க முடியும். ஒரு மதத்திலிருந்து தங்களுக்கு விருப்பமான பகுதிகளை சேர்க்கவும் விரும்பாத பகுதிகளை விலக்கவும் இவர்களுக்கு யார் அனுமதியளித்தது…? அப்படியே ஒருவர் துணிந்து இத்தக முயற்சியில் ஈடுபட்டாலும் யார் அதை மதிக்கக்போகிறார்கள்…?

தம்முடன் இஸ்லாத்தை இணைக்கும் இருவிதமான காட்சிகள்
முதல்விதம் : மரியாதைக்குரிய வினோபா அவர்கள் மேற்கூறப்பட்ட முயற்சியின் அடிப்படையில் தான் ‘ரூஹூல் குர்ஆன்’ எனும் நூலை எழுதினார். நன்மை-தீமை மற்றும் ஒழுக்க போதனைகள் சிலவற்றை மட்டும் மேலோட்டமாக எடுத்துக்கொண்டு ‘அனைத்து மதங்களும் இவற்றைத் தானே போதிக்கின்றன! வாருங்கள்! இவற்றின் அடிப்படையில் ஒன்றுபடுவோம்’ என அழைப்புவிடுத்தார். ஆனால் இஸ்லாமிய அகீதா பற்றிய திருமறை வசனங்களை தொட்டுக்கூட பார்க்கவில்லை.
அடுத்தவிதம் : இஸ்லாத்தின் அறிவுறைகளும் இவர்களின் கொள்கையை சார்ந்திருக்கின்றன என நிரூபிக்க பகவன்தாஸ் போன்றோர் திருக்குர்ஆன் வசனங்களுக்கு தம் மனம் போன போக்கில் விளக்கம் தந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, அல்குர்ஆனில் மூன்றாவது அத்தியாயம் (ஆலு இம்ரான் : 103) ஆம் வசனத்திலுள்ள இறைவனின் கயிர் என்பதன் நாட்டம் அல் குர்ஆனாகும். ஆனால் பகவன்தாஸ் ‘இறைவனின் அன்புக்கயிற்றை பிடித்துக்கொள்ளுங்கள்’ என்று மொழிபெயர்த்து இதிலுள்ள ‘அன்பு’ க்கு விளக்கம் தந்து வசனத்தின் பொருளையே மாற்றிவிடுகிறார். இப்பொழுது அதன் பொருள் இப்படி மாறிவிட்டது : ‘ஒவ்வொரு மனிதனும் தனக்கு விருப்பமான நெறியில் இருந்துகொண்டே , அன்பை மையமாகக்கொண்டு வாழவேண்டும். குர்ஆனை மையமாகக்கொண்டு ஒன்றினையத் தேவையில்லை.’
இதே அத்தியாயத்திலுள்ள இறைவனிடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே நெறி இஸ்லாம் மாத்திரம் தான் என்று விளக்கும் இறை வசனங்களை மூடி மறைத்து விட்டு திருக்குர்ஆனின் உயிரோட்டத்திற்கு மாற்றமான ஒரு கருத்தை இஸ்லாத்தின் மீது திணிக்கறார். இப்படியெல்லாம் ‘திணிப்பு வேலை’ செய்யாமல் உலகலாவிய ஒரு மதத்தை உருவாக்க இயலாதே…!
வேதக்காரர்களுக்கு மத்தியில் புகுத்தும் முயற்சி
இற்றைக்கு முஸ்லிம்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் ஆகியோரே வேதக்காரர்களாக அறியப்படுகின்றனர். நமக்கு மத்தியில் இச்சிந்தனையை வளர்க்க பின்வரும் மந்திரங்களை மொழிகின்றனர். ‘அனைத்து நபிமார்களும் ஒரே நெறியை தான் பின்பற்றினர். ஆகவே எந்த நபியை – எந்தவொரு நெறியை பின்பற்றினாலும் இறைவனுக்கு கீழ்படிவதாகவே பொருள்….! குர்ஆனையும் இஸ்லாத்தையும் தான் மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை’ என்கின்றனர். இதற்கான பதிலை இக்கட்டுரையின் இறுதியில் காணலாம்.
