அல்ஹாஜ் எம். ஜே. முஹம்மத்

அல்ஹாஜ் எம். ஜே. முஹம்மத்
முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் – தென் மாகாணக் கல்வித்திணைக்களம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பும் நிறைந்த அல்லாஹ்வின் திருப்பெயரால்

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

அல்ஹம்துலில்லாஹ்

   தென் இலங்கையின் பிரபல அரபுக் கல்லூரிகளில் ஒன்றான இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 3வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலருக்கான வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

  இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படையில் குர்ஆன், சுன்னாவை மையமாகக்கொண்ட பாடத்திட்டத்தின் மூலம் ஓர் உயர்ந்த சன்மார்க்கப்பற்றுள்ள மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் கலாசாலையாகும். மேலும் இக்கலாசாலையில் க.பொ.த. (சாஃத), க.பொ.த. (உஃத) ஆகிய அரசாங்கப்பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தும் முகமாக வகுப்புக்கள் நடைபெறுவதால் சன்மார்க்கக் கல்வியோடு உலகக் கல்வியும் போதிக்கப்படுகிறது. எனவே இங்கிருந்து வெளியாகும் மாணவ சமுதாயம் எதிர்காலத்தில் இஸ்லாமிய தஃவாவை உரிய முறையில் செய்யக்கூடிய நற்பிரஜைகளாக உருவாகுவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

   மேலும் 3வது பட்டமளிப்பு விழா நடைபெறும் இவ்வேளையில், இக் கலாபீடம் நாட்டில் நாட்டைத் தாண்டி உலகம் முழுவதும் தனது ஒளிக்கதிர்களை வீசி வீரநடைபோட என்றென்றும் பிரார்த்திக்கின்றேன்.

  அத்தோடு இம்முறை கல்லூரியிலிருந்து பட்டம் பெற்றுச் செல்லும் மௌலவி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் தென்மாகாணப் பணிமனை சார்பாக எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Share This:

Leave a Reply