எமது கல்லூரியின் 2017ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா

எமது கல்லூரியின் இவ்வருடத்திற்கான (2017) பரிசளிப்பு வைபவம் கடந்த புதன் கிழமை (13-12-2017) இரவு கல்லூரியின் பள்ளிவாசலில் கலாசாலை அதிபர் அல்-உஸ்தாத் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலாசாலையின் தலைவர் அல்-உஸ்தாத் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி), கல்லூரியின் உஸ்தாத்மார்கள், பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் முக்கிய அம்சமாக கல்லூரியில் சுமார் 11 வருடங்களாக மாணவர்களுக்கு மத்தியில் நடைபெற்று வரும் அறிவுக் களஞ்சியப் போட்டியில் சம்பியனான, உப சம்பியனான அணியினரை கௌரவித்து அவர்களுக்குரிய பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு க.பொ.த. (சா/த),  (உ/த) பரீட்சைகளில் சிறந்த பெறுபேரைப் பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

இக்கல்வியாண்டில் அனைத்து நாட்களும் பாடத்திற்கு சமூகமளித்தவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் பரீட்சையில் அதிவிஷேட சித்தியைப் பெற்றவர்கள், இவ்வருடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் சிறந்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தவர் போன்றவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

Share This:

Leave a Reply