சுதந்திரக் கனவிற்கும் இராணுவ முகங்கொடுப்பிற்கும் மத்தியில் தத்தளிக்கும் ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் எனும் பிராந்தியமானது தனது அரைவாசிப் பகுதியை இந்திய ஆக்கிரமிப்பிற்கும், ஏனைய பகுதியை பாகிஸ்தான் எல்லையிலும் உட்படத்தப்பட்ட பிராந்தியமாகும். இந்தியா பாகிஸ்தானுடன் இப்பிராந்திய உரிமை காரணமாக அடிக்கடி சண்டையிடவும் நேர்கின்றது. இந்தியா தனது ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிக்கு ஊரடங்குச் சட்டத்தை விதித்து சுமார் 80 நாட்கள் கடந்துள்ளன. அங்குள்ள முஸ்லிம்கள் தமது சுதந்திரக் கனவை நனவாக்க 89 பேரை பலி கொடுத்துள்ளனர். 9 ஆயிரத்திற்குத் அதிகமான மக்கள் காயப்பட்டு பாரிய இந்திய இராணுவச் செயற்பாட்டிற்கு முகங்கொடுக்கின்றனர். மேலும் அவர்கள் சுதந்திர உரிமைக்காக பல வருடங்களாக போராடுகின்றனர். காயப்பட்டவர்களில் அதிகமானோர் எக்காலமும் அசிங்கமான தோற்றத்துடன் காட்சியளிக்க வைக்கும் கொடூரமான காயங்களால் கஷ்டப்படுகின்றனர்.

இப்பிராந்தியத்தை ஆக்கிரமித்துள்ள இந்தியாவிற்கு எதிராக செயற்படும் அமைப்புக்களுள் ஒன்றான ‘ஹிஸ்புல் முஜாஹிதீன்’ அமைப்பின் தளபதிகளில் ஒருவரான புர்ஹான் வானி கொல்லப்பட்டு 3 மாதங்களிலும் குறைவான காலமே கடந்த நிலையில் இப்பிராந்தியத்தில் வாழ்வதைப் பற்றி காஷ்மீரிய தொண்டர்களும், கண்காணிப்பாளர்களும் பல்வேறு உரையாடல்களிலும் வர்ணிக்கும் போது ‘தடைப்பட்ட மாயைகள்’ என்றே வர்ணிக்கின்றனர். சுதந்திரத்தை எதிர்பார்த்து இந்திய அரசுக்கெதிராக போராடுவதே காஷ்மீரின் ஏனைய பகுதிகளிலும் வன்முறைகள் அதிகரிப்பதற்கு காரணமாகும்.

இங்கு ஒழுங்கான இணைய வசதிகளோ, தொலைத் தொடர்பு முறையோ கொடுக்கப்படாமலும், அரசியல் தொண்டர்களை எவ்வித விசாரணையுமின்றி தடுத்து வைத்து  அவர்களின் செயற்பாடுகளுக்கு அதிக வரையரைகள் இடப்பட்டுள்ளன. இதன் விளைவு மிக ஆபத்தானதாக அமையலாம் என கண்காணிப்பாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

ஜம்மு காஷ்மீரிலே இயங்கும் ‘சிவில் சமூக ஒன்றியத்தை’ வழிநடாத்தும் ஹுராம் பர்வீஸ் பிராந்திய நிலைமைகள் பற்றி ஐ.நா சபையின் மனித உரிமைக் குழுவிடம் முறைப்பாடு செய்ய முற்பட்ட போது அவரை இந்திய அரசாங்கம் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது. இது பற்றி இந்திய இராணுவம் கூறும் போது ‘எவ்வித விசாரணையுமின்றி 2 வருடங்கள் கைது செய்ய அனுமதியளிக்கும் சட்ட விதியின் அடிப்படையிலே கைது செய்யப்பட்டுள்ளார்’ எனக் கூறியது. இத்தகவலை ‘அனாலூஸ்’ எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நான் யார் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பாத ‘அனாலூஸ்’ செய்தி நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட ஸித்தீக் பர்வீஸ் கூறும் போது ஹுராம் பர்வீஸ் எவ்வித குற்றங்களும் செய்யாதவர் என்றும் அவர் செய்ததெல்லாம் மூன்று மாதங்களுக்கிடையில் ஜம்மு காஷ்மீரில் நடந்தவற்றை கூற ஜெனீவா செல்ல நாடியதேயாகும். என்றார்.

