இஸ்ரேலிய வாயு ஒப்பந்தத்தைக் கண்டித்து ஜோர்தானில் ஆர்பாட்டம்

ஜோர்தானிய அரசு இஸ்ரேலுடன் அண்மையில் கைச்சாத்திட்ட இரசாயன வாயு கொள்வனவு ஒப்பந்தத்தைக் கண்டித்து அதனை ரத்துச் செய்யக் கோரி ஜோர்தான் தலை நகர் அம்மானில் பாரிய மக்கள் பேரணியொன்று வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர். ஜோர்தானிய பொருளாதாரத்தை இஸ்ரேலுக்கு வார்த்தளிப்பதற்கான முதற்படியே இவ்வொப்பந்தம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

‘அக்ஸாவை அழிக்கின்ற யூதர்களிடமிருந்தே இரசாயன வாயுவை வாங்குகின்றோம்’ ஸியோனிஸ அமைப்புக்கு நிதியுதவ ஜோர்தானிய பிரஜையின் பையில் ஒரு சதமேனுமில்லை’ ‘எதிரியின் இரசாயன வாயு ஓர் ஆக்கிரமிப்பு மாத்திரமல்ல பலஸ்தீன மக்களின் உரிமைகளை களவாடுவதே’ ‘உலகமே பகிஷ;கரிக்க ஜோர்தான் கைச்சாத்திடுகிறது’ இது போன்ற இன்னும் பல கண்டனப் பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்பாட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபட்டனர். இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் ஜோர்தானின் பல மாவட்டங்களிலும் நடைபெற்றன.

இஸ்ரேலிய ஒப்பந்தம் பற்றி ஜோர்தானிய அரசு கருத்துத் தெரிவிக்கையில் இஸ்ரேலிய இரசாயன வாயு விலை குறைந்து காணப்படுவதனாலும், இதை ஒத்த பதிலீட்டு வசதியை தம்மால் பெற்றுக் கொள்ள முடியாது போனதுமே இவ்வொப்பந்தத்தை மேற்கொள்ள காரணமாக அமைந்தன.

இது தொடர்பில் அரேபிய பொது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த திங்களன்று ஜோர்தான் இஸ்ரேலுக்கிடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் ஜோர்தான் இஸ்ரேலிடமிருந்து இரசாயன வாயுவை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளது. இஸ்ரேல் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிக்கேற்ப 45 பில்லியன் சதுர மீற்றர் கொள்ளத்தக்க இரசாயன வாயுவை ஏற்றுமதி செய்வதாக உறுதியளித்துள்ளது. இவ்வொப்பந்தம 15 வருடங்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில் இஸ்ரேலுடனான இவ்வொப்பந்தத்தை யாப்பிற்கு முரணானதாகவும், சட்டரீதியற்றதாகவுமே தாம் கணிப்பதாகக்; கூறினர். இஸ்ரேலிய இரசாயன வாயு இறக்குமதி தொடர்பாக ஜோர்தான் மேற்கொள்ளும் அனைத்து பேச்சுவார்த்தைகளையும் கண்டித்து கடந்த 2 வருடங்களுக்கிடையில் பல பேரணிகள் தலை நகர் அம்மானில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close