சொல்லித்தந்தவைகளும் சொல்லித்தராதவைகளும்

01- அமெரிக்காவை கண்டுபிடித்தவன் கொலம்பஸ் எனக் கற்றுத்தந்தார்கள்.

எனினும் அவன் பூர்வீக குடிமக்களான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்தான் எனக் கற்றுத்தரவில்லையே!

02- மகலன் புவியியல் கண்டுபிடிப்பாளன் எனக் கற்றுத்தந்தனர்.

எனினும் அவன் பிலிப்பைன்ஸில் ஜும்ஆப் பள்ளியொன்றை உடைத்து கோயில் அமைத்ததற்காகவே முஸ்லிம்கள் அவனைக் கொன்றார்கள் என்ற உண்மையைக் கற்றுத்தரவில்லையே!

03- முதன் முதலாக ஆட்சியை தமது பிள்ளைகளுக்கு அனந்தரமாகக் கொடுத்தவர்கள் உமையாக்களாக இருப்பதோடு, அவ்வாட்சிக்காக ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு வீழ்த்திக் கொண்டனர் என்று கற்றுத்தந்தனர்.

எனினும் அவர்கள் கிழக்கில் சீனா முதல் மேற்கில் ஸ்பெய்ன் வரை இஸ்லாமிய ஒளி வீச உலக நாடுகள் பெரும்பான்மையானவைகளிலே இஸ்லாத்தைப் பரப்பினர் எனக் கற்றுத்தரவில்லையே.

04- உஸ்மானியப் பேரரசு ‘நோயுற்ற மனிதர்’ எனப் பட்டப்பெயரை சுமக்குமளவுக்கு பலவீனமடைந்தது எனக் கற்றுத்தந்தனர்.

எனினும் உஸ்மானியர்கள் இஸ்லாத்தைப் பேணிக்காத்து, ரோமப் பேரரசில் காணப்பட்ட கிறிஸ்துவப் பேரரசர்களின் அட்டூழியங்களைப் பூண்டோடு அழித்து ஐரோப்பாவில் இஸ்லாத்தைப் பரப்பி ஐரோப்பாவின் அரைப்பகுதியை இஸ்லாமிய நிழலில் ஆட்சி செய்தனர். மறுபுறத்தில் கி.பி. 1514ல் ஜாலித் யரான் யுத்தத்திலே ஸபவிய்யர்களின் அபாயத்தை வேறுடன் அறுத்தெறிந்தனர். கி.பி. 1453ம் ஆண்டில் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களின் தலைநகர் கொஸ்தாந்து நோபிளை வெற்றி கொண்டு இஸ்லாமியப் பேரரசுக்குள் கொண்டுவந்தனர் எனும் உண்மைகளைக் கற்றுத்தரவில்லையே!

05- பிரான்ஸியப் புரட்சியானது பாரிய பெறுபேறுகள் கண்ட மக்கள் நாகரிகப் புரட்சி எனக் கற்றுத்தந்தனர்.

எனினும் இஸ்லாத்திற்கு எதிரான மேற்கத்திய சிந்தனைகளை முதன் முதலில் உட்புகுத்தியோர் இவர்களேயாவர். யஹுதிய மஸோனிக் நிலையங்களை நிறுவியதோடு எகிப்தில் விபச்சரம் என பல மோசமான காரியங்களை உருவாக்கினர். 1ம், 2ம் கெய்ரோ புரட்சியின் போது கூட்டத்தில் 1 மில்லியன் அல்லது அதற்கு அதிகமான எகிப்தியர்களை கொன்று குவித்தனர். முதன் முதலில் அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் அத்துமீறி நுழைந்து தனது நரித்தந்திரங்களால் பல்கலைக்கழகத்தை மாசுபடுத்தியவன் நெப்போலியன் ஆவான் எனும் பிரான்ஸியப் புரட்சியின் மறுபக்கத்தைக் கற்பிக்கவில்லையே.

06- எகிப்தை ஆட்சி செய்து பணியாற்றியவர்களுள் ஒரு தொகையினர் மமாலிக்கள் (அடிமை வம்சத்தினர்) ஆவர். அவர்களின் பெரும்பான்மையான கவனமும் இலக்கும் ஆட்சிக்காக சண்டையிடுவதாகக் காணப்பட்டது எனக் கற்றுத்தந்தனர்.

எனினும் அவர்கள் மொங்கோலியர் எனும் இஸ்லாத்திற்கெதிரான பாரிய அபாயத்தை தடுத்து அவர்களை ஸைபுத்தீன் குதுஸ் எனும் பேரரசரின் கீழ் அய்ன் ஜாலூத் எனும் யுத்தத்தில் வெற்றி கொண்டனர் எனும் உண்மைகளைக் கற்றுத்தரவில்லையே.

07- கலீபா ஹாரூன் ரஷPத் பெண்களின் பின்னால் திரியும் பெண் பித்தர். அவருக்கு அந்தப்புரத்தில் பெண்களுடன் இன்பமனுபவிப்பதையன்றி வேறெந்தக் கவனமும் இல்லை எனக் கற்றுத்தந்தனர்.

உண்மை அவ்வாறல்ல கலீபா ஹாரூன் ரஷPத் உபதேசங்களை செவிமடுக்குமி;த்து கண்ணீர் வடிக்கும் மார்க்கப்பற்றுள்ள பேணிப்புள்ள கலீபா ஆவார். ஹஜ்ஜுக்கும் யுத்தத்திற்கும் மத்தியில் தனது வாழ்நாளில் பெரும்பான்மையைக் கழித்த முஜாஹித். அவர் ஒரு வருடம் ஹஜ் செய்தால் அடுத்த வருடம் ஜிஹாத் செய்வார். தானே படையை வழிநடத்திச் சென்று யுத்தம் செய்த முதல் அப்பாஸிய கலீபாவும் இவரே. ரோமாபுரியை வீழ்த்தி தனது படையுடன் கொஸ்தான்துநோபிள் வரை அடைந்தார். இவரது ஆட்சிக் காலம் இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலமாகக் கருதப்படுகின்றது எனும் உண்மைகளைக் கற்றுத் தரவில்லையே!

நீங்கள் கற்றவைகளை மாத்திரம் நம்பியிருக்காதீர்கள். மறைந்திருக்கும் உண்மைகள் பற்றித் தேடுங்கள். சரியான முறையில் இஸ்லாமிய வரலாற்றை வாசித்து பயன் பெறுங்கள்.

தமிழாக்கம் : அர்ஷத் இஸ்மாஈல் (தரம் : 06)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close