அஷ்ஷைக் எம். ஐ. அமீர்

அஷ்ஷைக் எம். ஐ. அமீர்
பணிப்பாளர் – முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவளக திணைக்களம்

   இறையடியார்களில் அல்லாஹ்வைப் பயப்படுபவர்கள் உலமாக்கள் என்று அல்லாஹ்வால் புகழப்படும் நபிமார்களின் வாரிசுகள் என்ற இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களால் புகழப்படும் சகூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வகிக்கும் உலமாக்களின் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

    சமூகம் என்பது ஒரு கட்டுக் கோப்பை கொண்ட அமைப்பாகும். இந்தக் கட்டுக்கோப்பு எந்தளவுக்கு உறுதியாக உள்ளது என்பதைப் பொறுத்தே சமூகத்தில் ஸ்திரத்தன்மை காணப்படும். இக்கட்டுக்கோப்பு சீர் குலையும் போது சமூகம் உறுதியையும் பலத்தையும் இழந்து விடுகின்றது. எமது நாட்டில் இஸ்லாமிய சமூகத்திற்கு அதற்கே உரிய தனிப்பட்ட சிறப்பம்சத்தை வழங்கி அதன் கட்டுக்கோப்பை பாதுகாக்கும் நிறுவனங்களாக மஸ்ஜித்கள், குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகள் போன்றவை காணப்படுகின்றன.

    இப்னு அப்பாஸ் அரபுக் கலாசாலையில் இன்று நடைபெறும் பட்டமளிப்கு விழாவில் பட்டம் பெற்று வெளியேறும் இளம் உலமாக்களை வாழ்த்துவதில் எமது சமூகத்தின் தனித்துவத்தையும் கட்டுக்கோப்பையும் கட்டிக் காத்து சரியான வழிகாட்டலை வழங்கும் வழிகாட்டிகாள அவர்கள் மாற வேண்டும் எனவும் இக்கலாசாலையை நிர்வகிக்கும் நிர்வாகிகள், அதிபர், விரிவுரையாளர்கள் செய்யும் தூய பணியினை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close