Ibnu Abbas

இறைவனின் அற்புதப் படைப்பு காகம்

இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்திலும் பற்பல வியக்கத்தக்க அம்சங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இறைவன் ஒருவன் என்பதையும் அவனின் ஆற்றல்களையுமே பிரதி பலிக்கின்றன. அவ்வாறு இவ்வுலகில் நாம் கண்டு சலித்துப் போன இறைவனின் அற்புதப் படைப்பே காகம். அன்றாடம் நம் கண்களுக்கு பல தடவை தென்படும் காகங்கள் பற்றி துளியும் கூட அலட்டிக் கொள்வது இல்லை என்றிருந்தாலும் இதற்கு இறைவன் எண்ணற்ற ஆற்புதங்களை எற்படுத்தியுள்ளான். முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களின் இரு புதல்வர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவின் விளைவாக ஹாபில் என்பரை காபில் என்பவர் …

Read More »

அபூதாபியில் 2017ம் ஆண்டு முடிவுக்குள் முதலாவது இந்துக் கோவில் நிர்மாணிப்பு

ஐக்கிய இரபு இராச்சியத்தில் மிகப் பெரிய இந்துக் கோயிலை நிர்மாணிக்க அபூதாபியின் அல்வஸ்பா எனும் பகுதியில் 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியை அரசு ஒதுக்கியுள்ளது. அபூதாபியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2017ம் ஆண்டு முடிவுக்குள் இது பூர்த்தியாக்கப்படும் என நம்பப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்ற வருடம் அங்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இத்திட்டத்திற்கு இடம் ஒதுக்குவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்திருந்தது. குறித்த இடத்தை அரசாங்கம் …

Read More »

உரிமைகள் மறுக்கப்பட்டு கஷ்டத்தில் திணரும் எத்தியோபிய பெரும்பான்மை இனமாகிய ‘ஒரோமோ’ மக்கள்

தமிழாக்கம் : மாணவன் அர்சத் இஸ்மாஈல் தரம் : 05 ‘ஒரோமோ’ என்பது எத்தியோபிய இனங்களில் பெரிய இனமாகும். இதில் முஸ்லிம்களே பெரும்பான்மையினராக காணப்படுகின்றனர். இவ்வினத்தினர் தமது உரிமைகள் துவசம் செய்யப்படுவதினாலும், சமூக, பொருளாதார ரீதியில் தாம் பாகுபாடு காட்டப்படுவதினாலும் தமக்கெதிராகச் செயற்படும் அரசை பல தசாப்தங்களாகக் கண்டித்து வருகின்றனர். பல அமைப்புக்களினூடாக தம் நீதிக்குப் போராடுகின்றனர். அவ்வமைப்புக்களில் சில ஆயுதமேந்திய குழுக்களாகும். பிரதான தகவல்கள் எதியோப்பிய நாடானது 9 மாநிலங்களையும், 10 பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்பிராந்தியங்களில் பிரபல்யமானவை தலைநகர் ‘அடிஸ் அபாபா’ …

Read More »

அணுகுண்டுத் தாக்குதலன்று எடுக்கப்பட்ட நாகஸாகியின் அரிதான புகைப் படங்கள்

‘யுஸுகோ யமாஹாதா’ எனும் இராணவ புகைப்படக் கலைஞர் நாகஸாகியின் அணுகுண்டுத் தாக்குதலில் இறந்த மக்கள் கூட்டத்தை காட்சிப்படுத்தும் உணர்ச்சியூற்றும் சில புகைப்படங்களை கண்டெடுத்தார். இவர் அந்நேரத்தில் பிரச்சார நோக்கங்களுக்காக அணுகுண்டு வெடித்து 12 மணித்தியாலங்களுக்குள் அந்நகரம் சந்தித்த அழிவுகளை உறுதிப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டார். 1952ம் ஆண்டு ‘லைப்’ எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ‘யமாஹாதாவின்’ சில புகைப்படங்களானது சம்பவம் நடைபெற்று குறுகிய காலத்தினுள் சம்பவத்தின் உண்மை நிலையை அறிய அதிக பங்களிப்புச் செய்தது. எனினும் படுகொலையின் உண்மையான அளவை மறைக்கும் நேர்க்கில் அமெரிக்க ஜெனரல் ‘டொக்லஸ் மார்க் …

Read More »

முர்ஸியை விடுதலை செய்யும் வரை எகிப்துடன் வழமையான எத்தொடர்பும் கிடையாது

துர்க்கி தலைவர் ரஜப் தைய்யிப் உர்துகான், எகிப்துன் தொடர்பை பேணுவதற்கு ஜனநாய ரீதியில் தேர்வு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதி முர்ஸி மற்றும் ஏனைய அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு நிபந்தனையிட்டுள்ளார். ‘ரோடானா கலீஜிய்யா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம் சென்ற ஞாயிறு மாலை ஒரு நேர்காணலை மேற்கொண்டது. அதில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் எகிப்தின் தற்போதைய அரசாங்கம் புரட்சியால் மேற்கொள்ளப்பட்டதே. ஜனநாயக ரீதயில் வந்தது அல்ல. எகிப்தில் சட்டத்திற்கு புறம்பாகவே புரட்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தவறு திருத்தப்பட வேண்டும். ஜனநாயக வழிகள் திறக்கப்பட வேண்டும். எகிப்திய மக்களின் …

Read More »

2016ஆம் ஆண்டில் மத்திய தரைக் கடலில் 600க்கும் மேற்பட்ட அகதிச் சிறுவர்கள் பலி.

