பொதுமக்களை குறிவைக்கும் ரஷ்ய வான் தாக்குதல்கள்

உலக சுகாதார ஸ்தாபனமும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் ‘ஹலப்’ பிரதேசத்தில் முற்றுகையிடப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கான நோயாளிகளையும், காயமுற்றவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளன. இங்கு காயமுற்றவர்களை சிகிச்சையளிக்க ஏழு வைத்தியசாலைகளில் 35 வைத்தியர்கள் மாத்திரம் தான் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளன.

செப்டம்பர் 19ம் திகதி ரஷ;ய அமெரிக்க கண்காணிப்புடன் நடந்த ஒப்பந்தம் முடிவடைந்தது தொடக்கம் ‘ஹலப்’ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களில் இதுவரை 878 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 106 சிறுவர்களும் 78 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதுமாத்திரமின்றி 1700க்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1700 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 19ல் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு பல கட்டடங்கள் தகர்த்து உடைக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட குண்டுகளும் இப்பிரதேசத்தில் வீசப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close