இஸ்ரா, மிஃராஜின் போது ஸஹீஹாக தரிபட்ட நிகழ்வுகளும், தரிபடாத நிகழ்வுகளும் :

ஆக்கம் : அர்ஷத் இஸ்மாஈல் (தரம் : 06)

நபிகளார் (ஸல்) அவர்களின் தஃவாப் பாதையில் துன்பங்கள், இழப்புக்கள் என பல முட்கள் காணப்பட்டன. எதிரிகளின் அநியாயங்களுக்கு முன் நபிகளாருக்கு அரணாக இருந்த சிறிய தந்தை அபூதாலிபின் மரணம், பல் வழிகளிலும் உதவியாய் இருந்த அன்பு மனைவி கதீஜா (ரழி) அவர்களின் மறைவு, ஏமாற்றமளித்த தாயிப் பயணம் என்பன நபியவர்களின் உள்ளத்தை தைத்து கவலையேற்படுத்திய தருணத்தில் அல்லாஹ் நபிகளாரை ஆறுதல்படுத்தும் முகமாக வழங்கிய மிகப் பெரும் பரிசே இஸ்ரா எனும் இராப் பயணமும், மிஃராஜ் எனும் விண்ணுலக யாத்திரையுமாகும்;. இப்பயணத்தில் நிகழ்ந்த ஸஹீஹான நிகழ்வுகள் மக்கள் மன்றத்தில் உலா வரும் அதே நேரம் பலவீனமான செய்திகளும் வலம் வந்த வண்ணமிருக்கின்றன. இக்கட்டுரையினூடாக இஸ்ரா, மிஃராஜின் போது ஸஹீஹாக தரிபட்ட நிகழ்வுகளையும் தரிபடாதவைகளையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இஸ்ரா, மிஃராஜின் போது ஸஹீஹாக தரிபட்ட நிகழ்வுகள்

01. நபிகளாரின் நெஞ்சு பிளக்கப்பட்டு தூய்மையாக்கப்படல் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘நான் கஃபாவின் ஹிஜ்ர் பகுதியில் சாய்ந்த வண்ணம் இருக்கும் போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கினார்கள். அவர் எனது நெஞ்சைப் பிளந்து ஸம்ஸம் நீரினால் எனது இதயத்தைக் கழுவினார்கள். பின்பு ஈமான் மற்றும் ஹிக்மத் என்பவற்றால் நிரப்பப்பட்ட தங்கப்பாத்திரமொன்று கொண்டு வரப்பட்டது. பின்பு அதனை எந்நெஞ்சில் ஊற்றி (பிளந்த நெஞ்சை) மூடிவிட்டார்கள். (புகாரி : 3207, 3887, முஸ்லிம் : 163, 164)

02. இஸ்ரா பயணம் அழைத்துச் செல்லப்படும் நபிகளார் :

புராக் எனும் மிருகம் கொண்டு வரப்பட்டது. அது கழுதையை விட உயரமானதாகவும் கோவேரிக் கழுதையை விட கட்டையானதாகவும் வெந்நிறமானதாகவும் காணப்பட்டது. அது அதன் பார்வை எட்டும் தூரத்திற்கு அதன் எட்டை வைக்கின்றது. அதில் ஏறி நான் பயணித்தேன். ஜிப்ரீல் (அலை) என்னை மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்றார். நபிமார்கள் தமது வாகனங்களைக் கட்டும் திண்ணையிலே அம்மிருகம் கட்டப்பட்டது. நான் மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்து 02 ரக்அத்கள் தொழுதேன். பின்பு நான் வெளியேறவே ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் மதுபானக் கிண்ணமொன்றையும் பால் கிண்ணமொன்றையும் கொண்டு வந்தார். நான் பாலை தேர்ந்தெடுத்தேன். அப்போது நீர் இயற்கை சுபாவத்திற்கு நேர்பட்டீர் என ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். பின்பு வானலோகம் அழைத்துச் செல்லப்பட்டேன். (முஸ்லிம் : 162)

மற்றொரு அறிவிப்பில் ஆதம் (அலை) மற்றும் ஏனைய நபிமார்களுக்கு அந்த இரவில் நபிகளார் தொழுகை நடாத்தினார்கள் எனவும் இடம் பெற்றுள்ளது.

