அஷ்ஷைக் எம். ஐ. ரிஸ்வி (முப்தி)

அஷ்ஷைக் எம். ஐ. ரிஸ்வி (முப்தி)
தலைவர் – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

காலி, ஹிரிம்புறயில் 1998ம் ஆண்டுல் ஆரம்பித்துவைக்கப்பட்ட இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி தனது 3வது பட்டமளிப்பு விழாவை மகிழ்வோடு கொண்டாடும் இவ்வேளையிலே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் என்ற வகையிலே பேருவகை அடைகிறேன்.

    இளமையில் மாணவர்கள் பெறவேண்டிய சரியான வழிகாட்டலை வழங்கி அவர்கள் நேர்வழி நடக்கவும், அவர்களை தொடர்வோரை நேர்வழியில் நடாத்தவும் தகுதியுடையோராக ஆக்கும் பணியில் கடந்த ஏழு வருடகாலமாக இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்பதற்கு அது வழங்கும் சன்மார்க்க, உலகாயுத ரீதியான பாடநெறிகள் அழகான சான்றாகும்.

    ஒரு முஸ்லிம் இளைஞன் அரபுக் கல்லூரியெனும் பொற்கொல்லர் பட்டறையிலே தட்டித் தட்டி வடிவமைக்கப்பட்டு, மெருகூட்டப்பட்டு ஒரு ஆலிமாக மாத்திரம் வெளியுலகுக்கு அனுப்பப்படாது அவனை சமகாலத்துக்கு உரியவனாக, உலக இயக்கத்தோடு ஒன்றிணைந்து செயற்படக் கூடியவனாக தொழிற் கல்வியையும், கணனி அறிவையும் கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற உன்னத நோக்கோடு செயல்படும் இக்கல்லூரியின் நோக்கம் என்றும் பின்னடையப் போவதில்லை. அது அல்லாஹ்வின் அருளால் நெடியர்ந்து புகழோங்கி நிற்கும்.

    திரும்பும் பக்கமெல்லாம் எதிர்ப்புக்களையும், வஞ்சக சூழ்ச்சிகளுக்கும் முகங்கொடுக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கு நன்கு தயார்படுத்தப்பட்ட தலைமைத்துவம் அவசயம் என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்துள்ளது. அதற்கேற்றறவாறு இன்றைய சன்மார்க்கத் துறைக் கல்வி வடிவமைக்கப்பட வேண்டும் என்ற தேவையை இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் நிறுவாகம் ஏற்கனவே உணர்ந்து அதற்கேற்ப ஆரம்பம் முதல் தனது கற்கை நெறிகளை வடிவமைத்திருப்பது பாரட்டத்தக்கது.

    இஸ்லாமிய உம்மத்தின் கல்விக் கடல் என வர்ணிக்கப்பட்ட பணிவு, இறையச்சம், அண்ணல் நபி மீது கொண்ட அன்பில் மிகைத்து நின்ற இப்னு அப்பாஸ் என்ற திருநாமத்தைக் கொண்டிருக்கும் இக்கலாசாலையில் உருவாக்கப்படும் மாணவர்களும் அன்பன்புகழுடன் கூடியவர்களாகத் திகழ வேண்டும் எனவும், அவர்களுக்குப் போதிக்கும் ஆசான்களும், அதிபர்களும் நல்ல மாணவர்களைபன்புகழுடன் கூடியவர்களாகத் திகழ வேண்டும் எனவும், அவர்களுக்குப் போதிக்கும் ஆசான்களும், அதிபர்களும் நல்ல மாணவர்களை உருவாக்கிய பெருமையையும், நன்மையையும் பெற வேண்டும் என ஆசிகூறுகிறேன்.

Share This:

Leave a Reply