சென்ற வருடம் அகதிகளின் நெருக்கடி நிலமை அதிகரித்தது தொடக்கம், மத்திய தரைக் கடலில் 600 சிறுவர்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகும் வழியில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக ஐ.நா சபையும், சிறுவர் பாதுகாப்புச் சபையும் தெரிவித்துள்ளன. ஆபத்தான கடற் பயணங்களை மேற்கொண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் அகதிகள் இப்படியான ஆபத்தான பிரயாணங்களை மேற்கொள்வதை தடுப்பதற்கும், அவர்களின் நிலமைகளை சீர்செய்வதற்கும் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களை துர்க்கிக்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். …

Read More »

பிரான்ஸ், பல்ஜீகாவைத் தொடர்ந்து பல்கேரியாவும் முகம் மூடத் தடை விதித்துள்ளது

பல்கேரிய பாராளுமன்றம் வெள்ளிக் கிழமை ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது தடை விதிக்கும் நாடாக மாறுவதற்காக பொது இடங்களில் பெண்கள் முகம் மறைப்பதற்கான தடையை விதித்துள்ளது. இந்த சட்டம் சுகாதார காரணிகள் தவிர பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைப்பதை முற்றாக தடைசெய்கின்றது. இந்த சட்டத்திற்கு முதற் தடவை மாறுசெய்தால் 100 யூரோக்கள் அபாரதமாகவும், அதற்கடுத்து ஒவ்வொரு தடவை சட்டத்தை மீறும் போது 7850 யூரோக்கள் அபாரதமாக செலுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு நகரில் ஏப்ரல் மாதம் முகம் மறைப்பதை தடைசெய்ததோடு இத்தீர்மானத்திற்கு …

Read More »

இஸ்ரேலிய வாயு ஒப்பந்தத்தைக் கண்டித்து ஜோர்தானில் ஆர்பாட்டம்

ஜோர்தானிய அரசு இஸ்ரேலுடன் அண்மையில் கைச்சாத்திட்ட இரசாயன வாயு கொள்வனவு ஒப்பந்தத்தைக் கண்டித்து அதனை ரத்துச் செய்யக் கோரி ஜோர்தான் தலை நகர் அம்மானில் பாரிய மக்கள் பேரணியொன்று வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர். ஜோர்தானிய பொருளாதாரத்தை இஸ்ரேலுக்கு வார்த்தளிப்பதற்கான முதற்படியே இவ்வொப்பந்தம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். ‘அக்ஸாவை அழிக்கின்ற யூதர்களிடமிருந்தே இரசாயன வாயுவை வாங்குகின்றோம்’ ஸியோனிஸ அமைப்புக்கு நிதியுதவ ஜோர்தானிய பிரஜையின் பையில் ஒரு சதமேனுமில்லை’ ‘எதிரியின் இரசாயன வாயு ஓர் ஆக்கிரமிப்பு மாத்திரமல்ல பலஸ்தீன மக்களின் உரிமைகளை …

Read More »

சுதந்திரக் கனவிற்கும் இராணுவ முகங்கொடுப்பிற்கும் மத்தியில் தத்தளிக்கும் ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் எனும் பிராந்தியமானது தனது அரைவாசிப் பகுதியை இந்திய ஆக்கிரமிப்பிற்கும், ஏனைய பகுதியை பாகிஸ்தான் எல்லையிலும் உட்படத்தப்பட்ட பிராந்தியமாகும். இந்தியா பாகிஸ்தானுடன் இப்பிராந்திய உரிமை காரணமாக அடிக்கடி சண்டையிடவும் நேர்கின்றது. இந்தியா தனது ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிக்கு ஊரடங்குச் சட்டத்தை விதித்து சுமார் 80 நாட்கள் கடந்துள்ளன. அங்குள்ள முஸ்லிம்கள் தமது சுதந்திரக் கனவை நனவாக்க 89 பேரை பலி கொடுத்துள்ளனர். 9 ஆயிரத்திற்குத் அதிகமான மக்கள் காயப்பட்டு பாரிய இந்திய இராணுவச் செயற்பாட்டிற்கு முகங்கொடுக்கின்றனர். மேலும் அவர்கள் சுதந்திர உரிமைக்காக …

Read More »