03. நபிகளாரின் மிஃராஜ் பயணம் :

1ம் வானில் நபிகளார்

பின்பு ஜிப்ரீல் (அலை) கீழ் வானம் வரை அழைத்துச் சென்று கதவை திறக்கும்படி 1ம் வானின் காவலாளியிடம் வேண்ட நீர் யார் எனக் கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நான் ஜிப்ரீல் எனப் பதிலளிக்க உம்முடன் யார் இருக்கின்றார் என வினவப்பட்டது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஹம்மத் என்றார். மீண்டும் அவர் நபியாக அனுப்பப்பட்டுவிட்டாரா என வினவப்பட அவர் ஆம் என பதிலளித்தார். வருக வருக! நல்வரவு வந்து விட்டது எனக் கூறப்பட்டு 1ம் வானம் திறக்கப்பட்டது. நான் (அங்கு) அடைந்த போது ஆதம் (அலை) அவர்கள் அதில் இருந்தார். ஜிப்ரீல் (அலை) இதோ உமது தந்தை ஆதம் இருக்கின்றார் அவருக்கு ஸலாம் கூறுங்கள் எனக் கூறினார்கள். எனவே நான் அவருக்கு ஸலாம் கூறவே அவர் பதிலளித்தார். சிறந்த நபியும் சிறந்த சகோதரனும் வருக வருக என ஆதம் (அலை) கூறினார்கள். (புகாரி : 3887, முஸ்லிம் : 162)
மற்றுமொரு அறிவிப்பில் 1ம் வானம் திறக்கப்பட்ட போது கீழ் வானத்திற்கு நாம் ஏறினோம். அங்கொரு மனிதர் உட்கார்ந்திருந்தார். அவரது வலப்பறத்திலே பல கூட்டங்களும் இடப் புறத்திலே பல கூட்டங்களும் காணப்பட்டன. அவர் தனது வலப் புறத்தைப் பார்த்தால் சிரிப்பார். இடப் புறத்தைப் பார்த்தால் அழுவார். அவர் சிறந்த சகோதரனும் சிறந்த நபியும் வருக வருக என்றார். ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இவர் யார் என நான் கேட்க இவர் தான் ஆதம் (அலை) எனக் கூறினார்கள். வலப்புறமும் இடப்புறமும் இருக்கும் கூட்டங்கள் அவரது பிச்சலங்கள். வலப் புறத்தில் இருப்போர் சுவர்க்கவாதிகள். இடப்புறத்தில் இருப்போர் நரகவாதிகள். எனவே அவர் வலப்புறம் பார்த்தால் சிரிப்பார். இடப் புறம் பார்த்தால் அழுவார். (முஸ்லிம் : 163)

2ம் வானில் நபிகளார்.

ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு 2ம் வானத்திற்கு ஏறினார். (முதலாம் வானில் நடைபெற்ற சம்பாசனை இங்கு நடைபெற்று அனுமதி வழங்கப்பட்டது) நான் அங்கு அடைந்த போது அங்கு யஹ்யா (அலை) மற்றும் ஈஸா (அலை) இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் இது யஹ்யாவும் ஈஸாவுமாவர். அவ்விருவருக்கும் ஸலாம் கூறுங்கள் எனக் கூற நான் ஸலாம் கூற அவ்விருவரும் பதிலளித்தனர். சிறந்த சகோதரனும் சிறந்த நபியும் வருக வருக என அவ்விருவரும் கூறினார்கள். (புகாரி : 3887, முஸ்லிம் : 162)
மற்றுமொரு அறிவிப்பில் ஈஸாவை நடுத்தர உயரமுடையவராகவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களுக்கு சாய்ந்தவராகவும் சுருண்ட தலை முடியுடையவராகவும் கண்டேன். (புகாரி : 3239, முஸ்லிம் : 165)

3ம் வானில் நபிகளார்.

ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு 3ம் வானத்திற்கு ஏறினார். (முதலாம் வானில் நடைபெற்ற சம்பாசனை இங்கு நடைபெற்று அனுமதி வழங்கப்பட்டது) நான் அங்கு அடைந்த போது அங்கு யூஸுப் (அலை) அவர்கள் இருந்தார்கள். இவர்தான் யூஸுப் ஸலாம் கூறுங்கள் என ஜிப்ரீல் (அலை) கூற நான் அவருக்கு ஸலாம் சொல்லவே அவர் பதிலளித்து விட்டு சிறந்த சகோதரனும் சிறந்த நபியும் வருக வருக எனக்கூறினார். (புகாரி : 3887)
மற்றுமொரு அறிவிப்பில் அவருக்கு முழு அழகில் அரைவாசி கொடுக்கப்பட்டிருந்தது என இடம்பெற்றுள்ளது. (முஸ்லிம் : 162)

4ம் வானில் நபிகளார்.

ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு 4ம் வானத்திற்கு ஏறினார். (முதலாம் வானில் நடைபெற்ற சம்பாசனை இங்கு நடைபெற்று அனுமதி வழங்கப்பட்டது) நான் அங்கு அடைந்த போது அங்கு இத்ரீஸ் (அலை) அவர்கள் இருந்தார்கள். இவர்தான் இத்ரீஸ் ஸலாம் கூறுங்கள் என ஜிப்ரீல் (அலை) கூற நான் அவருக்கு ஸலாம் சொல்லவே அவர் பதிலளித்து விட்டு சிறந்த சகோதரனும் சிறந்த நபியும் வருக வருக என கூறினார். (புகாரி : 3887, முஸ்லிம் : 162)

5ம் வானில் நபிகளார்.

ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு 5ம் வானத்திற்கு ஏறினார். (முதலாம் வானில் நடைபெற்ற சம்பாசனை இங்கு நடைபெற்று அனுமதி வழங்கப்பட்டது) நான் அங்கு அடைந்த போது அங்கு ஹாரூன் (அலை) அவர்கள் இருந்தார்கள். இவர்தான் ஹாரூன் ஸலாம் கூறுங்கள் என ஜிப்ரீல் (அலை) கூற நான் அவருக்கு ஸலாம் சொல்லவே அவர் பதிலளித்து விட்டு சிறந்த சகோதரனும் சிறந்த நபியும் வருக வருக என கூறினார். (புகாரி : 3887, முஸ்லிம் : 162)

6ம் வானில் நபிகளார்.

ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு 6ம் வானத்திற்கு ஏறினார். (முதலாம் வானில் நடைபெற்ற சம்பாசனை இங்கு நடைபெற்று அனுமதி வழங்கப்பட்டது) நான் அங்கு அடைந்த போது அங்கு மூஸா (அலை) அவர்கள் இருந்தார்கள். இவர்தான் மூஸா ஸலாம் கூறுங்கள் என ஜிப்ரீல் (அலை) கூற நான் அவருக்கு ஸலாம் சொல்லவே அவர் பதிலளித்து விட்டு சிறந்த சகோதரனும் சிறந்த நபியும் வருக வருக என கூறினார். நான் அவரைக் கடந்து போகும் போது அவர் அழுதார் ஏன் அழுகின்றீர் என அவரிடம் வினவப்பட எனக்குப் பின்னால் நபியாக அனுப்பப்பட்டவரின் கூட்டத்திலிருந்து எனது கூட்டத்தாரை விட அதிகமானோர் சுவனம் செல்வார்கள் என்பதால் அழுகிறேன் என்றார். (புகாரி : 3887, முஸ்லிம் : 162)

மற்றொரு அறிவிப்பில் மூஸா (அலை) (யமனிலுள்ளவர்களான) ஸனூஆ குலத்தாரைப் போன்று நிறமுடையவராகவும் உயரமானவராகவும் சுருண்ட முடியுடையவராகவும் காணப்பட்டார் என இடம் பெற்றுள்ளது. (புகாரி : 3239, முஸ்லிம் : 165)

7ம் வானில் நபிகளார்.

ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு 7ம் வானத்திற்கு ஏறினார். (முதலாம் வானில் நடைபெற்ற சம்பாசனை இங்கு நடைபெற்று அனுமதி வழங்கப்பட்டது) நான் அங்கு அடைந்த போது அங்கு இப்றாஹீம் (அலை) அவர்கள் இருந்தார்கள். இவர்தான் உங்கள் தந்தை இப்றாஹீம் ஸலாம் கூறுங்கள் என ஜிப்ரீல் (அலை) கூற நான் அவருக்கு ஸலாம் சொல்லவே அவர் பதிலளித்து விட்டு சிறந்த சகோதரனும் சிறந்த நபியும் வருக வருக எனக் கூறினார். (புகாரி : 3887, முஸ்லிம் : 162)

மற்றுமொரு அறிவிப்பில் அவரது பிள்ளைகளில் நானே அவருக்கு ஒப்பானவராக இருக்கின்றேன் என நபிகளார் (மிஃராஜ் சம்பவத்தைக் கூறும் போது) கூறினார்கள். (முஸ்லிம் : 168)

ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் நபிகளார் :

7ம் வானத்திலிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு ஒரு ஆற்றங்கரைக்குச் சென்றார். அதிலே முத்து, பவளம், மாணிக்கத்திலான கூடாரங்கள் காணப்பட்டன.

மற்றுமொரு அறிவிப்பில் முத்தாலான ஒரு மாளிகை காணப்பட்டது. அதை நான் தொடவே நறுமணம் வீசும் கஸ்தூரியாக இருந்தது. ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இது என்ன எனக், கேட்க அல்லாஹ் உமக்களித்த கவ்ஸர் இதுவே என்றார். முத்து, பவளம் பதியப்பட்ட வெள்ளி, தங்கப் பாத்திரங்கள் அதன் பக்கத்தில் காணப்பட்டன. அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் பாத்திரங்களிலிருந்து நான் எடுத்து அந்நீரை ஊற்றிக் குடித்தேன். அது தேனை விட இனிப்பானது. கஸ்தூரியை விட மணமானது.

மற்றுமொரு அறிவிப்பில் அங்கு ஸல்ஸபீல் எனப்படும் ஓடும் ஊற்று அங்கிருந்தது. அதிலிருந்து கவ்ஸர், நூருர் ரஹ்மா எனும் இரு ஆறுகள் ஊற்றெடுக்கின்றன. என நபிகளார் கூறினார்கள்.

ஸித்ரதுல் முன்தஹா எனும் மரத்தடியில் நபிகளார் :

நபிகளார் கூறினார்கள் : பின்பு நான் ஸித்ரதுல் முன்தஹா வரை உயர்தப்பட்டேன். அதன் இலைகள் யானையின் காதுகளைப் போன்றிருந்தன. அதன் பழங்கள் கூஜாக்களைப் போன்றிருந்தன. இனம் புரியாத (நிறங்கள்) அதைச் சூழ்ந்து கொண்ட போது (அதன் அமைப்போ முற்றிலும்) மாறிவிட்டது. அல்லாஹ்வின் படைப்புகளில் எவராலும் அதன் அழகை விவரிக்க முடியாது. பின்பு அல்லாஹ் எனக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்தான். (முஸ்லிம் : 162)

மற்றுமொரு அறிவிப்பில் நபிகளார் கூறினார்கள் : ‘ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதுவே ஸித்ரதுல் முன்தஹா என்றார். அங்கு நான்கு ஆறுகள் காணப்பட்டன. இரு ஆறுகள் உட்புறத்தாலும் மேலும் இரு ஆறுகள் வெளிப்புறத்தாலும் ஓடிக்கொண்டிருந்தன. இவைகள் என்ன என ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் நான் வினவ, உட்புறத்தில் ஓடும் இவ்விரண்டும் சுவர்கத்திலுள்ள இரு ஆறுகள் ஆகும். வெளிப்புறத்திலுள்ள இரண்டும் நைல் மற்றும் புராத் நதிகளாகும் என்றார். (புகாரி : 3887, முஸ்லிம் : 164)

அங்கு நபிகளார் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600 இறக்கைகளுடன் (நிஜத் தோற்றத்தில்) பார்த்தார்கள். (முஸ்லிம் : 174)

நபிகளாருக்கு இங்கு வழங்கப்பட்ட 3 கட்டளைகள் :

1- ஐவேளைத் தொழுகைகள் வழங்கப்பட்டன.
2- ஸுறா பகராவின் இறுதி 2 ஆயத்துக்கள் அருளப்பட்டன.
3- அவரது உம்மத்தில் அல்லாஹ்விற்கு இணையேதும் வைக்காதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் பெரும் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக அறிவிக்கப்படல். (முஸ்லிம் : 173)