இது தொடர்பாக ஹாஸிக் எனும் மற்றொரு தொண்டர் கூறுகையில் ஹஜ்ஜுப் பெருநாளன்று பெரிய பள்ளிவாசலில் தொழவிடாது தடுத்தனர். தொலைத் தொடர்பு வசதியை துண்டித்தனர். நிராயுதபாணியாக இருந்த ஆர்பாட்டக்காரர்களைக் கொல்கின்றனர். சமாதானப் பேரணிகளைத் தடுக்கின்றனர்.

காஷ்மீர் மக்கள் சந்திக்கும் மற்றுமொன்றுதான் ஆர்ப்பாடத்திற்கென வெளியேரும் மக்களை இராணுவம் விரட்டிச் சென்று கொல்வதும், கைது செய்வதுமாகும்.

11 வயதை எத்திய ‘முஃமின்’ எனும் பெயரில் பிரபல்யமடைந்த நாஸிர் ஷாபி காழி என்ற சிறுவனின் கதையானது தளபதி புர்ஹானிற்குப் பின் கண்ட ஆர்ப்பாட்டங்களுக்கான புதிய ரூபமாய் அமைந்துள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை (22 – 09- 2016) இச்சிறுவன் சரமாரியாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து இந்நிலை உருவாகியுள்ளது.

கொல்லப்பட்ட சிறுவனின் தந்தை கருத்து தெரிவிக்கும் போது தனது மகன் ஜும்மா தொழுது விட்டு வீடு திரும்பும் போது பொலிஸார் அவரை விரட்டிச் சென்று கைது செய்து முதுகிலும் வலக் கரத்திலும் சுமார் 40 தோட்டாக்களை விடுத்து குண்டு மழை பொலிந்தனர். தனது மகனின் உடம்பிலுள்ள காயங்களைச் சுட்டிக்காட்டிய வண்ணம் தனது மகனை துப்பாக்கியால் பதம் பார்த்த பின்னும் அவர்களின் அடிக்கும், உதைக்கும் உள்ளாக நேரிட்டிருக்கின்றான். என்றார்.

கதரிய்யி எனும் தொண்டர் மேலும் கூறுகையில் நிலைமை கடும் மோசமாக உள்ளது. இவ்வாறன சூழ் நிலையில் வாழ்வது இதுவே முதற் தடவையாகும். மக்கள் கோபத்துடன் இறுதியாய் ஒரு தீர்வை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். ஓவ்வொரு நாளும் அரசாங்கம் பொதுமக்களில் ஒருவரைக் கொள்கின்றது, அல்லது தாக்குகின்றது என்று நான் சொன்னால் அது மிகையாகாது. சமீபத்தில் நடந்தேறியது முற்றுப் பெற்றுவிடாது. அவர்கள் புர்ஹானைக் கொண்டதன் மூலம் நெருப்புக் கிடங்கில் கை விட்டுள்ளனர். அவர்களுக்கு அனைத்து காஷ்மீர் மக்களையும் உடனடியாகவோ, தாமதித்தோ கொள்ள முடியாது. அவர்களின் அநியாயத்தின் கூலியை பெற்றுக்கொள்வர். அல்லது காஷ்மீரை விட்டும் துரத்தப்படுவர் எனக் கூறினார்.

