அஷ்ஷைக் என். பீ. எம். அபூபக்கர் ஸித்தீக் (மதனி)

அஷ்ஷைக் என். பீ. எம். அபூபக்கர் ஸித்தீக் (மதனி) 
பணிப்பாளர் – தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பும் நிறைந்த அல்லாஹ்வின் திருப்பெயரால்

  எல்லாப் புகழும் எத்துதியும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமம் சத்தியத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர் காட்டிய நெறிப்பிரகாரம் வாழ்ந்த வாழும் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!

  உலமாக்ககள் நபிமார்களின் வாரிசுகளாவர். இந்த நபிமொழிக்கேற்ப உலமாக்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈ டுபடும் கல்விக்கூடங்கள் இஸ்லாமிய சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டில் அரபுக் கலாசாலைகள் நிறையவே இருந்தாலும் குர்ஆன் , சுன்னாவின் வழிகாட்டல் பிரகாரம் தூய கொள்கையில் வார்த்தெடுக்கப்பட்ட உலமாக்களை உருவாக்கும் கல்லூரிகள் சிலதே! அத்தகைய கல்லூரிகளில் ஒன்றான இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா மலருக்கு ஆசியுரை வழங்குவதில் ஆனந்தமடைகின்றேன்.

  இக்கல்லூரியில் கற்று வெளியேறும் உலமாக்கள் மூலம் தூய இஸ்லாமிய வழிகாட்டல் எமது சமுதாயத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்.

Share This:

Leave a Reply