50 நேரத் தொழுகை 5 நேரங்களாகக் குறைக்கப்படல் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘ ஓவ்வொரு நாளிலும் 50 நேரத் தொழுகைகள் எனக்கு கடமையாக்கப்பட்டன. நான் திரும்பி வரும் போது மூஸாவின் பக்கத்தால் சென்றேன். உமக்கு இறைவன் எதை ஏவினான் எனக் கேட்க 50 நேரத் தொழுகை என்றேன். உமது உம்மத் ஒரு நாளையில் 50 நேரம் தொழ சக்தி பெறமாட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உமக்கு முன்னால் மனிதர்களை நான் சோதித்து அனுபவப்பட்டுள்ளேன். உமது ரப்பிடம் சென்று குறைக்கும் படி கேளுங்கள் எனக் கூற நான் மீண்டும் சென்றேன். (இறைவனிடம் பல தடவைகள் திரும்பிச் சென்று ஐந்தாக குறைக்கப்படுகின்றது. (புகாரி : 3887, முஸ்லிம் : 162)

அல்பைத்தல் மஃமூரில் நபிகளார் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘பைதுல் மஃமூர் எனும் (இறையில்லம்) எனக்கு காட்டப்பட்டது. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இது என்ன? எனக் கேட்க இதுவே அல்பைத்துல் மஃமூர் (எனும் வானிலுள்ள இறையில்லம்) ஓவ்வொரு நாளும் இதனுள் 70 ஆயிரம் மலக்குமார்கள் நுழைவார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியேறினால் திரும்ப அங்கு நுழைய மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாயிருக்கும் எனக் கூறினார்கள். (புகாரி : 3207, முஸ்லிம் : 164)

நபிகளார் செவியுற்ற பேனையின் சப்தம் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘நான் மிஃராஜ் பயணம் அழைத்துச் செல்லப்பட்டேன். உயரப் போய்க் கொண்டிருக்கும் போது (மலக்குமார்கள் விதிகளை எழுதும்) பேனைகளின் சப்தங்களைச் செவியுற்றேன். (முஸ்லிம் : 163)

சுவனத்தில் நுழைவிக்கப்பட்ட நபிகளார் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘நான் சுவனத்தில் நுழைவிக்கப்பட்டேன். அதிலே முத்தினால் ஆன கோபுரங்கள் காணப்பட்டன. அதன் மண் (மணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது. (முஸ்லிம் : 163)

நபிகளார் கண்ட வேதனைகள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னை மிஃராஜ் அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தின் பக்கத்தால் சென்றேன். அவர்களுக்கு ஈயத்திலாலான நகங்கள் கொடுக்கப்பட்டு தமது முகங்களையும் நெஞ்சுகளையும் கீறிக் கிழித்துக் கொண்டிருந்தார்கள். ஜிப்ரீலே இவர்கள் யார் எனக் கேட்க மக்களின் மானங்களைக் கீறிக் கிழித்து குறை கூறி அவர்களது மாமிசங்களைச் சாப்பிட்டவர்கள் எனப் பதிலளித்தார்கள். (அபூதாவூத் : 4878)

வேறு சில அறிவிப்புகளில் தஜ்ஜாலையும் நரகின் காவலாளி பற்றியும் நபிகளார் கூறினார்கள். (முஸ்லிம் : 165)

இஸ்ரா, மிஃராஜின் தொடர்பில் கூறப்படும் தரிபடா நிகழ்வுகள்

புராகின் வர்ணனைகள் :

அதற்கு இரண்டு சிறகுகள் காணப்பட்டன. அதற்கு மனிதனுடைய கண்ணம் போன்று கண்ணமும், குதிரையினது பிடரி முடி போன்று முடியும், ஒட்டகத்தின் கால்களைப் போன்று கால்களும், மாட்டினது வாலைப் போன்று வாலும் கால் பாதத்தைப் போன்று கால் பாதமும், சிவப்பு பவளத்திலான நெஞ்சும் இருந்தன.