காஷ்மீர் விடுதலைக்காய்  குரல் கொடுக்கும் மற்றுமொருவர் ‘டுவிட்டர்’ தளத்தில் கருத்து தெரிவிக்கும் போது 89 பேர் கொல்லப்பட்ட பின்னரும் கிளர்ச்சி நீடித்திருப்பதே தற்போதைய நிலமையாய் காணப்படுகின்றது. கொல்லப்படுபவர்களின் தொகை அதிகரிக்கலாம். குறிப்பாக புர்ஹான் என்பவர் பிரபல்யமான தளபதியாக இருக்கவில்லை. எனினும் காஷ்மீரிய இளைஞர்கள் மத்தியில் அடையாளச் சின்னமாக மாறியுள்ளார். இந்நிலமையானது ஆயிரக்கணக்கில் மக்கள் அரசுக்கெதிராக வெளியேறினர் என்பதையும், கிளர்ச்சிக்கான தயார் நிலையிலே தொடர்ந்துமிருக்கின்றனர் என்பதையும் தெளிவு படுத்துகிறது என பதிந்துள்ளார்.

பொதுமக்களுக்கெதிராக இந்திய இராணுவம் உபயோகிக்கும் ஆயுதங்களானது முன்னெப்போதும் உபயோகிக்கப்படாதவைகளாக காணப்படுகின்றன. பொதுமக்களை சுடுவதில் அவர்கள் எத்தயக்கமும் காட்டுவதில்லை. மூன்று தசாப்தங்களாக அவர்களது அநியாயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. என்றாலும் நாம் எதிர்பார்ப்பது அவர்களை வெளியேற்ற தக்க சந்தர்பத்தையே என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இவரின் கருத்திற்கு உடன் படும் வகையில் வடஅமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் துணையாசிரியராய் கடமை புரியும், காஷ்மீர் விவகாரம் பற்றி ஆழமாய் அறிந்துள்ள ஆஸிர் ஸாயா எனும் பெண்மணி ‘அனாலூஸ்’ செய்திச் சேவைக்கு தொலை பேசி அழைப்பினூடாக கருத்துத் தெரிவிக்கையில் காஷ்மீர் மக்கள் தமது சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள இதற்கு முன்னர் 1989 காலப் பகுதியில் இது போன்ற கிளர்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஜுலை மாதத்தில் நடந்தது புதிய விடயமல்ல. ஏனெனில் காஷ்மீர் தனிநாட்டுக் கோரிக்கை வரலாற்று ரீதியில் அவர்களிடம் காணப்பட்டது மட்டுமல்ல 1948 காலப் பகுதியில் பாகிஸ்தான் இந்திய யுத்தத்தை விட பழமையானது என்றார்.

முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட காஷ்மீர் பிராந்தியமானது 1948ம் ஆண்டு பிர்தானிய காலணித்துவத்திலிருந்து விடைபெற்றது முதல் பாகிஸ்தான், இந்தியா நாடுகள் இதற்காக 1948, 1965, 1971ம் ஆண்டுகளில் யுத்தங்களை மேற்கொண்டுள்ளது.

ஆஸிர் ஸாயா காஷ;மீரில் பலவந்தமாய் நிகழும் கடத்தல் நிலை பற்றி எடுத்துச் சொல்லும் தனது ஆவணத்தில் சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதில் காஷ்மீர் மக்கள் விடாப்புடியாய் இருப்பதோடு, தற்போது நடக்கும் கிளரச்சியில் முன் எப்போதுமில்லாதளவு மக்கள் கலந்துகொள்வது அதிகரித்தள்ளது. இந்திய அரசின் அடக்கியாழும் தன்மை அவர்களுக்கு போதுமாகியுள்ளது. சுமார் 7 லட்சம் இராணுவ வீரர்கள் இப்பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். 70 ஆயிரம் காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்;.

பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்குமிடையிலான முறுகல் தொடர்ந்திருக்கும் நிலையில் காஷ;மீர் மக்களின் எதிர்காலம் தெளிவற்று கேள்விக்குறியாய் காணப்படுகின்றது. காஷ்மீர் மக்களின் விபரங்களை ஆழமாய் அறிந்த இவர் காஷ்மீர் பிரச்சினையை உலகரியச் செய்வதை அதிகரிப்தும், தமக்கென ஒரு நாட்டை உருவாக்கவதில் அவர்களின் உரிமையை ஐ.நா சபை, ஐரோப்பிய ஒன்றியம், பிர்தானியா, அமெரிக்கா போன்ற பெரிய சக்திகள் அங்கீகரிப்பதற்கான வழிகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close