2018ம் ஆண்டின் மாணவர்களுக்கான இரண்டாவது வழிகாட்டல் கருத்தரங்கு

அல்லாஹ்வின் பேரருளினால் ஊடகவியல் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று 22-04-2018 ஞாயிற்றுக் கிழமை எமது கல்லூரியில் இனிதே நடைபெற்று முடிந்தது. இதில் வளவாளராக விடி வெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் எம். பீ. எம். பைரூஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். எமது கல்லூரி மற்றும் காலி கிந்தோட்டை அல்பயான் அரபுக் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இதில் கலந்து பயனடைந்தனர்.

மாறும் உலகில் சத்திய இஸ்லாத்தை எத்திவைக்கும் ஒவ்வொரு தாஇயும் ஊடகங்கள் பற்றி அறிந்திருப்பது அவசியம் எனும் நோக்கிலேயே மேற்படி கருத்தரங்கு கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்லூரி அதிபர் அல்-உஸ்தாத் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் வரவேற்புரையுடன் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகிய கருத்தரங்கு 3 அமர்வுகளாக நடைபெற்றது. ‘பத்திரிகைத் துறையும் இலங்கை முஸ்லிம்களும்’ ‘செய்தி அறிக்கையிடலும் ஊடகங்களுடனான தொடர்பை வலுப்படுத்தலும்’ போன்ற பல உப தலைப்புக்களில் ஆக்கபூர்வமான கருத்துக்களை வளவாளர் சிறந்த முறையில் முன்வைத்தார்.

சுமார் 3.15 மணியளவில் கல்லூரி உப அதிபர் அல்-உஸ்தாத் பௌஸுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் நன்றியுரையுடன் முடிவுற்றது. இக்கருத்தரங்கு அதிக பிரயோசனங்களை தந்தது என்பது பங்கு பற்றிய மாணவர்களின் ஒருமித்த கருத்து என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Share This:

Leave a Reply