மிஃராஜ் வாகனம் :

நான் முத்தினாலான தங்க விரிப்பு விரிக்கப்பட்ட கூட்டிலே (அமர்ந்த வண்ணம்) மிஃராஜ் பயணம் அழைத்துச் செல்லப்பட்டேன் என நபிகளார் கூறியதாக இடம்பெற்ற செய்தி ஆதரமற்றதாகும்.

நபிகளார் கண்ட தண்டனைகளாகக் கூறப்படுபவைகள் :

ஒரு கூட்டத்தின் பக்கத்தால் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்கள் சோர்வின்றி தமது தலைகளுக்கு தாமே பாரங்கற்களால் அடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தலைகள் சிதறும் போதெல்லாம் இருந்தது போன்றே அவர்களது தலைகள் மீண்டன. இவர்கள் யார் என கேட்டபோது கடமையான தொழுகையை விட்டும் பராமுகமாக இருந்தவர்கள் என பதிலளித்தார். இச்செய்தியை இமாம் அத்தகபி (ரஹ்) அவர்கள் ‘அஸ்ஸீரதுன் நபவிய்யா’ எனும் நூலில் கொண்டுவந்துள்ளார். இச்செய்தி புனைந்து கதை சொல்பவர்களின் பேச்சுக்கு ஒப்பான முன்கரான செய்தியாகும்.

ஒரு கூட்டத்திற்கு அருகால் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களது முன் பின் துவாரங்களிலே இரண்டு பிடவைத்துண்டுகள் காணப்பட்டன. கால்நடைகள் மேய்வதைப் போன்று முற்செடி, கள்ளிமரம், நரகின் எறி கற்களை சாபிட்டவர்களாக மேய்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என வினவ ஸகாத்தை நிறைவேற்றாதவர்கள் என ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள். இமாம் அல் ஹைதமி அவர்கள் அல்முஜ்மஃ எனும் நூலில் கொண்டுவந்துள்ள இச்செய்தி பலவீனமானதாகும்.

ஒரு கூட்டத்திற்கு அருகாமையால் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு முன்னிலையில் ஒரு சட்டியில் நல்ல இறைச்சியும் மற்றுமொரு சட்டியில் பச்சையான பழுதடைந்த இறைச்சியும் காணப்பட்டன. நல்லதை விட்டு விட்டு கெட்டதை சாப்பிட்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் யார் என வினவ தன்னிடம் ஹலாலான மனைவி இருக்க மோசமான பெண்ணிடம் வந்து காலை வரை அவளுடன் இரவில் தங்கிய ஆணும் தன்னிடம் ஹலாலான கணவன் இருக்க மோசமான ஆணிடம் வந்து காலை வரை அவனுடன் இரவைக் கழித்த பெண்ணும் என ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.

ஒரு கூட்டத்திற்கு அருகாமையால் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு இரும்பிலாலான பெரிய கத்திரிகளால் தமது நாக்குகளையும் உதடுகளையும் சோர்வின்றி வெட்டியவர்களாக இருந்தார்கள். அவை வெட்டப்படும் போதெல்லாம் இருந்ததைப் போன்று மீண்டன. ஜீப்ரீலே இவர்கள் யார் என வினவ குழப்பத்தையுடைய கதீப்மார்கள் என்றார்.
ஒரு கூட்டத்திற்கு அருகாமையால் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களுடைய உதடுகளைப் போன்றன. நெருப்புக் கட்டியை அவர்கள் விழுங்க அவர்களது பின்புறத்தால் அந்நெருப்புக்கட்டி வெளியேறியது. இவர்கள் யார் எனக்கேட்க அநியாயமாக அநாதைகளின் சொத்தை சாப்பிட்டவர்கள் என்றார்.

ஒரு கூட்டத்திற்கு அருகாமையால் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்கள் தமது விலாப்புறங்களிலிருந்து சதைகளை வெட்டி சாபிட்டவர்களாக காணப்பட்டனர். இவர்கள் யார் என ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்க கேலிபண்ணி குறை பேசித்திரிந்தவர்கள் என பதிலளித்தார்கள்.

