மௌலவீ எஸ். எல். நௌபர் (கபூரி)

மௌலவீ எஸ். எல். நௌபர் (கபூரி) 
பணிப்பாளர் – உலக இஸ்லாமிய நிவாரண அமைப்பு (IIROSA) இலங்கைக் கிளை

  இப்னு அப்பாஸ் அரபுக் கலாசாலையின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலருக்கான வாழ்த்துச் செய்தியை வழங்குவதையிட்டு பெருமகிழ்சிச்சியடைகிறோம்.

  இலங்கையில் உள்ள அரபுக் கலாசாலைகளில் முதற்தர கல்லூரிகளில் ஒன்றாகக் கணிக்கப்படும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி இஸ்லாமியக் கல்வித் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்பானது போற்றிப் பாராட்டக்கூடிய ஒன்று. இக்கல்லூரி பல சிறந்த உலமாக்களையும், தூய்மையான இஸ்லாமிய அகீதாவின் பிரச்சாரகர்களையும் பெறும் மாணவர்களையும் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று. இக்கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தியாகமும், அயராத உழைப்பும், அதன் நிர்வாகிகளின் சிறந்த முகாமைத்துவத் திறனும், மாணவர்கள், பெற்றோர்களது ஒன்றுபட்ட ஒத்துழைப்பும் பாராட்டப்படக்கூடிய ஒன்றாகும்.

  இந்நிலையில் எதிர்காலத்தில் இக்கல்லூரி மென்மேலும் வளர்ச்சியடைந்து ஆன்மீகத்துறையிலும், லௌஹீஹத் துறையிலும் சாதனைகள் பல படைக்க வேண்டுமென்றும், உலகில் பரந்துவாழும் அனைத்து உள்ளங்களிலும் ஏகத்துவச் சுடரை ஏற்றுச்செய்ய வேண்டும் எனவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Share This:

Leave a Reply