மத சார்பற்ற அரசுகளை உருவாக்கும் கனவு
‘சட்டங்களை உருவாக்குவாதில் மதத்திற்கோ இறைவனுக்கோ பங்கில்லை. அந்த இரண்டையும் ஒதிக்கிவிட்டே சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்பது தான் மதசார்பற்ற அரசின் பொருளாகும். வாழ்வின் அனைத்து விவகாரங்களும் இறைக்கட்டளைக்கு உட்பட்டே தீர்வுகாண வேண்டும் எனும் மதக்கருத்தோட்டத்துடன் இது நேரடியாக மோதுகிறது.
இலக்கு வைக்கப்படும் தேசிய கல்வி
பல நாடுகளிலும் தெசிய கல்வி முறைகள் இறைசக்தியை மறைத்து இயற்கை காரணிகளை மாத்திரம் மையப்படுத்தும் நாஸ்த்திக சடவாதத்தை பிரதிபலிப்பவையாகவே இருக்கின்றன என்பதை சிந்திப்பவர் புரிவர். இதே தேசிய கல்வி முறையை இவர்களும் இலக்கு வைக்கின்றனர் என்பதை இவர்களின் வார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன. ‘நமக்கிடையே உள்ள கலாசார வேற்றுமைகளை மிகைப்படுத்தி பேசக்கூடாது. இதன் அடிப்படையிலான ஒரு தெசிய கல்வி முறையை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்…’
இதன் பாதிப்புக்கள்
தான் இருப்பது சத்தியத்திலா அசத்தியத்திலா என்பதை அறிந்துகொள்ள அவனிடம் எந்த வழிமுறையும் இல்லை.
நன்மையையும் தீமையையும் பிரித்தரிவிக்கும் சரியான அளவுகோள் இல்லாததால் தம் மனம் போன போக்கில் வாழத் தொடங்கிவிடுகிறான்.
தான் பின்பற்றுவது எல்லாமே சத்தியமானதுதான் என்று எண்ணி தன்னைத் தானெ ஏமாற்றிக்கொள்கிறான்.
தான் செல்வது சத்திய வழி அல்ல என்று தெரியவந்தால் அதை உதரித்தள்ளி விட்டு உண்மையை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலோ மன உறுதியோ அவனிடம் இருப்பதில்லை.
இதுவும் இச்சிந்தனை தாக்கமா?
இஸ்லாமியர் என்ற பெயரில் குர்ஆன் ஸூன்னாவுடன் நேரடியாக முட்டக்கூடிய குப்ரையும் ஷpர்க்கையும் ஏற்படுத்தி விடக்கூடிய கொள்கைகைளைக் கொண்ட வழிகெட்ட பிரிவினர் பலர் உள்ளனர். கலிமாவையும் மொழிந்துள்ளார்கள் என்ற ஒரேயொரு காரணத்தை மையப்படுத்தி அனைவரையும் சமதர முஸ்லிம்களாக பார்க்கவேண்டும் என்ற சிந்தனை ‘எம்மதமும் சம்மதம்’ எனும் நச்சுக்கொள்கையின் தாக்கமா? என சிந்திக்கத் தோன்றுகிறது. இத்தகையோர் குப்ரை குப்ராகவும் ஷpர்க்கை ஷpர்க்காகவும் நோக்குவது கலிமாவின் நிபந்தனைகளi ஒன்றென்பதை மறந்து விடக்கூடாது.
இஸ்லாத்தின் அறைகூவல்
‘நிச்சயமாக இஸ்லாம் தான் அல்லாஹ்வினிடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நெறியாகும்.’ (அல்குர்ஆன் 3:19)
‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் அது ஒரு போதும் அவரிடம் இருந்து ஒப்புக்கொள்ளப்படமாட்டாது’ (அல்குர்ஆன் 3:85)
‘எவன் கரத்தில் முஹம்மதின் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த உம்மத்தின் எந்த ஒரு மனிதனிடம் யூத , கிறிஸ்தவர்கள் உட்பட – என்னுடைய தூதுத்துவச் செய்தி எட்டிய பிறகும் அவன் நான் கொண்டுவந்த நெறியை நம்பாமல் மரணம் அடைந்து விட்டால் அவன் நரகவாசியே ஆவான்.’ (முஸ்லிம்)
மௌலவி யூஸூப் ஹூஸைன் இப்னு அமீன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close