ஒரு கூட்டத்திற்கு அருகாமையால் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களது வயிறுகள் வீடுகளைப் போன்றன. அவற்றிலே பாம்புகள் காணப்பட்டன. அவைகள் அவர்களது வயிறுகளுக்கு வெளியால் தெரிந்தன. இவர்கள் யார் என ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்க இவர்கள் வட்டி சாபிட்டவர்கள் என பதிலளித்தார்கள்.

மேற்கூறப்பட்ட அனைத்துச் செய்திகளும் ஆதாரபூர்வமற்ற பலவீனமான செய்திகளாகும்.

முஜாஹிதீன்களின் கூலி

ஒரு கூட்டத்திற்கு அருகாமையால் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்கள் ஒரு நாளிலே பயிறிட்டு அருவடை செய்கின்றனர். அவர்கள் அறுவடை செய்யும் போதெல்லாம் அறுவடை செய்ய முன் காணப்பட்டதைப் போன்று கதிர்கள் உள்ளதாக மாறின. இவர்கள் யார் என ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்க இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோர் அவர்களது நல்லமல்கள் 700 மடங்குகளாக அதிகரிக்கப்படும். இச்செய்தியை இமாம் இப்னு கஸீர் தனது தப்ஸீரிலே பதிவு செய்துவிட்டு இதில் ஏற்றுக்கொள்ள முடியாத அபூர்வங்கள் காணப்படுவதாகவும் இட்டுக்கட்டப்பட்டவைக்கு ஒப்பாகுவதாகும் குறிப்பிடுகின்றார்.

சுவர்க்கத்தில் நபிகளார் கண்டதாகக் கூறப்படுபவைகள் :

சுவர்க்கத்தின் கதவில் ஸதகாவின் கூலி 10 மடங்குகளாகும். கடன் கொடுப்பதன் கூலி 18 மடங்குகளாகும் என எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன். ஜிப்ரீலே ஏன் ஸதகாவை விட சிறப்பாக கடன் கொடுப்பது காணப்படுகிறது என வினவ கேட்டுப் பெருபவன் அவனிடத்தில் இருக்கும் நிலையில் கேட்கிறான். கடன் கேட்பவன் தேவைக்கன்றியே கேட்கமாட்டான் என்றார். இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் இச்செய்தியை மிக பலவீனமான செய்தி எனக் கூறியுள்ளார்கள்.

ஹுமைராவே (ஆயிஷா நாயகியின் பட்டப் பெயர்) இஸ்ரா பயணம் மேற்கொண்ட இரவில் நான் சுவர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டேன். அதன் மரங்களில் ஒரு மரத்தடியில் நின்றேன். அதைவிட அழகான இலைகளையுடைய இனிய பழங்களையுடை வேறெந்த மரத்தையும் காணவில்லை. அதன் பழங்களில் ஒன்றை எடுத்துச் சாபிட்டேன். அப்பழம் என் விலாப்புறத்தில் விந்தாக மாறிவிட்டது. நான் இறங்கிய வேளையில் கதீஜாவுடன் உறவில் ஈடுபட பாதிமாவை கருவில் சுமந்தாள். நான் சுவர்க்கத்தின் வாசத்தை நுகர விரும்பிய போது பாதிமாவின் வாசத்தை நுகர்ந்தேன். ஹுமைராவே பாதிமா மனிதர்களின் பெண்களைப் போன்றல்ல. அவர்கள் நோய்வாய்ப்படுவது போன்று நோய்வாய்ப்படமாட்டார்கள். இது இமாம் தபரானியின் அல்முஃஜமுல் கபீர் எனும் நூலில் காணப்படும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

சுவர்க்கத்திலிருக்கும் பெயாஸ் பழங்களை ஜிப்ரீல் என்னிடம் கொண்டு வந்தார். நான் அதைச் சாபிட்டேன். ஆதலால் கதீஜா பாதிமாவை கருவில் சுமந்தாள். நான் சுவர்க்கத்தின் வாசத்தை நுகர விரும்பினால் பாத்திமாவின் பிடரியை நுகர்வேன். இது இமாம் ஹாகிமின் நூலில் இடம்பெற்றுள்ள இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

அர்ஷ் எனும் சிம்மாசனத்திலே :

