அஷ்ஷைக் எம். எஸ். எம். ரஷீத் (ரியாதீ)

அஷ்ஷைக் எம். எஸ். எம். ரஷீத் (ரியாதீ) 
முகாமைத்துவப் பணிப்பாளர் – இலங்கை முஸ்லிம் வாலிப ஒன்றியம் (ஜம்மியதுஷ் ஷபாப்)

எல்லாப் புகழும் ஏக அல்லாஹ் ஒருவனுக்கே. ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றி ஒழுகிய ஸஹாபாக்கள் மற்றும் நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

  இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் இவ்வாழ்;துச் செய்தியை வழங்குவதில் அளவற்ற மகிழ்சி அடைகின்றேன்.

  இலங்கை திரு நாட்டில் குர்ஆன், சுன்னாவைப் பாதுகாக்கும் எண்ணத்தில் பல அறபுக்கல்லூரிகள் தோன்றியுள்ளன. எதிர்கால சமூகத்திற்கு நவீன அறிவியற் கல்வியுடன் கூடிய மார்க்கக் கல்வியை வழங்குவதில் விரல் விட்டெண்ணக் கூடிய அறபுக்கல்லூரிகளில் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியும் இணைந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குறிய விடயம். இக்கல்லூரியில் படித்து அனுபவம் பெற்று வெளியேறும் இளைய தலைமுறையினர் மிக்க துணிச்சலுடன் தஃவாக்களத்தில் செயற்படுவதை காணக்கூடியதாகவுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

   இலங்கையில் வருடத்திற்கொரு அரபுக்கல்லூரிகள் வீதம் பெருகுவது என்பது சாதனையல்ல. அவற்றில் எத்தனை கல்லூரிகள் தஃவாவை நோக்காகக்கொண்டும், நவீன சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராகவும் இருக்கின்றது என்பதே எம்முன் உள்ள கேள்வியாகும்.

   நவீன கல்வி அம்சங்களுடன் சன்மார்க்க கல்வியையும் தூய்மையான முறையில் போதிக்கும் இக்கல்லூரியின் 3வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் இளம் உலமாக்களின் தீனின் வளர்ச்சிக்கு அயராது உழகை;கவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும் அல்லாஹ் அவர்களுக்கு பேருதவி புரிவானாக.

  இக்கல்லூரி எதிர்காலத்தில் பல சாதனைகள் புரிந்து சன்மார்க்க வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். இதன் செயற்பாடுகள் தஃவாப்பணியை மேம்படுத்த வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன். அவனே நம்மை நேர்வழிப்படுத்துபவன் வழிகாட்டுபவன்.

 

Share This:

Leave a Reply