2016ஆம் ஆண்டில் மத்திய தரைக் கடலில் 600க்கும் மேற்பட்ட அகதிச் சிறுவர்கள் பலி.

சென்ற வருடம் அகதிகளின் நெருக்கடி நிலமை அதிகரித்தது தொடக்கம், மத்திய தரைக் கடலில் 600 சிறுவர்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகும் வழியில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக ஐ.நா சபையும், சிறுவர் பாதுகாப்புச் சபையும் தெரிவித்துள்ளன. ஆபத்தான கடற் பயணங்களை மேற்கொண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் அகதிகள் இப்படியான ஆபத்தான பிரயாணங்களை மேற்கொள்வதை தடுப்பதற்கும், அவர்களின் நிலமைகளை சீர்செய்வதற்கும் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களை துர்க்கிக்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

மத்திய தரைக் கடலின் ஊடாக அகதிகளின் இவ்வாபத்தான பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் துர்க்கிய அதிபர் ரஜப் தையிப் உர்துகான் ஐரோப்பிய ஒன்றியம் தனது வாக்குறிகளை நிறைவேற்ற தவரிவிட்டதாகவும், இப்பிரச்சினை துர்க்கிக்கு பாரிய சுமையாக மாறியுள்ளது என்றும், சில முன்னிலை நாடுகள் அகதிகள் சம்பந்தமாக மனித நேயமற்ற நடவடிக்களை மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close