அர்ஷின் மீது அல்லாஹ்வையன்றி வணங்கப்பட தகுதியான நாயகன் வேறுயாருமில்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். எனது படைப்புக்களில் அவரே தூய்மையானவர். அலியைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினோம் என எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். இது இப்னு அஸாகீர் பதிவு செய்துள்ள இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

அர்ஷின் மீது அல்லாஹ்வையன்றி வணங்கப்பட தகுதியான நாயகன் வேறுயாருமில்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். அபூபக்கர் உண்மையானவர். உமர் (நன்மை தீமையை) பிறித்தரிபவர் உஸ்மான் இரு ஒளிகளையுடையவர். அவர் அநியாயமாகக் கொல்லப்படுவார் என எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். இச்செய்தி இமாம் கதீப் அவர்களின் அத்தாரீக் எனும் நூலில் பதிவு செய்யப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

அர்ஷின் ஒளியால் மறைக்கப்பட்ட ஒரு மனிதரின் பக்கத்தால் சென்றேன். இவர் யார்? மலக்கா? என வினவ இல்லை எனச் சொல்லப்பட்டது. நபியா? என வினவ இல்லை எனச் சொல்லப்பட்டது. அப்படியாயின் இவர் யார் என வினவ இவர் உலகில் அவரது நாவு அல்லாஹ்வை நினைவு கூர்வதினால் ஈரமுற்று அவரது உள்ளம் பள்ளியுடன் தொடர்புபட்டு ஒரு போதும் தனது பெற்றோர்களுக்கு ஏசவோ ஏசப்படவோ காரணமாகாதவர் என்றார். இச்செய்தி இப்னு அபித்துன்யா அவர்களின் ‘குதுபுல் அவ்லியா’ எனும் நூலில் இடம் பெற்றுள்ள முன்கரான செய்தியாகும்.

தொழுது கொண்டிருந்த அல்லாஹ் ??

மிஃராஜ் பயணத்தின் போது ஏழாம் வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் ஜிப்ரீல் என்னிடம் தாமதமாக வாருங்கள். ஏனெனில் உமது ரப்பு தொழுகிறான். அவனும் தொழுகிறானா? என நான் வினவ ஜிப்ரீல் ஆம் என்றார்கள். அவன் தொழுகையில் என்ன கூறுவான் என வினவ ‘மலக்குகளினதும் ரூஹ் எனும் ஜிப்ரீலினதும் ரப்பு மிகத்தூய்மையானவன். எனது கோபத்தை எனது கருனை மிகைத்துவிட்டது எனக்கூறுவான் என்றார்கள். இச்செய்தி; முன்கர் என்பதாக இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் தனது அல்மவ்ழூஆத் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கப்ரில் உயிருடன் இருக்கும் நபிமார்கள்

எல்லா நபிமார்களும் மரணித்ததும் 40 நாட்களே கப்ரில் உயிரின்றி இருப்பர் பிறகு அவர்களுக்கு உயிர் கொடுக்கப்பட்டுவிடும். நான் இஸ்ரா பயணம் அழைத்துச் செல்லப்பட்ட போது மூஸாவின் கப்ருக்குபு; பக்கத்தால் சென்றேன். அவர் தனது கப்ரில் தனது குடும்பத்துக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தார். இச்செய்தி இமாம் அபூநுஅய்ம் அவர்களின் அல்ஹில்யா எனும் நூலில் இடம் பெற்றிருக்கும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

இப்றாஹீம், மூஸா, ஈஸா (அலை) அவர்களிடையே நடந்த உரையாடல் :

நான் இஸ்ரா பயணம் மேற்கொணடு; இரவு இப்றாஹீம், மூஸா, ஈஸா (அலை) அவர்களை சந்தித்தேன். அவர்கள் மறுமைநாள் பற்றிக் கதைக்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவ்விடயத்தை இப்றாஹீம் (அலை) அவர்களிடம் ஒப்படைக்க எனக்கு மறுமை விடயம் பற்றி அறிவில்லை எனக்கூறி மூஸா (அலை) அவர்களிடம் திருப்பினார். அவரும் அது பற்றி எனக்கு அறிவில்லை எனக்கூறி ஈஸா (அலை) அவர்களிடம் விடயம் ஒப்படைக்கப்பட்டது….

 

Share This:

Leave a Reply