ஹலபின் இன்றைய நிலை

பஷார் அல்அஸாதின் இராணுவப் படை ரஷ்யாவின் உதவியுடன் ஹலப் பகுதியைக் கைப்பற்றி பல அநியாயங்களை அரங்கேற்றிக் கொண்டுடிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. கைப்பற்றிய பகுதிகளில் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளை செய்து வருகின்றனர். பல அப்பாவி மக்களின் உயிர்களை அநியாயமாக பறித்தும், அவர்களை உயிருடன் எரித்தும்,  பெண்களை கற்பழித்தும், தமது ஈனச் செயல்களை தொடர்ந்த வண்ணமுள்ளனர். அப்பகுதி மக்கள் இறைவனின் உதவியையும், அவர்களுக்காக போராடும் உம்மத்தையும் எதிர்பார்த்த வண்ணம் கடினமான நிமிடங்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அடுத்து எமது கற்பு தான் சூறையாடப்படும் என்ற அச்சத்தில் பெண்கள் காணப்படுகின்றனர். அங்கே போராடும் போராளிகள் அவர்களின் பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு முன் அவர்களை கொலை செய்ய முடியுமா என மார்க்கத் தீர்ப்பு கேட்கின்ற அளவு நிலைமை மோசமாக காணப்படுகின்றது. சில பெண்கள் தற்கொலை செய்யு கொள்ள முனைகின்றனர்.

ஹலப் மக்களுக்காக நாம் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிராத்தனை செய்வது அவர்களுக்கு நாம் செய்யும் உதவியாகும். இறைவனின் உதவி நிச்சயம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் ஓறிறைக் கொள்கையோடு இருக்கும் நேரத்தில் கொலை செய்யப்படுவது அவர்கள் அடைகின்ற மிகப் பெரிய வெற்றியாகும். கிடங்குடைய மக்கள் நெருப்பில் போடப்பட்டு கொலை செய்யப்பட்ட திருக் குர்ஆன் கூறும் வரலாற்றுச் செய்தியை ஒரு கனம் நாம் நினைவுபடுத்துவோம். இறை வாக்கு ஒரு போதும் பொய்யாகமாட்டாது என்பதை நாம் உறுதியாக நம்பிக்கை கொள்கிறோம். சிரியாவில் இஸ்லாம் மேலோங்கும். இதற்கு முன்னரும் சிரிய தேசம் பல கொடுங்கோல் மன்னர்களின் அநியாயங்களை சந்தித்தது. அவைகள் காலப் போக்கில் இல்லாமலாகி இஸ்லாம் மாத்திரம் நிலைத்து நின்ற செய்தியை எமது உள்ளங்களில் ஆழமாக பதியவைப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close