40% ஆப்கான் பூமி அரசின் ஆதிக்கத்திற்கு வெளியே காணப்படுகின்றது

ஆப்கான் அரசு தனது நிரப்பரப்பில் 62% வீதத்திலும் குறைவான பகுதியையே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுள்ளது. அதாவது 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் 15% சுருங்கியுள்ளது என புதிய அமெரிக்க இராணுவ அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆப்கானிலுள்ள அமெரிக்கப் படையினால் வழங்கப்பட்ட தகவல்களின் பகுப்பாய்வை மேற்கோள்காட்டி கடந்த மூன்று மாதங்களாக ஆப்கான் பகுதிகளில் பாதுகாப்பு நிலை சீரற்றுக் காணப்படுகின்றது என ஆப்கானின் மீள் அபிவிருத்திற்கான அமெரிக்க பொது ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 407 ஆப்கான் மாவட்டங்களுள் 57.2% ஆன பகுதிகளையே தனது ஆதிக்கத்துள் அரசு கொண்டிசென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 15% வீதத்தினால் குறைந்துள்ளது.

ஆப்கானிய இரானுவம் தாலிபான் போராளிகள் மற்றும் ISIS போன்ற போராட்டக்குழுக்கு முன்னிலையில் நாட்டின் பல நிலப் பகுதிகளை பறிகொடுத்த வண்ணமே உள்ளனர். 2016ம் ஆண்டு இராணுவப் படையில் ஏற்பட்ட இழப்புக்களை 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35% த்தால் அதிகரித்துள்ளன. ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 12ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் 5500க்கும் மேற்பட்ட ஆப்கான் இராணுவ சிப்பாய்கள் பலியாகியுள்ளதோடு 11700க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். இவ்விழப்புக்கள் சுமக்க முடியாத இழப்பாகும். இராணுவத்தின் இழப்புக்கள் அதிகரிக்கும் போது இராணுவத்தினரின் தொகை மற்றும் பலம் குன்றுகின்றன.

ஆயுததாரிகளின் ஆக்கிரமிப்பிக்குட்பட்ட மற்றும் அவர்களது செல்வாக்கு மிக்க பகுதிகளில் 2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். போராட்டம் சூடுபிடித்துள்ள பகுதிகளில் 9.2 மில்லியனுக்கு குறையாத மக்கள் வாழ்கின்றனர். ஆப்கானிய இராணுவத்தினரின் தொகை அண்ணளவாக 3 இலட்சத்து 16 ஆயிரமாகும். நேட்டோ படையினது தாலிபானுக்குகெதிரான யுத்தப் பணிகள் 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதியுடன் முடிவுக்கு வரவே ஆப்கானின் பாதுகாப்புப் பணியை நாட்டின் இராணுவம் பொறுப்பேற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close