அணுகுண்டுத் தாக்குதலன்று எடுக்கப்பட்ட நாகஸாகியின் அரிதான புகைப் படங்கள்

‘யுஸுகோ யமாஹாதா’ எனும் இராணவ புகைப்படக் கலைஞர் நாகஸாகியின் அணுகுண்டுத் தாக்குதலில் இறந்த மக்கள் கூட்டத்தை காட்சிப்படுத்தும் உணர்ச்சியூற்றும் சில புகைப்படங்களை கண்டெடுத்தார். இவர் அந்நேரத்தில் பிரச்சார நோக்கங்களுக்காக அணுகுண்டு வெடித்து 12 மணித்தியாலங்களுக்குள் அந்நகரம் சந்தித்த அழிவுகளை உறுதிப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டார். 1952ம் ஆண்டு ‘லைப்’ எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ‘யமாஹாதாவின்’ சில புகைப்படங்களானது சம்பவம் நடைபெற்று குறுகிய காலத்தினுள் சம்பவத்தின் உண்மை நிலையை அறிய அதிக பங்களிப்புச் செய்தது.

எனினும் படுகொலையின் உண்மையான அளவை மறைக்கும் நேர்க்கில் அமெரிக்க ஜெனரல் ‘டொக்லஸ் மார்க் ஆர்ஸர்’ வெளியிடப்பட்ட புகைப்படங்களை பறிமுதல் செய்து அழிக்குமாறு நேரடிக் கட்டளையிட சில புகைப்படங்கள் அமெரிக்க இராணுவத்தினால் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனாலும் இராணுவம் கண்டெடுத்த புகைப்படங்களை புகைப்படங்களை சேர்க்கும் பிரியர்களிடம் ஒப்படைத்து பாதுகாத்தனர். அப்புகைப்படங்கள் தற்போது RR எனும் அமெரிக்க ஏல விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. அதன் விலை சுமார் 38 ஆயிரம் ஸ்டேர்லிங் பவ்ண் ஆகும்.

1962ம் ஆண்டில் யப்பானிய சஞ்சிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த ‘யமாஹாதா’ அனைத்து இடங்களையும் பார்ப்பதற்காக சிறிய குன்றின் மீது ஏறினோன். நாகஸாகி நகரம் முழுமையாக எறிந்து கிடந்தது. மனிதர்களின் மரண ஓலங்களையும், தண்ணீர் தண்ணீர் எனும் அழைப்புச் சத்தங்களையும் செவியுற ஆரம்பித்தேன். இறந்து கருகிக் கிடந்த மக்களால் பாதையில் செல்ல நான் கஷ்டப்பட்டேன். பலியானோர் முகங்கள் மோசமான முறையில் எறிந்திருந்தன.  பாதை தேடி கை நீட்டும் குருடர்களைப் போல் மக்கள் காணப்பட்டனர் என தனது நினைவுகளை பகிர்ந்திருந்தார்.

யப்பானிய இராணுவ புகைப்படக் கலைஞர் ‘யுஸுசி யமஹாதா’ 1966ம் ஆண்டு புற்று நோய் காரணமாக தனது 48ம் வயதில் மரணமானார். அவர் குண்டுத் தாக்குதலை படம் பிடிக்கும் பணியில் ஈடுபடுகையில் ஏற்பட்ட கதிர் வீச்சுக்களின் தாக்கமே புற்று நோயினால் அவதியுற காரணமாக அமைந்தது என நம்பப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close